13/02/2018

உலகத்திலே மிகக் கேவலமான துறை.. தமிழக காவல்துறை தான்...


போராட்டம் பன்றியா ன்னு லத்தியால நெஞ்சிலேயே அடிச்சாங்க.. தேம்பி தேம்பி அழும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தூத்துக்குடி பள்ளி மாணவன்..

ஸ்டெர்லைட் ஆலை நச்சு தூத்துக்குடி மக்களின் போராட்டம்...

ஆன்மீக வாழ்வு...


காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்கு பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.

இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டு முறை பற்றி..

இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.

அவ்வப்போது அது தன் வீரியத்தை இழக்கும் போதும், வேற்று சமயத்தவரால் தொல்லைகள் வந்த போதும் அதனை எதிர்கொண்டு மீண்டு வந்த வண்ணம் இருக்கிறது.

மற்ற எந்த சமயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் ஞானியரை, சித்தமஹா புருஷர்களையும், இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்று விக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம்.

ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்த கடல் நீரை பருகியவர்கள்.

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அந்த கடலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.

நமது ஞானப் பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மா அனுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.

அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை  அடையலாம்.

ரிஷி என்ற வார்த்தையின் பொருள் மந்திர த்ரஷ்டா அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.

மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.

ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக் கருணையால் அதை உணர்ந்தவர்கள்.

எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட..

அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.

இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா  என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் வெட்கமின்றி சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும், செல்வமும் மட்டும் இறைவழிபாட்டின் பயன்களல்ல.

படைப்புகளில் எல்லா  ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.

ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டவன்.

ஏனென்றால் எந்த மரமும், விலங்கும், பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை.

மனிதன் மட்டுமே நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், யோகி, ஞானி, மகான் என தான் விரும்பியபடி வாழவும், விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும்  வல்லவன்.

அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட..

இன்று நாம் வழிபட்டு வரும் பல தெய்வங்கள் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் தான்..

அது குறித்து பின்னர் விரிவாய் காண்போம்...

உங்களை ஒரு செயலை செய்யவிடாமல் தடுத்து உங்களைைஅடிமைப்படுத்த உலகை ஆளும் வர்க்கம் பயன்படுத்திய ஒரே பெரிய ஆயுதம் 'பயம்' என்ற கட்டமைப்பு...


தமிழினத்தின் முதல் எதிரி விபச்சார ஊடகங்கள் தான்...


இந்தி எதிர்ப்பு போராட்டம் - பொள்ளாச்சி படுகொலை...


1965 பிப்ரவரி 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்தது என்ன?

அதை ஏன் பொள்ளாச்சிப் படுகொலை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்?

நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு மாநாடு நடைபெறவுள்ளது.

உள்ளூர் கட்சிகள், அமைப்புகள் பலவற்றோடு இணைந்து தன்னாட்சித் தமிழகம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?

இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என இந்திய அரசு அறிவிக்க முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக மாபெரும் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள் தமிழ் மக்கள்.

1965 இல் நடந்த அந்த மொழிப்போரில் தமிழகம் முழுக்க தீப்பற்றியது.
மத்திய துணைராணுவப்படைகளும் தமிழ்நாட்டு காவல்படைகளும் நடத்திய நரவேட்டையில் ஐந்நாறு பேருக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பல தமிழ் இளைஞர்கள் தாங்களாகவே தீக்குளித்தும் நஞ்சு அருந்தியும் தமிழுக்காக உயிர்துறந்தார்கள்.

1965 பிப்ரவரி மாதம் தமிழகமெங்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிக மக்கள் பலியானது பொள்ளாச்சியில்தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிப்ரவரி 12, 1965 இல் பொள்ளாச்சியில் என்னதான் நடந்தது?

முழு விவரத்தையும் பேராசிரியர் அ.ராமசாமி தன்னுடைய மொழிப்போர் வரலாறு தொடர்பான நூலில் ரத்தம் சொட்டச்சொட்ட விவரித்திருக்கிறார்.

இதோ அது...

தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

அனைத்துக்கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் முதலியன மூடப்பட்டிருந்தன.

தொடர்வண்டிகள் ஓடவில்லை.
அனைத்துப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

தனியார் வண்டிகளும் ஓடவில்லை.
முக்கியமான வணிகப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடைப்பகுதிகள் ஆகிய அனைத்தும் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன.

எப்போதாவது இராணுவ வண்டிகளும் காவல் வண்டிகளும் மட்டுமே சாலைகளில் ஓடுவதைக் காணமுடிந்தது.
இயல்பு வாழ்க்கை முற்றிலும் நின்றுபோய்விட்டது.

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரசு குறிப்பிட்டதுபோன்று, சில இடங்களில் வெடித்த கலவரங்களும், துப்பாக்கிச்சூடுகளும் முழுக்கடையடைப்பின் அமைதியைத் தகர்த்தெறிந்தன.

முதல் முறையாக இராணுவம், பொள்ளாச்சியில் துப்பாக்கியால், அதுவும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது.

காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு சில மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் திரண்டு விட்டனர்.

அந்த வேளையில் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் அஞ்சலகத்தின் மேல் ஏறி, அஞ்சலகப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயற்சித்தான்.

அவன் அஞ்சலகத்தின் மேல் ஏறிச்சென்றதைத் தடுக்காமல், அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள், திடீரென்று அவனை இந்தி எழுத்தை அழிக்காமல் கீழே இறங்குமாறு கூறினர்.

ஆனால், அதற்கு அந்த மாணவன் மறுத்துவிடவே, அவனைத் துப்பாக்கியால் சுடப்போவதாகக் காவலர்கள் மிரட்டினர்.

அதற்கு அஞ்சாமல், அந்த மாணவன் இந்தி எழுத்தை அழித்தான்.

உடனே, ஒரு காவலர் அவனைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டார்.

அவன் அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்துச் செத்தான்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டம் காவலர்களை நோக்கிச் சரமாரியாகக் கற்களை வீசியது.

காவலர்கள் தடியடியில் இறங்கவுமே கூட்டம் கலைந்தோடியது.

ஆத்திரம் அடைந்த கூட்டம் மீண்டும் காவலர்களைக் கற்கள் வீசித்தாக்கியது.
அங்கிருந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

கலைந்து ஓடிய கூட்டம் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களுக்குத் தீவைக்க முயற்சித்தது.

இதற்கிடையே காவலர்கள் கோயம்புத்தூரில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இராணுவ உதவியைக் கேட்டனர்.

அதன்படி, ஆறு வண்டிகளில் இராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு ஏறத்தாழ நடுப்பகலின் போது வந்து சேர்ந்தனர்.

பொள்ளாச்சி வந்து சேர்ந்ததுமே, இராணுவத்தினர் கோயம்புத்தூர் சாலையில் இருந்த அஞ்சலகம், முன்பு உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

அஞ்சலகம் முன்பு கூடியிருந்த கூட்டம் அஞ்சலகத்தைத் தாக்க முயற்சித்தது.
இராணுவத்தினர் இயந்திரத்துப்பாகியை எடுத்து வைத்துக் கொண்டு கலைந்து செல்லவில்லையென்றால் சுட்டு விடுவதாக எச்சரித்தனர்.

அப்போது குழந்தைகள் எல்லாம் கூட்டத்தில் இருப்பதாகக் கூறி சிலர் குழந்தைகளைத் தூக்கிக்காண்பித்துச் சுட்டு விட வேண்டாம் என்றும் கலைந்து சென்று விடுவதாகவும் கூறினர்.

ஆனால், கூட்டம் கலைந்து செல்வதற்காகச் சில வினாடிகள் கூடப் பொறுத்துப்பார்க்காமல் இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

உடனே, கூட்டம் கலைந்து பல திசைகளில் ஓடியது.

இராணுவத்தினர் இங்கே சுட்ட போது தான் நான்கு வயதே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்து போனது.

கூட்டம் எல்லாம் சென்றபின், அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார்.

கலைந்தோடிய , ஆத்திரங்கொண்ட கூட்டம் பல இடங்களில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களைத் தாக்கித் தீ வைக்கத் தொடங்கியது.

இராணுவத்தினர் நடமாட்டத்தைத் தடுக்க, சாலையின் நடுவே பாறாங்கற்கள் வைக்கப்பட்டன.

எல்லா வகையான பொருட்களையும் கொண்டு வந்து சாலையின் நடுவே குவித்துவைத்துத் தீ வைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தைக் கூட்டம் சூறையாட முயற்சித்தபோது, இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில், வேலுச்சாமி என்ற அரசு அலுவலர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மற்றொரு கூட்டம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், சமுத்திரம் இராம அய்யங்கார் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கும் தீ வைத்தது.

தீயணைப்பு நிலைய அலுவலகம், நீதிமன்றம் ஆகியவை சூறையாடப்பட்டது.

அங்கிருந்த நாற்காலிகள், மேசைகள் கோப்புகள் முதலியன எடுத்துக்கொண்டு வரப்பட்டு, சாலையின் நடுவே போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இராணுவத்தினர் இங்கும் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை விரட்டியடித்தனர்.

கூட்டத்தில் ஒரு பகுதியினர் காங்கிரசுக் கட்சியைச்சேர்ந்த சிலரைத் தாக்கினர்.
காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் மகாலிங்கம் வீடும் தாக்கப்பட்டது.

இராணுவத்தின் நடமாட்டத்தைத் தடுக்க மயிலஞ்சந்தை அருகே கூடிய பெருங்கூட்டம் சாலையில் கற்களையும் பிற பொருட்களையும் கொண்டு வந்து போட்டது.

இந்தக் கூட்டத்தின் மீதும் இராணுவம் துப்பாக்கியால் சுட்டது.

அங்கிருந்து ஓடிய கூட்டம் தேர்முட்டிக்கு அருகிலிருந்த குதிரை வண்டிகளை இழுத்துவந்து நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தியது.

நல்லப்பா திரையரங்கம், செல்லம் திரையங்கம் ஆகியவற்றின் முன் நின்றிருந்த கூட்டத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

கச்சேரிச் சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இராசேந்திரன் என்ற மாணவனின் கால்களில் குண்டு பாய்ந்த்து.

ஓர் இளைஞரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினார்.

இளைஞரும் துணிவிருந்தால் சுடுங்கள் என்று கூறி முன்னே வந்து நின்றார்.
அங்கு விரைந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் அவர் காலைச்சுட்டார்.

உடனே கூட்டத்தினர் அவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

அந்த இளைஞர் அருகிலிருந்த மருத்துவமனையில் காலுக்குக் கட்டுப்போட்டுக்கொண்டு வந்து, மீண்டும் கூட்டத்தில் சேர்ந்து தீவைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இம்முறை இராணுவத்தினர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுச்சாகடித்தனர்.

ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சுட்டபோது, நடுத்தர வயதுள்ள ஒருவரின் பின்னால் பத்து வயதுச் சிறுவன் ஒளிந்திருந்தான்.

அப்போது அந்த மனிதரின் வயிற்றில் துளைத்தத் துப்பாக்கிக் குண்டு, பின்பக்கமாக வெளியே வந்து, அந்தச்சிறுவனின் நெற்றியைத் துளைத்ததில், இருவருமே அந்த இடத்தில் இறந்து விட்டனர்.

இதைப்போன்ற எத்தனையோ நெஞ்சை உலுக்கும் செய்திகளை இந்நூலாசிரியர் பொள்ளாச்சிக்கு ஆய்விற்காக சென்ற போது கேட்க நேரிட்டது.

கூட்டத்தை இராணுவம் கலைத்த பின்பு, பல இடங்களில் நகர் முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.

பெரிய கடைத்தெரு உட்பட முக்கியத்தெருக்கள் எல்லாம் கற்களும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும், எரிந்தும் எரியாமலும் கிடக்கின்ற கட்டைகளாக நிறைந்து ஒரு போர்க்களம் போல் காட்சி தந்தன.

மறுநாள் இந்தியன் எக்சுபிரசில் வெளியான செய்தியைப்போல்,
மாநில வரலாற்றில், நேற்றைய தினம் (பிப்ரவரி 12) முதல்முறையாக இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய பொள்ளாச்சி ஒரு பெரிய சுடுகாட்டைப் போல காட்சியளித்தது. சாலைகளில் போடப்பட்டிருந்த தடைகளை அப்புறப்படுத்த இராணுவத்திற்கு நான்கு மணிநேரத்திற்கும் மேலானது.

அதன்பின் எம்.சி. பனிக்கர், சத்யபால் ஆகிய தளபதிகளின் தலைமையில் இராணுவ வீரர்கள் பொள்ளாச்சி முழுவதும், அணிவகுத்து வந்தனர்.
பொள்ளாச்சியின் நகரமைப்புப் படம் இராணுவத்தின் கையில் கொடுக்கப்பட்டது.

முக்கியமான இடங்களில் எல்லாம் இராணுவ வீரர்கள் காவல் இருந்தனர். அன்று இரவும் அதைத்தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இரவில் அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.

இரவு வெளியே வந்த இளைஞர்கள் எல்லாம், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் இராணுவத்தினரிடம் இருந்தது.

1938 லிருந்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் போராட்டத்தை அடக்க இராணுவம் தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக வந்தது 1965 இல் தான்.

வந்த மூன்றாவது நாளே இராணுவத்தினர் துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை; அதுவும் இயந்திரத்துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை ஏற்பட்டது பொள்ளாச்சியில்..

ஆனால், மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்த அறிக்கையில் இயந்திரத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை மறுத்தார்.

முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே பொய்யைக் கூறினார்.

அவர், 1965 மார்ச்சு 27 ஆம்நாள் சென்னை சட்டப்பேரவையில் பேசியபோது, மாநிலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க இயந்திரத்துப்பாக்கியை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

இராணுவம் யாரிடமிருந்து ஆணைகள் பெறுகிறது?

காவல்துறையிடமிருந்தா அல்லது அரசிடமிருந்தா? என்று ஏ.குஞ்சன் நாடார் என்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு
நான் வருத்தப்படுகிறேன். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் என்னால் கூறமுடியாது என்று முதலமைச்சர் பதிலளித்தார்.

மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே அந்த மாநிலத்தில் இராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒரு நிலைமை தான்.

எப்படியாயினும் பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு இராணுவம் இயந்திரத்துப்பாக்கியால் சுட்டது என்பதுதான் உண்மை.

பொள்ளாச்சியில் பல கட்டங்களில் இராணுவ வீரர்கள் சுட்டதில் எத்தனை பேர் இறந்திருப்பர்?

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் என்றுமே கிடைக்காமலே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

எல்லாமே மூடி மறைக்கப்பட்டுள்ளன.
உண்மையை மறைப்பதற்காக இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டன.

தெருவிலே கிடந்த பிணங்களை எவரும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தொடக்கத்தில் ஓரிரு பிணங்களை மட்டுமே கூட்டத்தினர் எடுத்துச் சென்றனர்.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு வெளியில் வந்தால், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அஞ்சியே பலர் வீட்டில் இருந்தனர்.

தங்கள் வீட்டுப்பிள்ளை இறந்துவிட்டது என்று தெரிந்தும் அழுதால் எங்கே இராணுவத்தினர் வீட்டிற்குள் வந்துவிடுவரோ என்று அஞ்சிப்பேசாமல் இருந்தனர்.

பிணங்களை எல்லாம் சேகரித்த இராணுவத்தினர் சிலவற்றைப் பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் போட்டுத்தீ வைத்துக் கொளுத்தினர்.

சுடுகாட்டைச் சுற்றிலும் இராணுவத்தினரும் துப்பாக்கி பிடித்த காவலரும் நின்று காவல் காத்தனர்.

பிணங்கள் எரிக்கப்பட்ட அன்று, அந்தப்பக்கத்தில் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

அதன்பின் அந்தப்பக்கம் நடந்து செல்கின்றவர்களோ அல்லது பேருந்து மற்ற வண்டிகளில் செல்கின்றவர்களோ சுடுகாட்டைத் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சிச் சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்பட்டதுபோக, மற்றவை இராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டு, மதுக்கரை இராணுவ நிலையம் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன.

இப்படி நடைபெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையக் கணிப்பது எளிதான செயலன்று.

ஆனால், நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் கூறிய செய்திகளிலிருந்து குறைந்தது 80 பேர் அல்லது அதிகமாக 120 பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அரசு கொடுத்த எண்ணிக்கை வழக்கம் போல் குறைவுதான் என்றாலும் , இந்தத் தடவை அறிவித்த எண்ணிக்கை சற்று நகைப்புக்கிடமாகவே இருந்தது.

பத்தே பேர் தான் கொல்லப்பட்டார்கள் என்பது தான் அரசின் எண்ணிக்கை..

1965 இல் தமிழ்நாட்டில் 50 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் , அமைதியை நாடும் பண்பாடு மிக்கப் பொள்ளாச்சி மக்கள் தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது கொடுமையாகும்.

பேராசிரியர் அ.இராமசாமி அவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு  நூலின் இரண்டாம் பாகத்தில் 'பொள்ளாச்சிப் படுகொலை' எனும் அத்தியாயத்திலிருந்து...

தமிழகத்தில் தமிழை அழிக்க.. பாஜக வின் அடுத்த சதி...


கட்டபொம்மன் (தெலுங்கன் கெட்டி பொம்மு நாயக்கன்) முதல் விடுதலை போராட்ட வீரனா..?


சில வரலாற்று பதிவுகள்....

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும், அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம் நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல.

நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்..

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்.

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே..

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுத்துவதே ஒரு வரலாற்று பிழையாகும்..

மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை..

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளப்பட்ட போது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர், பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர். இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ள வேண்டும்..

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?

ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும்.

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில் தான்..

முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்து கொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான்.

அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான் , அவர்களை சாட்டையால் அடித்தும் , கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான். கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும் , நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும் , சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன் போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்..

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான். அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே..

அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர். இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர்.

ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம் அறியலாம்..

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர். இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799 இல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான்.

ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும், அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

05.08.1799 இல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார் , 07.08.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம் , தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி , நாகலாபுரம் , காடல்குடி , குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை , கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம் , ஊத்துமலை , சொக்கம்பட்டி , ஆவுடயாபுரம் , தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

தமிழர்களே இப்போது சொல்லுங்கள்...

இந்த வடுக வந்தேறியா சுதந்திர போர் வீரன்?

தமிழர்களே நமது வரலாற்றை நாம் ஆழ்ந்து தெளியாமல் வந்தேறிகளின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாது.

எனவே இந்திய தேசிய மாயை , திராவிட தேசிய மாயை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு...

இருக்கும் உடமைகளை காக்கவும் , இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழர் தேசிய விடுதலை களத்தை அமைப்போம்...

தமிழர் நாட்டை தமிழரை மட்டுமே ஆளே வைப்போம்...

அழிவை நோக்கி தமிழ்நாடு.. சிந்தியுங்கள் மக்களே...


டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட சிபிஎம் பாலபாரதி...


திண்டுக்கல் அருகே சித்தரேவு ஜங்ஷனில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ளதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரமுகர்  பாலபாரதியிடம் முறையிட்டனர். கடையை அகற்றாவிட்டால் இன்று பொதுமக்களை ஒன்று திரட்டி கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி பாலபாரதி தலைமையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், அப்பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி கடைக்கு முன்பு கூடினர். அப்போது கடையை திறக்க வந்த ஊழியர்களை மறித்து கோஷமிட்டனர். பட்டிவீரன்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதனை கேட்காமல் அவர்கள் கடைக்கு பூட்டு போட்டனர். மேலும் மதுபான கடைகளை திறந்து இளைய சமுதாயத்தினரை சீரழிக்காதே, பெண்களை விதவைகள் ஆக்காதே என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்களும் போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்...

தொண்டர்களை ஊக்கப்படுத்த நாங்கள் முடிவு எடுத்தோம் - செங்கோட்டையன்...


தங்கள் பகுதியில் கட்சி தொண்டர்கள் யாரை கை காட்டுகின்றார்களோ அவர்களுக்கே இனி அரசு பணி - அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு...

நமது தொன்மையான பயிர் வகைகளைப் பயிரிடுவோம்...


மன்னிப்பு என்பது உருது மொழிச் சொல். பொறுத்தல் என்பதே தூய தமிழ்ச் சொல்...


 - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பற்றி ஆர்.வி.பதி எழுதிய நூலில் இருந்து..

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை.

'மன்னிப்பு' என்ற சொல் பழங்கால கவிதைகள் ஏதுமில்லை. தொன்மைத் தமிழில் பொறுத்தல் என்றே இருந்தது...

11000 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ்...


கடற்கரை நகரம்...

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம்.

இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும் போது கடலால் அழிந்து போன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்து விடுவார்கள்.

இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கு எல்லாம், ஏன் உலக மொழிகளுக்கு எல்லாம் முன்னோடி நாம் தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது.

மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது.

சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன.

2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்து போனது.

இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார்.

அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல்.

இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப் பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்?

இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

இந்த நிலை தொடர்ந்தால் வருங்கால குழந்தைகள் நம்மை இப்படி தான் கேட்கும்...


சென்னைக்கு செல்லும் பகல் மற்றும் இரவு நேர அனைத்து அரசு பேருந்துகளும் உணவிற்காக விகிரவாண்டியில் உள்ள ஏதேனும் ஒரு உணவகத்தில் நிறுத்தபடுகிறது...


அங்கு ஒரு விடயத்தை நன்கு கவனிக்க வேண்டும்...

20 ரூபாய் மதிப்புள்ள தோசை ரூபாய் 60..
5 ரூபாய் மதிப்புள்ள காபி ரூபாய் 10..
3 ரூபாய் மதிப்புள்ள வடை ரூபாய் 8..
25 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானம் ரூபாய் 35-40..

நான் ஒரு நாள் அங்கு கடையில் வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார்.

இங்கு வரும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்-க்கும் இலவசமாக உணவு, ஊதுவதற்கு சிகரேட் மற்றும் அடுத்த வேலை உண்பதற்கு உணவு பார்சல் இதை அனைத்தையும் யாரிடம் வாங்குவது என்று கேட்குறார்.

அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் அங்கு மட்டுமே நிற்க வேண்டும் என்பது அரசின் ஆணை என்றும் சொல்லுகிறார்கள். வேரு எங்கும் நிற்க்காது. இதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

அந்த மாவட்ட கலெக்டர்ரும் தமிழக அரசும் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறது.

இதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அனைவரும் SHARE செய்யுங்கள்.

நாம் செய்யும் ஒவ்வொரு SHARE  ஆனது நம் மண்ணில் வாழும் மக்களுக்கும், நம் மண்ணை நம்பி வந்த மக்களுக்கும் நாம் செய்கிற உதவி ஆகும்...

திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் - தெலுங்கர் ஸ்டாலின்...


தீர்க்கப்படும் முதல் 10 பிரச்சினை இதுவாக கூட இருக்கலாம்...

1. குடும்ப சண்டை.

2. 2ஜி,. கலைஞர் டிவி ஊழல்.

3. அதிமுக அரசு பொதுமக்களிடம் மீட்டுக் கொடுத்த நிலத்தை மீண்டும் பறிப்பது.

4. முழு கமிஷனும் வாங்கிய சேது கால்வாய் திட்டம் செயல் படுத்துவது.

5. மீத்தேன் திட்டம் கொண்டு வந்து கமிஷனை முழுமையாக பெறுவது..

6. தமிழக அரசு வாங்கிய என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு (குடும்ப நபர்) தாரை வார்ப்பது.

7. காவேரிபிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் தந்த தீர்ப்பை செயலிழக்க செய்து கர்நாடாகவுக்கு விசுவாசத்தை காட்டி கர்நாடாகவில் உள்ள குடும்ப சொத்துக்களை பாதுகாப்பது.

8. முல்லைபெரியாறு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் தந்த தீர்ப்பை செயலிழக்க செய்து கேராளவுக்கு . விசுவாசத்தை காட்டி கேராளாவில் உள்ள குடும்ப சொத்துக்களை பாதுகாப்பது.

9. அம்மா குடி நீரை நிறுத்தி, குடும்ப திமுகவினர் நடத்தும் வியாபாரத்தை பெருக்குவது .

10. ஐந்தாண்டுகள் திரைத் துறையில் கிடைக்காத வருமானத்தை திரைதுறையினரிடம் மிரட்டி பெறுவது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய கடற்படை புடுங்கிட்டு இருந்துச்சு...


கண்டங்கத்திரியின் சிறப்பைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?


கண்டங்கத்திரியும் அதன் மருத்துவ குணமும்..

கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.

சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து 'தசமூலம்' என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும்.

இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும்.

கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியைத் தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.

வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.

கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.

இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல் வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்...

பல்கலைக்கழகங்களில் நடக்கும் மாபெரும் ஊழல்.. அரசு மறுக்க தயாரா.? அம்பலபடுத்துவோம் - ஊழல் பட்டியல் வெளியிட்டவர் பாமக அன்புமணி எம்.பி அவர்கள்...


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசை தமிழர் இசையே...


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்.

இசையியல் : ச. மெய்யப்பன் எம்.ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மணிவாசகர் பதிப்பகம்...

கூத்தாடிகள் பின்னாடி போவியா... போவியானு நல்லா விரட்டி அடிங்க...


சித்தர்களின் எளிய வைத்தியம்...


பண்டையச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள்..

இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

நெல்லிக்காயை சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

எலுமிச்சம் பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய வங்கியின் ஏமாற்று வேலை...


காலப்பயணமும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியும். – ஏலியன்ஸ் 2...


ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… நாம் இறந்தகாலத்துக்கு தான் செல்ல முடியும் என சொல்லி இருந்தேன்

ஆனால், நண்பர் ஒருவர்… இல்லை எதிர்காலத்துக்கு தான் செல்ல முடியுமென தனது கருத்தை கூறியிருந்தார்.

நான் நெட்டில் அது சம்பந்தமாக (மேலோட்டமாக) தேடிய வரையில்…
அப்படி எதுவுமே நிரூபிக்க படவில்லை.

ஆனால், காலம் மாறுபடும் என்பது நிரூபிக்க பட்டுள்ளது (time travel theory).

ஒரே முறையில் செய்யப்பட்ட இரு கடிகாரங்களை ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டது.

அதாவது, ஒரே மாதிரியான இரு கடிகாரங்களில் ( பொறி முறைக் கடிகாரமல்ல) ஒன்றை, ஒரு விண்கலமொன்றினுள்ளும் இன்னொன்றை ஆய்வு கூடத்திலும் வைத்து… விண்கலத்தை பூமியை வேகமாக ( ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதே…) சுற்ற செய்த போது… பல சுற்றுக்களின் பின்னர், மணிக்கூட்டின் வாசிப்பில் ஒரு சிறு வித்தியாசம் இருந்தது.

இது தான் தற்சமையம் பெளதீக ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

போன பதிவில் கூறிய… மனிதனால், விண்வெளியை நோக்கி விடப்பட்ட சவால் இது தான்….

இன்றைய மனிதனின் உருவம்… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

தொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது… வாய் பகுதி நீண்டதாகவும்… கீழ்த்தாடை தடித்ததாகவும்… கைகள் நீண்டதாகவும்… காணப்பட்டுள்ளது.

காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டையாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்ட கைகளும்… உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருந்து இருக்கின்றன.

பின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்… அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது.

அதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது… கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்… அதனது நீளமும் சற்று குறைந்தது.

என்ன சம்பந்தமில்லாமல் இருக்குதே என்று நினைக்க வேணாம்..

சம்பந்தத்தோட தான் எழுதி இருக்கேன்.
என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்..

இலுமினாட்டி களும் விவசாய அழிப்பு இரகசியமும்...


SILENT SPRING என்ற இந்த புத்தகத்தின் மூலம் பல உண்மைகளை வெளி கொண்டு வந்ததால் இந்த புத்தகம் எழுதியவர் இலுமினாட்டிகளால் கொல்லப் பட்டார்..

அந்த புத்தகம் மௌன வசந்தம் என்று மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது
மனதை உலுக்கும் மௌன வசந்தம்..

பசுமை விகடன்: 25.02.2007 - நம்மாழ்வார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுவீடன் நாட்டுப் பயணிகள் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவர்களில் ஒரு அம்மையாரின் பெயர் ரூத். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, 'உலகம் முழுவதும் உள்ளவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் ரூத்.

குறுக்கிட்ட நான், 'எப்படி ஒரேயடியாக இதை நீங்கள் சொல்ல முடியும்?' என்றேன்.

பூச்சிக் கொல்லி (pesticide) என்பதையே எடுத்துக் கொள்ளுங்களேன்... எனச் சொல்லி என் கண்களை நேராகப் பார்த்தார் ரூத்.

அதற்கென்ன... பூச்சிகளைக் கொல்லும் மருந்து தானே பூச்சிக்கொல்லி என்றேன் நான்.

மருந்து என்கிறீர்கள்... அதில் கொஞ்சம் நீங்கள் சாப்பிட முடியுமா? என்று அவர் திகில் கிளப்பி அதை நீங்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்று கொக்கிப் போட்டார். விஷம் தாக்கிச் செத்து போவேன் என்றேன்..

நேரடியாகச் சாப்பிடும் போது அது மனிதர்களைக் கொல்லும் என்றால், அது எப்படி பூச்சிக் கொல்லி யாக மட்டுமே இருக்க முடியும்.

அதை உயிர்கொல்லி என்று சொல்வது தானே சரியாக இருக்க முடியும். இப்போது புரிகிறதா...

நாமெல்லாம் பொய்தான் சொல்கிறோம் என்று? என்று காட்டமாகக் கேட்டார் ரூத்.

அதுமட்டுமில்லை... பூச்சிக்கொல்லியை நேரடியாக சாப்பிட்டால்தான் ஆபத்து என்றில்லை. காய், கனி, பால், முட்டை, இறைச்சி, குடிநீர், தாய்ப்பால் என்று எந்த வடிவிலும் அது நமது உடல் புகுந்து சிறுக சிறுக துன்பத்துக்கு ஆளாக்கிக் கொண்டு தானிருக்கிறது.

உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி உள்ளதா... மூச்சுத் திணறலா... சிறுநீரகத்தில் கல் அடைப்பா... கர்ப்பப் பையில் புற்றுநோயா...

இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி... உங்கள் உடலில் கண்ணுக்குத் தெரியாமல் போய்ச் சேர்கின்ற பூச்சிக்கொல்லி நஞ்சுக்கும் பங்கிருக்க வாய்ப்பு உண்டு.

பூச்சிக் கொல்லி நஞ்சு என்பது செடிகளிலிருந்து பசுவின் வயிற்றுக்குள் போய், பால் வழியாக நமது உடலுக்குள் பாய்வதும் நடக்கிறது.

தாய் வயிற்றுக்குள் இருந்து ரத்தம் பெற்றோமே... அன்று தொடங்கியே நம் தாயோடு சேர்த்து நாமும் நஞ்சுண்ட (ஆ)சாமிகள் தான்..

கேரள மாநிலத்தின் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் 'எண்டோசல்பான்' என்ற பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில்.... சுற்றுப்புறத்து ஊர்களில் பல குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன.

இத்தனைக்கும் அந்த முந்திரிப் பருப்பை குழந்தைகளின் தாயார் தின்னவுமில்லை, முந்திரிக் கொல்லையில் வேலை பார்க்கவும் இல்லை.

நஞ்சு கலந்த காற்றை சுவாசித்தது, காற்று வழியே நஞ்சு படிந்த ஓடையின் நீரை குடித்ததும்தான் பெருங்குற்றம் ஆகிப்போனது.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், நமது தேசத்தில் இப்படி ஆண்டுதோறும் ஆயிரம் லட்சம் கிலோ நஞ்சை நமது பயிரிலும் நிலத்திலும், நீரிலும், காற்றிலும் கலந்துகொண்டே இருக்கிறோம்.

இப்படியெல்லாம் நடக்குமென்று 1962-ம் ஆண்டே அமெரிக்காவைச் சேர்ந்தராச்சேல் கார்சன் என்ற பெண் எச்சரித்தார்.

கடலியல் விஞ்ஞானியான அவர் எழுதிய 'மவுன வசந்தம்' என்னும் புத்தகம் உலக பிரசித்திப் பெற்றது.

இந்தப் புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது?

அமெரிக்காவில் பனிக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். அந்தக் கொடுமை தாங்காமல் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் ராபின் பறவை, வசந்தம் பிறக்கும் போது தான் நாடு திரும்பும்.

வசந்தத்துக்கு கட்டியம் கூறும் அந்த ராபின் பறவை, அமெரிக்காவிலிருந்தே காணாமல் போக ஆரம்பித்தது. அதுவே 'மவுன வசந்தம்' என்ற புத்தகம் பிறக்கக் காரணமானது.

1956-ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்து நாட்டில் நடந்த சம்பவம்தான் இப்படிஒரு நூல் பிறக்க காரணம்.

அந்த நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று அழித்துக் கொண்டிருந்தன.

அந்த வண்டுகளை அழிக்க பூச்சி கொல்லியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்தார்கள்.

ஜப்பான் வண்டுகள் செத்துப் போயின.

ஆனால், இன்னொரு விபரீதம் நிகழ்ந்தது.

நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்த போது, அதைத் தின்ற மண்புழுக்கள் இறந்து போயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்து போயின.

ஹெலிகாப்டர் தூவிய நஞ்சு, நீரில் விழவே மீன்கள் அரை மரண நிலையில் நீரோடையில் மிதந்தன.

கொடுமை இத்தோடு முடியவில்லை.

மண்புழுவை உண்ட பறவைகள், கூடு கட்டவில்லை. அதைவிட சற்றே குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள் கூடு கட்டின.

ஆனால், முட்டை இட்டதே தவிர அவை குஞ்சு பொறிக்கவில்லை.

13 நாட்களில் முட்டையிலிருந்து வெளி வரவேண்டும் குஞ்சு. 21 நாளாகியும் குஞ்சு வராதது கண்டு தாய்ப்பறவை ஏங்கிப் போனது.

பூச்சிக் கொல்லி மருந்துகள் உயிரணுவை அழித்து, உயிரினங்களை மலடாக்குகிறது என்று அப்போது கண்டறிந்தனர்.

அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கை தலைக் கழுகும் மெல்ல மெல்ல மறைந்து வருவதைப் பார்த்தார்கள்.

இந்த விஷயங்களை எல்லாம் தான் புத்தகமாக எழுதி உலகுக்கு வெளிப்படுத்தி அதிர வைத்தார் ராச்சேல் கார்சன்.

இதற்கு நடுவே தான்... சேற்றிலே செந்தாமரை மலர்வது போல், அமெரிக்காவில் ரொடேல் என்கிற விவசாயி, தன் பெயரில் இயற்கை வழிப் பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்.

இன்று உலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டி வரும் இயற்கை வழிப் பண்ணைக்கு முன்னோடிகள் அமெரிக்காவும் ஜப்பானும் தான்.

ஆனால், அதெல்லாம் இந்த நவீன யுகத்தில் தான்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி இந்தியா தான்..

ஆம்... அமெரிக்க விவசாயி ரொடேல், இயற்கை விவசாயத்தை படித்துச் சென்றதே இங்கிருந்து தான்...