02/09/2021
வேர்க்கடலையின் பயன்...
வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன..
ஆனால், வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்..
ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்..
ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் சாப்பிடுகிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்..
வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது..
கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.
எனவே புதிதான வேர்க் கடலையையே சாப்பிட வேண்டும்.
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.
வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.
தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக்குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒருகைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும்..
இத்துடன் சீனி சோக்காத காபி அல்லதுடீ அருந்தவும்.
பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது.
இதனால் உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்...
திருட்டு திராவிடம்...
முகமதியரின் காட்டுத்தனத்திற்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு ஓடிவந்த கும்பல் யார் என்று கொஞ்சம் கைத்தூக்குங்கள் ஒறவுகளே?
ஜக்கமா என்ற பெண்ணின் தலைமையில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக தென் திசை வழியாக தமிழகத்தில் உள்நுழைந்த கூட்டம் யாரென்று கொஞ்சம் கையத்தூக்குங்க ஒறவுகளே?
பாதுகாப்புகாக அஞ்சி வந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த அறம் சார்ந்த தமிழினத்தை வஞ்சித்தது யாரென்று கையத்தூக்குங்க ஒறவுகளே?
தில்லுமுல்லு தகிடுதத்தம் பண்ணி தமிழரின் பட்டங்களை தன்வயப்படுத்தி அடைக்கலம் கொடுத்த தமிழ் மண்ணை அபகரித்தும்,
வாழ்வளித்த வள்ளலான தமிழினத்தை துரோகித்து ஒற்றுமையுடன் இருந்தவர்களை சிதறடித்து உண்டுக்கொழுக்கும் கூட்டமே கொஞ்சம் கையத்தூக்கி அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் ஒறவுகளே?
வரலாறு உம்மை மன்னிக்காது...
மறுபிறப்பு...
தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட
திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை பற்றி குறிப்பிடும் போது...
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு என்று.
இறப்பை உறங்குவது போலும் என்றும்.
பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.
அப்படிப் பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும் தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத் தானே
பொருள்.
ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத் தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?
அதை மறுபிறவி என்று சொல்லலாமா?
எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது, இதுவரை பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு போன்றது தான் என்பது என் கருத்து...
தமிழின போராளி வீரபனார்...
தமிழ் நாட்டுக் கொடியானது முதன் முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது..
வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..
தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA).
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT).
ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது, காட்டில் தமிழர் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது...
ஓசி_திராவிட_இடுகாடு...
என்னதான் கோடி கோடியா கொள்ளை அடிச்சாலும்,,,, செத்ததுக்கு அப்புறம் ஓசியில கிடைச்ச தமிழன் நிலம் தான் சொந்தம் போல😁😁😁😁
கடைசி 2பேரு அழிச்ச இயற்கை வளத்தின் கணக்குபடி பார்த்தால் ரொம்ப உக்கிரமாக இருக்க இயற்கை அன்னை காலி பன்னிடுவா...
சுனாமிக்கு_வெயிட்டிங்...
வெந்தயத்தின் மருத்துவக் குணம்...
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.
வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.
வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.
வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.
நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.
மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.
இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.
வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.
வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.
வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...