06/01/2018

இந்தோனேசியா தமிழர்கள்...


இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள்..

1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள்..

அதற்குப் பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்...

2%கேட்பது தவறு நீங்கள் 177% லட்சங்களில் சம்பள உயர்வு பெறுவது மட்டும் நியாயமா நீதிபதி ஜி...


இருவரும் சந்தித்த பொழுது...


எல்லீசு துரை : திருவள்ளுவருக்காகத் தங்கக்காசும், திருக்குறளில் கல்வெட்டும் பதித்த வெள்ளையர்...


கல்வெட்டில் திருக்குறள்...

எல்லிஸ் துரை திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீதும் கொண்டிருந்த பற்றுக்கு எடுத்துக்காட்டாக இரு அரிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.


சென்னை நகரில் 1818-ல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னைக் கலெக்டராக எல்லிஸ் துரை பெரு முயற்சி செய்து நகரில் 27 இடங்களில் குடிநீர் கிணறுகளை தோண்ட ஏற்பாடுகள் செய்தார்.

அக்கிணறுகளில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது.

இக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்து ஒரு கல்லில் எல்லிஸ் துரை 1818-ம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டி வைத்தார்.

(இக்கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது.)

அதில்....

சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
புனகடல் முதலாக புடகலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திரு சென்னப்
பட்டணத் தெல்லீஸனென்பவன் யானே
பண்டார காரிய பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமை திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
"இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு"
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து...

என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.


மேலும் எல்லிஸ் துரை அக்காலத்தில் சென்னப்பட்டணத்து பண்டார காரிய பாரம் சுமந்திருந்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

அக்காலத்தில் நாணய சாலை பண்டாரத்தின் (treasury) மேற்பார்வையில் செயல்பட்டு வந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ள எல்லிஸ் துரையின் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் "எல்லீஸன் என்னும் இயற்பெயருடையோன்"

திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
யருள் குறணூலுளறப்பாலினுக்குத்
தங்கு பல நூலு தாரண கடலைப் பெய்
திங்கி லீசுதனி லிணங்க மொழிபெயர்த்தோன்....'

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அவருக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த மிகுந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றது.

எனவே எல்லிஸ் துரை 1810-19-ம் ஆண்டுகளில் சென்னைக் கலெக்டராக பணியாற்றி வந்த பொது பண்டார காரியத்தையும் செய்து வந்தார் என்றும் அதே சமயத்தின் திருக்குறளை முற்றிலும் ஓதி உணர்ந்து அதன் அருமை பெருமைகளை அறிந்து அதற்கு ஆங்கிலத்தில் ஓர் உரை எழுதினார் என்றும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிய வருகின்றது.

எல்லிஸ் துரை தமது அரசு பணியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருக்குறளை இயற்றிய திருவள்ளுவப் பெருமானின் திருவுருவத்தைக் கும்பினி அரசின் பெரிய தங்க நாணயமான இரட்டை வராகனின் பதிப்பிக்க ஏற்பாடுகள் செய்தார் என்று நம்ப இடமிருக்கிறது.

சென்னையில் உள்ள ஆவணக் காப்பகத்துள் நான் ஆய்வு செய்த பொது, சென்னை நாணய சாலையில் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களின் மாதிரிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டு அவற்றுடன் சென்னை அரசு மூலமாகக் கல்கத்தாவிலிருந்த மத்திய அரசுக்கும் லண்டனில் செயல்பட்ட கும்பினி டைரக்டர்களின் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்ட குறிப்புகள் கிடைத்தன.

ஆயினும் அக்கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியல்களின் நகல்களோ, காசுகளின் வரைபடங்களோ கிடைக்காததால் இவ்வாண்டுகளில் அச்சிட்ட இரட்டை வராகன்களில் இதுவும் ஒன்றா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

என்றாலும் இக்காசுகள் லண்டனிலும் கல்கத்தாவிலும் உள்ள அருங்காட்சியகங்களில் மட்டுமே கிடைப்பதால் அவை மேற்கூறியவாறே அந்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.


அச்சிடப்படும் இந்தத் தங்க நாணயம் புழக்கத்திற்காக ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்பது கடினமே.

ஒருக்கால் இக்காசின் மாதிரிகள் கல்கத்தாவில் இருந்த மத்திய அரசுக்கும், லண்டனில் இருந்த கும்பினி ஆணையத்துக்கும் போய்ச் சேரும் முன்னர், இனிமேல் வராகன்களை அச்சடிப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

அல்லது திருவள்ளுவப் பெருமானின் அருமை பெருமைகளை உணராது, மத்திய அரசும் கும்பினி நிர்வாகமும் இக்காசை வெளியிடும் திட்டத்தை நிராகரித்திருக்கலாம்.

மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் இப்பிரச்னைக்குத் தெளிவான விடை கிடைக்கக் கூடும்.

அக்காலத்திய நாணய சாலை ஆவணங்கள் இப்பொழுது மிகவும் சிதிலமாகவும் இன்னும் சீர்படுத்தப்படாமலும் இருப்பதால் அவற்றை முற்றிலும் ஆய்வு செய்ய இயலவில்லை.

எனினும் கிடைத்துள்ள எல்லாச் சான்றுகளையும் தொகுத்து ஒருங்கே நோக்கினால் இத்தங்க நாணயத்தின் திருக்குறளுக்கு உரை கண்ட எல்லிஸ் துரையின் செல்வாக்கால் திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

சென்னை ஆவணக் காப்பகத்தில் மேலும் தேடினால் இம்முடிவுகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இக்காசில் காணப்படும் திருவுருவத்தையும் சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சுமார் 14-15-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் இக் கற்சிலையை பற்றி தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா.கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்...

இச்சிலையின் உருவம் பீடத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.

தியான நிலையில் வலக்கை சின் முத்திரையுடன் அக்க மாலை ஏந்தியும், இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை காணப்படுகிறது.

இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில் நீண்ட தாடியும் உடலில் ஓடும் பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி செய்கின்றன.

இன்று தமிழக அரசின் மூலம் பிரபலமாகி இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவப் படமும் ஏறத்தாழ இக் கற்சிலையின் அமைப்பை ஒத்துள்ளது எனலாம்.

இக்காசில் கணப்படும் திருவுருவத்திற்கும் மற்ற இரு உருவகங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கண்கூடாகத் தெரிகின்றன.

ஆயினும், ஒரு முக்கிய வேறுபாடும் பளிச்சென்று தெரிகிறது. காசில் உள்ள முனிவரின் திருவுருவத்தில் தலை மழித்தும், முகத்தில் தாடி மீசை இன்றியும் குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.

திருவள்ளுவர் சமணரா.?

இக்காசில் முனிவரின் தலை மீதுள்ள குடையையும், மழித்த தலையையும், முகத்தையும் காணும் போது இவரை உருவகப்படுத்தியவர்கள் இவர் ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.

திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' போன்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்.

வேண்டுகோள்...

வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவத்தைத் தாங்கி நிற்கும் பொற்காசு ஓர் அரிய கலைப் பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும் நான்கு தங்க நாணயங்களில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நமக்கு எட்டாக்கையில் உள்ளன.

நம் நாட்டிலேயே கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற இரு காசுகளில் ஒன்றையாவது நிரந்தரக் கடனாகப் பெற்று அக்காசை திருவள்ளுவப் பெருமான் அவதரித்த சென்னை மாநகரின் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகின்றேன்...

ஆடுகளை வெட்ட வேண்டாம்: மராட்டிய ரஜினிக்கு 'பீட்டா'வின் அவசரக் கடிதம்...


அதிகாரிகளின் வயிற்றில் புளியை கரைக்க வைக்கும் சட்டம் : இது மட்டும் நடந்தால், மக்களுக்கு ரூ.5000 அபராதம் கொடுப்பார்கள்...


உழலை முற்றிலுமாக ஒழிக்கக்கூடிய லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை கொண்டுவர வேண்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்று உரையாற்றினார். அப்போது சேவை பெறும் உரிமை சட்டம் மற்றும் தகவல் அரியும் உரிமை சட்டம் குறித்து அவர் பேசியதாவது:

சேவை பெறும் உரிமை சட்டத்தின் படி, பொதுமக்கள் என்னென்ன சான்றிதழ்கள், அதிகாரிகளிடம் கேட்கிறார்களோ, அதனை குறிப்பிட்ட கால அளவுக்குள் கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால், புகார் அளிக்க முதல் நிலை அதிகாரி இருப்பார். அவரும் சான்றிதழ் தரவில்லை என்றால் அடுத்து இரண்டாம் நிலையாக ஒரு அதிகாரி இருப்பார்.

அவரும் கொடுக்கவில்லை என்றால், அந்த அதிகாரிகள் 500 முதல் 5000 ரூபாய் வரை விண்ணப்பித்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

ஆனால், இப்போது உள்ள நிலை, சில அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் தான் கோப்புகள் போகும். சில நேரம் பணம் கொடுக்காவிட்டால் கோப்புகள் காணாமல் கூட போகும்.

இப்படி மனு போட்டவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் இது. முதலில் மத்திய பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டதாக நினைக்கிறேன். ஆனால், சிறப்பாக செயல்பட்டு வருவது ஹரியானா மாநிலத்தில் என்று கூறுகிறார்கள். அதனை பத்தரிக்கையாளர்கள் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

2005ல் கொண்டு வரப்பட்ட ஆர்.டி.ஐ. இன்று எங்கும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் சுறுக்கிவிட்டார்கள். இங்கு 7+1 என்று உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் 10+1 உள்ளனர். தமிழகத்தில் நேர்மையற்றவர்கள், கட்சியினர்களே ஆணையர்களாக உள்ளனர்.

வழக்கறிஞர் பாலு ஒரு தகவல் கேட்டு மனு தாக்கல் செய்தால், ஒன்று காணாமல் போகும், அல்லது புரியவில்லை என்று புதிதாக மனு தாக்கல் செய்ய கூறுவார்கள். 6 மாதங்கள் காலம் தாழ்த்துவார்கள். மீண்டும் கேட்டால், பல பொய்யான தகவல்களை கொடுப்பார்கள். அதற்கு தண்டனை நம்மால் கொடுக்க முடியாது.

ஒரு நல்ல அரசாங்கம் அமைய வேண்டும் என்றால், லோக் ஆயுக்தா, ரைக்ட் டு சர்வீசஸ் ஆக்ட் மற்றும் ரைக்ட் டு இன்ஃபர்மேசன் ஆகியவை சரியான அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும்.

அதற்காக தேர்தலின் போது நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறியிருந்தோம்.

யாராவது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வார்களா? என்று பழமொழி உள்ளது. அதனால் இப்போது உள்ள ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களை கொண்டு வரமாட்டார்கள்.

அதனால், இந்த சட்டங்களை கொண்டுவர வலியுறுத்தி பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள், 10 நாட்கள் அரசு தொடர்பான செய்தியை வெளியிட மாட்டோம் என்று இருந்தால் கண்டிப்பாக அமையும், என்று கூறினார்...

மராட்டிய ரஜினிக்கு ராஜபக்சே குடும்பமே வரிந்து கட்டி ஆதரவு... இனியும் நம்பி நாசமா போவாதிங்க... சிந்தியுங்கள் தமிழர்களே...


மூலிகைக் குடிநீர்...


மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர்.

வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர் போன்றவை அடங்கும்.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே..

சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

ஆவாரம்பூ குடிநீர்...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்...

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்...

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்...

ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி..

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்...

இலுமினாட்டி மராட்டிய ரஜினி.. ஆன்மீக அரசியல் போர்வையில் ஒழிந்து வரும் தமிழின எதிரிகள்.. உசார்...


என்னங்க சார் உங்க சட்டம்..


நாளை நாளை என்று இழித்தடித்து.. பணம் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமாக செயல்படும் நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு..

மக்களை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்கும்.. போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்வு இல்லை...

நீதித்துறை எனும் நிதித்துறையே...


அப்படியே சம்பள உயர்வு கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதும் நீதிபதிகளையும் வேறு பணிக்கு செல்ல உத்தரவு ஈடுவீர்களா...

அல்லது 90,000 ரூவா சம்பளத்தை 2.05 லட்சமாக உயர்த்தியுள்ளதை வேண்டாம் என்று சொல்வீர்களா..

அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 55,000 சம்பளத்தை 1.20 லட்சமாக ஏற்றியது தடை செய்வீர்களா...

என்னங்க சார் உங்க சட்டம்...

பஸ் ஸ்ட்ரைக் கண்டு கொள்ளாத அரசு மத்தியில்.. களத்தில் இறங்கிய இளைஞர்கள்...


பிரபஞ்ச சக்தி...


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்..

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்..

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்..

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்..

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்..

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்..

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

கமலை இதுவரை விமர்சித்த பாஜக திடீர் என ஆதரவு கொடுப்பது ஏன் எங்களை நேரடியாக எதிர் கொள்ள முடியாததால் கமலோடு பாஜக கை கோர்கின்றது - டிடிவி தினகரன்...


பல அறிவாளிகள் அத்தியாவசிய தேவையான பொதுமக்கள் போக்குவரத்திற்கு தீர்வாக சொல்வது அதை தனியார் வசும் முழுதாக ஒப்படையுங்கள் என்பதே...


அரசு பேருந்துகள் ஒரு நாள் ஓடாத நிலையில் 25 ரூ கட்டணத்தை 75 ரூ யாக உயர்த்திய தனியார் பேருந்து உரிமையாளர்கள் இருக்கும் வரை எளியவர்களின் தேவையான பேருந்து போக்குவரத்தில் அரசாங்கத்தின் கை தேவை...

உளவியல் உண்மைகள்...


எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்க கோடி கோடியாய் செலவிடும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சேர வேண்டிய 7000 கோடியை கொடுக்காதது ஏன் - மே17 இயக்கம் திருமுருகன் காந்தி...


போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது அமைப்பு தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டள்ளது...

பாஜக வின் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் ஊத்திகிச்சாமே.. நெசமாலுமா..?


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


உ.பி.யில் நடைபெற்ற விழா ஒன்றில், மீரட்டை சேர்ந்த 15 வயது முஸ்லிம் சிறுமியான ஆலியா கான் ஸ்ரீ கிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக இரண்டாவது பரிசை வென்றுள்ளார்...


இதனிடையே, ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்ததால் இஸ்லாமிய மத கோட்பாட்டை அச்சிறுமி மீறிவிட்டார் என்று, தியோபந்த் தருல் உளூம் அமைப்பின் உலமா பத்வா அளித்துள்ளார்.

தான் ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்ததால் இஸ்லாமிய சட்டத்தை மீறியதாக அர்த்தம் இல்லை. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று அச்சிறுமி தெரிவித்துள்ளார்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


ஒருத்தன் திடீர்னு மைக்க நீட்டி வர தேர்தல்ல தாமரை நோட்டாவ ஜெயிச்சிருமான்னு  கேட்டான்.. 

எனக்கு ரெண்டு நிமிஷம் தலையே சுத்திருச்சு...

பற்களில் கரை படிந்துள்ளதா.. இனி கவலை எதற்கு....?


என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்...

நாட்டு மருத்துவம்...


தமிழ் நாட்டில் திராவிடர்கள் சாதனை...


தமிழ் நாட்டில் முன்னர் மருத்துவமனை கால்லுரிகள் அரசு நடத்திக்கொண்டு இருந்தது.. சாராய கடைகள் தனியார் நடத்தி கொண்டு இருந்தர்கள்..

திராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததும்... மருத்துவமனை கால்லுரிகள் தனியார் நடத்துகின்றார்கள்.. சாராய கடை அரசு நடத்துகின்றது..

சாராய கடையை நடத்தினவர்கள் இன்று கால்லுரி மருத்துவமனை
நடத்துகின்றார்கள்..

திராவிடர்கள் ஏன் இந்த திட்டம் கொண்டு வந்தார்கள் தமிழா சிந்தித்து பார்..

எந்த திட்டம் அரசு நடத்தினால்.. தமிழர்களை குடிக்கு அடிமைப்படுத்தி தமிழன் இன உணர்ப்பு மொழி உணர்வு சிதைக்க முடியும்..

தமிழா திராவிடர்கள் தமிழனை திட்டம் போட்டு சிதைத்து கொண்டு இருகின்றார்கள்..

விழித்தெழு தமிழினமே...

முகநூல் இரகசியம்...


நாம் இப்பொழுது செய்வது என்னவென்றால்.. அவன் விரலையே  வைத்து அவன் கண்ணை குத்துகிறோம்...

கச்சதீவை தாரை வார்த்து, நம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்தது திமுக..


இப்படி பட்ட திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வரத்தான் வேண்டுமா?

இவரையும் இவர் கட்சியையும் விரட்டியடிக்க வேண்டியது நமது கடமையல்லவா உறவுகளே?