18/06/2018

கக்கன் ஐயா பிறந்த தினம் இன்று...


அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார்...

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் , நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன்  என்று அவர் கேட்டுக்கொள்ள, நீங்கள் பார்க்க வந்ததே போதும்  என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் 18 ஜூன் 1908 இன்று...

புகழ் வணக்கம்...

உலகின் வறுமையை ஒழிக்க வாடிகனிலுள்ள பாதி தங்கமே போதும்...


உலக விஞ்ஞானிகள் வியந்து பார்க்கும் கோயில் நமது முன்னோர்கள் கட்டிய திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டிட கலையின் அதிசயம்...


தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில். ஒரு கட்டிடக் கலை அதிசயம்...

பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.

அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில் தான் அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.

தமிழ் மண்ணே வணக்கம்...

6 வேப்பங்குச்சி விலை 10 டாலர் அதாவது 670 ரூபாய்...


இங்கே பேஸ்டையும் அங்கே வேப்பங்குச்சியையும் விக்கிறான் கார்பரேட்காரன்..  நம்மோட பாரம்பரியம் இப்போ புரியுதா?

நினைவில் கொள்ளுங்கள் இங்கு நடப்பது ஒன்றே ஒன்று தான்...


நம்முடைய வாழ்வாதாரம் அனைத்தும் அழிக்கப்படுகிறது..

அதற்கான ஒரே தீர்வு நாம் நம்முடைய ஒருமித்த கருத்துக்களால் ஒன்றிணைந்து நம் அதிகாரத்தை அடைவதே...

மக்கள் விரோத காவல் துறை.. பாஜக - அதிமுக கலாட்டா...


கன்னட பலிஜா ஈ.வே.ரா -வின் அடித்தளம்....


திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்.

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது.

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது.

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ..

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது.
இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்.

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'.

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா.

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்.

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார். அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமைதாங்கினார்.

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி.

அடித்தளமே இப்படியென்றால்
ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

விழித்துக்கொள் எம் தமிழினமே...


விழித்துக்கொள் எம் தமிழினமே...


இங்கு தேச விரோதிகளோ.. பிரிவினைவாதிகளோ.. பயங்கரவாதிகளோ.. சாதியவாதிகளோ..  மதவாதிகளோ. என்று யாருமில்லை..

ஏனெனில் அவர்களின் பார்வையில்.. நாம் அடிமை கால்நடைகளே...

நான் அடிமை என்பதே கூறி கொள்கிறேன்,  அதிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்..

ஒருநாள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


டிடிவி தினகரன் அணி தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...


இனியும் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை , திங்கள் கிழமை எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு  எனது தொகுதிக்கு மறு தேர்தலை வர வைக்கப் போகிறேன் - தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...

கோர்ட்டு கேசுன்னு போனதால்தானே மறு தேர்தல் கூட நடத்தவிடாமல் இழுத்தடிக்கின்றார்கள்..

எனது மனு வை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கி விட்டு ராஜினாமா செய்தால் மறு தேர்தல் நடத்தி தானே ஆக வேண்டும் - தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...

100 நாட்கள் அடிமை ஆட்டம் ஆரம்பம்.....


எதையும் உணராத அடிமைகளை தயாராக இருக்கிறீர்களா...??

உங்களின் அடுத்த தலைமுறை என்ன ஆகும்..? என்ற யோசனை கூட உங்களுக்கு எழவில்லையா..??

அந்த அளவிற்கு மானங்கெட்ட பிறவியா நீங்கள்..?

எது வளர்ச்சி...


இது மாதிரி அனைவரும் பயன் படுத்திட்டா பாலிதீன் எமன் செத்துடுவான்...


இயற்கை பொருளை பயன்படுத்தி இயற்கையை காப்போம்...

இது எங்கே கிடைக்கும் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....

ஜாயின்ட் கவர்னன்ஸ் கவுன்சில் மீடியேட்டர் கெஜ்ரிவாரல்...


வேதாந்தா பாக்சைட் ஆலை அகற்ற ஒடிஷாவில் மக்கள்போராட்டம் தொடங்கினார்கள்...


ஒடிஷா மாநிலத்தில் நியம்கிரி மலை அடிவாரத்தில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் ஆலையை அகற்றும் படி கிராம மக்கள் போராட்டம் தொடங்கியுள்ளார்கள்.

நியம்கிரி மலையில் இருக்கும் அலுமினிய தாதுக்களை எடுக்கவே ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மலையை கிராம மக்கள் நாங்கள் பல போராட்டங்கள் நடத்தி காப்பாற்றி வருகிறோம் என்று கிராம மக்கள் கூறினார்கள்...

மக்களை திசை திருப்ப வந்து விட்டது.. இலுமினாட்டி கமலின் பிக்பாஸ்...


கன்னியாஸ்திரி உடையணிந்து ஷாப்பிங் வந்த வேற்றுகிரகவாசிகள்.. பால் ஹெல்யர் ஷாக்...


வேற்று கிரகவாசிகள் பூமிக்கு ஏற்கனவே வந்துவிட்டதாக கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பால் ஹெல்யர், பல ஆயிரம் ஆண்டுகளாக நான்கு வகைக்கும் மேலான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றுக் கொண்டிருக்கின்றனர். வேற்று கிரகவாசிகள் குறித்து கடந்த பல வருடங்களாக கருத்தரங்குகளில் பேசி வருகிறேன். ஒருமுறை எனது மனைவி மற்றும் நண்பர்களுடன் வேற்றுகிரகவாசிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து வேற்றுகிரகவாசிகள் குறித்து நம்புகிறேன். இதுவரை நான்கிலிருந்து 8 வகைக்கும் மேலான வேற்று கிரகவாசிகள் பூமிக்கான வழியை கண்டுபிடித்துள்ளனர். அதில் 4 வகையான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது. மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் அணுகுண்டை பார்த்து தான் வேற்றுகிரகவாசிகள் மிகவும் வருந்துகிறார்கள். அணுகுண்டுகளில் பயன்பாட்டால் அண்டசராசரத்தில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள். வேற்றுகிரகவாசிகளிடம் பூமியை பசுமையாக்கும் பல யோசனைகள் உள்ளன. அவர்கள் நினைத்தால் பருவநிலை மாற்றங்களுக்கு நிரந்திர தீர்வு காணமுடியும்" என கூறியுள்ளார். இவ்வாறு பல அதிர்ச்சிகரமான செய்திகளை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த அவர், சில வகையான வேற்றுகிரகவாசிகள் மனிதர்களைப் போல தோற்றம் அளிப்பதாகவும், சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல உடையணிந்து ஷாப்பிங்கும் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வாதங்களுக்கு தேவையான ஆதாரங்கள் தன்னிடமில்லை என்று கூறும் பால் ஹெல்யர், அவற்றை நான் நேரில் பார்த்துள்ளது மட்டும் தான் என் ஆதாரம். நான் தான் ஆதாரம் என்றும் கூறியுள்ளார். பால் ஹெல்யரின் வார்த்தைகளை சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்பதோடு, பறக்கும் தட்டுகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய விமானப் பொறியாளர் என்பதால் பால்ஹெல்யர் கூறுவதை வேதவாக்காக நம்பி வருகின்றனர்...

இயற்கையை நேசியுங்கள்...


ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு சுமார் 25 ஆயிரம் கன அடியைக் கடந்தது...


எனவே பாதுகாப்பு கருதி அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது...

சாகர்மாலா - பசுமை சாலை உண்மைகள்...


ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்...


‛‛மனாேகரன் டிரைவர், சி.23368 நம்பர். 2 மாதமா அந்த வண்டியதான் ஓட்டிட்டு இருக்கேன். வண்டி வந்து பால்ட்டுனு நிறுத்திவிட்டு போனோம். ஸ்டியரிங் லாக், கட்டு லாக்கு, டிபுஷ்ஷூல பிரச்னைனு டி.எம் டெஸ்க்கு வரைக்கும் போய், டி.எம் டெஸ்க்குல வேலைக்காக நிறுத்திட்டோம். நாங்க ஸ்பேர் வண்டி எடுத்துட்டு ரூட்டுக்குப் போய்ட்டோம். சாயங்காலம் 6 மணிக்கு போய் வண்டி ரெடியாயிருச்சானு கேட்டாேம். ரெடியாகலனுட்டாங்க. சரி ஒரு மணி நேரமானாலும் பரவாயில்ல, நாங்க வெயிட் பண்றோம்னு, வண்டிய ரெடிபண்ணி தறீங்களானு கேட்டோம். இல்ல ஒரு மணி நேரத்துல ஆகாது, ஆளில்ல. வேல ரெடியாகாதுனுட்டாங்க. இதனால ஸ்பேர் வண்டிய கொண்டு போயாச்சு. மறு நாளைக்கு முன்னமே வந்து காலைல வண்டிய கேக்கும்போது, அது குன்னுார் ரூட்டுக்கு போயிருக்குனுட்டாங்க.

நாங்க ரூட்டு வண்டி எங்களுக்கு குடுங்கனு சத்தம் போட்டாேம், டெக்னிக்கல் ஸ்டாப்  ஐய்யப்பன்கிறவரு இன்சார்ஜா இருந்தாரு. அவர் கிட்ட கேட்டோம். அதாவுது குன்னூருக்குதான் போயிருக்குனு சொன்னாங்க. நாங்க பாேர்ட பார்த்து கேட்டப்ப, இல்ல இது மேட்டுப்பாளையம் போயிருச்சு. நீங்க இந்த வண்டியையே ஓட்டுங்க இன்னிக்கு. நாங்க அப்படி எல்லாம் ஓட்ட முடியாதுனுட்டோம். நாங்க கேக்கும்போது காலை 11 மணி. 11.15 - 11.30 மணி இருக்கும் ஆக்சிடெண்ட்டுனு நியூஸ் வந்திருச்சு. ஊட்டி- தங்காடு- கீழ்குந்தா ரூட்ல ஓடுன வண்டி, ரிப்பேரான வண்டி, சொந்த வண்டி மாதிரி வெச்சிருக்கோம். அந்த வண்டிய, ரெடிபண்ணி குடுங்கனு கேட்டப்ப இல்லனு சொல்லிட்டாப்டி, ``ஸ்டியரிங் லாக், ரைட் சைடு திருப்புனா வண்டி லாக் ஆகுது, ஸ்டெக் ஆகி ரிலீசாகுது, பிரேக்க மிதிச்சுட்டு மறுபடியும் திருப்பினா, ரிலீசே ஆகாதுனா’’

இவ்வாறு  பஸ் விபத்து குறித்து, அந்தப் பஸ்ஸை முன்னதாக இயக்கிவந்த, அரசு பஸ் ஓட்டுநர் மனோகரன் என்பவர் ஒருவருடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது...

அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


விவசாய நிலத்தை தர விவசாயிகள் மறுப்பு கிருஷ்ணகிரியில் போலிஸ் குவிப்பு...

மின்கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை அளக்க  அதிரடிப்படையுடன் கிருஷ்ணகிரி க்கு வந்த மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகள் , விவசாய நிலத்திற்குள் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு , போலிஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு...

கண்ணீர் புகை வாகனத்துடன் போலிசார் வந்ததாக விவசாயிகள் புகார் , விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...

தூத்துகுடி மடத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்.....


காவல்துறையினரின் நள்ளிரவில் வீடு புகுந்து செய்யும் கைதுகளுக்கு பயந்து மக்கள் கோவிலில் தங்கி இருந்திருக்கிறார்கள்....

பாஜக மோடி எனும் தரகர்...


புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்...


ஆம், புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்..

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன.

நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம்.

மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும்.

ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!

ப்ராக்கோலி..

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

பூண்டு..

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்..

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்..

காளான்..

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்..

நட்ஸ்..

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

பப்பாளி...

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

அவகேடோ...

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

திராட்சை...

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

தக்காளி...

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது..

அது மட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது..

ரெட் ஒயின்...

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்...

அரசு என்பது யாருக்கானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


பொருளாதார அரசியலை புரிந்து கொள்ளாத, எந்த இனமும் மீண்டு வந்ததாக வரலாறு இல்லை...


கட்சி அரசியல், ஆட்சி அரசியல் இவை இரண்டிலும் மாற்றம் வந்தால் நல்லது என நினைப்பது மாயை மட்டுமே..

இதற்கெல்லாம் அடித்தளமே இந்த அடிமை பொருளாதார அரசியல் தான்...

அடித்தளத்தை உணராமல், மேல்தளத்தை பேசுவதால் எந்த பலனும் இல்லை...

வைகோ நாயூடுவின் சுயமரியாதையும் பகுத்தறிவும்...


தமிழகத்தில் முதன் முதலில்.. திராவிடமும் எனும் பேரில் தலைவர்களின் காலில் விழும் அடிமைத் தனத்தை அறிமுகப்படுத்தியதே வைகோ நாயூடு தான்...

சேலம் கலெக்டர் ரோகினியின் அடுத்த காய் நகர்த்தல் - மக்களே உஷார்...


பெண் என்பவள் நம்மை போல் ஒரு உயிர்...


நம்மை இந்த பூமிக்கு அழைத்து வந்தவள்..

அவள் நமக்கு எதிர் பாலினமே தவிர..

நாம் எதிர்க்க வேண்டிய உயிர் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

அவள் நமக்கு கிடைத்த பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அழகான “உயிர்”

அந்த உயிரை மனிதத்தன்மையே இல்லாமல் கொடூரமாக சித்ரவதை செய்ய உங்கள் மனதில் தோன்றினால்..

உங்களை எத்தனை முறை கொன்றாலும்
என் மனதில் உள்ள வலி ஆறாது...

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...


தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு.. கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது..

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.

கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.

அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்.
(வரி.26 - 28)

இப்பாடலடியில், மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
(புறம் - 18,28 - 30).

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.
(புறம்.118).

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார். (83).

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,

யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (25).

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற கலிங்கு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும். (1384 - 87).

என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும்.

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை கற்சிறை எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

நீரைத் தேடி...


நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம்.

இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் (தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

வணிகப் போரை கவனித்தீர்களா.?


கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?


1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26  தமிழர்கள் இருந்தனர்.

கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்படவேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர். வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்துகொண்டர்.

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக் கேட்கவில்லை.ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டுசென்றது.

இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.

தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.

அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.

பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.

தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப்போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.

(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).

அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,
வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...

அடிப்படை வசதிகள் அமையப் பெறுமா.?


சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.

ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம்.

அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.

அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்.

அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்து விடும்...