பார்க்காதவங்க பார்த்துக்குங்க... சென்சார் கட் விரைவில்...
20/10/2017
பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா பற்றி மெர்சல் படத்தில் அட்டாக்...
பார்க்காதவங்க பார்த்துக்குங்க... சென்சார் கட் விரைவில்...
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக வைக்கப்பட்ட நூல் திருமுருகாற்றுப்படை...
தமிழில் இன்றிருக்கும் சமய இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தியது. மூத்தது. முத்தமிழ் முதல்வனான முருகனைப் பாடுவது.
முருகக் கடவுள் குன்றுதோறும் ஆடும் இயல்பைப் பாடும் பொழுது முருகனுக்கும் குழலுக்கும் உள்ள தொடர்பை நக்கீரர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்
கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,
மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று
குன்றுதோறு ஆடலும்..
அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக நக்கீரர் குறிப்பிட்டிருப்பது குன்றுதோறாடல். இன்றைக்கு திருத்தணி ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடப் பட்டாலும் உலகில் இருக்கும் குன்றுகளையெல்லாம் ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.
அப்படி குன்று தோறும் இருக்கும் முருகனின் இயல்புகளை விளக்கும் வரிகளில் ஒளிந்திருக்கிறது தமிழர்களின் இசையறிவு.
இந்த பாடலில் தமிழர் இசை அறிவு பற்றி குறிப்பிட்டு சொல்லும் பாடல் வரி
குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்..
குழலன் – குழல் வைத்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் அல்ல. குழல் ஊதுவதில் மிகச் சிறந்தவன் என்று பொருள். அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.
கோட்டன் – கோட்டு வாத்தியம் என்னும் நரம்பிசைக் கருவியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.அதில் சிறந்து விளங்கியவன் என்றும் பொருள் கொள்ளலாம். இல்லை கோடு என்பது கொம்பினைக் குறிக்கும். ஊதுகொம்பினை எக்காளம் என்றும் அழைப்பார்கள். அந்த இசைக்கருவியில் சிறந்தவன் முருகன். இன்னொரு பொருளாகவும் கொள்ளலாம்.
குறும் பல்லியத்தன்..
மிகமிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய சொல்.
பல்லியம் = பல் + இயம். பலவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைப்பவன்.
அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் Orchestration என்று சொல்லப்படும் இசைக்கோர்ப்பு.
முருகன் ஒரு இசையமைப்பாளன், இசைக்கடவுள். இசை தொடங்குவதும் வளர்வதும் அடங்குவதும் முருகனிடத்தில். அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்.
Orchestra என்ற சொல்லோ கருத்தோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக நாடுகளில் இருந்திருக்குமா என்பதே ஐயம். அந்த நிலையில் பல்லியம் என்ற சொல் சங்கத்தமிழில் இடம் பெற்றிருப்பது தமிழிசை அந்தக் காலத்தில் செழித்திருந்ததையே காட்டுகிறது.
பல்லியத்திலும் இரண்டு வகை உண்டு. குறும் பல்லியம். நெடும் பல்லியம். இவை பல்லியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படுகின்றவை.
இசைக்கருவிகளை வைத்து இசையமைத்து விட்டார் முருகன். அவரே பாடியும் விடுவார். ஆனால் Chorus வேண்டாமா? பின்னணியில் பலகுரல்கள் கூடியெழுந்து முன்னணியில் பாடுவதைச் செறிவாக்க வேண்டாமா?
அதற்குதான் இருக்கிறார்கள் ”நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு”. யாழ் முதலான இனிய நரம்பிசைக் கருவிகளைப் போன்ற இன்னொலி கொண்ட பாடகர்கள் முருகனோடு இருக்கிறார்கள். முருகன் இசையமைக்கும் போது அவர்களும் கூடிப் பாடுகின்றவர்கள்.
இந்த பாடல் வரிகளின் அர்த்தம் உலகின் முதல் இசை அமைப்பாளனாக முருகன் இருந்து இருப்பாரோ என்று எழும் ஐயத்தை உருவாக்குகின்றது...
உமிபோஸ் பேய்...
மொழுக்குனு தலை ஒத்த மசிருகூட கெடையாது.
கன்னங்கரேல்னு மூஞ்சி பெருசா இருக்கும்.
ரெண்டு முட்டைக் கண்ணு வெள்ள வெளேர்னு பிரகாசமா ஜொலிக்கும்.
ஆக்டோபஸு தெரியுமா அப்படிதான் இருக்கும் அதோட உடம்பு.
அந்ந பேய் இருக்கே ஒரு காலத்தில் புத்த துறவியாக இருந்துச்சாம்.
திடீர் என்று நடுக்கடலில் இருந்து முளைச்சு வரும். அப்போ கடலில் சூறாவளி பயங்கரமா வீசும் பெருசு பெருசா அலை அடிக்கும் கப்பல் தடுமாறும் ஆனா கப்பல்ல இருக்கிறவங்க அந்த பேயைப் பார்த்தா பயப்படாம இருக்கனும் பயம் கண்ணுல தெரிஞ்சுதுன்னு வையி... அந்த பேய் அப்படியே கப்பலை சுத்தி வளைச்சு மூழ்கடிச்சு, அதுல இருக்கிறவங்களையெல்லாம் கொல்லாம விடாது.
மொழுக் தலையுடன் கூடிய அந்த புத்ததுறவி பேயின் பெயர் உமிபோஸு பேய்களுக்கும் ப்ளாஷ்பேக் உண்டல்லவா. இந்தப் பேயின் பயங்கரத்துக்கும் பின் உள்ள கதை இதோ.
ஜப்பானிய மீனவ கிராமம் ஒன்றில் புத்தரின் போதனைகளை எடுத்துரைக்க வந்தார் ஒரு துறவி.
மீனவர்களுக்கு அவரது போதனைகளைக் கேட்டு அமைதி வரவில்லை, ஆவேசம் வந்தது.
அந்தத் துறவியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டு படகில் ஏறினார்கள்.
நடுக்கடலுக்கு சென்றார்கள். அவரை ஒருபேரலில் போட்டார்கள். அவர் கதறலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடலில் தூக்கி போட்டு மூழ்கடித்துக் கொன்றார்கள்.
சில நாள்கள் கழிந்திருக்கும். அந்த மீனவர்கள் அதே கடல் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த போது, அந்த துறவி ஆக்டோபஸ் பேயாக கடலில் தோன்றினார்.
ஆவேசமாக அவர்களது படகைப் புரட்டிபோட்டு மீனவர்களை கொன்று ரத்தம் குடித்து பழிவாங்கினார்.
ஆக புத்த துறவியை ரத்தக் காட்டேரியாக மாற்றிய பெருமை அந்ந ஜப்பானிய மீனவர்களுக்கு கிடைத்தது.
இன்றைக்கும் ஜப்பான் கடல் பயணிகளுக்கு உமிபோஸு குறித்த பயம் அகலவில்லை என்பதே நிஜம்...
திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகன் பாஜக நரேந்தி மோடி இந்தியாவை ஆளும் தகுதி உண்டா?
குஜராத் குருதி. குஜராத் படுகொலைகள் பற்றிய..ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்...
ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது!
மீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.
குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.
பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.
வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.
வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை.
அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள்மற்றவர்கள்.
ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.
புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..
இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன்.
ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள்.
அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
இதற்கென்ன சொல்கிறீர்கள்?
19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?
தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.
மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்துஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.
3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை.
”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள்.
அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.
பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.
குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள்.
கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;
சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது.
திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.
அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும்.
வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன….
கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்…
இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன….
இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை!
வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.
பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது.
இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.
கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.
பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.
இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.
அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.
சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….
அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்…இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.
கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது.
அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….
இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.
அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!
கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?
இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்.
இதோ… இன்னொரு பெருத்த அவமானம்!
பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.
“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான்கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…
குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது.
அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:
சாரே ஜஹா ஸே அச்சாஇந்துஸ்தான் ஹமாரா
இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.
குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.
மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை.
தழிழகத்தில் இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் இந்துத்வா காவி பயங்கரவாதிகள் குஜராத்தை போல் குஜராத்தை போல் என அச்சுறுத்தி வந்திருப்பதுடன் அதையே தொடர்கிறார்கள்...
திராவிடமே ஈழ விடுதலைக்கு முதல் எதிரி...
கேள்வி: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் 'ஈழத்தை' வைத்து அரசியல் நாடகம் ஆடினாலும், வைகோ, பெரியார் போன்றோர் ஈழத்துக்காக குரல் கொடுத்து வந்து தானே இருக்கிறார்கள். 'வைகோ' ஒரு தெலுங்கர் என்று கூறி அவர் மீது சேற்றை வாரி இறைத்தால், ஈழத்துக்காக குரல் கொடுத்த ஒரு தமிழர் தலைவரை இங்கே காட்ட முடியுமா...?
இந்த கேள்விக்கு பதிலை நேரடியாக பார்க்கும் முன்பு வரலாற்றை சற்று நேர் செய்வோம்...
வருடம் 1965 :
தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம்.
தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர்.
மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை. ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.
பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை :
இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே இந்தியை கொண்டு வந்தவர் என்பதும், அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?
இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436
பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ, தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2
என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.
இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர். கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.
என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார்.
இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக தமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது. விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.
ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்.
திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை :
திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது. அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.
அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளி வந்து விட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.
இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது:
இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர். இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.
வருடம் 2013 :
சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது.
இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார்.
அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.
தமிழருக்கான நாடு கேட்டு மாணவர்கள் போராட்டம் (2013) :
ஆனால் எதிர் கட்சியை இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது.
மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர்.
ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர். இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர்.
இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
Source:http://tamil.oneindia.in/news/2013/03/24/tamilnadu-arts-colleges-re-open-tomorrow-172079.html
வைகோ நல்லவர்தானே...?
சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?
ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?
விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?
எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?
முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா? ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?
விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா:
"இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனால், தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க?
கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனால், தமிழ்நாட்டில்? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே...
கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க.
தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!'
Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html
தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும்,கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர். எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ , திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது. மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.
எனவே தமிழனுக்கேன்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான்.
இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே.....
இனிமேலாவது திருந்துங்கள்....
மலாக்கா செட்டிகள் மொழிச் சிதைவின் அடையாளம்...
இன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய – ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.
கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
14ஆம் நூற்றாண்டில் சுமத்திராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங் (Palembang) கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தமாஸ்சேக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.
சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.
1414இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஸா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.
பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஸா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.
வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக் கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால் சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.
அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.
போர்த்துக்கீசியர்கள் (1511 – 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை.
போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.
வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ – இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்’ என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா’ (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.
மலேசியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி 1957இல் நாடு சுதந்திரமடைந்த போது மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாசனத்தில் தனிச்சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அரசாங்கக் குத்தகைகள் அனைத்திலும் இந்தச் சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்று அப்போது இதற்குக் காரணம் கூறப்பட்டது.
இந்தச் சிறப்புச் சலுகை பெறும் இனமாகப் போர்த்துக்கீசியச் சமூகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இதில் பெரிய சோகம் என்னவென்றால் 1511இல் வந்து இங்கே மதமாற்றங்கள் செய்தபோதும் இங்குள்ள பெண்களை மணந்தபோதும்தான் இப்போதுள்ள போர்த்துக்கீசிய சமூகம் உருவானது. ஆனால் ‘பரமேஸ்வரா’ என்ற இந்து மன்னனாகவும் பிறகு மலாயாவின் முதல் முஸ்லிம் சுல்தானாகவும் அதிகாரபூர்வமாக மலாய் வரலாற்றில் கூறப்பட்டவனின் அரசாங்கத்தில் 14ஆம் நூற்றாண்டிலேயே முதலமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ‘மலாக்கா செட்டிகளுக்கு’ பூமி புத்திரா அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்? இதை இங்கே உள்ள இந்திய அரசியல் கட்சிகளும் பேசவில்லை. மலாக்கா செட்டிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை. அல்லது பேசச் சரியான தலைமைத்துவம் அவர்களிடம் இல்லை.
போர்த்துக்கீசியர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றியபோது அவர்கள் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் கடற்கரையோரம் அமைந்த ஒரு கிராமத்தை ‘கம்போவ் கிலீவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கலிங்கப்பட்டணத்திலிருந்து வந்த தமிழர்களை ‘கிலீவ்’ என்றே மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். அக்காலத்தில் கௌரவமான சொல்லாக இருந்த இந்த ‘கிலீவ்’ இன்று தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.
போர்த்துக்கீசியர்களோடு மலாக்கா செட்டிச் சமூகம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளது. போர்த்துக்கீசியக் கடற்படைத் தலைமைத் தளபதி அல்பான்சோ டி அல்புகர்க் எழுதியுள்ள குறிப்பில் மலாக்காவை அங்குள்ள மக்களிடம் இணக்கமாக அரசாட்சி நடத்த மலாக்கா செட்டி சமூகம் கணிசமாக உதவியதால் உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாறு கைகோத்துச் செயல்பட்டதால் மலாக்கா செட்டிச் சமூகம் தங்குதடையின்றி வாணிபம் செய்ய முடிந்துள்ளது.
1641இல் டச்சுப் படை மலாக்காவைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றியது. 1824 வரை டச்சு அரசாங்கத்தில் ‘மலாக்கா செட்டி’ சமூகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டச்சுக்காரர்கள் வாணிபத்தைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். அதுவரை வாணிபத்தில் முதலிடத்தில் இருந்த இவர்களின் வாழ்க்கை முறை படுமோசமாகி வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நாட வேண்டிய சூழலிலிருந்து தொடங்கி இவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது.
‘கம்போவ் கிலீவ்’ என்ற வியாபார இடத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடமிருந்து பறித்து அதற்கு டச்சுக் கிராமமென்று மறுபெயர் சூட்டினார்கள்.
மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் (ஙிஷீக்ஷீt) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கியுள்ளார். 1781இல் டச்சு அரசாங்கக் கெசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.
‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி’ என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துபூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில் – இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது.
ஐந்திலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களின் இப்போதைய நிலை என்ன?
1962ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் இரண்டு முறை அவர்களின் இருப்பிடம் சென்று சில ஆய்வுகள் செய்துள்ளேன். இப்போது இந்தக் கட்டுரைக்காகவும் அங்கே சென்று வந்தேன்.
சீன – மலாய் இனத்தவரோடு கலப்பு மணம் செய்த காரணத்தால் தங்களின் தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பல்வேறுபட்ட பண்பாட்டு மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இன்றும் தங்களை இந்து மதத்தவர் எனக் கூறிக்கொள்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு என்று போய்விட்டாலும் இன்றும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.
மலாக்கா கஜபெராவ் என்னும் இடத்தில் இன்றும் 100 குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். தியாகராஜன் என்பவர் இவர்களுக்குத் தலைவராக உள்ளார் – ‘கஜபெராவ்’ என்று அதிகாரபூர்வ நகராக உள்ள இந்த இடம் முற்காலத்தில் ‘காஞ்சிபுரம்’ என்றே விளங்கியுள்ளது.
தலைவர் தியாகராஜனின் மனைவி சீன வம்சா வழியில் வந்த மலாக்கா செட்டியாவார். வீட்டில் சேலை கட்டுகிறார். பூஜை அறையில் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள். அந்த அறையை எனக்குக் காட்டினார்கள். பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்க அவர் தேவாரத்தை ராகத்துடன் பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாரம் பாடத் தெரிந்த இவருக்கு ஏன் தமிழ் தெரியவில்லை. எழுதப்பட்ட ஒரு தாள் அவர் கையில் இருந்தது. எட்டிப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டிருந்த தேவாரத்தைத்தான் அவர் பாடியுள்ளார்.
அவர்களுக்கு ஒரே மகள். திருமணம் முடிந்துவிட்டது. திருமண ஆல்பத்தைக் காட்டினார்கள். இந்து ஆகமங்கள் சிறிதும் வழுவாத கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. படத்தில் அனைவரும் வேட்டி, சேலை உடுத்திக் கூட்டமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். அவர் முகம் அசல் தமிழ் முகமாக இருந்தது.
இவர் ‘மலாக்கா செட்டி’ சமூகத்தவரா என்று தலைவர் தியாகராஜனிடம் கேட்டேன்.
“இல்லை அசல் தமிழர்” என்றார்.
“எப்படி?”
“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம். எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார்.
மொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.
தியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன – பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.
“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி?”
அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”
அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.
1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.
1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.
அரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.
மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.
மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால் தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்...
சித்தராவது எப்படி - 17...
அன்பே நிகழ் காலம் என்றால் அதுவே உண்மையாகும்...
தோல்விகளில் துவண்டு கிடக்கின்ற மனிதன், உலகத்தாரையும் உலக சார்புகளையும் தான் குறை கூறி கொண்டு இருக்கின்றானே தவிர தானே அந்த தோல்விக்கு முழுக் காரணம் என்பதை ஒருபோதும் அறிவதில்லை.. கடவுள் சன்னதியில் புலம்பி அழுகின்றான்..
தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் புலம்பும் மனிதனுக்கு நிகழ் காலத்தில் வாழும் அன்பே வடிவான இறைவன் அந்த நொடியே தீர்வு தருகின்றான்..
ஆனால் நிகழ் காலத்தில் வாழ தெரியாத மனிதன், தனக்கு கிடைத்ததை அடையாளம் காண முடியாமல், இறைவன் கொடுத்த அத்தனையும் புறகணிக்கின்றான்..
இறைவன் நிகழ்காலத்தில் இருகின்றான் என்பதை புரிந்து கொள்ள மனிதனுக்கு முடிவதே இல்லை..
காரணம் கடந்த கால அனுபவமான எண்ண ஆதிக்கத்தில் அடிமையாக உள்ள மனிதன் நிகழ் கால சுதந்திரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை..
நிகழ் காலமே சிவம் நிலை என்று எத்தனை சிவ பாடல்களை கற்றாலும், மனிதன் சவ நிலை நோக்கி தான் திரும்பி பார்த்து பயணப் படுகிறான்...
நிகழ் காலத்தில் நிற்க தெரியாத, நிற்க முடியாத மனிதன், இறைவன் கொடுக்கும், கொடுத்துக் கொண்டே இருக்கும் நிலையை உணர முடியாத அவல நிலையில் உள்ளான்..
எப்பொழுதோ ஒருவேளை குருட்டு வாக்கில் நிகழ் காலத்தில் விழும் போது, இறைவனுடைய அருளை பெறுகின்ற போது, தனக்கு எந்த நிலையில் அது கிடைத்தது என உணர முடியாமல் தவிக்கின்றான்..
நான் பெற்றேன் பெற்றேன் என பூரித்து மகிழும் பக்தன் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்று மகிழ்வோடு இருப்பதை காணவே முடிவதில்லை..
பக்தியின் உச்சத்திலே பயணப்பட்ட பிரசித்தி பெற்ற பக்தகோடிகள் நிலையும் அப்படியே....
காரணம் நிகழ் காலத்தில் நொடி பொழுது கூட நீடிக்க முடியாத மனிதன், எதிர் காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ சென்று விடுவதால் நிகழ் கால பெருமை, அதனுடைய மகிமை அறியாது போய் விடுகிறது..
நிகழ் காலத்தை பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் அதை கடந்த கால அனுபவ நிலையாகிய எண்ண ஆதிக்கங்களில் கேட்பதால் நிகழ் கால செய்திகள் கடந்த கால வண்ணம் பூசப் பட்டு அந்த செய்திகளின் உண்மை நிலை கெட்டுப் போய் விடுகிறது..
எண்ண ஆதிக்கங்களால், இறைவனே சத்தியத்தை வழங்கினாலும், அது பலன் அற்று போய் விடுகிறது..
ஆகவே மனிதன் எண்ண ஆதிக்கம் எதுவும் அற்ற தோன்றா நிலை அனுபவமாகிய நிகழ் காலத்தை அனுபவப் பட வேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது...
அப்பொழுத்து தான் நிகழ் காலத்தில் அகப்படும் இறைவன் தரிசனம் நமக்கு கிடைக்கும்...
பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதே இறை தரிசனம் ஆகும்.. அதுவே நிகழ் காலம் ஆகும்...
அதுவே எல்லா செய்யக்கூடிய, செய்யும், செய்யப் போகும் மூலாதாரம் ஆகும்..
எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்று ஆகும்.. நிகழ் காலம் என்பது அந்த ஒன்றே..
நமக்கு ஒரு சொகுசு கார் வேண்டும் என்று விரும்புகிறோம்.. இறைவனிடம் மண்டியிட்டு, அழுது, பிரார்த்தனை செய்கிறோம் .. இறைவன் நேரில் வந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நான் தருகிறேன் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்..
கார் என்ற ஒன்றிலே கற்பனையில் திளைத்து சதா காலமும் பிரார்த்தனை பண்ணிய மனம், கார் என்ற எண்ண பதிவில் பலமான காரணத்தினால், கார் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்றே சொல்லும்..
இறைவன் நம்மை ஏதோ ஒன்றை சொல்லி ஏமாற்றி விடுவானோ என்ற ஐயப்பாட்டில் அனைவரும் கார் வேண்டும் என்றே கேட்பார்கள்..
பின் கார் சம்பந்தப் பட்ட அனைத்தையும், ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்...
எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டும் பெற விரும்பவே மாட்டார்கள்...
இறைவனுடைய விருப்பமே மனிதனுடைய பூரண தேவைகளை பூர்த்தி செய்யும் கருணையை உடையவன்.....
ஆனால் அவன் விருப்பத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. எண்ண ஆதிக்கங்களால் நம் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பெற வேண்டியதை பெறாமல் குறைவு பட்ட ஒன்றையே பெற்று பெற்று அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..
எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சரணாகதியில் இறைவன் முன், இறைவன் கொடுக்க நினைப்பதை அந்த நிகழ் காலத்தை இழந்து, கடந்த கால எண்ணப் பதிவுகளில் சிக்கி, எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒரு அரிய, அற்புத ஒன்றை பெறாமல், அற்ப சொற்பமான ஒன்றை பெற்றுக் கொண்டு அல்லல் அடைகின்றோம்...
இப்படியாக நிகழ் காலத்தின் பெருமையை உணர்ந்து நிகழ்கால தொடர்பு உள்ளவர்களை தான் சிவநிலை பெற்றவர்கள் என்கிறோம்...
இப்படி இருப்பவர்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பார்கள்..
வற்றாத செல்வம் உடையவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு வாரி வழங்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்..
எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை நிகழ் காலத்திலே இறைவனிடம் பெற்றவர்கள் மட்டுமே வற்றாத செல்வம் பெற தகுதி பெற்றவர்கள்..
அதனால் அன்பும் நிகழ் காலமும் ஒன்று என அறியும் அறிவு நமக்கு வேண்டும்..
அந்த அறிவு தோன்றா நிலையில் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது...
மனிதன் நிகழ் காலத்தில் இருக்கின்றான் என்றால் அவன் தோன்றா நிலையில் பூரண சரணகதி தத்துவத்தில் இறைவன் முன்நிலையில் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை கிடைக்கப் பெற தகுதி உடையவன் ஆகிறான்..
அந்த ஒன்று வேறு ஒன்றும் இல்லை.. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றல் தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?
நிகழ் காலத்தில் இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெற முடியாதவர்கள், அன்பை பற்றி பேசலாம்.. ஆனால் அன்பாய் இருக்க முடியாது..
காரணம் அன்பாய் இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லாததே... எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று பெறாததாலே, கொடுக்கும் தகுதியை இழந்து விடுவதால், அவர்கள் அன்பாய் இருக்க முடியாது..
நிகழ் காலத்தில் ஆற்றலோடு அறிவும் பெறுவதால் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தங்கள் அன்பின் செயல் பாட்டினை வெளிப் படுத்துவார்கள்...
முடிவாக நிகழ் காலத்தில் மட்டுமே இறைவன் இருக்கிறான்; நிகழ் காலத்தை கெடுப்பது கடந்தகால எதிர்கால எண்ண ஆதிக்கங்கள்; நிகழ்காலத்தில் பெற்ற ஆற்றலால் மட்டுமே ஒருவன் சகலத்தையும் பெற முடியும்; அப்படி பெற்றவன் ஒருவனே அன்பாய் இருக்க முடியும்; இதனால் அன்பே நிகழ் காலம் என உணரப் படுகிறது...
நிகழ் கால தொடர்புக்கும் சித்தர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளது.. அவர்கள் அளவற்ற ஆற்றலை நிகழ் கால தொடர்பின் மூலமே பெற முடிந்தது...
மேற் சொன்னவற்றை நன்கு நினைவில் கொண்டு தோன்றா நிலையில் இருக்கும் கால அளவினை படிப் படியாக பயிற்சியின் மூலம் விரிவாக்கம் செய்து அன்பே வடிவாய் சித்தராக முனைவோமாக....
தமிழகத்தில் வந்தேறிகள் யார் ?
வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.
இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.
இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...
திராவிட அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...
திராவிடம் பேசுகிறவனெல்லாம் யோக்கியனுமல்ல...
தமிழ்தேசியம் பேசுகிறவனெல்லாம் அயோக்கியனுமல்ல...
1. நீதிமன்றத்தில் தமிழ் இல்லை
2. வங்கிகளில் தமிழ் இல்லை
3. அரசு கோப்புகளில் தமிழ் இல்லை
4. தொடர்வண்டித் துறையில் தமிழ் இல்லை
5. அறிவிப்புப் பலகைகளில் தமிழ் இல்லை
6. வானூர்தி சேவையில் தமிழ் இல்லை
7. ஆட்சி மொழியில் தமிழ் இல்லை
8. அஞ்சல் துறையில் தமிழ் இல்லை
9. தமிழன் பெயரிலும் தமிழ் இல்லை
10. மேற்படிப்புகளில் தமிழ் இல்லை
11. பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை
12. அரசு ஒப்பந்தங்களில் தமிழ் இல்லை
13. அரசியல்வாதி வீட்டிலும் தமிழ் இல்லை
14. கோயில்களில் தமிழ் இல்லை
15. வணிக நிறுவனங்களில் தமிழ் இல்லை
16. நாளிதழ்களில் தமிழ் இல்லை
17. வானொலிகளில் தமிழ் இல்லை
18. தொலைக்காட்சிகளில் தமிழ் இல்லை
19. இசையில் தமிழ் இல்லை
20. விளையாட்டில் தமிழ் இல்லை
21. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தமிழ் இல்லை
22. சட்டப்படிப்பில் தமிழ் இல்லை
23. ........................
அயோக்கியர்களுக்கு காவடி தூக்கும் யோக்கியவான்களே,
தமிழ்த்தேசியம் பற்றி ஒரு தமிழன், தமிழ்நாட்டில் பேசாமல் வேறு எந்த நாட்டில் பேசுவதாம்?
ஒரு மொழிக்கு அதன் சொந்த மண்ணிலேயே எந்த மரியாதையும் இல்லாமல் போகுமென்றால்...
பின் என்ன மயித்துக்குதான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாம்?
தமிழர்களுக்காக போராடுகிறோம்
என்று கடந்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருட்டு திராவிட அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...
அறுவகைச் சுவை என்பது என்ன?
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சி களை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படி யான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம் பிற்கு சக்திகூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத் தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகை களில் அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்க த்தை ஏற்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது...
காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்....
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்...
களப்பிரர் பிடுங்கிய பார்ப்பனர் நிலத்தில்....
களப்பிரர்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி மக்களுக்குக் கொடுத்ததாகவும்..
அதை பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்றபிறகு மீண்டும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததாகவும்..
வண்டி வண்டியாக கட்டுரை எழுதும் திராவிட கம்யூனிச வலைகளே..
பாண்டியன் கொடுத்த அந்த நிலத்தில் (வேள்விக்குடி) இடையர், நாவிதர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதையும்..
பார்ப்பனருக்கு அதில் ஏகபோக உரிமை எதுவும் இருந்ததில்லை என்பதையும்..
அதில் பொதுவான சுடுகாடும் மேய்ச்சல் நிலமும் இருந்தன என்பதையும் பரம ரகசியம் போல மூடிமறைப்பது ஏனோ?
தமிழ் தேசியம் vs திராவிடம்...
தமிழ் தேசியம் : திராவிடர் என்பது தமிழ்ச் சொல்லா?
திராவிடர் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?
அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை வைத்து தமிழரை அழைக்க வேண்டியது தானே...
தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு ஏன் தமிழரை ஒரு வேற்று மொழிச் சொல் மூலம் அழைக்கிறீர்கள்?
இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் அரசியலைத் தொடருங்கள் திராவிடர்களே...
தமிழ் தேசியம் vs திராவிடம்...
திராவிடம் : திராவிடர் என்றால் தென்னிந்தியர் என்று பொருள்...
தமிழ் தேசியம் : 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்க்கென்று ஒரு மாநிலம் உருவான பின்பு தென்னிந்தியர்க்கான அரசியலை எப்படி தமிழர்க்கான மாநிலத்தில் எடுக்க முடியும்...
திராவிடத்தின் தேவை (இருந்ததில்லை... ஒரு வேளை இருந்திருந்தால்) 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே முடிகிறதல்லவா...
திராவிடம் : இல்லை... பகுத்தறிவு மூலம் மூடநம்பிக்கை, சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் வரை திராவிடதிற்கான தேவை இருக்கும் (பகுத்தறிவு என்ற பெயரில் தமிழரின் அடையாளங்களையும் தமிழர்க்கு அதன் மேல் உள்ள பற்றையும் அழிப்பதே திராவிடத்தின் நோக்கம்)...
தமிழ் தேசியம் : அதை தமிழர் என்ற பெயரில் செய்ய வேண்டியது தானே... ஏன் திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது?
தமிழரை திராவிடர் என்று அடையாளப்படுத்தும் உங்கள் செயலின் நோக்கம் என்ன?
திராவிடம் :... ?
தமிழரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...
தற்காலத்தில், தமிழர் தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது இழிவாக பலராலும் கருதப்படுவதால், இந்த நிலை நீட்டித்தால் தமிழரல்லாத தெலுங்கு கன்னட மலையாள இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...
ஆகையால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர் இன வரையறையை குழப்ப துவங்கியுள்ளனர் இந்த திராவிடர்கள்...
தமிழ் தேசியம் vs திராவிடம்...
திராவிடம் : திராவிடம் என்பது திருவிடம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு...
தமிழ் தேசியம் : அப்போது, தமிழகத்தை திருவிடம் என்று எந்த தமிழ் இலக்கியத்தில், கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரத்தில் அழைக்கின்றனர்?
குறைந்தபட்சம் மொழியியல் ஒப்பாய்வாவது உண்டா?
(உண்மையில் இதற்கு ஆதாரங்களே இல்லை..இது உச்சரிப்பின் காரணமாக ஊகத்தால் வைக்கப்பட்ட வாதம்...)...
திராவிடம் : ..?
ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட இந்த பதிலை உறுதியான பதில் போல் திராவிடவாதிகள் வைத்ததற்கு காரணம், தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு தமிழரை எப்படி வேற்று மொழிச் சொல் மூலம் அழைக்கலாம் என்று பிறர் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே.
அப்படி திராவிடம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்று தெரிந்து விட்டால் தமிழர்கள் அதற்கான தமிழ்ச் சொல் தேடிக் கண்டு பிடிக்கும் போது உண்மையை கண்டு கொள்வர்.
ஆகையால், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லின் திரிபு தான் என்று உண்மையை மறைக்க முற்பட்டனர்.
இதற்கு ஈ.வெ.இராமசாமி நாயுடுவும் உடந்தை அவரது எழுத்துக்களே ஆதாரம்..
திராவிடம் தமிழர்க்கான அரசியல் அல்ல... தமிழரை ஏமாற்றுவதற்கான அரசியல்...
தமிழர் மண்ணில் தமிழரை அடிமைப்படுத்தி, தமிழரை அடக்கி அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழரே அறியாதவாறு உணராதவாறு, ஆதிக்கத்தில் இருந்த தமிழரல்லாதாரால் அரசாட்சி செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் (கருத்தியல்)...
ஆகையால், எப்படி பதில் சொன்னாலும் தமிழரால் திராவிடத்திற்கு ஆப்பு உறுதி...
உண்மையில், திராவிடத்திற்கான பொருளாக திராவிடம் கூறும் பொருள் அனைத்தும் தவறு...
வரலாற்றின் படி திராவிடர் (<த்ராவிட்) என்பது ஒரு குறிப்பிட்ட வகை பிராமணரைக் குறித்த சொல்...
இதைத் தான் திராவிடம் தமிழராகிய நம்மிடமிருந்து மறைக்கிறது...
உதாரணம் : மட்டப்பந்து வீரர் ராகுல் டிராவிட் பிராமணரை நினைவில் கொள்க...
கொஞ்சம் கொஞ்சமாக கட்டணத்தை உயர்த்தி வரும் ஜியோ...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டண விகிதங்களை உயர்த்தியுள்ளது. 84 நாட்கள் திட்டத்திற்கான கட்டணம் இன்று முதல் 459 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
509 ரூபாய் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகளும் குறைக்கப்படுவதாக ஜியோ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
149 ரூபாய் திட்டத்தில் உள்ளவர்களுக்கு 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா இரட்டிப்பாக்கப்பட்டு 4 ஜிபி ஆக்கப்பட்டுள்ளது...
பெண் கைதிகளுக்கு ரவுடிகள் மூலம் பாலியல் தொல்லை நடந்ததா?: காவலர்களே ஏற்பாடு செய்தது அம்பலம்...
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் புதுவை மாநிலத்தில் கைதாகும் நபர்களை அடைக்கின்றனர். இந்த ஜெயிலில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களில் 100 பேர் பெண்கள்.
ஜெயிலில் ஆண்களுக்கு தனி பகுதியும், பெண்களுக்கு தனி பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் பகுதியில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காலாப்பட்டு ஜெயிலில் பிரபல ரவுடிகள் பலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயிலில் இருந்தபடியே போனில் பேசி தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, வெளியில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு சதிதிட்டங்களை நிறைவேற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
கைதிகளுக்கு சிறை வார்டன்களே போன்கள் கொடுத்து உதவியதும், கைதிகளை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் ஏற்கனவே தெரியவந்தது. இதையடுத்து சில காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
ஆனாலும், ரவுடி கைதிகளுக்கு ஜெயில் வார்டன்கள் தொடர்ந்து உதவி வருவது இப்போது தெரியவந்துள்ளது. இதில் முக்கியமாக பிரபல ரவுடியுடன் பெண் தாதா ஒருவரை சந்திக்க ஜெயில் அதிகாரிகளே ஏற்பாடு செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெயிலில் மர்டர் மணிகண்டன் என்கிற பிரபல தாதா அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காரைக்காலை சேர்ந்த பெண் தாதா எழிலரசி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மர்டர் மணிகண்டனும் எழிலரசியும் சந்தித்து பேசுவதற்கு ஜெயில் அதிகாரிகளே ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த தகவல் ஜெயில் போலீஸ் ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜாவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் இரவில் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது மர்டர் மணிகண்டனும், எழிலரசியும் சந்தித்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஜெயில் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன்கள் கலாவதி, மதிவாணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார்.
மர்டர் மணிகண்டனும், எழிலரசியும் தங்களது எதிரிகளை தீர்த்து கட்டுவது தொடர்பாக அந்த சந்திப்பின் போது ஆலோசித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்திப்புக்கு வேறு பின்னணி உண்டா? என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ஜெயிலில் உள்ள ஆண் கைதிகளும், பெண் கைதிகளும் சந்திக்க முடியாத அளவுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதையும் மீறி அவர்கள் சந்திப்பதற்கு சிறை காவலர்களே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெயிலில் உள்ள மற்ற பெண் கைதிகளையும், ஆண் கைதிகள் சந்திப்பதற்கு ஜெயில் காவலர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜெயிலில் உள்ள ரவுடி கைதிகளை பெண் கைதிகளை சந்திக்க வைத்துள்ளனர்.
இதன் மூலம் பெண் கைதிகளுக்கு அந்த ரவுடி கைதிகள் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெண் கைதிகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு எந்தெந்த பெண் கைதிகளை ஆண் கைதிகளுடன் சந்திக்க வைத்தார்கள் என்று தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. இதில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண் - பெண் கைதிகள் சந்திப்பதற்கு மேலும் 3 ஜெயில் காவலர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களையும் அழைத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒன்றிரண்டு நாளில் அவர்களும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெயிலில் நடந்திருக்கும் இந்த குற்றம் பூதாகரமாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது...
செம்பருத்தியின் மருத்துவக் குணம்...
செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான்.
இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.
உடல் உஷ்ணம் குறைய...
உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
வெட்டை நோய் குணமாக...
ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.
இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.
இருதயம் பலம் பெற...
இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.
செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.
பேன் தொல்லை ஒழிய...
சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு...
சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்...
திமுக டிவி சேனலில், விளம்பரம்...
தீப ஒளித் திருநாள் நிகழ்ச்சிகள்..
தீப ஒளித் திருநாள் சிறப்பு பட்டி மன்றம்..
தீப ஒளித் திருநாள் சிறப்புப் படம்..
இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா..?
இந்த விளம்பரங்கள் இன்று வந்தது கலைஞர் டிவியில்..
'விடுமுறை நாள்', 'தீப ஒளித் திருநாள்' ஆகி விட்டது..
இதற்கு மூன்று அர்த்தங்கள்..
1. செக்யூலரிசம் என்றால் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் கேவலப் படுத்துவது என்ற அறுபது வருட கபடம் போதும்; இனி மக்களை ஏமாற்றுவது சுலபமல்ல என்ற உண்மை திமுகவால் உணரப்படுகிறது..
2. திமுகவின் பழைய மூட சிந்தாந்தங்கள் உடைக்கப் படுகின்றன.. மக்களை குண்டுசட்டிக்குள் வைத்திருப்பதுதான் திராவிட அரசியல் என்ற எண்ணம் மாறத் தொடங்குகிறது..
3. மாற்றங்களின் காரணம் - ஸ்டாலினின் நல்ல மனமாற்றம் அல்லது, மாநிலத்தில் பிஜேபியின் வளர்ச்சி பற்றிய அவரின் பயமா..?
மாற்றங்களை ஸ்டாலின் தைரியமாய் தொடர்வாரா..?
Subscribe to:
Posts (Atom)