18/08/2017

வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...


உடல் குளிர்ச்சி..

கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும்.

நல்ல தூக்கம்..

வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதிலும் இதனை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

எடை குறைவு..

சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான அளவிலேயே இருக்கிறது. சர்க்கரையில் எளிதான வகையில் குளுக்கோஸானது உள்ளது. ஆனால் வெல்லத்தில் அது மிகவும் கடினமாகவும், செரிமானமடைவதற்கு தாமதமாகவும் இருக்கும். மேலும் வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.

இரும்பு சத்து..

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

புற்றுநோய்..

வெல்லத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்ப்பு போராடி புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

வலிகள்..

வெல்லத்தில் உள்ள செலீனியத்தால், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புகள் போன்றவை சரியாகும். குறிப்பாக ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.

பிரசவத்திற்கு பிந்தைய உணவு..

பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது...

பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து ஊழல் எதுவும் நடைபெறவில்லை... செல்பி புள்ள ரீல் மோடி..






ஆகஸ்ட் 18: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று...


சுபாஷ் சந்திரபோஸ்...

இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர்.

இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர்.

மகாத்மா காந்தி மீது கொண்ட அன்பால் காந்தியை 'தேசப் பிதா' என்று முதன்முதலில் அழைத்தவரும் இவரே.

தன் மரணத்தையே மர்மமாக்கியவர்.

நேதாஜி விடுதலைக்கு முன் பர்மாவிற்கும் மலேசியாவிற்கும் சென்ற போது அவரை பாதுகாப்பாக வரவேற்று அரவணைத்தவர் சிதம்பரம் எனும் முத்தமிழர்..

இவரை சுற்றி இருந்தவர்களில் முக்கால்வாசி தமிழர்கள் தான்..இவரது சமையல்காரர் காலி கூட தமிழர் தான்.

நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியது திபி எனும் தமிழர் தான்..

இந்தியா விடுதலை அடைந்தால் தான் மற்ற ஆசிய நாடுகள் விடுதலை அடைய முடியும் என நேதாஜி அரைகூவல் விட்டதை தொடர்ந்து, தமிழின மக்கள் போராட சென்றனர்..

உயிர் பிரியும் தருவாயில் தமிழன் ஒருவன் சொன்னது,

“தமிழன் உயிர் விடும் வரை போராடுவான் என நேதாஜியிடம் கூறுங்கள்” என்று சொல்லி இறந்துள்ளார்..

ஒரு நாள் நேதாஜி திலான் எனும் தளபதியை அழைத்து தமிழர்களுக்கு நீ தலைமை தாங்கு என கூறியுள்ளார்..

இது குறித்து திலான் கூறியது,

தமிழ் வீரர்களுக்கு நான் தலைமை தாங்கியது எனக்கு பெருமை.. இந்திய இராணுவத்தின் ஆன்மாவும் உடலும் தமிழரகள் தான் என கூறியுள்ளார்.

தமிழனது பெருமை உள்நாட்டில் மட்டுமல்லாது அப்போதே அயல் நாடுகளிலும் பரவி உள்ளது என்பது புலனாகிறது.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார்.

ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது..

இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை.

நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமாக தான் இருக்கிறது...

பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி ? , பன்னீர் செல்வத்தின் கட்டளைகளை நிறைவேற்றியதை தொடர்ந்து, இரு அணிகள் இணைப்பு பணி தீவிரம்...


மேகேதாட்டு அணைக்கு ஒப்புதலா? தமிழகத்துக்கு பினாமி அரசு துரோகம் - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகதாது  அணையை கட்டிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது. இது காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனை ஒட்டுமொத்தமாக தாரை வார்ப்பதற்கு சமமாகும். இதன்மூலம் தமிழக மக்களுக்கு பினாமி அரசு துரோகம் செய்திருக்கிறது.

காவிரிப் பிரச்சினைத் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, மேகேதாட்டு பகுதியில் அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியும் என்று கர்நாடகத் தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது. அதை உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஆமோதித்த நிலையில், ‘‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி  தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகேதாட்டு அணைக் கட்டிக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை’’ என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மேலும் நில நிபந்தனைகளையும் நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும் மேகேதாட்டு அணைக்கு தமிழகம் ஒப்புதல் அளித்தது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

1970களில் காவிரிப் பிரச்சினை தீவிரமான இருந்த போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கர்நாடகம் 4 அணைகளை கட்டிக்கொண்டது. அப்போது அதைத் தடுக்க கலைஞர் தலைமையிலான திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக,‘‘ நீங்கள் அணைகளைக் கட்டிக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபணையில்லை. மாறாக எங்களின் உரிமை பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உத்தரவாதம் கொடுங்கள்’’ என்று கூறினார். 14.07.1971 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திலும் கலைஞர் இதை பதிவு செய்திருக்கிறார். இதை பயன்படுத்திக் கொண்டு 4 அணைகளை கட்டிக் கொண்ட கர்நாடக அரசு அவற்றில் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்திக் கொள்கிறதே தவிர தமிழகத்திற்கு தருவதில்லை. அணைகள் நிரம்பினால் மட்டுமே கூடுதல் நீரை திறந்து விடுவதை கர்நாடகம் வழக்கமாக கொண்டுள்ளது.

தமிழக எல்லைக்கு அருகில் மேகேதாட்டு அணையைக் கட்டினாலும் அதே கதி தான் ஏற்படும்.  கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு  104.59 டி.எம்.சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகேதாட்டு அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டி.எம்.சியாக அதிகரிக்கும்.  அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அத்தகைய தருணத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் கொடுக்காது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் அத்தகைய நிலை தான் ஏற்படும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என்பதே உண்மைக்கு மாறான தகவல் ஆகும். இதை நீதிபதிகள் வேண்டுமானால் நம்பலாம். கர்நாடத்தின் துரோகத்தை தொடர்ந்து அனுபவித்து வரும் தமிழகம் எவ்வாறு நம்பமுடியும்? காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி  தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய மேகேதாட்டு அணையின் பராமரிப்பு பணி மூன்றாவது அமைப்பிடம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படியே செய்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படாது.  காவிரியில் கர்நாடக அரசே தண்ணீரைத் திறந்து விட்டால்கூட அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி தண்ணீரை தடுப்பது வழக்கமாக இருக்கிறது. இப்போது அணையின் பராமரிப்பு மூன்றாவது அமைப்பிடம் விடப்பட்டாலும் அதேநிலை தான் ஏற்படும். மேலும் கர்நாடக அரசு இதுவரை வழங்கிய எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றியதில்லை. வருங்காலத்தில்  தமிழகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் உதவிக்கு வரும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

1970களில் திமுக அரசு செய்தது போன்ற துரோகத்தைத் தான் இப்போது பினாமி அதிமுக அரசும் செய்திருக்கிறது. இதை அனுமதிக்கக்கூடாது. காவிரி வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது மேகேதாட்டு அணை கூடாது என்பது தான் தமிழகத்தின் நிலை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்...

பாஜக மோடி கலாட்டா...


ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரனை நடைபெறும் - முதலமைச்சர் அறிவிப்பு...


எல்லாம் தடயமும் அழிந்தே போயிருக்கும்.. இப்போது விசாரனையாம்.. இதற்கு எம்பூட்டு நிதி ஒதுக்கி ஆட்டை போட போறாங்களோ...

மேடையில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் போது அரசுக்கு எதிராக முழக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி...


சென்னை கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று காலை நடைப்பெற்றது.

வருவாய்த்துறை அலுவலர்களால் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென எழுந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர்கள் தங்களுக்கான நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேற முயன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர்களை போலீசார் வெளியேற விடாமல் தடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தக் கூட்டம் பாதியில் முடிவடைந்தது.

முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவர்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் சமாதானப்படுத்தினார். மாலையில் கோரிக்கைகள் குறித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்...

பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, சீர்காழி பகுதி ஊராட்சிகளில் தீர்மானம்...


தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடி , தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்...


தமிழிசை மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுபவர்கள் அருணாசலக்  கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபி பிள்ளை என்போரே...

ஆனால் இவர்களை மறைத்து, தெலுங்கு  சோத்துப் பண்டாரங்களான தியாகராஜர்,  சியாமா சாஸ்திரி, மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோரை  சங்கீத மும்மூர்த்திகள் என்று ஆக்கி இருக்கிறது திராவிடம்.

சமஸ்கிருத இசையான கர்நாடக சங்கீதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லி, அந்த இடத்தில தமிழ் இசை மூவேந்தர்களை முன்னிறுத்தாமல், திராவிட முகரைகளை  முன்னிறுத்தி இருக்கிறது.

தமிழிசை பாட வேண்டிய இடத்தில, தெலுங்கு இசையை கொண்டு வந்து விட்டது.

இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான ஒரு மறைமுக ஒப்பந்தம்...

நீரை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நாடே உலகை ஆளும்...


எதிர்காலத்தில் தங்கத்தைவிட தண்ணீர் விலை உயரும் அபாயம்..

உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு...

இந்தியம் திராவிடம் எல்லாமே தமிழினத்திற்கு எதிரானது என்று சொன்னால் எவன் கேட்கிறான்...



எல்லாரும் குழி தோண்டி உள்ளே படுத்துட்டு சொல்லுங்கள்.. நான் இந்தியன் ஜெய் ஹிந்து என்று...

பாஜக ஆர்எஸ்எஸ் சின் சுதந்திரப் போராட்டம் வரலாறு...



எடப்பாடி அரசே பதவி விலகு...


உடனடித் தேவை உள்ளாட்சித் தேர்தல்கள். உள்ளூராட்சி அமைப்புகளின் நிர்வாகம் மிக மோசமாக இருக்கிறது. அடிப்படை வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது.

உள்ளூராட்சி அமைப்புகளும் இயங்கவில்லை. மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசும் இயங்கவில்லை. எடப்பாடி அரசு பதவி விலகுவதே மக்களுக்கு நல்லது.

எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக எடப்பாடி அரசு பதவியிலிருந்து அகற்றப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களுக்கு நல்லது...

பாஜக மோடி சாதனை...


மோடி வந்தா எல்லாத்தையும் கிழிச்சி தொங்க விட்ருவாருன்னு சொன்னானுக. கடைசியா விவசாயோட கிழிஞ்ச கோவணத்தையும் உருவினதுதான்டா மிச்சம்...

தேர்தல் ஆணையம் என்பது பாஜக கைகூலி என்று நல்லாவே தெரியுமே...


ஏன் இரண்டு அதிமுக அணிகள் இணைய 6 மாசம் ஆகுமா... டெல்லியில இருந்து இன்னும் உத்தரவு வரலையா..

இது மக்கள் அதிகாரத்தை பறிக்கும் செயல்...

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


சயாம் மரண ரயில் பாதை - மறைக்கப்பட்ட.. மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...


எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ?

முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.

அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.

அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.
அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர்.

சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.

இதற்காக பெருமளவில் ஆசிய தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.

ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.

போரினால் கடும் பஞ்சம் வேறு.
உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai” என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.

நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.

எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் – சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.

இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது.

உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது.

அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டு பிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர்.

அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான்.

முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டு விடுவார்கள்.

கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான்.

அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்து விடுவார்களாம்.

எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல.

குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும்.

இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள், மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை.

இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது.

அங்கேயும் சந்தடி சாக்கில் சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது...

தமிழகத்தின் வரலாறே மாறிய போர்கள்...


வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது ” தெள்ளாற்றுப் போர்“.

இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

“தெள்ளாறு”, இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள்.

இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான், பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்.

அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) , இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர். அது முதல் நந்திவர்மன் ” தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் ” என போற்றப்பட்டான்.

இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற ” நந்திக் கலம்பகத்தில் ‘ இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள்.

இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு..

விஜயலாயன் தொடங்கி, ராஜ ராஜன் சோழன், ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ?

அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த “தெள்ளாறு” தான்..

சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே ” சுந்தர பாண்டியன் ” சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான், அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.

பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.

இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது.

இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.

மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது.

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது..

ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றி பெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள்..

தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம்..

ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ?

இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு, ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும்...

இந்தியர்களே வெளியேறுங்கள்...


தமிழர் கடலில் மீன் பிடிக்க
சிங்களவன் தடை போடுகிறான்..

மீனவனை தமிழர் கடலில் துன்புறுகிறான்..

மீன்பிடி சாதனங்களை சேதபடுகிறான்..

இந்தியா என்ற கூட்டாச்சி நாட்டில் இணைந்த காரணத்தால்.. மீனவன் தமிழர் கடலில் சிங்களவன் துப்பாக்கி குண்டுக்கு இறையாக மிதக்கிறான்..

தமிழர் கடலில் மீனவனை பாதுகாக்க துப்பு இல்லா இந்திய இராணுவமே...

வெளியேறு  தமிழர் கடலில் இருந்து..

தமிழர் இராணுவம் பாதுகாக்கட்டும்
தமிழர்நாட்டு மீனவனை.

கச்சதீவை மீட்க தமிழர் இராணுவதிற்க்கு
தெரியும்..

இந்தியர்களே வெளியேறுங்கள்
தமிழர்நாட்டை விட்டு...

எம் தமிழினத் தலைவர் பிரபாகரன் வருவார் டா...


இந்தியாவின் டில்லி ஓட்டலில் தமிழினத் தலைவர் பிரபாகரன்?

கொழும்பு : விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் புத்தகம் ஒன்று, இலங்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபாகரன் : இலங்கையில் தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர்.

கடந்த 2009–ம் ஆண்டு, சிங்கள ராணுவத்துடனான விடுதலைப் புலிகளின் போர் உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது (2009–ம் ஆண்டு, மே மாதம் 18–ந் தேதி) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக அறிவித்தது. இது தொடர்பாக புகைப்படங்களும் வெளியாகின.

அத்துடன் இலங்கை உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்து விட்டது.

ஆனால் தமிழ் ஆர்வலர்கள் பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை இன்னும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

‘‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், மீண்டும் வருவார், தனி ஈழ விடுதலைப் போரை மீண்டும் முன்னெடுத்துச் செல்வார், தமிழ் ஈழம் மலரும்’’ என்று பலரும் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக படங்கள் வெளியிடப்பட்ட போது, அவரைப் போன்ற தோற்றம் கொண்டவரைத்தான் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என்றும் தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

உயிருடன் பிரபாகரன்?

இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சிங்கள ராணுவத்துக்கு லஞ்சம் வழங்கி அவர் தப்பிச்சென்று விட்டதாகவும், இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லியில் திரிலோக்புரி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் ஒன்றரை வருடம் தங்கி இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த புத்தகத்தின் பெயரையோ, அதை எழுதியது யார் என்றோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

பரபரப்பு :

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புத்தகம் வெளியாகி இருப்பது குறித்து வெளியான தகவலால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசும், அந்த நாட்டின் அரசியல்வாதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், இலங்கை ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர், எப்போதும் போல் பிரபாகரன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.

செய்தி - தினத்தந்தி 17.08.2015...

தமிழர்கள் எந்த மதத்தை சார்ந்தாலும், மதம் சாராதவராக இருந்தாலும் தாங்கள் முதலில் தமிழர் என்றே கருதுதல் வேண்டும்...


இனத்தால், மொழியால் நாம் அனைவரும் தமிழர்களே என்று உணருதல் வேண்டும்.

மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர், சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான்.

நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம்.

நம்மை பிரித்தாளும் மதவாதத்தை துரத்தி அடிப்போம்.

தமிழர்களாக ஒன்றினைவோம்.
தமிழர் என்பதே நம் அடையாளம்.
சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்...

நம்புங்கள் முட்டாள் தமிழர்களே...


தெலுங்கு சின்னமேள சாதியை.. தெலுங்கு இசைவேளாலர் என்று திராவிட ஆட்சி அதிகாரத்தில் மாற்றி ஆணைப்பிறப்பித்த கருணாநிதி சாதி பற்று இல்லாதவர்..

நம்புங்கள் முட்டாள் தமிழர்களே..

தெலுங்கு உகாதி பண்டிகைக்கு திராவிட ஆட்சி அதிகாரத்தில் அரசு விடுமுறை ஆணைப்பிறப்பித்த கருணாநிதி தெலுங்கு மொழி பற்று இல்லாதவர்...

வைகோ எனும் தெலுங்கர் வை. கோபால்சாமி நாயுடு அவர்கள்...


12 வருடம் மத்திய மந்திரி,
6 வருடம் மாநில மந்திரி,
2 முறை இந்தியாவின் ஆளும் கட்சியில் முக்கிய கூட்டணி தலைவர்,

வாய்பாய் அமைச்சரவையில் ராணுவ மந்திரி,
உள்துறை வாங்கும் அளவிற்க்கு பலம் நிறைந்த செல்வாக்கு....

தெலுங்கர் தமிழர்களிடம் வாக்கு பிச்சை எடுத்து பதவியில் இருந்த 20 வருடத்தில் ஈழம், கச்சதீவு, மது, கூடங்குளம், முல்லை, காவேரி பிரச்சனைகள் இருந்தது இன்றும் இருக்கின்றது.....

தமிழர்கள் தெலுங்கு வைகோ அவர்களுக்கு கொடுத்த 20 வருட பதவி வாய்ப்பில் ஒன்றும் புடுங்க முடியவில்லை.....

பொது எதிரி மீது நன்றியும் இல்லை
மறுபடியும் தெலுங்கர் எதுக்கு பதவிக்கு ஆசைப்படுகிறார்?

பொது எதிரி தமிழ்தேசிய தமிழர் கட்சி ஆட்சி பதவிக்கு வந்து மேல உள்ள தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடுவார்கள் என்ற பயமா.... அச்சமா....

மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய வை. கோபால்சாமி நாயுடு அவர்களே ?

திராவிடத்திற்க்கு எதிரான பொது எதிரி தமிழ் தேசியவாதிகளை வீழ்த்த ஒன்றுபடுவோம் - வைகோ..

முட்டாள் தமிழினமே...

தமிழர் நாட்டில் தமிழன் தமிழ் தேசியம் பேசாமல் தெலுங்கு தேசியமா பேசுவான்...

பொது எதிரி தமிழர்களை அழிக்கத் தான் இந்த வந்தேறி சைகோ வந்தேறி தெலுங்கனையும் வந்தேறி கன்னடனையும் வந்தேறி மலையாளியையும் ஒன்றுபட அழைக்கிறான்....

தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்...


வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்து கொள்ளுங்கள்...

தென்னாப்பிரிக்க தலைவர் மண்டேலா அவர்களின் இறப்பிற்க்கு திராவிட அரசு இறங்கள், பாதி கம்பத்தில் திராவிட அரசின் கொடி..

ஆந்திர முதலமைச்சர் பச்சை தெலுங்கர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்க்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை..

பச்சை தெலுங்கு பண்டிகை உகாதிக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை…

பச்சை தெலுங்கர்கள் சக்கிலியர்களுக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசின் தனி இடஒதுக்கீடு..

அடுத்து பாருங்க தமிழர்களே...

2 லட்சம் தமிழ் இனப் படுகொலைக்கு திராவிட அரசு கொடி அரைகம்பத்தில் அல்ல...

2 லட்சம் தமிழர் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்…

தமிழீழ அதிபர் தாயார் பார்வதி அம்மாள் இறப்பிற்க்கு திராவிட அரசு விடுமுறை அல்ல...

தமிழீழ அதிபர் தாயார் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்...

தமிழா சிந்தித்து விழித்தெழு டா...

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடங்க வேண்டிய முதல் போர்...


சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்.

தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிற்க்கு துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது…

அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?

இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்..

யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா?

இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இந்த நொடிப் பொழுதே நாம் தொடுக்கும் போர்?

சிந்தி தமிழா.?

தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்…

தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்….

நீங்கள் தன்மானத் தமிழரா?


இந்தியா 1947ல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை.

இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதும்..
தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்பதும்..

இந்திய இறையாண்மை தமிழ் இனத்திற்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.

இந்த நிலையில் 'தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவார்கள்..

இந்தியாவை வெள்ளையர் ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ் நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

இந்தியா விடுதலையடைந்தவுடன் வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து, தமிழ் இனத்தை அடக்கி, நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட தமிழரல்லாத அந்நியர் வெளியேற்றப்படவில்லை.

இதனால், தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்தியாவின் மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியப் பிரதமராக ஆகும் படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை ஆள முற்பட்டபொழுது, வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது.

அப்பொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார்.

அதைப் போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், அவருடைய கட்சியைச் சேர்ந்த தமிழரை ஆட்சியில் அமர்த்தி விட்டு, கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்.

இதை விரும்பாதவர்கள், தமிழ் இனத்தை அடிமைப்படுத்தி அழிக்க விரும்பும் அந்நியர் ஆவார்கள். என்பதில் ஐயம் இல்லை.

தன்மானத் தமிழர்கள் அத்தகைய கட்சியில் இருக்க மாட்டார்கள்.

இந்தியா பல மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில் தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால், அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம்.

தமிழ்நாட்டில் இந்த நிலை இதுவரை எண்ணிப் பார்க்கப்பட வில்லை.

இதன் காரணமாகவே தமிழ் இனம் அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.

அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம் - தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - தமிழர் சமயம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில் எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

இதனால் தமிழர் அல்லாதவர்கள் தமிழ் இனத்தை ஆளுவது தமிழ் இனத்திற்கு இழிவு ஆவதுடன், அழிவையும் கொடுப்பது ஆகும்.

இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்பதும் எப்படி சரியானதோ..

அதைப் போன்றே..

தமிழ் நாட்டைத் தமிழரே ஆளவேண்டும் என்பதும், நியாயமானதும் இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் தமிழர்களின் அடிப்படை உரிமையுமாகும்.

இதைக் குறை கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் அந்நியர்களின் கைக் கூலிகளுமேயாவர்.

இதனால் தமிழ் இனத்தை அடக்கி, இழிவுபடுத்தி, அழிக்க விரும்பும் அந்நியர்களிடமிருந்து தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.

இதனால் கட்சிக்குத் தலைமை தாங்குவதுடன் ஆட்சிக்கும் தலைமை தாங்க விரும்பும் அந்நியர்களின் தலைமையிலுள்ள கட்சிகளில்  தன்மானத் தமிழர் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம்...