இன்று பொன்னார் போட்ட பதிவு இது.
சம்பவம் நடந்து 2 வாரம் ஆகப்போகிறது, மீனவர்கள் உடல்கள் மிதக்க ஆரம்பித்து விட்டன. இப்போது தான் இவர்கள் ஆழ்கடல் வரை தேட கப்பலுக்கு அனுமதி வாங்கியுள்ளார்கள் (அதுவும் மீனவர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு ).
மீட்புபணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துவது, மீட்புபணிகளை ஏனோ தானோ என்று அக்கறையின்றி செய்வது என்று மீனவர்கள் மீது வெளிப்படையாகவே இனப்படுகொலை செய்து வருகிறது மத்திய மாநில அரசுகள்.
இந்த அரசுகளுக்கு ஆதரவாய் பேசுபவர்கள் தங்கள் கைகளை முகர்ந்து பாருங்கள், அவற்றில் நிச்சயமாக மீனவர்களின் இரத்த வாடை அடிக்கும்.
மீட்கப்பட்ட மீனவர்களில் பெரும்பாலனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டவர்கள் மற்றும் புயலினால் வேறு வேறு இடங்களில் கரை ஒதுங்கியவர்கள். இறந்த போன மீனவர்களின் உடல்களை கூட சக மீனவர்கள் தான் மீட்கிறார்கள்.
சிறு நாடுகள் கூட ஒழுங்காக வானிலை அறிவிப்பு செய்கிறது, ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களை புயல் வரும் முன்னரே மீட்கிறது.
ஆனால் இந்தியாவால் ஒழுங்காக வானிலை அறிவிப்பு கூட செய்ய முடியவில்லை. மீனவர்களை புயல் வரும் முன்னரே மீட்க முடியவில்லை.
இவற்றை தான் செய்ய வக்கில்லை என்றால் புயல் வந்து ஒய்ந்த பின் கூட இவர்களால் மீட்புபணிகளை ஒழுங்காக செய்யமுடியவில்லை.
அடத்தூ.. இதெல்லாம் ஒரு நாடு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.