மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் அமெரிக்கன் ஃபோர்டு ஆஃப் மிஷன் என்ற பெயரில் பெண்களுக்கான தொழில் மையம் அமைப்பதாக கூறி அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து CSI பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் என்பவர் அந்த நிலத்தை அடுக்கு மாடி குடியிருப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்த காரணத்தினால் நில நிர்வாக ஆணையர் நில ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்துள்ளது பாராட்டிற்குரியது.
தமிழகம் முழுவதும் அரசு நிலங்களை இது போன்று குத்தகைக்கு எடுத்து டியூஷன் சென்டர், தையல் பயிற்சி பள்ளி, சேவை மையங்கள் என்ற பெயரில் சர்ச்களை தென்னிந்திய திருச்சபை (CSI) நடத்தி வருகிறது.
இது போன்ற இடங்களையும் ஆய்வு செய்து நிலங்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்...