இரா – இரவு..
வண்ணன் – நிறம் பொருந்தியவன்.
இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள்.
பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணர முடியவில்லை.
ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம்.
ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.
ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன.
இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்து வருகிறது…
இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.
ஆதாரத்தின் சுருக்கம்..
1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.
2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.
3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப் படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.
4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.
5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்.
6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம் (வானூர்தி) போன்றவற்றைக் கண்டு பிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்.
7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே.
8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே. ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004]
குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.
ராவண காவியம் - ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது.
கம்பனின் சொல் வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் திராவிடமும் இதை கவணத்தில் கொள்வதில்லை..
இதன் சாராம்சத்தில்…
இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.
எனக் குறிப்படப்பட்டுள்ளது.
பத்து தலைக் காதல் – எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம் என்பது முன்னோர்களின் மொழி. ஒரு தலையுள்ளவனின் அறிவினை விட பத்துதலை உல்லவனின் அறிவு எப்படியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல கலைகளிலும் வல்லவனான ராவணனின் பெருமை உணர்த்தவே ராவணனுக்கு பத்து தலை உருவக் கதை சொல்லப்படுகிறது.
தமிழர்களின் ஆதித் திருமணங்கள் எல்லாமே காந்தர்வ திருமணங்கள் தான். ராவணன் தமிழனல்லவா, எனவே அவளை காந்தர்வ மணம் செய்ய விருப்பம் கொண்டிருக்கின்றான்.
காந்தர்வ திருமணம் என்றால் காதல். இந்தக் கால திரைப்படங்களில் கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகர்களைப் போல சீதையை தூக்கிக் கொண்டு போய் காதல் செய்திருக்கிறான் ராவணன்.
சீதையை கவர்ந்த காரணம்..
இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள்.
தன் தங்கை அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைப் போற்றினான்.
ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன்.. பல விதமான கலைகளிலும், அறிவிலும் ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன். சீதை விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்…
சீதையை தூக்கி வந்தானே ஒழிய அவளை வன் புணர்ச்சி செய்யவில்லை.
ராமனோ ராவணனுடன் இருந்ததிற்காக சீதையை தீக்குளிக்க செய்தான்.
பின்பு ஒரு ஒற்றன் வந்து ஊரே ராமனை ஏசுவதாச் சொல்ல சீதை காட்டில் கொண்டு போய் விட்டுவர இலக்குமணை அனுப்பினான். இதுவே ராவண காவியம் சொல்லும் உண்மை...