12/12/2017

முன்ஜென்மம் அறியும் எளிய முறை...


ஒருவரை வசதியாக தளர்ந்த ஆடையோடு படுக்க சொல்ல வேண்டும்.

பின் பிண்ணனி இசை ஏதாவது இருந்தால் போட்டுவிட்டு, அவரை இரண்டுமுறை ஆழ்ந்த சுவாசம் எடுக்க சொல்ல வேண்டும்.

பின் அவர் கண்களுக்கு நேர் மேலே செயினில் தொங்கும் மினுங்கும் பொருளை மெதுவாக சுழட்ட வேண்டும்.

அவர் கண்கள் சோர்ந்து போகும் வரை அதையே உற்று பார்க்க சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஒருசில நிமிடங்கள் தொடர்ந்து சுழட்டி கொண்டே, சில கட்டளைகள் கொடுக்க வேண்டும்.

உங்கள் கண்கள் சோர்ந்து விட்டது. உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வருகிறது.

உங்கள் மொத்த உடலும் தளர்வாக இருக்கிறது. நீங்கள் மிகவும் நல்லவர்.

நீங்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளீர்கள். உங்கள் கண்களை இனி திறக்க இயலாது.

உங்கள் கைகால்களை இனி அசைக்க இயலாது. உங்கள் உடல் மரக்கட்டை போல் அசைவற்று கிடக்கிறது.

இதுபோன்ற கட்டளைகளை மறுபடி மறுபடி சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு கூற கூற சிறிது நேரத்தில் அவர் நீங்கள் கூறியபடியே உடலை அசைக்க முடியாமல் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்று விடுவார்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் வயதை குறைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

இருபது வயதில் என்ன நடக்கிறது? பதினைந்து வயதில் என்ன நடக்கிறது? பத்து ஐந்து ஒரு வயது என கேட்டுவிட்டு பிறகு அம்மாவின் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என கேட்டு அறிய வேண்டும்.

அதன்பின் அம்மாவின் வயிற்றுக்க்கு வருவதற்கு முன் எங்கு எப்படி இருக்குறீர்கள் என கேட்க வேண்டும்.

இவ்வாறு படிப்படியாக வருடங்களை குறைத்து கொண்டே போக வேண்டும்.

இதுவே முன்சென்மம் அறியும் முறை.

குறிப்பு : எப்படி வயதை குறைத்துக் கொண்டே சென்றோமோ அதே போல் வயதை அதிகரித்துக் கொண்டே வந்துதான் அவரை எழுப்ப வேண்டும். அதாவது சென்ற வழியிலேயே திரும்பி வர வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பாதியிலேயே எழுப்பிவிட கூடாது.

அதேபோல் எந்த வயதிலாவது அவர் கடுமையான வலியை அனுபவித்திருந்தால் அதே வலியில் தற்போதும் துடிப்பார். உடனே அவர் வயதை குறைத்துவிட வேண்டும்.

இதயம் பலவீனமானவர்களை ஹிப்னாடிசம் செய்ய கூடாது. சில சம்பவங்கள் நடந்த தருணத்திற்கு அவர் செல்லும் போது அவர் இதயம் தாங்காது.

எக்காரணம் கொண்டும் அவரிடம் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

இதில் ஏதேனும் தவறு நேர்ந்தாலும் மீண்டும் அதை சரி செய்து விடலாம் கவலை வேண்டாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.