இன்று நம்முடைய அறிவியல் யுகம் முழுமூச்சாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் குறித்து பைபிள்,திரு குரான் வசனங்களில் ஆராய்வோம்,
இங்கு நான் கூறுப்போகும் கருத்துகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், உங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கலாம்.. ஆனால் மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதல்ல என் நோக்கம். மாறாக இனி வேத வசனங்களை ஒரு புதிய கண்ணோட்டத்தில் உங்களை பார்க்க செய்வதே என் நோக்கம்.
உலகெங்கிலும் இருக்கும் பல பண்டையக் காலத்து புராணங்களில் வேற்றுகிரகவாசிகள், ஏலியன்கள் பூமிக்கு வந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அது முழுமையாக அறியப்படாமல் இலைமறைக் காயாக இருந்து வருகிறது.
பைபிள்...
எந்த ஒரு பொருளையும், பைபிளில் ஆராய்வதற்கு முன்னால், சில அடிப்படை சத்தியங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தூய ஆவியால், ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள், கடவுள் அருளியதை உரைத்ததே பைபிள்” – 2பேது 1:21.
கல்வி அறிவு இல்லாதவர்களும், விசுவாச உறுதியற்றவர்களும், சில வேளைகளில், பைபிளுக்கு “பொருள் திரித்து கூறுவது உண்டு – 2பேது 3:16.
மேலும், பைபிளில், புரிந்து கொள்வதற்கு “கடினமான” சில பகுதிகளும் உள்ளன – 2பேது 3:16.
ஆனால், பைபிளின் எந்த பகுதியும், எவரது “சொந்த விளக்கத்திற்கும்” உட்பட்டது அல்ல – 2பேது 1:20.
ஒருவர், பைபிளில் விளக்கங்கள் கூறியதை அறியும் முன், மேற்சொன்ன சில பகுதிகளை மனதிற்க்கொள்ள வேண்டும்.
" ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" என்று சொல்லப்பட்டுள்ளது மேலும் பைபிளில் மிகவும் பழமை வாய்ந்த புத்தகமான யோபுவில் (38) பூமி உண்டாக்கப்பட்டபோது மற்ற நட்சத்திர மண்டலத்தில் வாழந்தவர்கள் மகிழ்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது,
தேவதூதர்கள்...
“பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.”
(கொலோசெயர் 1:13-17).
தேவதூதர்கள் திருமணம் செய்து கொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25).
‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.
—யோபு 1:6, அடிக்குறிப்பு.
இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.—யோபு 38:4-7.
தேவதூதர்கள் மனிதர்களைவிட
மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11) அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம்.
(1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38) ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.—1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10.
நம்மைப் போலவே மற்ற நட்சதிரங்களிலும் தேவபுத்திரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முற்காலத்தில் நம்முடைய பூமிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள், இதை ஆதியாகமம் 6ம் அதிகாரம் 1 முதல் 4 வரை வாசித்துப் பாருங்கள்,
வேற்றுகிரகவாசிகள் பூமியிலுள்ள பெண்களோடு கூடினார்கள் இதனால் இராட்சர்கள் என்று சொல்லப்படுகின்ற பலவான்கள் பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது, இங்கே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், தேவகுமாரர், என்று அழைப்படுவது குறித்து நாம் குழப்பமடைய வேண்டியதில்லை,
இவர் வேற்றுகிரகவாசிகள் ஒரு இனம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
அப்படியானல் இப்போதெல்லாம் தேவகுமாரர்கள் பூமிக்கு வருவதில்லையா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம் வருகிறார்கள், வந்துகொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் சில இனங்கள் மாம்ச கண்களுக்குத் தெரியாத படி (மறைவான பரிமாணமம்) தேவன் நம் கண்களைக் குருடாக்கி விட்டார், ஆனால் வேதம் எங்கும் தேவ குமாரர்கள் வந்து மனிதர்களுக்கு உதவியதாக சொல்லப்பட்டிருக்கிறது (மரியாளுக்கு நற்செய்தி சொன்ன கேபிரியேல்,) (பேதுருவை சிறையிலிருந்து தப்புவிக்க உதவிய ஒரு தூதன்) இன்னும் பல சம்பவங்களை நாம் சொல்லலாம். இவர்களை தேவ தூதர்கள் என்றும் அழைக்கலாம்,
தேவ தூதர்களும் நம்மைப் போலவே தேவனை மகிமைபடுத்தவும், போற்றிப்பாடவும் படைக்கப்பட்டவர்களே, இவர்கள் பலவகைக் கூட்டம் உண்டு, கேருபீன்கள், சேராபீன்கள் போன்றவை அவற்றுள் சில, இந்த தூதர் குழுக்களுக்கு சில தலைவர்கள் இருக்கிறார்கள். அவற்றுள் பிரதான தூதனாகிய மிகாவேல், செய்தி கொண்டுபோகும் காபிரியேல், ஆங்கில வேதாகமத்தில் சொல்லப்பட்ட லூசிபர் (தமிழில் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்று சொல்லப்பட்டவன் ஏசாயா 14).
பொல்லாத தூதர் கூட்டம்’ என்றும், ‘பாவம் செய்த தேவதூதர்கள்’ என்றும் பைபிள் சில தேவதூதர்களைக் குறிப்பிடுகிறது. (எபேசியர் 6:12; 2 பேதுரு 2:4)
இந்தப் பொல்லாத தேவதூதர்களில் ஒருவன் லுசிபர்.
லூசிஃபர்...
மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான்.
அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீர் படைத்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் நான் ஆட்சிசெலுத்துவேன்” என்று கடவுளிடம் சவால் விட்டான். ‘உன்னால் அது முடியாது’ என்று கடவுள் புன்னகை புரிந்தார்.
பூமியையும் மனிதர்களை சாத்தான் ஏன் ஆள விரும்பினான்? ஏனென்றால் கடவுளின் கைவண்ணத்தில் படைப்பின் உச்சமாக பூமியே இருந்தது.
இலுமினாட்டிகளைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் லூசிஃபர் என்ற வார்த்தையும் தெரிந்திருக்கும். இவன் தான் இலுமினாட்டிகளின் தலைவன், இவனைத் தான் இலுமினாட்டிகள் தங்களது கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றே நம்புகிறேன்.
ஆனால் யார் இந்த லூசிஃபர்?
ஒளியைக் கொண்டு வந்தவன்,
அவன் கொண்டு வந்த ஒளியை பெற்றுக் கொண்டவர்களை (இலுமினாட்டிகள்-ஒளியை பெற்றுக் கொண்டவர்கள்) வைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன்.,
இவன் மனித இனத்தைச் சேர்ந்தவனல்ல., மேற்கத்தியர்கள் இவனை வேற்றுகிரகவாசி என்கின்றனர்.,
உண்மை தான் இவனது இனம் வேற்றுகிரகங்களில் வசித்துக் கொண்டு தான் இருக்கிறது.,
இந்த வேற்றுகிரகவாசிகள் இனத்தின் பிடியில் தான் இந்த மனித இனமே அடிமைபடுத்தபட்டுள்ளது.
இந்த லூசிபர் என்பவனைக் குறித்து எசேக்கியேல் 28;12,13,14 ஆகிய வசனங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது, அதில் அவன் எவ்வளவு அழகானவன் என எழுதப்பட்டுள்ளது, விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், ஞானத்தால் நிறைந்தவன், பத்மராகம், புஷ்பராகம், போன்ற ஒன்பது வகைக் கல்லும், பொன்னும் இவன் உடலை மூடிக்கொன்டிருந்தது, என சொல்லப்பட்டிருக்கிறது அப்படியானால் எவ்வளவு அழகாக இருந்திருப்பான் பாருங்கள், மேலும் சகலவிதமான இசைக்கருவிகளும் அவன் சிருஷ்டிப்பின் போதே அவன் செட்டைகளில் (சிறகுகளில்) இருந்தது என்று சொல்லபடுகிறது மேலும் அவன் த செட்டைகளை அடித்தாலே அழகான இன்னிசை பிறக்கும் என்றும் வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்,
இப்படிப்பட்ட அழகான ஒருவன், தன்னை உருவாக்கியவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான், அவன் அப்படி நினைத்த மாத்திரத்திலேயே பூமியில் விழுந்து விட்டான், ஏசாயா 14ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள், நான் வானத்துக்கு ஏறுவேன், (முதல் வாணம்), நட்சத்திரத்திற்கு மேலாக (இரண்டாம் வாணம்) வட புறங்களில் உள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதங்களில் வீற்றிருப்பேன் என்று சொல்லி நினைத்தான் (இவனும் மூன்று வானத்தை உறுதி செய்கிறான் பாருங்கள்) அப்படி அவன் நினைக்கும் போது தன்னுடைய இடத்தை விட்டு தானாகவே கீழே இருக்கும் பூமியில் விழும்படி கடவுள் அவனைத் தள்ளிவிட்டார்…
பைபிளில் கூறப்படும் வெட்டுக்கிளி வாதையோடு சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் இந்த வேற்று கிரகவாசிகள்.
அது விசுவாசத்துரோக இஸ்ரவேலுக்கு அதிக நலக்கேடை உண்டாக்குவதாக இருந்தது, ஆனால் தனிப்பட்ட யூதர்கள் மனந்திரும்பி யெகோவாவின் தயவுக்கு திரும்புவதிலும் விளைவடையும். (யோவேல் 2:6, 12-14 ).
அந்தக் காலம் வந்தபோது, யெகோவா அவருடைய ஆவியை “மாம்சமான யாவர் மேலும்” ஊற்றுவார், “யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” அச்சம் தரும் அடையாளங்களும் திகிலூட்டும் அறிகுறிகளும் இருக்கும்.— யோவேல் 2:11,28-32 ,
அன்றைய இஸ்ரவேல் மக்கள் தங்கள் வானில் கண்ட காட்சியின் விளைவாக தான் இந்த வசனங்களை பார்க்க முடிகிறது. வானில் மிதந்து வந்த வேற்றுகிரகவாசிகள் இனம் பூமிவாசிகளை அழிக்க செயலாக இருக்கலாம்.
மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் கடல் பயணங்களில் எதிர் கொண்ட நிகழ்வுகளும் பைபிள் வசனங்களும்
அவர் பெர்முடா முக்கோணம் என்ற பகுதியில் நடந்த சம்பவத்தை கூறும்போது...
“நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என வர்ணித்துள்ளார்.
கொலம்பஸ் கூறுகிறதை பார்க்கும் போது பரிசுத்த வேதாகாம்த்தில் தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளை ஏதேன் என்னும் தோட்டத்தில் வைக்கிறார் ஆனால் அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்தபோது அந்த தோட்டத்தை விட்டு வெளியேற்றி விட்டு அதன் பிறகு அந்த தோட்டத்தின் மையத்தில் இருக்கும் ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு நிரந்தரமாக உயிர் வாழக்கூடாது என்பதற்காக தோட்டத்தை பாது காக்க ( காவல் செய்வதற்கு ) ஆதியாகமம்: 3:24 " அவர் மனுஷனைத் துரத்தி விட்டு, ஜீவ விருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக் கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
" இங்கே வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயம் ( அதாவது சுழன்று கொண்டிருக்கிற தீப்பிழம்பின் வெளிச்சங்கள் ) இப்போது மாலுமி கொலம்பஸ் கூறுகிறதை பாருங்கள் ; “நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து அந்த பகுதி தேவனாகிய (கட்டுப்பட்ட)கர்த்தரின் படைப்பினங்களில் ஒன்று மனித பரிணாமத்தில் வெளிப்படாமல் மறைந்து உள்ள பகுதிதான் என்ற உண்மை தெளிவாக விளங்கும் .
- தொடரும்...