முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆர்கே நகர் பெண்கள் கருத்து...
12/12/2017
சரமாரியாக கேள்வி கேட்கும் ஆர்கே நகர் தொகுதி பெண்கள், வைரலாகும் வீடியோ...
முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆர்கே நகர் பெண்கள் கருத்து...
தமிழரின் அடையாளம் ரஜினிகாந்த் - வந்தேறிகள் மற்றும் பன்னாடைகள்...
அருணாசலம் படத்தில் ஏழைகளுக்காக கட்சி தொடங்கினார்..
முத்து படத்தில் இருக்கும் அனைத்து சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இமயமலைக்கே போனார்..
படையப்பா படத்தில் மருத்துவமனை மாற்றும் தொழிற்சாலை கட்டி ஏழைகளுக்கு உதவி செய்தார்..
சிவாஜி படத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க முயற்சி செய்தார்..
லிங்கா படத்துல அணை கட்டி கொடுத்தாரு..
கபாலி படத்தில் மலேசியா தமிழர்களுக்காக குடும்பத்தையே தொலைத்தார்..
இன்னும் உங்களுக்கு என்ன செய்யனும் நன்றி கெட்டவங்களா?
தன் 62வயதில் கூட உங்களுக்காக தன் மகள் வயது பெண்களுடன் எல்லாம் கட்டிப் பிடித்து உங்களை மகிழ்விக்க கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டு இருக்கிறார்..
அவருக்கு ஒய்வு கொடுக்காமல் இப்படி கஷ்டப்பட வைப்பது என்ன டா?
உங்களுக்கு எல்லாம் ஈவு இறக்கம் என்பதே இல்லையா.?
பாஜக மோடி தோல்வி பயத்தில் ஒரு அழுகை நாடகம்...
முதலில் ராகுல் காந்தி இந்துவா என்று கேள்வி எழுப்பி பார்த்தாச்சு.
ஹார்டிக் படேல் செக்ஸ் சி டி யை வெளியிட்டு பார்த்தாச்சு.
அப்புறம் அவுரங்கசீப்பை இழுத்து பார்த்தாச்சு.
நான் குஜராத்தி மண்ணின் மைந்தன் என்று பிரிவினை சொல்லி பார்த்தாச்சு.
அப்புறம் நான் கீழ்சாதியில் பிறந்தவன் என்பதால் என்னை திட்டுகிறார்கள் என்று அழுது பார்த்தாச்சு.
-அப்புறம் மசூதி வேணுமா - இந்து கோவில் வேணும் என்று சண்டை மூட்டி பார்த்தாச்சு, பருப்பு வேகல.
இப்போது குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் பங்கு இருக்கிறது என்று கதற ஆரம்பித்துள்ளார் நமது உலக மகா நடிகர் திலகம் பாஜக மோடி..
தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்...
1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு.. தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தி எதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.
28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார் மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது. அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.
அவர் நடத்தி வந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.
1) இந்தி எதிர்ப்பு
2) தமிழ்நாட்டு உரிமை
இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்...
தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்..
திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்..
பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர் மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்...
சிவலிங்கம்...
சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் பிணைப்பு என்பது ஆரியர்கள் கதையாக்கியது.. அதாவது சமசுகிரதம் தமிழில் பிணைந்த போது கொண்டு வரப்பட்டவை..
ஆதி சிவனியத்தில்.. மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்.. அதன் வடிவமே சிவலிங்கம்..
அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்.. அருவமாக ஒரு ஒளி தெரிகிறதே.. அது தான் சிவம்..
இதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்..
இதை தான் இப்போது "Pituitary Gland" என போற்றுகின்றனர்..
சிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்..
மூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது.
இதை தான் தமிழர்கள் போற்றினர்..
சிவ வழிபாடு செய்தனர்..
காமத்தின் உச்சத்தில் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைப்பு என்று நம் சமயத்தை இழிவு படுத்தாதீர்..
சிவ வழிபாடு தமிழனுடையது...
இலுமினாட்டி களால் நாம் உளவியல் ரீதியாக அடிமையாக வாழ்கிறோம்....
தமிழ்சமூகம் ஏன் குடிகாரர்களாக, ஊதாரிகளாக, கேளிக்கை விரும்பிகளாக மாறிப்போனது...
ஒற்றைக் காரணம் தான், அது வணிகனின் வணிகம் மேம்பட என்பது தான்...
வணிகன் தனக்கான வணிக மேம்படுத்தலுக்காகவும்...
சந்தை விரிவாக்கத்திற்காகவும் நடிகர்களை பயன்படுத்துகிறான்...
இந்த நடிகர்களை உருவாக்கியவனும் அவனே...
இந்த நடிகர்களை உங்களிடம் சேர்ப்பதற்காகவே ஊடகங்கள்..
ஊடகங்களும் வணிகனுடையதே..
நடிகனைக் கொண்டு உங்களை குடிக்க வைத்தான்...
ஜீன்ஸ் அணியவைத்தான்...
பைக் வாங்க வைத்தான்..
வலுக்கட்டாயமாக காதலிக்க வைத்தான்...
அத்தனையும் வணிகத்திற்காக...
அரசுகள் அனைத்தும் வணிகனின் தேவைகளை நிறைவேற்றவே உள்ளன..
அரசுகளை உருவாக்கியவனும் வணிகனே...
பிறகு அரசுகள் மக்களுக்காக செயற்படவில்லை என கோபப்படாதீர்கள்...
அவை மக்களுக்கானவை அல்ல...
புதிய அரசுகள் அமைய நடிகன் களம் வருவான்...
ஊடகம் அவனுக்கு துணை நிற்கும்..
வணிகம் பொருள் செலவை ஏற்கும்..
அத்தனையும் வணிகனுக்காக..
ஒருபோதும் இந்நான்கும் ஒன்றை ஒன்று எதிர்க்காது..
இவர்கள் வணிகத்திற்கானவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல..
இவர்களிடம் இருந்து விலகியே இருங்கள் நாகரீகம், கேளிக்கை, காதல் என்ற மாயையில்.. உங்களை சிக்க வைத்து சீரழிக்கும் வஞ்சகர்கள் இவர்கள்....
அனைத்தும் வணிகன் என்கிற கார்ப்பரேட்ஸ் தான்...
பேரீச்சம்பழம்...
அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.
100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
இத்தனை சிறப்பான பேரீச்சம் பழத்தினை உண்பதனால், பித்தம், பித்தநீர், பித்தசுரம், வாந்தி, குடபுரட்டல், மனக்கலக்கம், மனக்குழப்பம், உன்மதம், மதமூர்ச்சை, பைத்தியநோய், கபம், இருமல், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல், சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், நீர்க்கோர்வை, கபாஅநீர், காசம், சுவாச காசம், இரத்தகாசம், தாகம், அதிதாகம், நீரிழிவு, மதுமேகமென்னும் சர்க்கரை நோய், இரத்தபித்தம், வாய்நீர் வடிதல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்...
படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உடலை எடுக்க 12 நாள்களுக்கு பிறகு கப்பல் அனுப்புகிறார்கள்...
இன்று பொன்னார் போட்ட பதிவு இது.
சம்பவம் நடந்து 2 வாரம் ஆகப்போகிறது, மீனவர்கள் உடல்கள் மிதக்க ஆரம்பித்து விட்டன. இப்போது தான் இவர்கள் ஆழ்கடல் வரை தேட கப்பலுக்கு அனுமதி வாங்கியுள்ளார்கள் (அதுவும் மீனவர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு ).
மீட்புபணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துவது, மீட்புபணிகளை ஏனோ தானோ என்று அக்கறையின்றி செய்வது என்று மீனவர்கள் மீது வெளிப்படையாகவே இனப்படுகொலை செய்து வருகிறது மத்திய மாநில அரசுகள்.
இந்த அரசுகளுக்கு ஆதரவாய் பேசுபவர்கள் தங்கள் கைகளை முகர்ந்து பாருங்கள், அவற்றில் நிச்சயமாக மீனவர்களின் இரத்த வாடை அடிக்கும்.
மீட்கப்பட்ட மீனவர்களில் பெரும்பாலனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டவர்கள் மற்றும் புயலினால் வேறு வேறு இடங்களில் கரை ஒதுங்கியவர்கள். இறந்த போன மீனவர்களின் உடல்களை கூட சக மீனவர்கள் தான் மீட்கிறார்கள்.
சிறு நாடுகள் கூட ஒழுங்காக வானிலை அறிவிப்பு செய்கிறது, ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களை புயல் வரும் முன்னரே மீட்கிறது.
ஆனால் இந்தியாவால் ஒழுங்காக வானிலை அறிவிப்பு கூட செய்ய முடியவில்லை. மீனவர்களை புயல் வரும் முன்னரே மீட்க முடியவில்லை.
இவற்றை தான் செய்ய வக்கில்லை என்றால் புயல் வந்து ஒய்ந்த பின் கூட இவர்களால் மீட்புபணிகளை ஒழுங்காக செய்யமுடியவில்லை.
அடத்தூ.. இதெல்லாம் ஒரு நாடு...
இலுமினாட்டி - ஊடகங்களே மக்களின் முதல் எதிரி...
ஊடகத்தை உதரி தள்ளிவிட்டு உங்கள் அறிவை வைத்து அன்புமணி, சகாயம் போன்ற நல்ல தலைவர்களை தேடுங்கள் - சுய புத்தியை கொண்டு...
சொல் புத்தியை தூக்கியெரியுங்கள்...
சிந்தனை வரும் வரை நாம் அனைவரும் ஏமாளிகளே..
மக்களை ஏமாற்றி பிழைக்கும் மூன்று கூட்டு களவாணிகள்..
Corporate நிறுவனங்களின் விளம்பரங்களை போடவே பொழுது போக்கு ஊடகம்.
Corporate நிறுவனங்களுக்கு தேவையான அராங்கத்தை உருவாக்குவதும் தக்க வைப்பதுமே செய்தி ஊடகத்தின் ஆக சிறந்த வேலை..
தகுதியற்ற தலைவர்களை பெரிய ஆட்களாக்கி விடுதல் - ( கருத்து திணிப்பு முலம்) அறிவில்லாத பண ஆசை பிடித்தவர்களை தலைவர்களாக்கி அவர்களை வைத்து Corporate நிறுவனங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளும்..
இந்தியா எனும் மிக பெரிய சந்தையில் - We are consumers and voters. அவ்வளவு தான்.
Corporate நிறுவனங்களின் விளம்பரத்துக்காகவே அனைத்து கேவலமான நிகழ்ச்சிகளும்.
மக்களை பார்க்க வைத்து Television rating point - TRP உயர்த்தி அதிக பணம் சம்பாதிக்கவே - Breaking news /கவர்ச்சி / காமெடி / கேவலமான நாடகங்கள்..
எதுவும் நன்மைக்காக அல்ல - விளம்பரத்திற்க்கு மட்டும்...
மக்களாகிய நாம
எதை படிக்கக் கூடாது,
எதை பார்க்கக் கூடாது,
எதை பேசக் கூடாது,
எதை சிந்திக் கூடாது,
எதை அறிந்து கொள்ளக் கூடாது,
எதை தெரிந்து கொள்ளக் கூடாது,
என்பதை எல்லாம் முடிவு செய்யும் ஊடகம்...
முன்ஜென்மம் அறியும் எளிய முறை...
ஒருவரை வசதியாக தளர்ந்த ஆடையோடு படுக்க சொல்ல வேண்டும்.
பின் பிண்ணனி இசை ஏதாவது இருந்தால் போட்டுவிட்டு, அவரை இரண்டுமுறை ஆழ்ந்த சுவாசம் எடுக்க சொல்ல வேண்டும்.
பின் அவர் கண்களுக்கு நேர் மேலே செயினில் தொங்கும் மினுங்கும் பொருளை மெதுவாக சுழட்ட வேண்டும்.
அவர் கண்கள் சோர்ந்து போகும் வரை அதையே உற்று பார்க்க சொல்ல வேண்டும்.
இவ்வாறு ஒருசில நிமிடங்கள் தொடர்ந்து சுழட்டி கொண்டே, சில கட்டளைகள் கொடுக்க வேண்டும்.
உங்கள் கண்கள் சோர்ந்து விட்டது. உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வருகிறது.
உங்கள் மொத்த உடலும் தளர்வாக இருக்கிறது. நீங்கள் மிகவும் நல்லவர்.
நீங்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளீர்கள். உங்கள் கண்களை இனி திறக்க இயலாது.
உங்கள் கைகால்களை இனி அசைக்க இயலாது. உங்கள் உடல் மரக்கட்டை போல் அசைவற்று கிடக்கிறது.
இதுபோன்ற கட்டளைகளை மறுபடி மறுபடி சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு கூற கூற சிறிது நேரத்தில் அவர் நீங்கள் கூறியபடியே உடலை அசைக்க முடியாமல் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்று விடுவார்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் வயதை குறைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.
இருபது வயதில் என்ன நடக்கிறது? பதினைந்து வயதில் என்ன நடக்கிறது? பத்து ஐந்து ஒரு வயது என கேட்டுவிட்டு பிறகு அம்மாவின் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என கேட்டு அறிய வேண்டும்.
அதன்பின் அம்மாவின் வயிற்றுக்க்கு வருவதற்கு முன் எங்கு எப்படி இருக்குறீர்கள் என கேட்க வேண்டும்.
இவ்வாறு படிப்படியாக வருடங்களை குறைத்து கொண்டே போக வேண்டும்.
இதுவே முன்சென்மம் அறியும் முறை.
குறிப்பு : எப்படி வயதை குறைத்துக் கொண்டே சென்றோமோ அதே போல் வயதை அதிகரித்துக் கொண்டே வந்துதான் அவரை எழுப்ப வேண்டும். அதாவது சென்ற வழியிலேயே திரும்பி வர வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பாதியிலேயே எழுப்பிவிட கூடாது.
அதேபோல் எந்த வயதிலாவது அவர் கடுமையான வலியை அனுபவித்திருந்தால் அதே வலியில் தற்போதும் துடிப்பார். உடனே அவர் வயதை குறைத்துவிட வேண்டும்.
இதயம் பலவீனமானவர்களை ஹிப்னாடிசம் செய்ய கூடாது. சில சம்பவங்கள் நடந்த தருணத்திற்கு அவர் செல்லும் போது அவர் இதயம் தாங்காது.
எக்காரணம் கொண்டும் அவரிடம் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
இதில் ஏதேனும் தவறு நேர்ந்தாலும் மீண்டும் அதை சரி செய்து விடலாம் கவலை வேண்டாம்...
இந்திய மானங்கெட்ட கடற்படை லட்சனம் இது தான்...
வங்க கடலில் மையம் கொண்ட
நீலம் புயலால், 31OCT2012 அன்று மிகப்பெரும் கடல் சீற்றம் உருவானது...
அதில் MT Prathiba cauvery என்ற சரக்கு கப்பல் ஒன்று கரை தட்டி அபாயகரமான சூழலில் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை ஓரங்களில் பல நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்தது.
உள்ளே கப்பல் பணியாளர்கள் சுமார் 37 பேர் பசியும் பட்டினியுடன் உயிரை காப்பற்ற வழியில்லாமல் போராடிக்கொண்டிருந்தனர்.
இந்திய கடற்படையின் வீரசூரத்தனத்தை அன்று தான் நேரிடையாக பார்க்க நேர்ந்தது.
புயலின் தீவிரத்தால் ,ஒரு கட்டத்தில் உயிரை காப்பாற்றி கொள்ள அத்தனை பணியாளர்களும் கடலில் குதிக்க நேர்ந்தது.
ஆனால் கரை சேரமுடியாதவாறு கொடூரமாக காற்றின் வேகத்தில் கடல் சீற்றம் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை கடலுக்குள் இழுத்துச் செல்கிறது.
தமிழக காவல்துறைக்கு கடலில் நடக்கும் சம்பவங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை எனவே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பல மணி நேர போராட்டங்களுக்கு பிறகு கப்பல் படை அதிகாரிகள் வருகின்றனர், கரையோரமாக நின்று அவர்களுக்குள் மணிக்கணக்கில் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
பொழுது சாயும் நேரமாகிறது. ஹெலிகாப்டர் வந்து வட்டமிடுகிறது... பிறகு கதைக்கு ஆகாமல் திரும்ப சென்று விடுகிறது.
ஆனால் அதற்குள் கடல் சீற்றத்தால் ஒவ்வொருவராக உள்ளே இழுத்து அடித்து செல்லப்படுகிறார்கள்...
எட்டும் தூரத்தில் மனிதர்கள், கடற்படை இராணுவம், இனி எப்படியும் தாங்கள் காப்பாற்றபடுவோம் என்ற நம்பிக்கையில் கடலுக்குள் போராடி கொண்டிருக்கிறார்கள்...
ஆனால் கடற்படை அதிகாரிகளின் காலணி கூட கடல் தண்ணீரில் நனையவில்லை. இப்பொழுதும் அவர்கள் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
கடலுக்குள் தத்தளிக்கும் மனித தலைகள் ஒவ்வொன்றாக மறையத்தொடங்குகின்றது.
ஆனால் இதற்கு மேலும் பொறுக்க முடியாத அந்த குப்பத்து மீனவமக்கள் தங்களது சிறிய விசைப்படகுகளுடன் உயிருக்கு ஆபத்தான சூழலில் தங்களது உயிரை பணயம் வைத்து கடலுக்குள் இறங்குகின்றனர்.
ஒட்டுமொத்த மீனவ குப்பமே உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டனர். கடல் சூறாவளி இவர்களை உள்ளே வரவிடாமல் வெளியே தள்ளுகிறது. பல மணிநேர போராட்டம்.
கயிறுகளையும்,வலைகளையும் கொண்டு எது கையில் இருக்கிறதோ அத்தனையும் உபயோகப்படுத்தி 27 கப்பல் பணியாளர்களின் உயிரை காப்பாற்றினர்.
ஆனால் ஆறு மீனவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மறுநாள் எங்கெங்கோ பிணமாக கரை ஒதுங்கியது.
அன்று கடற்படை இராணுவமும், அரசு இயந்திரங்களும் மக்கள் கூட்டத்தில் அவர்களில் ஒருவராகத்தான் நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது.
மனித உயிர்களை காப்பாற்றும் முனைப்பில் தன்னை மறப்பவர்கள் மீனவ மக்கள்.
அந்த மக்களைத் தான் மெரினா புரட்சியில் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கினார்கள். அந்த மீனவ மக்களின் உயிரை காப்பாற்ற வக்கற்று தான் குமரியில் வெக்கமற்று நிற்கிறது அரசாங்கம்...
பிராணயாமம் பற்றி திருமூலர் கூற்று செயல் முறை...
திருமூலர் காட்டிய பிராணயாமம் முறை மிகவும் எளிதானது..
இயம, நியமங்கள் கடை பிடிக்கும் முறை..
இயமம்-தீயவற்றை செய்யாதிருத்தல்.
நியமம்-நல்லனவற்றை செய்தல்.
ஆசனம்-உடலை உணர்வோடு இருத்துதல்.
இனி ஆசனத்தில் அமர வேண்டும். இவற்றை திருமூலர் பயன் தரக்கூடிய ஆசனங்கள் என்கிறார்.
அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்திராசனம், சோதிராசனம், சிம்மாசனம், கோமுகம், வீராசனம், சுகாசனம் ஆகிய எட்டு ஆசனங்களாகும். இவை உத்தமானது.
பதினாறு மாத்திரை கால அளவு, இடது பக்க நாசி துவாரத்தின் வழியே காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இது 'பூரகம்'எனப்படும்.
64 மாத்திரை கால அளவு காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். இது கும்பகம் எனப்படும்.
இனி உள்ளிருக்கும் காற்றை மெதுவாக 32 மாத்திரை கால அளவு வலது நாசி வழியாக விட வேண்டும். இது ரேசகம் எனப்படும்.
இது போல் வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து உள்ளே அதே கால அளவில் வைத்திருந்து, இடது நாசி துவாரத்தின் வழியாக வெளிவிட வேண்டும்.
இந்த முறையை காலையும் மாலையும் சுமார் பத்து தடவை செய்ய வேண்டும்.
திருமூலர் திருமந்திரத்தில் கூற வில்லை என்றாலும், பிராணயாமம் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி அமர வேண்டும். இது பதஞ்சலி முனிவரின் யோக முறையில் குறிப்பிட்டுள்ள வழி முறைகளாகும்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிபட வுள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும்,உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே
- திருமந்திரம் 575.
பொருள்: பிராணயாமம் செய்தால் உடல் சிவக்கும். தலை முடி கறுக்கும். உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும். (இறப்பை தவிர்க்கலாம்).
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை யுதைக்குக் குறியதுவாமே..
காற்றை பிடிக்கும் கணக்கறிந்தவர் (பிராணயாமம் செய்பவர்) காலனை எட்டி உதைத்து நெடு நாள் வாழலாம்.
இதற்கு இது தான் உபாயம்...
Subscribe to:
Posts (Atom)