நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.
நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.
100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.
மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.
நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.
நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.
ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.
இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.
பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.
ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.
இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.
கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.
நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
ரத்தக்கொதிப்பா?
நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...