12/12/2017

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்...


1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு.. தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தி எதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.

28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார் மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது.  அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.

அவர் நடத்தி வந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.

1) இந்தி எதிர்ப்பு
2) தமிழ்நாட்டு உரிமை

இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்...

தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்..

திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்..

பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர் மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.