26/02/2018

அப்பாவி சிரியா மக்களை கொள்ளாதே.. DONT KILL INNOCENT SYRIANS...


சிரியா மக்களை கொள்ளாதே..
STOP KILLING SYRIANS.m

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான்  சிரியாவில்  நடக்கும் போருக்கு காரணம்..
USA AND ISRARL IS THE MAIN REASON FOR SYRIA WAR..

போரை நிறுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம்  கொடுக்க வேண்டும்.
FORCE USA AND ISRAEL TO STOP WAR..

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் வேலை செய்யும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள், நீங்கள் அனைவரும் தயவு செய்து உங்கள்  வேலையை இராஜினாமா செய்துவிட்டு உங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும்.
Request to All Foreigners Whoever working in USA And ISRAEL please resign and go back to your country. Don't work for a country like USA And Israel..

அமெரிக்காகவும்.. இஸ்ரேலும் இலுமினாட்டி நாடுகள்.. தன் கார்பரேட் வியாபாரத்திற்காக இப்படுகொலை  செய்கிறது..

USA & ISRAEL IS ILLUMINATI COUNTRY..


சிரியாவில் கொள்ளப்படும் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளை காக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள் இது.

This is my Request to all the people's those who want to support SYRIAN People's...

இவர்கள் எல்லாம் எங்க போனார்கள்.?




விழுப்புரம் வேலாம்புதூர் காலனி கிராமத்தில் கொடூர கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி பட்டியல் இனத்தவரை சேர்ந்தவர் என்பதால் தங்கள் உடலில் உள்ள அத்தனை தூவரங்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்...

இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளும் வழக்கம் என்னிடம் இல்லை.. கன்னடன் கமல்...


நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிலும் ஊர்வலத்திலும் கலந்து கொள்ள நடிகர் கமலஹாசன் மும்பை விரைகிறார்...

மாதவிடாய் பற்றி கவிதை எழுதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்த கேரள மாணவிக்கு மிரட்டல்...


கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவாமி ராமச்சந்திரன். சட்டக் கல்லூரி மாணவியான இவர், 'ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

நவாமி இடதுசாரிகளுக்கு ஆதரவாக பல கருத்துகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருபவர். அண்மையில் பெண்களின் மாதவிடாய் பிரச்னையைக் குறித்து எழுதப்பட்ட ஒரு கவிதையை தன் ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்த போது பலத்த கண்டனங்களும் வசைகளும் அவருக்கு எதிராக எழுந்தன.

இது குறித்து நவாமி ராமச்சந்திரன் கூறுகையில், 'மாதவிடாய் பற்றி சமூக வலைதளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம்பெண் ஒருவரை ஆதரித்து நான் இந்தக் கவிதையை எழுதினேன். என்னை எதிர்ப்பவர்கள் ஃபேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிரட்டி வருகின்றனர்.

என்னை மட்டுமல்லாமல், பள்ளி செல்லும் எனது தங்கை  லட்சுமியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டித் தாக்கினர். இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று நவாமி கூறினார்.

தற்போது சிறுமி லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை மிரட்டியும் தனது சகோதரியைத் தாக்கியவர்களை கண்டுபிடிக்க போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நவாமி...

ஆங்கிலத்தில் எந்த மாதிரியாக திட்டினாலும், தமிழில் திட்டும் போதுதான் முழுமையான கோபம் வெளிப்படுகிறது..


ஏனெனில் தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ் ஒருவனுக்கு ரெளத்திரத்தையும் பழக்க வைக்கும்...

நடிகைக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டாம் என்று கூறவில்லை.. மக்களுக்கும் அதுவும் திட்டமிட்ட கொலைகளுக்கும் வாய் திறங்கனு தான் சொல்றோம்...


யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்...


வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்...

யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்..

இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..

(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

பொதுவான பெண் யானையின் பெயர்கள்...

பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி.

நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்...

(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்

யானையின் மற்ற காரண பெயர்கள்...

(1) உம்பல் - உயர்ந்தது
(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா - பெரிய விலங்கு
(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
(6) ஓங்கல் - மலை போன்றது
(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா - திரண்டது
(10) கள்வன் - கரியது
(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
(13) வழுவை - உருண்டு திரண்டது
(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்

யானையின் ஏனைய பெயர்கள்...

(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்...

அதிமுகவிலிருந்து விலகிய புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் சந்திப்பு...


குழந்தைகள்...


அவர்கள் உங்களால் வந்தவர்களே ஆனால் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல..

இங்கு அனைவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, அதை சுதந்திரமாக, யாருக்கும் அடிமையாக இல்லாமல் வாழ்வோம்..

தாய்-தந்தை என்ற அழகான பிணைப்பு என்பது அடுத்த தலைமுறையை இங்கு விதைத்து செல்வதற்காக மட்டுமே தவிர..

உங்களின் நிறைவேறாத ஆசையை குழந்தைகளின் மீது திணப்பதற்கு அல்ல...

உன்னுள் நுழைவதே தியானம்...


எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்..

நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது..

உன்னால் ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..

அற்புதம் என்பது பெருங் கடல்..

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே..

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..

யோசிக்க ஆசை வரும்..

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...

பள்ளிக்கூடம் அடிமைகளின் உருவாக்கத்திற்கான பயிற்சி கழகமா ?


திமுக வின் எஸ்றா சற்குணத்தின் பினாமி தான் செயின்ட் ஜோசப் கொலைகார நிறுவனத்தை நடத்திவரும் பாதிரியர்...


திமுகவின் மௌனத்திற்கு காரணம இது தான்..

அந்த இயக்கத்தில் உள்ள பெரும்பாலான ஆட்கள் கொலைகாரனாகவும், கொள்ளைக்காரனாகளம் தான் இருக்கானுங்க...

இலங்கை போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்...


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீழத்தூவல், சாம்பக்குளம், பொழிகால், கேளல், மற்றும் K.R.பட்டணம். ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியான, கழுதைப்பாறை ரோடு (நெடியமாணிக்கம் to நத்தம் ரோடு) என்று அழைக்கப்படும் இந்த ரோட்டின் இரு பகுதியிலும் ஆற்று மணல் மற்றும் வண்டல் மண் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களை அழித்து மிகப்பெரிய மணல் குவாரிகள் அமைக்க ஒரு தனியார் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது...


இதற்காக ரோட்டைச் சுற்றி பல இடங்களை கையகப்படுத்தி உள்ளனர்கள். இங்கு மணல் குவாரிகள் அமைப்பதற்கான அரசு உரிமைகளை பெறும் பணிகளிலும் மும்முரமாக  உள்ளனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இங்கு மணல் குவாரிகள் அமைக்கப்படுவதாக தகவல் உள்ளன.

இப்படி இங்கு மணல் குவாரிகள் அமைத்தால்,    தற்போது உள்ள நிலத்தடி நீர் மட்டம் 500 அடியில் இருந்து 1000 மற்றும் 1500 அடிக்கும் கீழே சென்றுவிடும். கழுத்தைபாறை ரோட்டைச் சுற்றி உள்ள கிராமங்களான, கீழத்தூவல், சாம்பக்குளம், பொழிகால், கேளல், மற்றும் K.R.பட்டணம் ஆகிய கிராமங்கள் நிலத்தடி நீரை வைத்து  விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மணல் குவாரி நிலத்தடி நீரை மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து,  இப்பகுதியின் சுற்றுச்சூழலையும் கெடுத்துவிடும். 

மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க அமையவிருக்கும் இந்த மணல் குவாரியினை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் இதில் தலையிட்டு, இந்த மணல் குவாரியினை தடுத்து நிறுத்தி, சுற்றி உள்ள கிராமங்கள்   இயற்கையையும், அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை  அமைத்திட ஏற்படுத்தித் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.
 கீழத்தூவல், சாம்பக்குளம், பொழிகால், கேளல் மற்றும் K.R.பட்டணம் கிராம பொதுமக்கள்...

கன்னடன் கமல் கலாட்டா...


கல்லூரி நிதி ரூ.92 லட்சம் முறைகேடு புகார்: நெல்லை சிஎஸ்ஐ பேராயர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு...


கல்லூரி நிதியில் ரூ.91.90 லட்சம் முறைகேடு செய்ததாக, திருநெல்வேலி சிஎஸ்ஐ பேராயர் உட்பட 5 பேர் மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே நல்லூர் சிஎஸ்ஐ அன்னபாக்கியம் கல்லூரி, திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்டது. இக்கல்லூரியில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக, 2017-ல் இக்கல்லூரி தாளாளர் எஸ்பிடி.நெல்சன் போலீஸில் புகார் செய்திருந்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆலங்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுயநிதி கல்லூரியான இங்கு மாணவ, மாணவியர் செலுத்தும் கல்விக் கட்டணத்தைக் கொண்டே ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. புதிய வங்கி கணக்குகளை தொடங்கி, கல்லூரி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நிதி ரூ.91,90,544-ஐ கைப்பற்றி கல்லூரிக்கு பெற்றுத்தர வேண்டும். கையாடல் செய்தவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்து வழக்கு பதிவு செய்யுமாறு ஆலங்குளம் போலீஸாருக்கு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இக்கல்லூரி முதல்வராக இருந்த பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோயல் ஜெயமணி, திருநெல்வேலி மண்டல சிஎஸ்ஐ பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ், பாளையங்கோட்டையை சேர்ந்த வி.காந்தையா நல்லபாண்டி, பாளையங்கோட்டை ஜெயராஜ் நாடார் நிறுவன மேலாளர் ஆர்.ஜெயகுமார் ஜெயராஜ், சென்னை ராயப்பேட்டை சர்ச் ஆப் சவுத் இந்தியா மாடரேட்டர் தாமஸ் கே.ஓமன் ஆகிய 5 பேர் மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்...

தூத்துக்குடியை காப்போம் தமிழா...


சாகர்மாலா திட்டத்தின் பேரபாயம் குறித்து சீமான் நக்கீரனுக்கு அளித்த பேட்டி...


7000 கிமீ கடல்வழிச்சாலை, 14500 கிமீ உள்நாட்டு நீர்வழிச்சாலை, இதை ஒன்றிணைப்பதுதான் இந்த சாகர் மாலா திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மை நோக்கம் என்னவென்றால் ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி? இங்குள்ள  நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற  வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது. வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது.

இலங்கையில் திரிகோணமலையை சீனா 900 ஆண்டுகளுக்கு 9,500 கோடி லீசுக்கு எடுத்துவிட்டது. அதேபோல் தனுஷ்கோடியை  மக்கள்  வாழ வாய்ப்பற்ற இடம் என அறிவித்து ராணுவ முகாம் அமைக்கிறது மத்திய அரசு. அணு உலை அமைப்பதல்ல அணு பூங்கா அமைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். அதேபோல் கடலூர் நாகபட்டினம் சுற்றியுள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டங்களாக அறிவித்துள்ள அரசு அதைச்சுற்றியும்  இராணுவமுகாம் அமைக்கும்.  எல்லாம் இராணுவ மயமான பிறகு மக்களால் கிளர்ச்சியே செய்யமுடியாத, உரிமையை கேட்டுபெறமுடியாத நிலையை உருவாக்குவதே நோக்கம். இதுதான் நடக்கும் என கணிக்கமுடிகின்ற இந்த சூழ்நிலையில இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கொண்டுபோய் எச்சரிக்கை உணர்வை உருவாக்கவேண்டும். அடிமை இந்தியாவில் போராட ஒரு காந்தி, ஒரு பகத்சிங், ஒரு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக முடிந்தது. ஆனால் விடுதலை இந்தியாவில் அது கடினம். கருவிலேயே அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட போக்கு நடந்துவருகிறது.

'சாகர்மாலா திட்டத்தினால்  துறைமுகம் சார்ந்த மீன் பதப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மற்றும் துறைமுகம் சாராத மாற்று வேலைவாய்ப்பு பயிற்சிகள், விவசாயம் செய்வது, கைவிணைப் பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகள். மீனை ஏற்றுவது இறக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்' என்று மத்திய அரசு கூறுகிறது. அப்போ இவர்களுடைய நோக்கம்  ஆழ்கடலுக்குள் மீனவன் மீன் பிடிக்க செல்லக்கூடாது, கூட்டிணைவு (corporate) நிறுவனங்கள் கையில் கொடுத்திட வேண்டும். விளைநிலத்தை விட்டு வேளாண்குடிமக்களை வெளியேற்ற வேண்டும், கடல் பரப்பை விட்டு மீனவனை வெளியேற்றவேண்டும், பொறுப்புகளை  எல்லாம் கார்ப்ரேட் எனும் கூட்டிணைவு நிறுவனங்களுக்கு  தாரைவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த சாகர் மாலா திட்டம் என்பதே மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும்முயற்சி எனவேதான் இதை எதிர்க்கிறோம்...

நீங்கள் நினைப்பது போல வேலை வாய்ப்பில்லை கொத்தடிமைத்தனமே வேலைவாய்ப்பு...


தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மீகம்...


இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும், பெரிய அளவில் ஆன்மிகம் தான், தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு ஆன்மீகமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆன்மிகத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:

பதினென் சித்தர்கள்...

அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி, திருமூலர், நந்தி, கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி, இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர்.

மன்னர்கள்...

சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.

புலவர்கள்...

நக்கீரர், அவ்வையார், காரைக்கால் அம்மையார், பாணபத்திரர், சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க.,

ஆன்மிக வாதிகள்...

பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார், கிருபானந்த வாரியார். இன்னும் நிறைய ஆன்மிக பெரியோர்கள் உள்ளனர்...

இசுரேல் ஆதரவாளர்களுக்கு பதில்...


பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை ஆய்வுசெய்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்...


பாலேஸ்வரத்திலுள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை விசாரிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் கிராம மலையடிவாரப் பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் செயின்ட் ஜோசப் கருணை இல்லமானது கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதனை கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். தற்போது இந்தக் கருணை இல்லத்தில் ஆண்கள், பெண்கள் என 369 பேர் தங்கியுள்ளனர். அதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, வடமாநிலத்தை சேர்ந்த முதியவர்களும் உள்ளடக்கம்.

இக்கருணை இல்லத்திற்குச் சொந்தமான காய்கறி மூட்டைகள் ஏற்றப்பட்ட போலி அவசர ஊர்தி வாகனத்தில் ஒரு சடலத்துடன் இரு முதியவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட மூதாட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பிறகு இக்கருணை இல்லம் குறித்து தற்போது வெளிவந்திருக்கிற தகவல்கள் யாவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அக்கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வில்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பலர் விருப்பத்திற்கு மாறாக அவ்வில்லத்தில் அடைக்கப்பட்டு வைத்திருப்பதும், அங்கு தங்கியுள்ளவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படாததும் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. சாலையோரம் படுத்துறங்கும் ஆதரவற்ற முதியவர்களையும், பிச்சைக்காரர்களையும் கட்டாயப்படுத்தி கருணை இல்லத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பட்டினிப்போட்டு மன நிலை பாதிக்கும் நிலைக்குத் தள்ளிக்கருணை கொலை செய்வதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியினை அளிப்பதாக உள்ளது.

அங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடி விடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் ஐயங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலைசெய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறையில் வைத்து எடுக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இங்கு 1,500க்கும் மேற்பட்ட சடலங்கள் அவ்வறையில் வைக்கப்பட்டதும், அதுகுறித்தான முறையான ஆவணங்கள் எதுவுமில்லாததும் இச்சந்தேகத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்து உள்ளன.

எனவே, முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும் எனவும், அங்கு நடைபெற்ற மரணங்கள் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்தப்பட்ட வேண்டும் எனவும், மற்ற நாடுகளில் அரசுகள் மூத்தோர் கவனிப்பு இல்லங்கள் நடத்துவதைப்போல தமிழக அரசே மூத்தோர்களை கவனிக்க இல்லங்களை நிறுவவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

ஆய கலைகள் 64...


1. எழுத்திலக்கணம்
2. எழுத்தாற்றல்
3. கணிதவியல்
4. மறை நூல்
5. தொன்மம்
6. இலக்கணவியல்
7. நய நூல்
8. கணியக் கலை
9. அறத்துப் பால்
10. ஓகக் கலை
11. மந்திரக் கலை
12. நிமித்தகக் கலை
13. கம்மியக் கலை
14. மருத்துவக் கலை
15. உறுப்பமைவு
16. மறவனப்பு
17. வனப்பு
18. அணி இயல்
19. இனிதுமொழிதல்
20. நாடகக் கலை
21. ஆடற் கலை
22. ஒலிநுட்ப அறிவு
23. யாழ் இயல்
24. குழலிசை
25. மத்தள நூல்
26. தாள இயல்
27. வில்லாற்றல்
28. பொன் நோட்டம்
29. தேர்ப் பயிற்சி
30. யானையேற்றம்
31. குதிரையேற்றம்
32. மணி நோட்டம்
33. மண்ணியல்
34. போர்ப் பயிற்சி
35. கைகலப்பு
36. கவர்ச்சியியல்
37. ஓட்டுகை
38. நட்பு பிரிக்கை
39. மயக்குக் கலை
40. புணருங் கலை
41. வசியக் கலை
42. இதளியக் கலை
43. இன்னிசைப் பயிற்சி
44. பிறவுயிர்மொழி
45. மகிழுறுத்தம்
46. நாடிப் பயிற்சி
47. கலுழம்
48. இழப்பறிகை
49. மறைத்ததையறிதல்
50. வான்புகுதல்
51. வான் செல்கை
52. கூடுவிட்டு கூடுபாய்தல்
53. தன்னுறு கரத்தல்
54. மாயம்
55. பெருமாயம்
56. நீர்க் கட்டு
57. அழற் கட்டு
58. வளிக் கட்டு
59. கண் கட்டு
60. நாவுக் கட்டு
61. விந்துக் கட்டு
62. புதையற் கட்டு
63. வாட் கட்டு
64. சூனியம்...

நீங்கள் அவர்களை பெற்றதால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமென்பது உங்களின் கருத்து என்றால், இந்த சமூகத்தில் உங்களை தாய்-தந்தை என்ற அங்கீகாரம் கொடுத்தவர்கள் அந்த குழந்தைகள் மட்டுமே..


ஆனால் அந்த குழந்தைகள உங்களிடம் எப்போதும் அவர்கள் சொல்படி இருக்க வேண்டுமென்று எப்போதும் கூறியதில்லை..

இங்கு எல்லாருக்கும் ஒரு அழகான வாழ்க்கை உண்டு.. அது நல்லதோ..? கெட்டதோ..? காலம் முடிவு செய்யும்..

நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்...

தினமணி (25/2/18) செய்தி...


ஓஎன்ஜிசி  குழாய் உடைப்பினால் பாதிப்படைந்த எருக்காட்டூர் விவசாய பெருநிலம்..

அதலாம் ஒன்னும் பாதிப்பில்லை என அதிகாரிகள் ஏய்ப்பு...

ஆணாக 56 ஆண்டுகள் வாழ்ந்த பெண்...


மராண்டா ஸ்டூஆர்ட் ( Dr.ஜேம்ஸ் பாரி ) ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்.

பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை.

ஆங்கிலேயரின்ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார்..

ஆணாகவே வாழ்ந்தாள்.

அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம் செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டு பிடித்தார்..

எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்...

இங்கு திட்டமிட்டு தான் காய்கள் நகர்த்தப்படுகிறது...


வல்லாரை கீரை...


தமிழ் தந்த சித்தர்கள் வல்லாரை / சரசுவதிக் கீரை / Centella asiatica மனநோய்க்கு மா மருந்து...

செயலில் வல்லாரை..
அறிவில் வல்லாரை..
ஆற்றலில் வல்லாரை..

வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே என்பது பழமொழி..

வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மை கொண்ட மூலிகையாம் - நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம் தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக் கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

மனநோய்க்கு மா மருந்து! இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது ..

மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும்..

வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து ' சி 'மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்...

இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.

உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.

தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.

மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.

இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

சளி குறைய உதவுகிறது.

காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது..

இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம் , சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்...

மறந்தும் மனிதனுக்கு உதவிவிடாதே...


பெரியார் எனும் பலிஜா கன்னட ராமசாமி நாயக்கர் விட்டுச் சென்ற பணியை சில அடிமைகள் தொடர்கிறது...


கேரளாவில் மலையாளி மேனன்னாகவும், நாயராகவும், நம்பூதிரியாகவும் தன் சாதி அடையாளத்தை இழக்காமல் மலையாளி என்ற இன உணர்வோடு வாழ்கிறான்….

ஆனால் இங்கே தமிழனுக்கு எதிரி தமிழரின் அடையாளமாகிய சாதி தான் என பொய் பிரசாரம் செய்து அதை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு தமிழர்களிடையே நிரந்தர பகைமை உணர்வை வளர்த்து திராவிடம் என்ற இல்லாத ஒன்றை நிலைநாட்டி தெலுங்கரையும், கன்னடரையும், மலையாளிகளையும் இங்கே ஆளவிட்டது தான் வெங்காயத்தின் சாதனை..

அந்த வெங்காயம் விட்டுச் சென்ற பணியை தொடர்கிறார்கள் வெங்காயத்தின் வழிகாட்டிகள்...

அவர்கள் பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் சிலர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...


திராவிடன் என்பவர்கள் யார்?


நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது. ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது. அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது.

அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்?

அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது.

திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்?

அந்த திராவிடத்தின் சூத்திரதாரி கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார்.

அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?

பாஜக பினாமிகள் கலாட்டா...


பாஜக மோடியும் தமிழின அழிப்பு திட்டமும்...


இது 1971 ஆம் ஆண்டில் துருக்மெனிசுதானில் ரஷ்ய பொறியாளர்களால் மீத்தேன் வேண்டி தோண்டப்பட்டது...

விஷவாயு பரவும் அபாயத்தால் இது செயற்கையாக எரிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அணைந்து விடும் என்று நம்பினார்கள்.

ஆனால் அப்படி நடக்கவில்லை...

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அதாவது நாம் இந்த செய்தியை படிக்கும் இந்த நொடி வரை தொடர்ச்சியாக மீத்தேன் வெளியேறுவதால் இன்றுவரை இது எரிந்து கொண்டிருக்கிறது...

இதன் பெயர் தான் நரகத்தின் கதவு (Door to Hell)...

கடன் வாங்கி தான் நமக்கான தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றால்...


நமது உழைப்பு நம் வாழ்நாள் முழுவதும் அதிகார வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்...

நாம் உண்ணும் உணவு சரியானது தானா ? கண்டு பிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும் போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம்..

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டு போகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்க வேண்டும்.

விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாத போதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே..

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணை கொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டு பண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும்.. அப்படித் தாகத்தை உண்டு பண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை...

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...

என்ன தயாரா அதிமுக ஊழல் விஜயபாஸ்கர் ஜி...


இலுமினாட்டி (கார்பரேட்) ஈஷா யோகா மையத்தால் மறைக்கப்பட்ட வெள்ளியங்கிரி ஆண்டவர் புகழ்...


இது மதம் சார்ந்த பதிவு அல்ல வரலாறு தொலைகிறதே என்ற ஆதங்கம்...

இன்றைக்கு இந்தியா முழுக்க ஒரு பெயர் பிரபலமடைந்துள்ளது என்றால் அது ஈஷா தான்.

யார் இவர்? என்ன இடம் இது என பலரும் இதனைப் பற்றி தேடத் துவங்கியுள்ளனர்.

இவர்களின் கருப்பு வரலாறெல்லாம் நமக்கு தேவையில்லை.

வெள்ளியங்கிரி எனும் மலையடிவாரத்தில் கிடைத்த இலவச நிலத்தில் துவங்கப்பட்ட இம்மையம் தங்களின் மார்க்கெட்டிங் திறமையால் இன்று உலகளவில் பரந்து விரிந்துள்ளனர்.

ஆனால், இம்மலையடி வாரத்தில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான சைவ கோவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.

இதே சிவராத்திரி இரவில் பலரும் 7அடுக்காக உள்ள இம்மலையின் உச்சிக்கு சென்று (கடினமான பாதையைக் கடந்து) இயற்கையாக உருவான லிங்கத்தை வணங்குவர். இது பல நூறு ஆண்டு வழக்கம்.

இந்த லிங்கம் ஆதியோகி போல பிரமாண்டமாகவோ பளபளவெனவோ இருக்காது இயல்பாகவே இருக்கும்.

ஆனால் இங்கு வரும் பல சுற்றுலா பயணிகளுக்கும் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியவில்லை. சிவராத்திரி என்றாலே ஈஷா என்ற மாயை உருவாகிவிட்டது.

வெறும் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு கார்பரேட் ஆன்மிக மையம் 2000 ஆண்டு பழமையான ஒரு கோவிலின் புகழை மறைத்து விட்டதெனில் பணமும், ஊடக பலமும் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது புரியும்...

உங்களுக்கு எல்லாம் கிடைப்பதால் நீங்கள் சுதந்திரமானவர்களும் இல்லை, எனக்கு எதுவும் கிடைக்காததால் நான் அடிமையும் இல்லை...



நினைவு கொள்ளுங்கள்.. 

கொடுக்கப்படும் அனைத்தும் ஒருநாள் நிறுத்தப்படும்..

நீங்கள் மட்டும் இங்கு வாழப்போவதில்லை, அடுத்த தலைமுறையும் இங்கு வாழ வேண்டும்...

பாஜக மோடியின் மானங்கெட்ட அரசியல்...


பக்தியின் வலிமை...


மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்திருந்த போது,

அவர்கள் வெளியே வராவிட்டால் இந்த கோவிலைத் நாங்கள் இடித்து விடுவோம் என்று செய்தி அனுப்பினார்கள் வெள்ளைக்காரர்கள்...

கோவிலை விட தங்கள் உயிரை துச்சமென மதித்து.. தங்கள் உயிரை விட துணிந்து வெளியே வந்தனர்
மருது சகோதரர்கள்.

மருது சகோதரர்களையும், அவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் சேர்த்து.. மொத்தம் 500 பேரை..

ஊரே பார்க்க.. ஒரே நேரத்தில்.. தூக்கில் போட்டு கொன்றனர் வெள்ளைக்காரர்கள்..

தியாகத்தின் சாட்சியாக. மறத்தமிழனின் வீரத்தின் சாட்சியாக .. அந்த வீரம் தோய்ந்த வரலாற்றின் சாட்சியாக,

இன்றும் நம் முன்னே கம்பீரமாக நிற்கும்.. சிவகங்கை மாவட்டம்.. காளையார் கோவில்...

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்...

தமிழக விபச்சார உடகங்களே..




பாஜக வும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்...


இதை தான் நான் ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு வரேன்... இது பாஜக வேலை என்று...

தமிழக பாஜக தலைவர்கள் எல்லாம் பணம் பதவிக்காக எப்படிப்பட்ட கேவலமான செயலும் செய்வார்கள் என்பதை இதை வைத்து புரிந்துக் கொள்ளுங்கள்...

ஆதாரம்...

http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=158497

கருனை மிகுந்த ஏசு பிரான் எப்ப இருந்து தினகரன் குடும்பத்தை கல்விய விற்கச் சொன்னார் என்பது தெரியவில்லை...


கடவுளை விற்பவர்கள் கல்வியை விற்பதில் ஆச்சிரியம் இல்லை..

ஆனால் 1000 ஏக்கர் காடுகளை காருன்யா அழிக்கும் வரை இந்திய வனத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது.?

காட்டுக்கு சொந்த காரர்கள் ஆன அப்பாவி பழங்குடி மக்கள் சுல்லிகளை பிறக்க கூட தடை விதிக்கும் வனத்துறை காருன்யாவிற்கு கருனை காட்டுவது ஏன்.?

அப்படி என்றால் வனத்துறையும்.. தேடப்படும் குற்றவாளியை பிடிக்காமல் இருக்கும் காவல்துறையும் எத்தனை கோடிகளை வாங்கி கொண்டு...

கண்ணை மூடி.. வாயை பொத்தி.. கையை கட்டிக் கொண்டிருக்கிறது...

நான் கூறும் உலக அரசியல் எவ்வளவு கொடுமையானது என்பது இந்த படம் உணர்த்தும்...


சிரியா நாட்டில் ரத்த ஆறு...


நூற்றுக்கணக்கான பிஞ்சு குழந்தைகள்...

என் இனம் பட்ட வலியைத் தானே அந்த இன மக்களும் அனுபவிப்பார்கள்...

தமிழீழம்... சிரியா...