29/01/2018
மரு வை போக்கும் மருத்துவம்...
மரு (Skin Tag) உதிர...
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்...
இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்...
எப்போது வரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?
தமிழர்களுக்கு என்று முறையான நாடோ அரசோ இல்லை.
இருந்திருந்தால் ஆவணங்களில் 'இனம்' என்பது சேர்க்கப்பட்டு யார் எந்த இனம் என்பதற்கான சான்று இருந்திருந்திருக்கும்.
ஆனால் இன்று நம்மிடம் இனத்தின் உட்பிரிவுக்கான சான்று ஆவணம் மட்டுமே உள்ளது.
ஆக இன்று யாரெல்லாம் தமிழர் என்று அடையாளம் காண சாதி சான்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
தமிழர் தாய்நிலம் தமிழரின் (இராணுவக்) கட்டுப்பாட்டில் வந்தபிறகு
இனம் எது என்பதற்கான சான்று வழங்கப்படும் வரை தமிழர் சாதி அடையாளத்தை மறைக்காமல் இருப்பது அவசியமாகிறது.
நமக்கான அரசு அமைந்ததும் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு இனத்தை மட்டும் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.
மற்ற இனங்களுக்கு இனத்தின் மொத்த வரலாறே நீளமாக இல்லாத போது
தமிழரின் சாதி வரலாறு பிற இனங்களின் வரலாறை விட நீளமாயிருக்கிறது.
இது தமிழர்களின் சாதியப்பெருமைக்கு வழிவகுத்து பிரிவினை உண்டாக்கி
வந்தேறிகள் அரசியல் செய்ய வழி ஏற்பட்டுவிட்டது.
அதாவது நமது சாதி பிரச்சனைக்கு காரணம் நமது பழமையே ஆகும்.
அதனால் சாதி அடையாளத்தை விட பழமையான இன அடையாளம் புறக்கணிக்கப்பட்டு போதிய ஆய்வுகள் இல்லாமல் இன அடையாளம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
50,000 ஆண்டுகள் பழமையான நமது இனம் அதன் பழமையை நிறுவ முடியாமல்...
சில நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான சாதி வரலாற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக முதலில் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டு.. சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும்.
பிறகு சாதிகள் அனைத்தும் இணைந்து தமிழர்நாடு அமைக்க போராட வேண்டும்.
பிறகு இன அடையாளத்தை உறுதி செய்து சான்றளித்து விட்டு சாதிய அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.
இதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.
வருங்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிடும்.தமிழினம் மொத்ததமும் ஒரு தமிழ்ச் சாதியாக மாறித்தான் தீர வேண்டும்..
முப்படை கொண்ட தமிழர் அரசு அமைந்த பிறகு...
இன்று சாதிய வரலாற்றை எவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோமோ
அதே அளவு தீவிரத்துடன் இன வரலாறை ஆய்வு செய்ய வேண்டும்.
சுருக்கமாக...
தமிழர் நாடு தமிழரின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வரும் வரை சாதி அடையாளமே தமிழ் அடையாளம்...
முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்...
தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தால் அது ஓம் வடிவில் தெரிகிறது.
அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது..
அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ...
01 திருப்பரங்குன்றம்
02 திருச்செந்தூர்
03 பழநி
04 சுவாமிமலை
05 திருத்தணி
06 சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
07 மருதமலை
08 வடபழனி (சென்னை)
09 வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி
10 நாகப்பட்டினம் சிக்கல்
11 திருச்சி வயலூர்
12 ஈரோடு சென்னிமலை
13 கோபி பச்சமலை
14 கரூர் வெண்ணைமலை
15 கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16 கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17 கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வடமாநில தொழிலாளர்களின் அட்டகாசம்...
கோவையில் பயங்கரம்...
கோவை அன்னுரில் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களின் வெறிச்செயல்...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் பெண்ணை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணின் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு, இரண்டு மகள் உள்ளனர். தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களின் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரின் மூலம் டைல்ஸ் பதிக்கும் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை ஈடுபடுத்தியிருந்தார். இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால், இரவு அவர்களின் வீட்டிலேயே தங்கி, பணி மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, நேற்று, டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட மூவரும், இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை, கதவு தட்டி எழுப்பிக் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். உருட்டுக்கட்டையால் அடித்து கொலை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை கதவை திறந்த மயில்சாமியின் மனைவி ராஜாமணியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதனை நம்பிய ராஜமாணி கதவை திறந்து வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல், உருட்டுக் கட்டை, கம்பி உள்ளிட்டவற்றால் ராஜாமணியைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
நகை பணம் கொள்ளை நகை பணம் கொள்ளை ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் மயில்சாமியையும் சுற்றி வளைத்து பிடித்த, வடமாநில தொழிலாளர்கள் பின்னர் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். முதலில் கொலை செய்த ராஜாமணியின் உடலை ஒரு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். மயில்சாமியின் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மயில்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் வருவதைக் கண்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்வாசல் வழியாக தப்பியுள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் மின்சாரம் பாய்ந்த வலியில், மயில்சாமி அலறவே அக்கம், பக்கத்தினர் மயில்சாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள், வட மாநிலக் கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் மயில்சாமி. தொழிலாளர்கள் போர்வையில் கொள்ளையர் தொழிலாளர்கள் போர்வையில் கொள்ளையர் தகவலறிந்த அன்னூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயில்சாமி வீட்டில் டைல்ஸ் வேலைக்கு வந்தவர்கள் உண்மையில் வடமாநில தொழிலாளர்கள் தானா, அல்லது தொழிலாளர்கள் போர்வையில் வந்த வடமாநில கொள்ளையர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியர் பாதிப்பு வயதான தம்பதியர் பாதிப்பு உறவினர்களின் துணையில்லாமல் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினர் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை வேலைக்கு வைக்கும் முன், அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வயதானவர்களுக்கு காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டி இது போன்ற ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்து கொள்ளை கும்பலைப் பிடிக்க சென்று அந்த கொள்ளையர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
தமிழ்நாட்டில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் வரம்பற்ற முறையில் அனுமதிக்கப்படுவதாலும் அவர்களின் பின்னணி வசாரிக்கப்படாததாலும் அவர்களை கண்கானிக்கவும் அவர்களின் வருகைக்கான நோக்கத்தை கண்டறிவதிலும் பெரிய சிக்கல்கள் உள்ளது.
வெளிமாநிலத்தவர்கள் சாரைசாரையாய் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்க நாகலாந்தை போல் உள்நுழைவுச் சீட்டு(INNER LINE PERMIT) வழங்கி வரம்பு கட்ட வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர் எங்கே, எதற்கு வருகிறார் என்பது தெரியவரும். இவர்களைப் போன்ற கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் திறந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்க வாய்ப்பாக அமையும்!!
தமிழக அரசு செவி மடுக்குமா?
இதுவே காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டி அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்...
மேலும் தமிழர்கள் இது போன்ற முகம் தெரியாத கொள்ளையர்களிடம் சிக்கி தவித்து பணத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்டு உயிரை மாய்த்து இறக்கும் பரிதாக கையறை நிலைக்கு தள்ளப்படாமல் காக்கப்படவார்கள். நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வார்கள்...
கற்ப மூலிகை வேப்பிலை...
உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.
நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.
இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.
இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.
கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது..
1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory).
2. வீக்க உருக்கி (anti inflammatory).
3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic).
4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer).
5. மலேரியா போக்கி (Anti malarial).
6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal).
7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial).
8. வைரஸ் அகற்றி (Anti viral).
9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant).
10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous).
வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.
வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.
நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.
வேப்பிலையை பயன்படுத்தும் முறை...
புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.
வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.
வேப்பிலையின் பொதுவான பயன்கள்...
வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.
சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.
சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.
வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.
வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...
விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.
வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச் சாறுக்கு உண்டு.
வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.
மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
காளான் நோய்களான டிரைக் கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.
பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.
வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக் கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்...
கோவை கோட்டத்தில் சாதாரணமாக மாறிய, 'எக்ஸ்பிரஸ்' பஸ்கள்...
பஸ் கட்டண உயர்வுக்கு பின்னர் அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தில் இயங்கும் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் என, 1,748 நகர பஸ்கள் சாதாரண கட்டணத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த, 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, புறநகர் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், 5 ரூபாயில் இருந்து, 6 ரூபாயாகவும், நகர் மற்றும் மாநகர பஸ்களில், 3 ரூபாயில் இருந்து, 5 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வால்வோ பஸ்களில், 1 - 38 நிலை வரை குறைந்தபட்ச கட்டணம், 15லிருந்து, 25 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 100லிருந்து, 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.கட்டண உயர்வால் மக்கள் மட்டுமின்றி, கண்டக்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக, நகரங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ், தாழ்தள சொகுசு என, பஸ்களின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை பஸ்களில், சாதாரண வகை பஸ்களை காட்டிலும் பல மடங்கு அதிகம் என்பதால் பயணிகள் இவற்றில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
பிரச்னையை தவிர்க்க...
சில சமயங்களில் கண்டக்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் விதமாகவும், பயணிகள் சிரமத்தை போக்கவும், சொகுசு, எக்ஸ்பிரஸ் போன்ற பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டு வருகின்றன.கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில், 2,320 பஸ்கள் இயங்குகின்றன. தற்போது, கோவை போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை, 649 எல்.எஸ்.எஸ்., நகர பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து எக்ஸ்பிரஸ் பஸ்களும் சாதாரண கட்டண நகர பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், 1,323 நகர பஸ்களில், 224 தாழ்தள சொகுசு பஸ்கள் தவிர மற்ற, 1,099 பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக இயக்கப்படும் என, அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டம் தெரிவித்துள்ளது.
சிரமத்தை குறைக்கும் விதமாக...
போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகர பஸ்களின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் உள்ளது. கட்டண உயர்வின்படி, சொசுகு பஸ்களில், 12 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் சிரமத்தை குறைக்கும் விதமாக சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை கோட்டத்தில் மட்டும், 1,748 எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண பஸ்களாகவும், அனைத்து எக்ஸ்பிரஸ் பஸ்களும் சாதாரண பஸ்களாகவும் மாற்றி இயக்கப்படுகின்றன' என்றார்மீது நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை வழங்காத, 94 வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி வெளியிட்ட அறிக்கை...
அரசு விடுமுறை நாளான குடியரசு தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பது கட்டாயம். விடுமுறை அளிக்காமல் அவர்களை வேலைக்கு அமர்த்தினால், அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம் அல்லது சம்பளத்துடன் வேறோரு நாளில் விடுப்பு வழங்க வேண்டும்.
மேலும், தொழிலாளர்களின் ஒப்புதல் பெற்று சம்மந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்புவது அவசியம். இதன் அடிப்படையில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 163 நிறுவனங்களில், குடியரசு தினத்தன்று தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 54 கடைகள், 33 ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் என, 94 நிறுவனங்கள்விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்ந்தியிருந்தனர். இந்நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது...
மருத்துவ துறையை மற்றும் அறிவியலின் பயனை தெரிந்தால் மட்டும் தடுப்பூசியை பற்றி பதிவு போடுங்கள் என கூறுபவர்களுக்கு...
எங்களுக்கு மக்களின் மீது அன்பும், அவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் தான் தடுப்பூசி முறையை எதிர்க்கிறோம்..
நீங்கள் கூறும் மருத்துவத்தை தெரிந்தவர்கள் தான் இத்தனை ஆண்டுகளாக என் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் பணத்திற்காக...
நாங்கள் மக்கள் பாதுகாப்பிற்காக மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துக்கிறோம்...
பாசிட்டிவ் எனர்ஜி...
உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன் போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.
வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும் போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது.
சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள் தான்.
நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.
பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளி தான் நெகட்டிவ் எனர்ஜி.
அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது.
ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக் கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது?
மனிதனின் சிந்தனை அறை தான்...
இரு சக்திகளும் ஒரே அறையில் தான் வித்தாக விழ்கிறது.
அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.
மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலி தான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.
இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார்.
இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர்.
எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும்.
நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும்..
எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.
கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர்.
இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும்.
எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும்.
உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக் கொள்வோம்.
திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது.
அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.
ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.
மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.
இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஒட்டு மொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.
நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு.
ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும் போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத் தானே திரும்பவும் கிடைக்கும்.
அதற்காக அப்படி நடந்து கொள்வாராம் அம்மனிதர்.
சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளி வருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
எனவே வாழும் வீட்டில், சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...
இந்தி எதிர்ப்பை சமாளிக்க வாய்ப்பூட்டுச் சட்டம் போடச் சொன்ன பெரியார் (எ) கன்னட ஈ.வெ.ரா...
தென்மொழி ஏடு கண்டனம்...
1965ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போரில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி ஏடு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதன் காரணமாக பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை கடுமையாக எதிர் கொண்டது.
அப்போது பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை ஆதரித்தும், ஒடுக்குவதற்கான வழிமுறைகளை பேராயக்கட்சிக்கு (காங்கிரசு) அறிவுறுத்தியும் பெரியார் தனது விடுதலை ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்டித்து “தென்மொழி” ஏடு பெரியாருக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தது. “மொழி ஞாயிறு” தேவநேயப்பாவாணர்
அவ்வேட்டின் சிறப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும் சிறந்த பண்பாளர் என்றும், அவரைப் போன்ற சனநாயகவாதி எவரும் இல்லையென்றும் தற்போது வரையிலும் புளங்காகிதம் கொண்டு பேசிவருகின்றனர் பெரியாரியவாதிகள் அது உண்மையல்ல, என்பதை எடுத்துரைக்கும் வகையில் “வாய்ப்பூட்டு சட்டம் ” கொண்டு வரச் சொன்ன பெரியாரை தென்மொழி ஏடு அன்றே தோலுரித்தது.
அது பின்வருமாறு...
இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சமாளிக்க நாடெங்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் கொணர்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப் பற்றி யாரையும் பேசவிடல் கூடாது. எல்லாச் செய்தித்தாள்களையும் தடை செய்தல் வேண்டும். -ஈ.வெ.ரா.
பதில்: கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்னும் பகுத்தறிவாளரின் (Rationalist) கூற்றா இது. இந்திக்குப் பாடை தூக்கியாக இருந்த இவரே , இந்திக்குப் பல்லக்குத் தூக்கியாக இப்பொழுது இருக்கின்றாரே என்பதால் நமக்கு வருத்தமோ, இழப்போ துளியும் இல்லை. ஆனால் கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் மதிப்பளிக்க வேண்டிய இவரா, கருத்துகளுக்கும், செய்தித்தாள்களுக்கும் தடை போடச் சொல்கின்றார் என்பதே நம் வியப்பிற்குரியது.
இவரின் நிலை இரங்கத்தக்கது.
கொள்கை நிலையில் இவர்க்கு அரசியலில் தான் வீழ்ச்சி என்றிருந்தோம் இப்பொழுது அறிவிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பெரியவர்க்கு ,
இனி இவர்செல்லாக்காசு,
அணைந்த தீப்பந்தம்;
சப்பிய பனங்கொட்டை ;
துப்பிய வெற்றிலைத் தாம்பூலம்;
பிழிந்த கருப்பஞ் சாறு;
வெடித்த வாணவெடி,
இனி இவரால் தமிழர்க்கு கேடில்லை. பிறர்க்கும் பயனில்லை;
இவர் கருத்துப் பற்றி எவரும் கவலை வேண்டுவதில்லை.
(“அரசியல் பட்டடை” என்னும் தலைப்பில் “சம்மட்டி” பெயரில் தென்மொழி ஏட்டில் வெளிவந்தது. பக்கம்12, மீனம் -பங்குனி தி.பி.1996, மார்ச்1965)...
Subscribe to:
Posts (Atom)