25/12/2018

வச்சி செஞ்சிருக்கானுங்க...


கணினியை கண்காணிக்கும் மத்திய அரசின் ஆணைக்கு எதிராக வழக்கு...


நாட்டில் உள்ள அனைத்து கணினிகளின் செயல்பாடுகள் மற்றும் கைப்பேசி உரையாடல்களை கண்காணிக்கவும் தகவல் பரிமாற்றத்தை உளவு பார்த்து அதனை இடைமறிக்கவும் மத்திய அரசின் 10 உளவு அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கி கடந்த டிச.,20ம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என
பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கணினிகளை கண்காணிக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு விவரம்:

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், சமூக சிந்தனையாளர்களின் கருத்துகளை கண்டறிந்து அவர்களை ஒடுக்கவதற்காகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கு, நாட்டு மக்களுக்கு இழைக்கும் ஜனநாயக படுகொலையாகும். ஆகவே, இது குறித்து வெளியிட்ட அறிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது...

தமிழக விபச்சார ஊடகங்கள் கலாட்டா...


மெரினாவில் கர்சீப் விற்கும் நடிகை...


தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (வயது 75). சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவரை ‘சூ பாட்டி’ என்றும் அழைக்கின்றனர். இவ்வாறாக காமெடி வேடங்களில் நடித்து வந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். தவமிருந்து 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை ஓட்டுகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர்.

உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.தனது நிலை குறித்து ரங்கம்மாள் உருக்கமாக கூறியதாவது...

"நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.
500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்துவிட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி க‌ஷ்டப்படுகிறேன்.
அதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும்....

இவ்வாறு அவர் தெரிவித்தார்...

திமுக டூபாக்கூர் ஸ்டாலின் கலாட்டா...


மெளனம் பேசுகிறது...


கரு விழி கண்கள்  போல் மேகங்கள் கருத்து கண்கள் மூட..

நெஞ்சில் இதய துடிப்பு போல் இடிகள் உரச..

மகிழ்ச்சியாக வருகிறார்கள் மழைதுளிகள்..

நான் மெளனத்தில் உரைந்தே போனேன் மண் வாசனையில்...

இலை...

தமிழக பாஜக கலாட்டா...


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது..

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது..

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்..

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்..

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று..

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை..

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது..

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது..

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது..

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது..

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது...

பாஜக மோடி vs எச். ராஜா சர்மா கலாட்டா...


Tunguska event எனும் மர்ம சம்பவம்...


1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி அது. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி.  அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள்  கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது.

அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி
கொண்டதாக இருந்தது.

அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோமீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து . மேலும் அத்துடன் அந்த காட்டின் 8 கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே... அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.

20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள்.

சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள்.

(இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது)

கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது...

Biological weapon பதிவு - 5...


விடை தெரியாத பாதையாக சென்று கொண்டே இருக்கிறேன்...


கேள்வியே விடையாய் வந்து நிற்கிறது..

அந்த விடையை உணரும் தருணத்தில் மெளனத்தில் மையம் கொள்கிறேன்..

உன்னை போல் மகிழ்ச்சியாக...

காலங்கள் மாறட்டும் காட்சிகள் மாறட்டும்..

மெளனத்தில் மையம் கொள்ளட்டும் அனைவரும் மகிழ்ச்சியாக...

வேண்டாம் பிராய்லர் கோழி...


40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர்.

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்.

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.

இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது.

பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்.

ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது..

அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்...

திமுக ஸ்டாலினை கேவலப்படுத்திய அகிலேஷ் யாதவ்...


ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?


பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம்.

அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்சு(ஸ்)பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் ஒலி (Sound) அதிகம் இருக்கிறதாம்.

இந்த பாக்சுபி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள், வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்…

ஸ்டெர்லைட் ஆலையின் அடுத்த வணிகம்...


வானம் என்றால் என்ன ? வானம் என்று எதை அழைக்கிறோம்? அதன் உருவ அமைப்பு என்ன?


வானம் என்பது தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று யாரவது கூறினால், அவர் இலக்கியவாதியாக, பேச்சாளராக அல்லது பக்கா பிராடாக இருக்கலாம், நீங்கள் பூமியில் இருந்து மேல் நோக்கி பறந்து வானத்தை தொட்டுவிடலாம் என்று நினைத்தால் பறந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

முடிவே கிடையாது,, என்னை பொறுத்தவரையில் அதை வானம் என்று அழைப்பதே தவறு,, அதை 'இடைவெளி' (Space) என்று தான் அழைக்க வேண்டும்,வானவில் பார்த்திருப்பீர்கள்,மழை காலத்தில் மட்டுமே வானவில் தெரியுமென்று முட்டாள்தனமாக இருந்து விட வேண்டாம்.

தினமும் காலை பல் விளக்கி விட்டு வாய் கொப்பளிக்கும் போது (பல் விளக்குபவர்கள் மட்டும் ) சூரிய ஒளியில் நின்று கொஞ்சம் ஆற்றல் கொடுத்து உங்கள் வாயில் இருக்கும் நீர்த்துளிகள் மிக மிகச்சிறிதான துளிகளாக மாற்றி வெளியே அனுப்பி பாருங்கள், உங்கள் கண் முன்னர் வானவில் வந்து போகும்.

ஒளி என்பது அனைத்து வண்ணங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு, ஒரு தொகுப்பாக கூட்டமைப்பாக வரும் வெள்ளை ஒளியை சிதறடிக்க வேண்டும், அப்படி சிதறடித்தால் தான் அதில் ஒளிந்திருக்கும் வண்ணங்கள் வெளிப்படும். 

ஒரே ஒரு நீர்த்துளி என்பது மிக மிகச்சிறிய அளவில் உள்ள ஒரு பொருள், மிக மிகச்சிறிய ஒரு பொருளால் தான் மிகச்சிறிய அலை நீளங்கள் உள்ள ஒளியில் உள்ள வண்ணங்களை சிதறடிக்க முடியும் இப்போது வானவில்லில் இருக்கும் நீல ஒளியை மட்டுமே பார்க்கிறீர்கள் அது தான் வானம்.

நீங்கள் பார்ப்பது, வெள்ளை ஒளியின் சிதறடிக்கப்பட்ட ஒரு அலை நீளத்தை தான்,காரணம் நமது அட்மொசு(ஸ்)பியரில் நீல நிறத்தை மட்டும் சிதறடிக்கும் அளவிற்கு தூசுக்கள் நிறைந்து இருக்கின்றன.

அதனால் தான் பகலில் நாம் பூமியில் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது நீல நிறம் தெரிகிறது.

இரவில் சூரிய ஒளி இல்லாததால், எல்லையற்ற 'இடைவெளி' (Space) அப்படியே தெரிகிறது...

பாஜக மோடியே உன்னை மன்னிக்கவே மாட்டோம்...


ஆர்கிமிடீஸ் தத்துவம் - பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...


கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர். சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.

குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக் கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும். ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார். முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ?

அதுதான் இல்லை.

முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான். அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள். யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது. பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள். யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...

திமுக ஸ்டாலின் கலாட்டா...


தாமிரபரணி நாடு...


குறவருக்கும் (கௌரவர்).
பாண்டியருக்கும் (பாண்டவர்).
நடந்த போரே மகாபாரதம்.

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.

பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரைபடத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்..

குந்தியின் மகனே..
மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்ட போது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு...

என் வாழ்க்கை பயணம்...


நான் கவலை படுவதில்லை 
துன்ப படுவதில்லை 
வேதனை படுவதில்லை 
ஆசை படுவதில்லை 

ஏனெனில் அந்த பாதைகளை  ரசித்து சென்று கொண்டே செல்கிறேன்..

எந்த பாதையையும் நாம் நற்காலி போட்டு அமர்ந்து கொண்டால் அங்கேயே தான் நிற்க முடியும்..

நீங்கள் அடுத்த பாதையை தேர்வு செய்யும் வரை...

இப்படியே தான் உங்கள் வாழ்க்கையும்...

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்...


1. கண் பார்வை அதிகரிக்கும்...

கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.

2. என்றும் இளமையாக...

கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.

3. மாரடைப்புக்கு குட்பை...

கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

4. புற்று நோய்க்கு தடா...

கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

5. பள பள பற்கள்...

கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது...

எப்படி ஏமாற்றுகிறான் பாருங்கள்...


தமிழர்களின் வினோத கட்டிடக்கலை - அதிசய இசைத் தூண்கள்...


நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல. இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்கள் என்பதற்கு இந்த இசைத்தூண்களே சாட்சி. நம் பெருமைகளை நாம் தான் மதிக்க வேண்டும்.

உலக அதிசயப்பட்டியலில் இடம் பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..

இந்த இசைத் தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.

இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது. அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது. சரி இது எதற்காக பயன்பட்டது ?

அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது. இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள்.

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.அனிஷ் குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது . " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது..

ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காப்போம்..

இந்த இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில் பற்றிய தகவல்கள் கீழே குடுக்கப் பட்டுள்ளது.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில் நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும் தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள்.

கோயிலின் மூலக்கதை:

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

சிறப்புக்கள்:

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.

சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.

திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது.

அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.

சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.

32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.

இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது...

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை திட்டமிட்டே சுட்டுக் கொன்றது அரசு...


நெருப்பின் எதிர்பக்கம் குளிர்ச்சி...


இரண்டுக்கும் மையப்பகுதி இரண்டும் கலந்த கலவை..

தந்தையின் எதிர்பக்கம் தாய்..

இரண்டுக்கும் மையப்பகுதி குழந்தை..

உடலின் வளர்ச்சிக்கு தந்தையின் மரபணு...

உணர்வின்  வளர்ச்சிக்கு தாயின் மரபணு...

இரண்டின் மையம் உயிர்...

விழித்துக்கொள் தமிழா...


அரசு தரவேண்டிய தண்ணீரை தனியார் விற்பதும், தனியார் விற்க வேண்டிய டாஸ்மாக்கை அரசு விற்பதும் அவர்களின் முட்டாள்தனம் இல்லை... நம் முட்டாள்தனமே...

என்னைக்கு இந்த தண்ணீர் பாட்டில் வந்துச்சோ.., அன்னைக்கு ஆரம்பிச்சது தான் தண்ணீர் பஞ்சம்.. என்ற வசனத்தில் ஆழமான உண்மை உண்டு...

ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுவேன் : திமுக ஸ்டாலின் சபதம்...


ஒருவேளை Selfie எடுத்து காட்ட போறாரா...

கர்மா...


கர்மா என்றால் செயல் என்று பொருள்.

நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும். நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, ஆதாவது கர்மாவின் கணக்கு. இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும்.

நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு.

ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது.

நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது.

நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…

எதிர்பார்ப்புகள் அற்ற உதவி: கர்மாவை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதில் முக்கியமானது தர்மம் (அ) கடமை. யார் ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும், பின் விளைவின் எதிர் நோக்கமின்றி தங்களது கடமை (அ) தர்மம் செய்கிறார்களோ அதேவே உத்தமம் என்று கூறப்படுகிறது.

கர்மா வகைகள்: கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை.,

சஞ்சித கர்மா.
ஆகாம்ய கர்மா.
பிராரப்த கர்மா.

சஞ்சித கர்மா: சஞ்சித கர்மா என்பது, முற்பிறவியில் நாம் செய்த பலன்களை பொருத்து, நமக்கு வாய்க்கப்பட்ட இந்த பிறவியாகும். சஞ்சித கர்மாவின் பலன் தான் நமது இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவியிலும் தாக்கமாக இருக்கும்.

ஆகாம்ய கர்மா: இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் கணக்கு தான் ஆகாம்ய கர்மா ஆகும். இது, உங்களது அடுத்த பிறவிகளில் தாக்கம் செய்யும்.

பிராரப்த கர்மா: ஏற்கனவே கணிக்கப்பட்ட கர்மாவின் செயல்பாடு தான் பிராரப்த கர்மா. உங்கள் தற்போதைய பிறவியில் நடந்துக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் விதி அனைத்தும் பிராரப்த கர்மாவின் தாக்கமாக தான் இருக்கும்.

பாவப்பதை ஒழிப்பது: நீங்கள் பாவத்தை ஒழிப்பதால், தீமையை கைவிடுவதால், உங்களது ஆகாம்ய கர்மா இரட்சிக்கப்படும். பாவ, புண்ணியத்தின் கணக்கின் படி தான் சஞ்சித கர்மா உங்களை பின் தொடர்ந்து வருகிறது. பாவங்களை நீங்கள் முற்றிலுமாக நீக்கும் போது, உங்களது சஞ்சித கர்மாவானது முடிவு பெரும்.

கர்ம யோகா: எப்படியானாலும் உங்களது தற்போதைய பிறவியில் பிராரப்த கர்மாவின் தாக்கம் இருக்க தான் செய்யும். ஏனெனில் இது நீங்கள் சென்ற பிறவியில் செய்த செயல்களின் தாக்கம். அகங்காரம் தவிர்த்து நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், சமன்திறன் மனநிலையில் பயணம் செய்யுங்கள். யார், எவரென்று பாராமல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தல் முக்கியம்.

ஆசை துறக்க வேண்டும்: கர்மா என்பது ஆசையுடன் பிரயாணம் செய்யும் ஒன்றாகும். இந்த ஆசைதான் உங்கள் கர்மாவை ஆட்டிப்படைக்கிறது. ஆசையை துறந்து நன்மை காரியங்களில் ஈடுபடும் போது அதில் பாவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மகிழ்ச்சி அகங்காரம்: நீங்கள் பூரணமாய் ஓர் செயலில் ஈடுபடும் போது உங்களுக்கு புண்ணியம் சேர்கிறது. இதுவே உங்களுக்கு நித்திய ஆனந்தத்தையும், செம்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மற்றும் இதுவே, உங்களது வாழ்க்கை சக்கரமான பிறப்பு, இறப்பிற்கு முற்று புள்ளியாய் அமைகிறது...

Subscribe this youtube channel

என்னத்த சொல்ல...