21/05/2018

உடல் எடை அதிகமாகாமல் தடுக்கும் நிலக்கடலை...


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை...

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும் என்கிறார்.

நீரழிவு நோயை தடுக்கும்...

நிலக்கடலையில் கண்ணாடி செய்ய உதவும் மாங்கனீசு(ஸ்)(manganese) என்னும் பொருள் சத்து நிறைய உள்ளது. மாங்கனீசு சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து சுண்ணாம்பு சத்து நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்...

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடியும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்...

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெசு(ஸ்)வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய அடைப்பிதழ்கள் (Valves) பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்...

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்சு(ஸ்) என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்...

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல பலவிருத்தி (tonic) போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் உயிர்ச்சத்து 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்...

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்...

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை...

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி...

பெண்களின் இயல்பான உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், எரியம் (phosphorus), சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம் (kalium), துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்...

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது..

மாவுசக்தி (Carbohydrate)- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு - 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் - 0.85 கி
ஐசோலூசின் - 0.85 மி.கி.
லூசின் - 1.625 மி.கி.
லைசின் - 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
காப்பர் - 11.44 மி.கி.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.கி.
மேங்கனீசு(ஸ்) - 1.934 மி.கி.
எரியம் (phosphorus) - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.

பாதாம், பிசு(ஸ்)தாவை விட சிறந்தது...

நாம் எல்லாம் பாதாம், பிசு(ஸ்)தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு...

ஹிட்லர்..... யூதர்களுக்கு சர்வாதிகாரியாக இருக்கலாம்...


ஆனால் மக்களுக்கும் மண்ணிற்கும் ஒரு நல்ல தலைவனாகவே விளங்கினார்.. அதற்கு இச்சிறிய சம்பவமே சாட்சி...

வியக்கத்தக்க தமிழர்களின் அறிவு திறன்....


அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா?

வியந்து நின்றான் இன்று நெல்லை அப்பர் கோவில் சிலையை கண்டவுடன்,

இந்த பதிவு இந்துக்களுக்கு மட்டும் அல்ல, இது தமிழர்களுக்கு, மதத்தை பார்க்காமல் கலையை பார்த்து பதிவு செய்கிறேன் நான் முழுவதையும் படித்து பகிருங்கள் உங்கள் நண்பர்களிடம்,

இங்கு இருக்கும் சிற்பம் நெல்லை அப்பர் கோவில் உள்ளது, அது யார்? அதன் வரலாறு என்ன? என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் பார்த்து பிரமித்து நின்று தொட்டு பார்த்தேன் அந்த சிலைகளை.

நம்மகிட்ட ஒரு பென்சில் பேப்பர் குடத்து ஒருத்தர் வரைய சொன்ன என்ன செய்வோம்? அவர்கள் கண், மூக்கு, வாய், கை, கால் ஒரு தோராயமாக வரைவோம். ஆனால் அவர்களை சிலையாக செதுக்க சொன்னால் கண்டிப்பா வரைஞ்சத்தவிட கேவலமா செதுக்குவோம் சிலரை தவிர.....

இங்க முதலில் நடுல இருக்குற சிற்ப்பத்தை பாருங்க? அப்படியே மனிதன் முகம், கண், மூக்கு, வாய், மீசை எல்லாம் அப்படியே இருக்கும், எப்பா இது தான் எல்லா கோவிலிலும் இருக்குமேன்னு கிசன் திட்டுவிங்க, அப்படியே லேசாக மார்ப்புக்கு கீழ பாருங்க?

சின்னதா கோடு கோடா தெரியுதா தெரியலனா முதல் படத்தை மார்ப்புக்கு கீழே பாருங்கள், அது என்னனு தெரியுதா?

தெரியலய அந்த சிற்பம் மாதிரியே நின்னு பாத்தா தெரியும் அது நாம் நெஞ்சு எலும்புன்னு, என்ன ஆச்சரியம் பாருங்க அந்த காலத்துல கல்லுல எப்படி செத்துக்கி இருக்காங்கன்னு, அது மட்டுமா படத்தில் இருக்குற அம்பு குறி இட்ட இடத்தில உற்று பாருங்கள், முன்றாம் படம் கால் பகுதில் எடுக்கப்பட்டது.

நம்ம கால அந்த மாதிரி வச்சி பாருங்க, அப்போம் அந்த சிற்ப்பதில் இருக்குற மாதிரி தான் நரம்பு தெரியும், அந்த காலத்தில நரம்பு தெரியுற மாதிரி சிற்பமே செதுக்கி இருக்கிறார்கள் தமிழர்கள்?

அப்படினா மருத்துவத்தில் எப்படி இருந்தது இருப்பாங்கன்னு நீங்களே யோசிச்சி பாருங்க.....

சில மனிதர்கள் இதையும் குற சொல்லும், தயவு செஞ்சி திருநெல்வேலி நெல்லை அப்பர் கோவில் போய் பாருங்க உண்மை தெரியும்...

அமெரிக்கா - ரஷ்யா கூட்டாளிகளே...


லிங்கனும் கென்னடியும்...


அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத நிஜங்களாக உள்ள அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே…

 ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846..
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946..

லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856..
ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956..

லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860..
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960..

ஜான் எஃப். கென்னடி...

லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813..
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913..

லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.

இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.

இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.

இருவருக்குமே காயம் பட்டது தலைப்பகுதியில்..

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்..

இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.

இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.

இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பதுதான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.

கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்..
கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்..

கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள். லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.

இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.

லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ’ஃபோர்ட்’..
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில்..

லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.

பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

இல்லை.. இல்லை.. இதெல்லாம் தற்செயல்தான் என்கிறீர்களா?

ஓரிரண்டு விஷயங்கள் வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். இவ்வளவு விஷயங்களும் தற்செயலாக இருக்குமா என்ன?

இருப்பதை அழித்து விட்டு.. இன்று இயற்கைக்கு மாறாக நாம் சென்று கொண்டிருக்கிறோம்....



உலகின் அழிவு இதுவே... இதை நாம் உணர வேண்டும்...

நாம் விதைத்த வினையெல்லாம் நம்மை அறுக்க காத்திருக்கும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


பவர்கிரிட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் மாபெரும் சவால்...


போட்டியில் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை...

நிபந்தனைகள்...

1.உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகளுக்கு அடியில் , அருகில் வசிப்பதால் எந்த பாதிப்புகளும் இல்லையென்றும்.

2.உயர்மின் கோபுரங்களை விவசாய பூமிகளில் அமைப்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை என்றும்.

3.இது போன்ற உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலை ஓரமாக கேபிள்களாக அமைக்க முடியாது என்றும்.

நிரூபிப்பவர்களுக்கு கூட்டு இயக்கத்தின் சார்பில் ரூ.1 கோடி பரிசலிக்கப்படும்.

‍சவாலே... சமாளி...

நாங்க ரெடி நீங்க ரெடியா ?

இவன்,
உயர்மின் கோபுரங்கள்க்கு எதிரான விவசாயசங்களின் கூட்டு இயக்கம்...

ஒருபோதும் உவன் என்னும் கருத்தியல் சோர்வு அடையாது...


நாங்கள் விதைத்துக்கொண்டே செல்வோம், ஒருநாள் அது விருட்சமாக வளரும் என்ற நம்பிக்கையில்...

நம் பிரார்த்தனைகள்...


நம் சுய தேவைகளின் ஒலி வடிவமாய் நம் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். நம் பிரார்த்தனைகள் யாரால் கேட்கப் பட்டு ; எங்கு நிறைவேறுகிறது என சுய விசாரணை செய்ததுண்டா ?

மொழிவழி பிரார்த்தனை மட்டுமே கேட்கப் படும் என்றால் மொழி இல்லா உணர்வு பிரார்த்தனை யார் கேட்பது ?

இயற்கை நம்முள்ளே ஒரு விஞ்ஞான பிரார்த்தனையை தினமும் நடத்திகிறது. அதற்கு மொழியில்லை. ஆம், நம் நுரையீரலின் பிரார்த்தனையில் மூச்சு வரமாகிறது; கணையத்தின் பிரார்த்தனையில் உணவு இரசாயன சக்தியாகிறது; இருதயத்தின் பிரார்த்தனையில் இரத்தம் திரவ இயக்கம் பெறுகிறது… 

இது உடலின் அதிர்வு ஒலி இயக்கம். உடலின் மொழி வழி இல்லாத கூட்டு பிரார்த்தனைகள் முழுமையாக நிறைவேறும்போது , நம் மொழி வழி பிரார்த்தனைகள் எங்கு செல்கின்றன ?

நம் பிரார்த்தனைகள்,  நம் குரல்கள் நம்முள்ளே மறுசுழற்சியில் கேட்கும் ‘ஒலி நிகழ்வு விஞ்ஞானம்’ .

நம் அழுத்தமான குரல் வடிவம் மூளையில், மொழி அதிர்வு தூண்டுதல் பெற்று மொழி கவரும் அலைகளய் காற்றிலே பரவும்; ஒப்புடைய மொழி அதிர்வுள்ள மாற்று மனிதர்களோடு கலக்கும். சுய விசாரணை பகுதி நம்முள் இருந்தால் வரம் நமக்குள்ளும் சுரக்கும்.

மனிதர்களில் நிகழும் ஒலி அதிர்வு விஞ்ஞான விளைவுகள்தான் வரங்களாக நமக்கு மாற்று மனிதர்களிடமிருந்தும் கிடைக்கிறது.

பிரார்த்தனைகள் நம்மில் தொடங்கி நம்மில் முடியும் ஒரு ஒலி அதிர்வு விஞ்ஞான கிரியை...

அனைத்தும் உன் பணமே... யோசித்து முடிவெடு...


காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்...


தோழர் பெ. மணியரசன் காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர்..

உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.

ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.

கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்?

ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.

கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.

உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!

இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.

இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.

இவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.

இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.

மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்...

அவர்களது மூலதனமே மயக்கும் வார்த்தை ஜாலங்கள் தான்...


அழைப்புகள் விடுத்து எவ்வளவு மூளைச்சலவை செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து விடுவார்கள்... ஜாக்கிரதை முக்கியம்...

குயின்ஸ்லேண்ட் குழந்தை - 1946...


இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது.

தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த தாயை தவிர வேறு யாருமேயில்லை.

ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.

(இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது)...

ஏமாற்றப்படும் எம்மாணவர்களுக்கான பதிவு...


விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் கையில் சமர்ப்பிக்கிறேன்...

ஆற்றை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் கோரிக்கை...


இடம் மதுரை  சர்வேயர்காலனியில் ஆற்றை ஆக்கிரமித்து உள்ள கட்டிடங்கள்...

நேற்று ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழியாக பெவெக் நகரை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது...


இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு இறுதியில் பெவெக் நகரைச் சென்றடையும் என்றும் இதனால் அங்கு உள்ள ஊர்களுக்கு மின்சாரம் கிடைக்கும்...

சேலம் அடையார் ஆனந்தபவன் ஓட்டல் சில அடி தரைக்குள் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...


சேலம் கோவை நெடுஞ்சாலை நெய்க்காரப் பட்டிப் பகுதியில் உள்ள “ஏ2 பி” ஓட்டல் சில அடி தரைக்குள் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த பலர் மீட்கப்பட்டு ஆம்புலன்சு வாகனங்களில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதுமுண்டா என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் தெரியவில்லை...

விழித்துக்கொள் தமிழினமே...


பிரம்மத்தை நோக்கி...


நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம். தாயின் கருவில் உள்ள கருமுட்டையில் 46 குரோமோசோம்களும், தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து,

தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்கள் மட்டும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்கள் மட்டும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.

சரி தாய் தந்தையின் மூலம் என்ன? நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.

இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரிவடைகிறது. ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.

அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.

இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.

ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது...

தென் இந்தியா பிரியும்...


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் (Karl Marx)...


கார்ல் மார்க்ஸ் இந்தப் பெயர் எனக்கு பதிமூன்று  வயதிலேயே அறிமுகமாகி விட்டது. கம்யூனிச சித்தாந்தம் குறித்தோ  மார்க்சின்  பிற எழுத்துக்கள் குறித்தோ அப்பொழுது தெரியாது.

மனிதர்களின் பிரச்சனைக்கு இவர் ஏதோ ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது என்பது அந்த வயதுப் புரிதல். 

பிறகு எனக்கு மார்சை ஒரு  கம்யூனிஸ்ட்டாகத் தான் தெரியும்..

சில வருடங்களுக்கு முன்பு இலுமினாட்டிகள்  குறித்த தேடலைத் தொடங்கினேன்.

வழக்கம் போல நம்முடைய மொழியில் அதற்கான தரவுகள் அவ்வளவாக இல்லை.

வெள்ளைக்காரன் காலைத் தானே பிடிக்க வேண்டும். பிடித்தேன்.

இலுமினாட்டிகள் குறித்து நம்பகமான புத்தகங்களாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்களில் முதல் புத்தகம் தொடங்கியே சோசலிச கொள்கைக்கும் இலுமினாட்டிகளின் இரகசிய திட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வகையில் மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுடன் தொடர்பு  உண்டு என்று சொல்லப்பட்டிருந்தது.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து படித்த எந்த புத்தகமும் இதைப்பற்றி ஒருவரிக் கூட மூச்சுவிட்டது கிடையாது.

மிஞ்சிப் போனால் அவர் ஒரு யூத இனத்தை சேர்ந்தவர் என்பது மாத்திரம் இருக்கும்.

இலுமினாட்டிக் குறித்த புத்தகங்களே மார்க்ஸ் இரகசிய குழுக்களுடன் தொடர்புக் கொண்டவர் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

ஒருவேளை இது வலதுசாரி முதலாளித்துவத்தின் சூழ்ச்சியாக இருக்குமோ என்பது என்னுடைய முதல் கட்ட சந்தேகம்.

கார்ல்மார்க்ஸ் இலுமினாட்டிப் போன்ற சாத்தானிய வழிபாடு செய்யும் இரகசிய குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் என்று பொய்யைப் பரப்பி அதன் மூலம் கம்யூனிசத்தை பங்கப்படுத்த இதுவும் ஒரு சூழ்ச்சியாக இருக்கும் என்று முதலில் இதை ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.

ஆனால் பிறகு எழுந்த சந்தேகங்கள்...

அப்படியானால் வெகு சன முதலாளித்துவ சார்புநிலை புத்தகங்கள் ஏன் இந்த சூழ்ச்சியை பெரும் அளவில் பயன்படுத்தவில்லை?

உண்மையில் மார்க்ஸ் சாத்தானிய வழிபாடு செய்யும் குழுக்களுடன் தொடர்பிலிருந்தார். அதுவே அவருடைய படைப்புகளின் பிரதிபலிப்பு என்றால் கம்யூனிச கொள்கையை பலவீனமாக்க இதை விட ஒரு சிறந்த ஆயுதம் இருக்க முடியுமா என்ன?

கம்யூனிசத்தையும் மார்க்சையும் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்கிற அளவிற்கு புரட்டி எடுக்கும் முதலாளித்துவ பிரச்சார பீரங்கிகள் வதந்தி என்கிற அளவில் கூட இதைக் குறித்து வாய்திறக்காதது ஏன்?

இலுமினாட்டித் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே திரும்ப திரும்ப மார்க்சுக்கும் இரகசிய குழுவான இலுமினாட்டி களுக்கும் இருந்த தொடர்பை வலியுருத்தி வருவது ஏன் என்றுத் தெரிந்துக் கொள்ள மேலும் தேடியதில் கிடைத்த துப்பு மார்க்சின் இளமைக் கால படைப்புகளை அலச வேண்டும் என்பது.

மிகத் தீவிரமான மார்க்சிய அறிஞர்கள் கூட அவ்வளவாக மார்க்சின் இளமைக் கால படைப்புகளான கவிதைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச மாட்டார்கள். ஆனால் அதில் தான் இருக்கின்றன மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுக்கும் இருக்கும் தொடர்பு என்று சொன்னது அந்த துப்பு..

மார்க்சின் மீது இலுமினாட்டி குற்றச்சாட்டை வைக்கும் அனைத்து புத்தகங்களும் எடுத்துக்காட்டும் மார்க்சின் இளமைக் கால கவிதைப் படைப்பு ‘Invocation of One in Despair’ அதில் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்…

So a god has snatched from me my all
In the curse and rack of destiny.
All his worlds are gone beyond recall!
Nothing but revenge is left to me.
I shall build my throne high overhead, Cold, tremendous shall its summit be.
For its bulwark - superstitious dread.
For its Marshal - blackest agony.
Who looks on it with a healthy eye,
Shall turn back, deathly pale and dumb,
Clutched by blind and chill mortality,
May his happiness prepare its tomb.

அவருடைய அடுத்த கவிதைப் படைப்பான Human Pride-ல் இப்படி எழுதுகிறார்….

With disdain I will throw my gauntlet
Full in the face of the world,
And see the collapse of this pygmy giant
Whose fall will not stifle my ardor.
Then I will be able to walk triumphantly
Like a god, through the ruins of their kingdom.
Every word of mine is fire and action.
My breast is equal to that of the Creator.

உங்களுக்கு John Milton எழுதிய The Paradise Lost காவியம் பரிட்சையம் என்றால் மார்க்சின் இந்த கவிதை வரிகளை இனம் கண்டுக் கொள்வதில் பிரச்சனையிருக்காது.

The Paradise Lost-ல் லூசிபர் (Lucifer) இறைவனுக்கு எதிராகப் பேசுவதுப் போல மில்டன் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தில் கதாநாயகன் அளவிற்கு லூசிபருக்கு வசனங்கள் இருக்கும். அந்த வசனங்களின் தன்மையை மேலே இருக்கும் மார்க்சின் கவிதைகளிலும் பார்க்கலாம்.

ஒரு விசயத்தைக் குறித்த கவிதையோ அல்லது கதையோ அந்த படைப்பிற்கு உரிய படைப்பாளனை அந்த விசயத்தோடு கண்டிப்பாக நூறு சதவிகிதம் தொடர்புடையவனாக கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது என்பதால் இந்த கவிதை துப்பை ஒதுக்கினால் அடுத்த துப்பை எடுத்துப் போடுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

அது Moritz Moses Hess. ஜெர்மன் Social Democratic கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு கம்யூனிச ரப்பி (rabbi) மற்றும் நவீன சோசலிசத்தின் தந்தை என்கிற சிறப்பும் உண்டு. மார்க்சின் சிந்தினையில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர் இவர்.

மார்க்சின் சிந்தனைப் போக்கை மாற்றியவர் என்றுக் கூட சொல்லலாம்.

இவர் 1841-ல் Rheinische Zeitung என்கிறப் பத்திரிக்கையைத் தொடங்குகிறார்.

அதில் அப்பொழுது 24 வயதேயான மார்க்சை ஆசிரியர் ஆக்குகிறார். இவரே மார்க்சை இலுமினாட்டிக் குழுவிற்குள் கொண்டு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.

ஏங்கல்சை (Friedrich Engels) மார்க்சுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. ஏங்கல்சும் முன்பே இவரால் இலுமினாட்டி குழுவிற்குள் கொண்டு வரப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

அன்றைய குழும்பிய ஜெர்மனிய இளைஞர்களின் குட்டையில் தனக்கான மீன்களைப் பிடித்தவர் Moritz Moses Hess. ஏங்கல்சை தான் எப்படி கம்யூனிஸ்டாக மாற்றினேன் என்பது குறித்து இப்படி எழுதுகிறார்….

என்னிடமிருந்து விடைப்பெற்று செல்லும் போது அவர் (ஏங்கல்ஸ்) முழுமையான துடிப்புமிக்க கம்யூனிஸ்டாக மாறியிருந்தார்...

இயற்கையின் முன் நாம் அனைவரும் பச்சிளங் குழந்தைகளே...


பொடுகு தொல்லையால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு...


பெரும்பாலானோர் பொடுகு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகளவு கூந்தல் உதிர்வதால் நாளடைவில் வழுக்கை விழும்.

பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் போதிய எண்ணெய் இல்லாததால் தான்.

பொடுகு வந்து விட்டால் கூந்தல் உதிர்வது அதிகமாவதுடன், சருமத்திற்கும் பரவி விடும். எனவே உடனடியாக பொடுகை முற்றிலும் நீக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்..

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு..

தலையில் இருந்து செதில் செதிலாக வருவதை தவிர்க்க வேண்டுமெனில் எலுமிச்சை தான் சிறந்த பொருள்.

அதற்கு எலுமிச்சை சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து பின் ஸ்கால்ப்பில் சிறிது எண்ணெய் தடவினால், ஸ்கால்ப் வறட்சியடைவதை தவிர்க்கலாம்.

தேங்காய் பால்..

தேங்காய் பாலும் பொடுகில் இருந்து நிவாரணம் தரக்கூடியவையே. அதற்கு தேங்காய் பாலை தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

கற்றாழை..

கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் நல்ல பலனைத் தருவதில்லை, கூந்தலுக்கும் தான். அதிலும் கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, கவர் கொண்டு மூடி, காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள ஈரப்பதமானது, தலையில் இறங்கி வறட்சியைத் தடுக்கும்.

நல்லெண்ணெய்..

வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

ஆலிவ் ஆயில்..

ஆலிவ் ஆயிலுக்கும் ஸ்கால்ப்பில் இருந்து வெளிவரும் செதிலை போக்கும் தன்மை உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வெங்காயம்..

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தயிர்..

தயிரில் சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் படும்படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால் பொடுகு படிப்படியாக நீங்கும்.

பச்சை பயறு மாவு..

பச்சை பயறு மாவில் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும்.

வசம்பு..

வசம்பை நன்கு பொடி செய்து அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மருதாணி இலை..

மருதாணி இலையை அரைத்து அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைக்கு தடவி குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, நரைமுடியின் நிறமும் மாறும்.

முட்டை..

முட்டையின் வெள்ளைக்கருவில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்...

தயாராகிறது சாகர்மாலா திட்டம்...


வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்...


பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும்.

ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம்.

பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர்.

வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த...

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு...

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க...

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு...

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு...

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்...

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்...

பிளாஸ்டிக் மனிதர்களுக்கு உபயோகம்.. ஆனால் மிருகங்களுக்கு உபத்திரமே...


மாட்டுக் கறியும் பாஜக வாஜ்பாயி பெயரும் வரலாற்றில் ஆதாரம்...


மரியாதைக்குரிய ஒரு பேச்சாளரின் பேச்சு என்னை இப்புத்தகத்தை படிக்க தூண்டியது..

அதில் நான் கவனித்து திடுக்கிட்ட வாக்கியங்களை தருகிறேன் ஆதாரத்துடன்..

முதலில் மாட்டுக்கறி விஷயத்தை தருகிறேன்.. தொடர்ந்து படியுங்கள்...

சங்கராச்சாரியார் இவரை பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை இவர் தெய்வத்தின் குரல் என்ற புத்தகம் எழுதியுள்ளார் இது பல பாகங்ககளாக வந்துள்ளது.

அதில் இரண்டாவது தொகுதியில் புலாண் உண்ணுதல் பற்றிய வேதகால விஷயங்களை அவர் எழுதியுள்ளார்.

எப்படி பட்டும் படாமலும் எழுதியுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம்.

யாகம் என்பது மூன்று அடிப்படையை கொண்டு உருவானது.

ஒன்று மந்திரம்..  இரண்டாவது தேவதை.. மூன்றாவது அவீஸ் ..

இந்த அவீஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் சாதாரணமாக போகலாம். ஆனால் இதன் அர்த்தம் பலியிடுதல்..

இந்த அவீஸ் யாகத்தில்...

ஆடு மாடு குதிரை மிகவும்
பெரும்பாலும் மாடு தான் .. அந்த காலகட்டத்தில் பயன்படுத்த பட்டது
இதற்கு மிகப்பெரிய உதாரணம் வாஜ்பேயி என்ற பட்டம்..

ஆரியர்கள்  நடத்துகின்ற யாகத்தில் மிகப்பெரிய யாகத்தின் பெயர், வாஜ்பேய யாகம்.

அதை வச்சுத்தான் அடல் பிகாரி வாஜ்பேய் என்ற பெயரும் உருவானது..

வாஜ்பேய யாகத்தை நடத்தினால் 23 பசுக்களை வெட்டி நிறுத்தி போட வேண்டும்.

இப்படி அரசனுக்கும் ஆரியனுக்கும் பாமரனுக்கும் எவ்வளவு மாடுகளை வெட்டி யாகம் செய்ய வேண்டும் என்று கணக்கு உள்ளது..

மேலே உள்ள தொடருக்கு வருவோம் சங்கராச்சாரியார் சொல்லுகிறார்..

உலக தீசடைகளுக்காக அவீஸ் நடத்தலாம் என்கிறார்.

அதாவது மாடுகளை வெட்டி நெருப்பில் போட்டு யாகம் நடத்துவது உலகில் உள்ள பீடைகளை பிணிகள் போகும் என்பதாக அர்த்தம்..

நமக்கு ஒரு சந்தேகம் யாகத்தில் [நெருப்பில்] இடப்படும் மாடுகளை என்ன செய்வது ?

பேசுவோம்..

ஆதாரம்:

தெய்வத்தின் குரல்.
வானதி பதிப்பகம் .
தொகுதி இரண்டு
ஜ்யோதிஷம் மீமாம்சை பாடம் .

இதெல்லாம் விட ராமர் சீதைக்கு நெய்யில் வாட்டிய மாட்டு இறைச்சியை ஊட்டி உண்டு மகிழ்ந்தார்கள் என்ற வால்மீகியின் வரலாறும் உண்டு..

[இதற்கு ஆதாரம் இராமாயணத்தில் உண்டு பின்னர் விளாவாரியாக பதிவிட்டு ஆதாரம் தருகிறேன்]...

சக்கரை நோயும்... மருத்துவ மாப்பியா வியாபாரமும்...


தமிழர் என்பது தாய்மொழி சார்ந்த இன அடையாளம்....


கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்காளம், மணிப்பூர் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் வசிக்கிறார்கள்.

அங்கெல்லாம், தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள்,  இன்று வரை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

அங்கே சில நூற்றாண்டுக்கும் மேலாக வசித்தாலும், அவர்கள்  மலயாளியாக, கன்னடராக, தெலுங்கராக, மராட்டியராக, குஜராத்தியாக, டெல்லிகாராக, வங்காளியாக, மணிப்புரியாக ஆக முடியாத போது..

தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் என்பதற்காக, இங்கு மட்டும் பிற மொழியாளர்கள் எப்படி தமிழர்களாக ஆக முடியும்?

தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளாக வசிக்கிறோம், 800 ஆண்டுகளாக வசிக்கிறோம் என்ற காரணத்தால், மாற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது.....

தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள்..

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் குடிமக்கள்.  இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது....

இனம் என்பது வேறு.....
இருப்பிடம் என்பது வேறு....

அதிமுக எடப்பாடி மக்களுக்கு செய்யும் நன்மையை பாருங்கள்...


தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?


நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும்.

அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு..

நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது.

அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன.

அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

நரம்புகளில் பிரச்சினையுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் நீண்ட நேரம் நீரில் நின்றாலும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீண்ட நேரம் தண்ணீரில் நிற்கும் பொழுது தோன்றும் சுருக்கங்கள் முதலில் நீரின் மூலமே ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

பின்பு தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் இணைப்பு வரை முன்னேறிச் சென்று தோலுக்கு அடியில் உள்ள நீரின் அளவினைக் குறைக்கிறது.

இத்தகைய உடல் செயல்பாடுகள் தான், சுருக்கங்கள் மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன...

தமிழகத்தின் பச்சை துரோகி அதிமுக ஓபிஎஸ்...


ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்.. சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்...


ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும்

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.

அது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.
கேரளா சிறிலங்கா துதூவராலய இணையம்..

http://slhckerala.org/article_details.php?articleid=NTM=
http://slhckerala.org/

சீனா  சிறிலங்கா   துதூவராலய இணையம்..

http://www.slemb.com/third.php?menu_code=1&rid=46&lang=cn

சிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு
http://www.tourismmin.gov.lk/sinhala/news_view.php?news_id=1

இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்..

http://www.cgijaffna.org/ckfinder/userfiles/files/ltte-flag-300-news.jpg

 குவைத் துதூவராலய இணையம்
http://kuwaitembassy.net/news.php?news_id=275

சிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம்  http://www.dolgnwp.lk/

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள்...

http://actuaries.org.lk/
http://www.batticaloa.mc.gov.lk/event.php?id=18

http://actuaries.org.lk/

http://avistholdings.com/

http://www.bricsventures.lk/

http://www.bungalow1926.com/

http://www.captain.lk/

http://csquareholdings.com/

http://emcuni.com/

http://www.imslanka.lk/

http://www.lankamahilasamiti.com/

http://lankapropertyclub.com/

http://mahi-mahi.net/

http://www.modernsalonfurniture.com/

http://www.onwardlogistics.net/

http://sinharafamilyrestaurant.com/

http://sphere.lk/

http://www.srilankatourismclub.com/

http://www.staractuarialacademy.com/

https://www.stbridgets-kandy.com/

http://www.sundozmedigroup.com/

http://www.surasagammadda.lk/

http://welfaretourism.com/

http://www.ymbarestkataragama.lk/

http://www.dolgnwp.lk/

http://www.anew.lk/

http://www.libertymotors.lk/

http://www.mgttools.com/

http://www.nuhatravels.com/

http://www.ralhum.com/

http://broadwaybakers.lk/

http://www.bronteparkhighlandcottages.com.au/

http://djmaxtune.ca/web/

http://www.jptechnologies.lk/jptech/

http://nasrullah.info/

http://www.patersoniacottage.com.au/index.php

http://wijayasiribakehouse.com/

http://siscolombo.lk/

http://www.jayanandaevilla.com/index.html

http://www.nptccd.health.gov.lk/

http://www.tissatimber.com/

http://www.thuyar.com/

மாட்டு இறைச்சி உண்பவர்களை மதிக்கப்பட வேண்டும் என்கிறது வேதம்...


இந்த மாட்டுக்கறி அரசியலை எத்தனை முறை நாம் புரிய வைத்தாலும் சிலர் விடாப்பிடியாக மாடுகளை அறுத்து உண்பது.. இந்து மத நம்பிக்கையின் படி பெருங்குற்றம் என்ற ரீதியில் விடாப்பிடியாக உள்ளனர்..

இவர்களை போன்றோருக்கு ஆரிய வரலாற்றில் புலால் உணவு இல்லாமல் ஆரியர்கள் இல்லை என்பதை அடுக்கடுக்கான ஆதாரத்துடன் பழைய பதிவுகளில் எழுதி இருந்தேன்..

அதையெல்லாம் ஏற்க மாட்டோம் என்று உள்ள சிலருக்கு இப்பதிவு கடுப்பை தான் ஏற்படுத்தும். ஆகவே அவர்கள் இதை படிக்க வேண்டிய அவசியமில்லை..

ஆனால் சில நடுநிலையான வேதாந்தி மதத்தில் வேத அறிவு உள்ள சிலருக்காகவே இப்பதிவு..

பசுவை தின்பது பாவமான செயலாக ஜோடிக்கப்டுகிறது.. காரணம் மத அரசியல் .

பண்டைய வரலாற்றை நாம் சொல்லிக் கொடுக்காததன் விளைவு தான் இது, பண்டைய வரலாற்றில் பசுவை உண்ட மாவீரர்கள் உண்டு..

பசு இறைச்சியை தானமாக தருபவர் மிகவும் செழிப்பானவர் என்ற வரலாறுகள் உண்டு..

பசுவை வெட்டக்கூடிய கத்தியை கோபிகர்த்தன் என்றும்..

சுரபி பக்வம் மாம்ஸ் சமைக்கப்பட்ட மணங்கமழும் பசு  இறைச்சி என்றும் வேதங்கள் கூறுகிறது..

தீர்க்கதமா என்னும் ரிஷிகள் என்று வேதம் குறிப்பிடும் பெயரை ஆய்வு செய்தால்..

பசுவை லாவகமாக பிடித்து  அருத்து சதையையும் தோலையும் தனியாக பிரித்து தருபவர்களையே அன்றைய அறிஞர்கள் சொன்னது தீர்க்கதமா ரிஷிகள்..

அவர்களுக்கான கண்ணியமும் பரிசுகளும் கொடுக்கப்பட்டதாதக கூறுகிறது. இதையெல்லாம் மிகப் பழமையான நூலான புத்த மதத்தின் மஜ்ஜிம் நிகாய் நூல் தெரிவிக்கிறது..

சரி எதனால் பசு சாப்பிடுவதை ஆரியர்கள் நிருத்தினார்கள் என்ற வரலாற்றையும் கூறுகிறது மஜ்ஜிம் நிஹாய்..

அதாவது அரசவையில் பசு இறைச்சியையே உண்டு சலித்து போன ஆரியர்கள் இனிமேல் கொழுத்த செம்மறியாட்டு இறைச்சியும் கொளு கொளுத்த குதிரை இறைச்சியையும் தான் உண்ண வேண்டும் என்று முடிவெடுத்து.

தமக்கு வேண்டுமானால் அரசவையில் உள்ள அனைவரும் இதை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் அரசன் நமக்காக செம்மறியாட்டு கறியையும் குதிரை கறியையும் சமைக்க ஆணையிடுவான் என்று யோசித்த ஆரியர்கள்..

உருவாக்கிய நடைமுறை தான் பசு புனிதமானது என்ற கோட்பாடு...

இதை வைத்து பார்க்கும் பொழுது பசு இறைச்சியை உண்டு சலித்து போன ஆரியர்கள்.. வேறொரு இறைச்சிக்காக நாம் உண்ணவில்லையென்றால் எவரும் உன்ன கூடாது என்ற முடிவெடுத்து உருவாக்கிய தத்துவம் தான் பசு புனிதம் என்பது...

அடுத்த விஷயத்தை பாருங்கள்...

அப்பரடிகள் திருநாவுக்கரசர்..யார் இவர்?

சைவ சாங்கியதில் இவரை தவிர்த்து விட்டு சைவ மதத்தை அறிந்து விட முடியாது..

கோட்பாடுகளையும் கொள்கைகளையும் நிறையபேர் விளக்கி இருந்தாலும் அதில் முதன்மையானவர் இவர்..

திருநாவுக்கரரசர் தேவாரம் என்பது புகழ்பெற்ற பாடல்கள் அடங்கியவை..

அவ்வளவு பிரசித்தி பெற்ற இவர் சொல்லுகிறார்...

பாடல் எண் 10 இல் முதலில் அந்த பாடலை படியுங்கள் கீழே விளக்கம் தந்துள்ளேன்...

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வானாள தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போர்அல்லோம்..

கங்கை வார் சடை கறந்தார் அங்கம் குறைந்து அழுகி தொழுநோயராய்
ஆவுரித்து தின்றும் புலையரே அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாவார்....

இதன் பொருள் என்ன தெரியுமா ?

சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும்..

[செல்வங்கள் பல தந்து பூமியையும் வானத்தையும் தந்து ஆட்சி செய்யுங்கள் என்று சொன்னால் கூட ].

ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம்.

அவரையும் அந்த செல்வத்தையும் நாங்கள் மதிக்கமாட்டோம்.

யாரை தெரியுமா மதிப்போம் கீழே தொடர்ந்து படியுங்கள்...

உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும்  நீண்ட சடையில் அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

குஷ்ட நோயாளியாய் இருந்தாலும் அவர் பசுவை உரித்து திண்பாராயின் அவரை தான் நாங்கள் போற்றுவோம் வணங்குவோம் என்பதே இப்பாடலின் நோக்கம்...

இப்பொழுது என்ன செய்வது ?

ஒன்று மாட்டுக்கறியை தின்பவர்களை [முஸ்லீம் கிருத்துவர் உட்பட] மரியாதை செய்ய வேண்டும்.. இல்லையேல் அப்பரடிகள் திருநாவுக்கரசரை இந்து மத்தில் இருந்து தூக்க வேண்டும்..

எது வசதி ?

ஊடகம் மக்களை ஏமாற்றி திசை திருப்பவே உருவாக்கப்பட்டது...


பூமியின் (அ)பூர்வ கதை - 1...


மனிதனுக்கு எப்போதுமே வரலாற்றின் மீது மோகம் உண்டு. முன்னாலுக்கு முன்னால் என்ன என்பதில் எப்போதும் ஒரு ஈர்ப்பு கலந்த ஆர்வம் உண்டு அவனுக்கு.

யோசித்து பாருங்கள் நம் தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருந்திருப்பார் எப்படி வாழ்ந்து இருப்பார் ? அவருக்கு தாத்தா ? அவர் தாத்தாவுக்கு தாத்தா?

நம்முடைய ஆரம்பம் என்னவாக எதுவாக இருந்து இருக்கும் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி பட்டது   .?

என்ன தான் கழுத்து வலிக்க திரும்பி பார்த்தாலும் அவனது (அதாவது மொத்த மனித குலத்தின் ) பார்க்க முடிய கூடிய பெருமை மிகு வரலாறு சில லட்சம் ஆண்டுகள் தான்.

ஆனால் தன்னை சுற்றி உள்ள பாறைகளையும் படிவங்களையும் ஆராய்ந்த மனிதன் தனது இனம் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமி பந்து சந்தித்த வரலாறுகளையும்  நிகழ்வுகளையும் வாழ்ந்த விலங்குகளையும் அதன் வாழ்வையும் புரிந்து கொண்டான்.

அதை அறிந்து கொண்ட போது தான் பூமியின் வரலாறு எனும் கடற்கரை பக்கங்களில் தான் ஒரு நாலு அடி கால் தடம் மட்டுமே பதித்து இருப்பதையும் ஆனால் தனக்கு முன்னால் பூமியின் வரலாறு மொத்தம் கடல் போல பரந்து விரிந்து கிடப்பதையும் அதில் பல வகை உயிரிகள் தங்கள் தடங்களை பதித்து பல கோடி ஆண்டுகள் இப்பூமியை ஆட்சி செய்து விட்டு சென்றிருப்பதையும் அறிந்து கொண்டான்.

உதாரணத்திற்கு இந்த பூமி பந்தில் நகரும் மலைகளாக நடை போட்ட டைனோசர் இனம் இன்றிலிருந்து 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்றிலிருந்து 6 கோடி ஆண்டுகளுக்கு முன்புவரையிலான கிட்ட தட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூமியில் வலம் வந்தவைகள்.

அவை வாழ்ந்த கோடி கணக்கான ஆண்டுகளுக்கு பூமிக்கு அவைகள் தான் அரசர்கள்.

ஆனால் மனிதனின் மிக முன்னோடிகள் இரண்டு காலால் நிற்க தொடங்கிய அந்த மூதாதை உயிரினம் உருவான அந்த காலகட்டம் இன்றைலிருந்து  வெறும் 20 லட்சம் வருடங்களுக்கு முன்பு தான்.

அதிலும் குறிப்பாக முன்னேறிய மனிதன்  நாகரிக மனிதன் வெறும் 2 லட்சம் ஆண்டுகளுக்கு மட்டுமே சொந்த காரன்.

சொல்ல போனால் பூமிக்கு கடைசியாக வந்து சேர்ந்த மிக இளையவன் மனிதன்.

நம்முடன் வீட்டில் அன்றாடம்  இயல்பாக காண கிடைக்கக்கூடிய சாதாரண கரப்பான் பூச்சி கூட கோடி கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் இருந்து வருகிறது.

நம்முடன் நம் வீட்டில் வசிக்கும் எலி இனம் இன்று உங்களுடன் சேர்ந்து நடக்கும் முன்பே டைனோசர்களுடன் இனைந்து இந்த பூமியில் நடை போட்டவை.

ஒரு சாதாரண கொசு இன்று நம்மை கடிப்பதை போல அந்த கொசுவின் மூதாதையர்கள் டைனோசர்கள் ரத்தத்தை குடித்து வாழ்ந்தவைகள்.

(இன்று மனிதன் எவ்வளவு முயன்றாலும் எலி, கரப்பான், கொசு இம்மூன்றையும் மொத்தமாக அழிக்க முடியாமல் தோற்று போவதை கவனித்தீர்களா).

ஒரு முதலை கூட 10 கோடி ஆண்டுகள் முன்பிருந்தே இருக்கிறது.

தட்டான் பூச்சி அல்லது தும்பி சொல்கிறோமே அந்த பூச்சிக்கு டைனோசருக்கும் முன்பு இருந்தே வரலாறு இருக்கின்றது.

டைனோசர்கள் வருவதற்கு முன்பே இந்த உலகை சுற்றி பார்த்தவைகள் தான் அந்த தட்டான் பூச்சிகள்.

ஆக்டொபஸ் கூட டைனோசர் காலத்திய ஒரு உயிரினம் தான்.

ஆனால், இந்த பூமியின் மொத்த வரலாறை ஒப்பிட்டு பார்க்கும் போது இவைகள் எல்லாம் கூட வெறும் கண்ணிமைக்கும் காலம் தான்.

காரணம் பூமி மொத்தம் 450 கோடி ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாறை கொண்டது.

அதில் முதல் 100 கோடி ஆண்டுகளுக்கு மட்டும் எந்த உயிரினமும் இல்லாமல் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் தனியாகவே சுற்றி கொண்டு இருந்தவள் பூமி தாய்.

வேக வேக மாக ஓட்டி பார்த்தாலும் கூட 450 கோடி ஆண்டுகள் வரலாற்றை... பூமி கடந்து வந்த பாதையை.. அதன் நிகழ்வுகளை  சுருக்கமாக பார்ப்பது கொஞ்சம் கடினம் தான் என்றாலும் இனி நாம் பார்க்க போவது அதை தான்.

பண்டைய மனிதன் தனது வரலாறை குகைகளில் வரைந்தும் செதுக்கியும் சென்றது போல இந்த பூமி தனது வரலாற்றை ஃபாசில் களிலும் பாறை படிவங்களிலும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளது.

நாம் பெரும்பாலும் பூமியின் வரலாற்றை தெரிந்து கொண்டது பூமியின் அந்த குறிப்பேடுகளின் வாயிலாக தான்.

மேலும் விஞ்ஞானம் வளர்ந்து முன்னுக்கு செல்ல செல்ல வரலாற்றை உற்று நோக்க நாம் பின்னுக்கு செல்லுதல் எளிதாகி கொண்டே வருகிறது.

பூமியின் அந்த 450 கோடி ஆண்டு கால கதை... அந்த பூர்வ கதை.. அபூர்வ கதை இனி பார்க்கலாம்.

- பூமி இன்னும் சுழலும்....