06/07/2021

சடையவர்மன் சுந்தரபாண்டியன்...

 


சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல் கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.

அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத் தொடங்கியது..

இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு பேரெழுச்சி பெற்றது.

இவர்களில் முதன்மையானவன் "சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".

வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை) தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.

இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.

தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.

நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...

சொல்லிக் கொடு நினைவுகளை அழிக்க...

 




தாயின் பிரசவ வலிகூட பத்து
மாதத்தில் தீர்ந்துவிடும்...

உன் பிரிவின்
வலிகள் மட்டும்...

இன்னும் எத்தனை ஆண்டுகளில்
தீரும் தெரியவில்லை...

அழித்து பார்த்தேன் உன்னையும்
உன் நினைவுகளையும்...

தண்ணீராலும்
அழித்து பார்த்தேன்...

கண்ணீராலும்
அழித்து பார்த்தேன்...

கண்களில் இருக்கும்
உன் உருவமும்...

இதயத்தில் இருக்கும்
உன் நினைவுகளையும்...

முடிந்தால் எனக்கும்
சொல்லிக்கொடு...

என் நினைவுகளை
நீ அழித்ததுபோல...

எதனை கொண்டு
அழித்தாய் என்று...

நானும் முயற்சி செய்து
பார்க்கிறேன் உன்னை மறக்க...

திருட்டு திமுக பித்தலாட்டம்...



௭ன்ன சட்டசிக்கல்.?

தேர்தலுக்காக தான் நாங்கள் பொய் வாக்குறுதி கொடுத்தோம்னு நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தானே..

திருட்டு_திமுக...

உச்சநீதிமன்றமே தெளிவாக சொல்லிவிட்டது 7பேர் விடுதலையில் மாநில ௮ரசுக்கும், ஆளுநருக்கும் முழு ௮திகாரம் இருக்கிறது ௭ன்று...

பிராடு பாஜக பித்தலாட்டங்கள்...

 


நம்ப முடியாத உண்மைகள் - mosquito...

 


தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலில் பலர் பலியாகி கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

திராவிடநாடு மோசடிக்கு வாய்தா கேட்ட அறிஞர் அண்ணா...

 


தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று மாற்றப்பட்டது.

அப்போது தோன்றிய 'திராவிடநாடு' கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது. அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் அது உண்மையல்ல. 'திராவிடநாடு' கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன.

அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு தனது கட்சிக்குள் 'காலம் கனியும் போது கைவிடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு...

திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.

திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, "என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...! என்று சொன்னார். உடனே, சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு அண்ணா "அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு"ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்" என்றார்.

"மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. "ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட 'ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்' என்று புத்தகத்தை எழுதிவிட்டு, 'என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே' என்றுதான் சொன்னான் அண்ணா!" என்றார்.

சம்பத் சொன்னார். "இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்" என்றார் சம்பத்.

அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 'கைவிட முடியாது' என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்" என்றார்.

எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?" என்று அதட்டி அனுப்பினார்.

மேற்கண்ட இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.

ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; 'திராவிடம்' என்ற சொல்லே மோசடி தான். இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்....

அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

 


உதவாக்கரை பாஜக மோடி அரசுக்கு 33 ரூ பெட்ரோல் வரி கட்ட வேண்டி இருக்கு 😡

 


உரோம விருட்சம்...

 


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.

இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும்.

இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகம். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

என்னை புதைத்து விட்டு செல்லடி...

 




நம் சந்திப்பையும் 
நீ என்னுடன் பேசுவதையும்
நிறுத்திவிட்டால்...

நான் உன்னை
மறந்து விடுவேன் 
என்று நினைக்கிறாய்..

பேசினால் நினைப்பதற்கும்
பேசாத போது மறப்பதற்கும்...

காமம் கொண்ட காதல்
இல்லையடி என் காதல்...

என் உள்ளம்
கொள்ளை கொண்ட காதல்...

உன் நினைவுகளை 
எனக்கு கொடுத்திவிட்டாய்...

என் நினைவுகளை
நீ புதைத்துவிட்டு செல்...

உன் புதிய
வாழ்விற்க்குள்...

நீ என்னுடன் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்...

என்றும் உன் நலம்
விரும்பும் உள்ளமடி எனக்கு....

மனிதனின் தேடல்கள்...

 




பாலைத் தேடும் வரை
பாசம் இருந்தது ...

அறிவைத் தேடும் வரை
ஆர்வம் இருந்தது...

காதலைத் தேடும் வரை
காமம் இருந்தது ...

வேலை தேடும் வரை
கர்வம் இருந்தது ...

பணம் தேடும் வரை
ஓட்டம் இருந்தது .

நோயது வந்தது...

முதன் முதலாய் ...
உயிரைத் தேடினான்...

திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டம்😡

 


இதனால் மக்களுக்கு என்ன பயன் என்று சொல்ல முடியுமா.?

எவன் அப்பன் வீட்டு காசு?  625 கோடி போக இதற்கான மாத மின்சார செலவு,, பராமரிக்க மாத நீர் செலவு,, ஆட்களின் உழைப்பு ,,, இதெல்லாம் செய்தும்,,, மக்களுக்கு பயன் உண்டா என்றால் துளியும் இல்லை.. 

மாறாக பெரியார்_பேரனும்_பேத்தியும் குஜாலா இருக்க,,, இவனுங்க திருடுவதற்கான திட்டமே..

100ஏக்கர் + 1000 மரம், புதர்,செடி லைட்,கம்பம் எல்லாம் 100கோடி கூட ஆகாது..  

மின்சார பற்றக்குறை உள்ள மாநிலத்தில் இப்போதைக்கு தேவையே இல்லாத ஆணி_பூங்கா..

2500 கோடியில்  ஒரு தொகுதிக்கு 10 ஏரி,, ஏரிக்கு ஒரு கோடி வீதம் செலவு செய்து அதன் வழித்தடங்களை சுத்தம் செய்தால், 

நிலத்தடி நீர் மட்டம் உயரும்,, பொதுமக்களுக்கான நீர் தேவையையும் பூர்த்தி செய்யலாம்,,, விவசாயம் செழிக்கும்,, ஆடு, மாடு, பறவைகளுக்கான நீர் பற்றாக்குறையை போக்கலாம்...

சென்னையில் தான் செய்யனுமா?

சென்னையில் உள்ள ஏரி குளங்களை முழுதாக தூர் வாரி,, சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன் பாட்டிற்கு விடலாமே?

இதெல்லாம் சென்னையில் உள்ள வெண்ணையன்களுக்கு எங்கே புரிய போகுது.. நாசமா_போங்க...

பிராடு பாஜக வின்.. உறுப்பினர் சேர்க்கை பிராடுத்தனங்கள்...

 


எப்படி இருந்த கட்சி 😂

 


என் கண்ணீருக்கு சொந்தமானவளே...

 



நான் அழுத போது என் கண்ணீர்
துடைத்து ஆறுதல் சொன்னாய்...

என் கரம் கோர்த்து
உன் காதலை சொன்னாய்...

உன் மடிசாய்ந்தேன்
தாலாட்டு பாடினாய்...

காலமெல்லாம் என் விழிகளை
கலங்க விடமாட்டேன் என்றாய்...

இன்று என் கண்களை
குளமாக்கி விட்டாய்...

அன்று என் கண்ணீரை துடைத்து
ஆறுதல் சொன்னவள் நீதான்...

இன்று
காலமெல்லாம் என்னை...

கண்ணீர் சிந்த
வைத்தவளும் நீதான்...

இன்றுவரை
என் கன்னங்களை...

உப்பு நீர்
தழுவித்தான் செல்கிறது...
உன்னை நினைத்து.....

அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

 


பாஜக எச். ராஜா சர்மா கலாட்டா...