10/08/2018


அப்புறம் செயலு நாங்க வரட்டுமா, நாங்க கால் வச்ச இடம் எதுவும் வெளங்கனதா வரலாறு கிடையாது.......

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு இந்தப் புத்தகத்தை மீண்டும் வாசிக்கத் துவங்குகிறேன்...


இதன் பக்கங்களின் ஒவ்வொரு வரியும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொருந்தி சரியான புரிதலை ஏற்படுத்துகிறது...

மிக முக்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்...


பெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளார்.

தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது இயக்கத் தோழர்களாகிய எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து ஜனநாயக சக்திகள், பொதுமக்களிடம் இதனை நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகப்பூர்வமாக முன்வைக்கிறோம். இந்த செய்தியினை அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- மே பதினேழு இயக்கம்...

கோவில் சிலை திருட்டு எல்லாம் இந்த பிராமண கோஷ்டி தான்...


அமுதா, IAS - தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கலைஞர் நல்லடக்க நிகழ்ச்சிப் பொறுப்பாளர்...


மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர்..

கலைஞர் நல்லடக்கத்தின் போது ஸ்டாலின் அவர்களுடன் வெள்ளை சுடிதாரில் சுறுசுறுப்பாக சுற்றி வந்தாரே அவர் தான் அமுதா IAS..

கிடைத்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தேவையானதை உடனடியாக பொறுப்பாக செய்தார். கூடவே கலைஞரின் ஒவ்வொரு உறவினர்களிடன் கனிவாக கருத்தறிந்து அதன்படி செய்தது பலரைக் கவர்ந்தது. இறுதியாக அவரும்ஒரு பிடி அள்ளிப் போட்டது இன்னும் சிறப்புக்குரியது...

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல்...


அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது - பாமக அறிக்கை...


தமிழ்நாடு மீன்வளத்துறையில் மீன்வள ஆய்வாளர் பணிக்கான கல்வித் தகுதியை தளர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகவும், அரசு மீன்வள பல்கலைக்கழக மாணவர்களின் வேலை உரிமையை பறிக்கும் வகையிலும் செய்யப்பட்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது.

மீன்வளத் துறையில் உள்ள மீன்வள ஆய்வாளர் பணியிடங்களில் 60% இடங்கள் நேரடியாகப் போட்டித்  தேர்வு மூலமாகவும், மீதமுள்ள 40% இடங்கள் பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மீன்வள ஆய்வாளர் பணிக்கு இதுவரை இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது மீன்வள அறிவியல் படிப்பு மட்டுமின்றி, விலங்கியல், கடல்சார் உயிரியல், கடலோர மீன்வளர்ப்பியல்,  சிறப்பு விலங்கியல், கடல்சார் பொறியியல், கடலியல் ஆகிய துறைகளில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களும்  இப்பணிக்கு தகுதிபெற்றவர்கள் என்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட அரசிதழில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கோபால் பெயரில் வெளியாகியுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

மீன்வள ஆய்வாளர் என்பது மிகவும் நுணுக்கமான பணியாகும். மீன்வளத்தை மேம்படுத்துவதற்கான  இந்த பணிக்கு மீன் வளர்ப்பு, மீன்களின் தன்மை குறித்த ஆழமான அறிவு தேவை. இதைக் கருத்தில் கொண்டு தான் நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள மீன்வளக் கல்லூரிகள் ஆகியவற்றில் மட்டும் மீன்வள அறிவியல் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. வேறு அரசுக் கல்லூரிகளிலோ அல்லது தனியார் கல்லூரிகளிலோ இந்தப் படிப்பு கற்பிக்கப்படவில்லை. தமிழக அரசில் மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகிய பணிகள், தனியார் நிறுவனங்களில் உள்ள மீன்வளம் சார்ந்த பணிகள் ஆகியவற்றை மட்டுமே இலக்காகக் கொண்டு இப்படிப்பை நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பிற அறிவியல் படிப்புகளை படித்தவர்களையும் இப்பணியில் சேர அனுமதித்தால், இதற்காகவே உருவாக்கப்பட்ட மீன்வள அறிவியல் படித்தவர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடும். அவர்களால் வேறு பணிக்கு செல்ல முடியாது என்னும் சூழலில் இருக்கும் வேலைவாய்ப்பையும் பறிப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

அதுமட்டுமின்றி, மீன்வள ஆய்வாளர் பணியை அதற்கான பணியை படித்தவர்களால் மட்டும் தான்  சிறப்பாக செய்ய முடியும். மருத்துவம் படித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை, பிற அறிவியல் படித்த பட்டதாரிகள் செய்தால் மனித உயிர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமோ, அதேபோல் தான் மீன்வள அறிவியல் படித்தவர்கள் செய்ய வேண்டிய பணிகளை பிற அறிவியல் பட்டதாரிகள் செய்தால் மீன் வளத்திற்கு  மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை மீன் வள ஆய்வாளர் பணிக்கு தேவையான அளவுக்கு மீன்வள அறிவியல் படிப்பு படித்தவர்கள் இல்லாவிட்டால் கூட, அந்தப் பணிக்கு பிற படிப்புகளை படித்தவர்களை அனுமதிப்பது குறித்து சிந்திக்கலாம். ஆனால், மீன்வள அறிவியல் படிப்பு படித்த நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், மற்றவர்களை இப்பணிக்கு அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? அதிலும் குறிப்பாக மீன்வள ஆய்வாளர் பணிக்கு 72 பேரையும், உதவி ஆய்வாளர் பணிக்கு 12 பேரையும் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது என்பதைத் தவிர வேறல்ல.

மீன்வள ஆய்வாளர் பணிக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படிப்புகளில் பெரும்பாலானவை தனியார் கல்லூரிகளில் மட்டும் கற்பிக்கப்படுபவையாகும். அத்தகைய தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. முந்தைய திமுக ஆட்சியில் 2007-ஆம்  ஆண்டிலும், 2011-ஆண்டிலும் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அப்போது எழுந்த எதிர்ப்பு காரணமாக அந்த அறிவிப்புகள் திரும்பப்பெறப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது இப்போது அதே அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன? என்பதே மீண்டும் மீண்டும் எழும் வினா ஆகும்.

தமிழ்நாட்டில் வனச்சரகர், வனவர் பணிக்கு அரசு வனக்கல்லூரியில் வனவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 2009-ஆம் ஆண்டிலும், 2014-2015ஆம் ஆண்டிலும் இந்த பணிக்கு பிற படிப்புகளை படித்தவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், மாணவர்களும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த முடிவுகள் திரும்பப் பெறப்பட்டன. வனச்சரகர், வனவர் பணிக்கு வனவியல் படித்த மாணவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டும் பிற அறிவியல் பட்டதாரிகளை தேர்வு செய்யலாம் என விதிகள் மாற்றப் பட்டன. அதேபோல், இப்போதும் தமிழக அரசு அதன் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று மீன்வள ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியல் பட்டம் மட்டுமே தகுதி என்று அறிவிக்க வேண்டும்...

ஸ்டெர்லைட் பினாமியாக செயல்படும் அதிமுக ஊழல் அரசு...


இந்தியா என்ற சந்தை தற்சார்பை எப்படி எதிர்க்கும் என்பதே தமிழீழத்தை படித்து பிறகு உணர்வீர்கள்...


வெகுசன மக்களுக்கான தற்சார்பு கருத்தியலை இங்கு இதுவரை யாரும் விதைக்கவில்லை..

அனைவரும் தற்சார்பை அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர்..

ஏன்..? எப்போதும் யாரோ ஒருவர், ஏதோ ஒரு அரசுதான் உங்களுக்கான தற்சார்பை முன்னெடுக்க வேண்டுமா..?

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


1) பிரம்ம சாபம்,
2) பிரேத சாபம்,
3) பெண் சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பிரம்ம சாபம்...

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

2) பிரேத சாபம்...

இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பெண் சாபம்...

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

4) சர்ப்ப சாபம்...

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்...

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உதாசீனப் படுத்தி ஏமாற்றுவதும். அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்...

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்...

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்...

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்...

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்...

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்...

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்...

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம்...

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும்.

எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்...

நீங்கள் மறந்தவை...


நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி...


பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றி...

எதிர்க் கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்று தோல்வி...

அதிமுக எம்.பிக்கள் 13 பேரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்...

நேற்று அதிகாலை 3 மணியளவில் நடந்த சம்பவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


ஈர்ப்பு விதி...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது.

நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள்தான். நாம் எதைக்குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது.

'நம்முடன் இருப்பவர்கள், நம்மிடம் உள்ள பொருட்கள், நாம் செய்யும் பணி போன்ற எல்லாவற்றையும் தீர்மானிப்பது நமது எண்ணங்கள்தான்' என்றால் நாம் விரும்புவது, விரும்பாதது எல்லாமே நம்முடன் இருக்கின்றனவே! யார் வறுமையையும், தனிமையையும் துன்பங்களையும் விரும்புகிறார்கள்.

இக்கோட்பாடு உண்மையானால், உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும்?

உலகில் எவரேனும் பிரச்னைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா என்ன? என்று ஐயம் தோன்றுகிறது அல்லவா?

ரோண்டா பைர்னே (Rhonda Byrne) என்பவர் எழுதிய 'The Secret' என்ற நூலின் அடிப்படையில் இதே பெயரில் 2006ம் ஆண்டு, ஒரு திரைப்படம் வெளிவந்தது.

 அது முதல், இது குறித்து பலரும் பல நூல்களை எழுதிவிட்டார்கள். பலர், 'உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்' என்ற அறைகூவலுடன் பல பயிற்சி வகுப்புக்களை நேர்முகமாகவும், இணைத்தளம் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கோட்பாடு ஒன்றும் அத்தனை புதியதில்லை, குறிப்பாக, தமிழினத்திற்கு இது ஒரு புதுமையே அன்று.

திருவள்ளுவரின் தமிழ் மறையே இதற்குச் சான்றாகும். ஊக்கமுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள், இக்கோட்பாட்டை எடுத்தியம்புகின்றன.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு' - (குறள் எண் 595)

நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான்.

என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலும் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று இதையே வலியுறுத்துகிறார்.

நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?
ஈர்த்தல் விதி, கேட்பதற்கு மிக எளிமையானதுதான், கடைப்பிடிக்க எளிதுதான். ஆனாலும், ஒருவர் அதைப் பின்பற்றவேண்டும் எனில் அந்த விதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்மறையாக எண்ணங்களை விடுத்து, நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.

ஈர்த்தல் விதியின் மூன்று படிகள்...

கேளுங்கள்: 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்' என்கிறது விவிலியம். ஆம், நமக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொள்வதுதான், இந்த ஈர்த்தல் விதியின் முதல்படி. 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்ற பழமொழி நினைவு வருகிறதா? நமக்கு என்ன தேவையென்று நாம் அறிந்துகொண்டால்தான், இந்தப் பிரபஞ்சம் அதை நாம் அடைய உதவி செய்யும் என்று இந்த விதியினைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.

நம்புங்கள்: நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள். சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி. பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா? கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன.
அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ. இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
'ஓம் சாந்தி ஓம்' என்னும் இந்தித் திரைப்படத்தில் ' நீங்கள் ஒன்றை விரும்பி அடைய நினைத்தால், இந்த உலகம், அதை உங்களிடம் கொடுக்க முயலும்' என்ற பொருளில் ஒரு வசனம் வரும்.

ஆம்...... நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் கையில் தான்...... இல்லை இல்லை.... உங்கள் மனத்தில்தான் இருக்கிறது....

பாஜக ரஃபேல் விமான ஊழல்...


மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்...


தோழர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.

இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரில் கைது செய்யள்ளனர். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்.

தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்திய நம் தோழருக்கு நிகழ்த்தப்படும் அடக்குமுறைக்கு எதிராக இணைந்து குரலகழுப்புவோம் தமிழர்களே...

மருத்துவ மாப்பியா....


நான்கு திராவிடத்தின் ஆணிவேர்களும் சாய்ந்தன...


திராவிடம் என்ற கருத்தியல் இனி இந்த மண்ணில் எடுபடாது..

தற்போது நடக்கும் ஆட்சியும் எப்படியாவது கவிழ்க்கப்படும்...

புதிய கருத்தியலில் சிக்கப்போகும் தமிழகம்..

ஒரு கருத்தியலின் அடித்தளமும், அதுக்கான தலைவனும் மக்கள் உணர்ச்சியா கட்டமைக்கப்படுது திராவிட சகாப்தம் வேரறுந்தது, அன்று எந்த கருணாநிதியின் உரையைக் காண மக்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் திரண்டதோ, அதே போன்ற ஒரே பாணியான சூழல் இப்போ உருவாக்கப்படுது, அதுவும் மக்களைக் கவரும் வகையில்..

அதே ஆரியத்தை எதிரியாக கொண்டு, இங்கே புது கருத்தியல் பொம்மை ஆள்றதுக்கான மாயக் கண்ணாடி கருத்தியல் வெற்றி பெற வைக்கப்படும்..

எப்போதும் ஆள்றது ஆரியனே..

இங்கே ஆட்சியில் அமர்த்தப்படுவது அவனது எதிர்மறை போன்ற பொம்மைகள்...

திராவிட - ஆரிய கள்ளக் கூட்டு நாம அறியாததா ?

தமிழ்த்தேசியம் (திராவிடம் - சிறப்பு தோற்றத்தில் வரும்) ஊடகம் யாரை பிரபலமாக்குதோ அவனே அடுத்த தலைவன்...

தமிழ்த்தேசியம்னா உண்மையான தமிழ்த்தேசியமில்ல, ஈழக் கருத்து சிலவற்றை கொண்டு மக்களை கவரும் வகையில் பிரபலமாகிட்டு வருது, நான் இந்த தமிழ் தேசியத்தை இப்போ எந்த குறையும் சொல்லமாட்டேன்...

அதான் 3 வருசம் இருக்கே, சிறப்பான அரசியல் காயாநகர்த்தல் நடக்கும்,

அதுவும் மக்களுக்கு தெரியாத அளவுக்கு குழப்பமான சூழலை ஏற்படுத்தும் தலைவனும் பிரபலமாவான், அந்த விளம்பரம் எதிர்மறை விளம்பரமா கூட இருக்கலாம், ஏன்னா திராவிடம் அப்படித் தான் வளர்ந்தது..

அந்தாள் கடைசி சில மாதங்களில் கூட பிரபலமாக்கப்படலாம்..

ஆனா கடைசிவரை ஆரியத்தால் இங்கே காலூன்ற முடியாது, வரவும் மாட்டான்..

ஏன்னா 700 வருசமா வேசம் போட்டு இந்திய ஒன்றியத்தை ஆள்றதே அந்த வணிக குமபல் தான்...

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு...


1. பனை முகரி
2. பாலம்மை
3. மிளகம்மை
4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை
7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை

என்பனவாகும்.

இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன.

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்...

திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் மழை...


கன மழை எச்சரிக்கை...

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை இருக்க கூடும்.

குறிப்பாக கோவை மாவட்டங்களில் சின்னகல்லாறு, வால்பாறையில் கன மழை இருக்க கூடும்.

தேனி, தின்டுக்ககல், நெல்லை,  கன்னியாகுமாரி மலை தொடர்ச்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை இருக்கும்.

பொள்ளாச்சி, குமுளி, செங்கோட்டை,   கொடைக்கானல், பழனி பகுதிகளில் மழை இருக்கும்...

முதல்வர் நாற்காலியில் அமர்ந்த நாட்கள்...


நான் பொதுவுடைமையாளன் அல்லன் - சே...


சே, தில்லியில் இருக்கும் போது அவரை ஆல்-இந்தியா ரேடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார்.

பானுமதியிடம் பேசிய போது, ‘சே நிறைய இடைவெளிவிட்டு ஒரு ஜோதிடர் போல் பேசினார்.

அவரது ராணுவ உடை, பெரிய பூட்ஸ்கள், மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனிதத் துறவி போல் பேசினார்’எனக் குறிப்பிட்ட அவர்,

‘நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பல மத சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது?’ என்று கேட்ட போது...

‘நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சோசலிஸ்ட்.

எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன்.

மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்குத் தேவையான பாடங்கள் இருக்கின்றன.

ஆனால், அதை சரிவர நடைமுறைப்படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது.

லத்தீன் அமெரிக்கர்களான எங்களுக்கு உங்களைப் போல் காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை.

அதனால் தான் எங்களது மனநிலை வேறு விதமாக இருக்கிறது’ என்று சே பதிலளித்ததாகக் கூறினார்...

வெம் டவுண் ஹால் தீவிபத்து – 1995...


இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்த போது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பது போல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது.

இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப் போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை.

புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.

கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியை தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…

விஞ்ஞான முட்டாள்களில் நானும் ஒருவன்....


இந்த உலகிற்கு என்னால் இயன்றவரை உண்மையை பரப்பி விட்டு இந்த விஞ்ஞான உலகத்தை விட்டு வெளியேறி விடுவேன்...

யூத சியோனிச இலுமினாட்டிகளும் இவ்வுலக அடிமைகளும்… போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசியும் உலக அரசியலும்...


நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக் கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?

எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் சாதாரன ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா…?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல..

நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?

நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்… நோயிற்க்கான மருந்து அல்ல…. மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து..

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்து தான்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

 போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது… இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது…

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் (இலுமினாட்டிகளின்) கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு இலுமினாட்டுகளினால் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.
தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரி தான்.

போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).

இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை… 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 – 71களில் அம்மைநோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்… அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை…

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள்..

1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.

மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.

இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது?
அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்….

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை…

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே… தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?’ நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கலின் பெயரில் இலுமினாட்டிகள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.
இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை – அதாவது தானாகவே மறையும் தன்மை – மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் – தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் – நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.

1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக… தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக – இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்).
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி.
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு.
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்.
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்…

 ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…? ஏன் ?
அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும்…
ஆனால், இந்த உண்மையை – அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை – எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்த பாஷையில் சுருக்கமாக சொல்லப்போனால்.. நோய்களும் அதற்கு காரணமான விஷ வைரஸ் கிருமிகளும் அவர்களுடையது — அதை குணமாக்குவதாக குரப்படும் மருந்தும் அவர்களுடையது..

இது மட்டும் அல்ல பெயர் போன medical collage University இதுவும் இவர்களுடையது .. இதில் வரும் பாடத்திட்டம் கூட இலுமினாட்டி களுடையது.

பார்த்திர்கலா சகோதரர்களே இவர்கள் எந்த அளவு மனித குலத்தை முட்டாளாக ஆக்கி வைத்துள்ளார்கள் என்று..

திமுக கருணாநிதி மட்டும் இல்லனா...


திடீரென இந்த மண்ணுளி பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது..? தமிழர்களின் அடையாளத்தையே அழிக்கும் முயற்சியில்…


திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது. ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை.

மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் என்பது தான் உண்மை.

மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம்.

ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும்.

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப் படுகிறது.

எந்த காலக் கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி,

நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதிக்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.

ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா?

காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும், என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும்.

காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும்.

ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும்.

அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள்.

நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.

இதன் விளைவு! மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது.

பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப் பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.

இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப் பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப் பட்டு வருகின்றன...

ஊடகங்களே நம் முதல் எதிரி...


வாழ்க்கை...


பழையவற்றை நினைத்து வேதனைபடுவதும் , எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதும் வாழ்க்கை அல்ல...

இந்த நொடியை சந்தோசத்துடன் உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை...

இந்த நொடியை சந்தோசத்துடன் உணர்ந்து வாழ தெரிந்தவரே எதிர்காலத்தை படைக்கும் தகுதியானவர்.

உங்களை சுற்றி அளவற்ற அன்பு மற்றும் சந்தோசம் இருப்பதாக உணருங்கள்..

அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதார நம்பி உணருங்கள்.....

அவ்வாறு செய்தால் உங்களுக்கான வாழ்க்கையும், உங்கள் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் வந்து நீங்கள் நினைப்பது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அடைய முடியும்...

சந்தோசம் என்பது உங்கள் மனதில் இருந்து உருவாகிறது...

அன்பானவர்களுக்கு மனது கூட ஒரு புனிதமான தாயின் கருவறை தான்..

உங்களுக்கான சந்தோசத்தையும் படைக்கும், மற்றவர்களுக்கு அளவற்ற அன்பை அள்ளி தரும் மாபெரும் படைப்பாளி நீங்கள்.

நீங்கள் மாதம்தோறும் வெறும் டெலிபோன் பில், கிரெடிட் கார்ட் பில், பால் பில், மின்சார பில் கட்ட மட்டுமே இந்த பூமியில் பிறக்கவில்லை..

நீங்கள் சம்பாதிப்பதற்கு அல்லது சாதிப்பதற்கு மட்டுமே இந்த பூமியில் பிறக்கவில்லை..

மாறாக இந்த பூமியின் மதிப்பை கூட்டவே நீங்கள் பிறந்து இருக்கிறேர்கள் என்பதை உணருங்கள்....

அனைத்தும் மாய கட்டமைப்பு...


மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கம்...


மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.

- திருமந்திரம் - பிண்டலிங்கம் -

மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும் திருக்கூத்துமாகவும் உள்ளது. இதில் திருக்கூத்து என்பது சுழிமுனைக்கதவு திறந்தபின் புருவமத்தியாகிய சுழிமுனையில் சந்திர ஒளி, சூரிய ஒளி, வன்னியாகிய அக்னிஒளி முச்சுடர்களும் மாறிமாறி இயங்கும். இதுவே திருநடனம் அல்லது திருக்கூத்து எனப்படும்.

இவ்வரிய வாய்ப்பு மனிதருக்கு இருந்தபோதிலும் புண்ணியபலமும், குருவருளும், இறையருளும் இல்லாததால் மனிதர்கள் இந்த வாய்ப்பை அடையமுடியவில்லை.

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

திருமந்திரம் - கேடு கண்டிரங்கல்..

விழித்துக்கொள் எம் தமிழினமே...


திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் கட்சிகளாம்...


டாஸ்மாக் தொடங்கி
அல்லோபதி
மெக்காலே கல்வி
பசுமை புரட்சி
பன்னாட்டு முதலீடு
காவேரி விவகாரம்
இயற்கை வள பாதுகாப்பு
இலவசங்கள்
சாதி பார்த்து தொகுதிக்கு ஆள் நிறுத்துவது,
கடையடைப்பு
தீக்குளிப்பு

என எதை எடுத்தாலும்.. கொள்கை முடிவுகளும், அனுகுமுறைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும்..

உண்மையில் இவை இரண்டல்ல, இரண்டும் ஒன்றுதாம்.

சுடுகாட்டிற்கு கூட்டிச்செல்லும் இரு வெவ்வேறு பாதைகள்.

ஒன்று கரடு முரடாக இருக்கும்.
ஒன்று மெண்மையானது.

ஆனால் நீங்கள் அழைத்து செல்லப்படுவது என்னவோ நரகத்திற்குதான்.

தேர்ந்தெடுத்த பாதைகளை பொறுத்து பயணம் முறை மாறும். போய் சேரும் இடமோ?

ஒன்று தமிழை தூக்கி பிடித்தது
மற்றொன்று தனி நபரை தூக்கி பிடித்தது.

ஒருவர் தமிழ்பாடிக்கொண்டே நரகம் செல்வார் , மற்றவர் தனி நபர் புகழ்பாடி நரகம் செல்வார்.

இருவரும் சொர்க்கம் செல்லபோவதில்லை...

இயற்கை vs செயற்கை என்றால்தான் அது எதிரெதிர்.

இரண்டுமே செயற்கை என்பது எப்படி எதிரெதிர் ஆகும்.

டாஸ்மாக் vs கள்ளு
அல்லோபதி vs மரபு மருத்துவம்
மெக்காலே vs மரபு கல்வி
பசுமை புரட்சி vs மரபு விவசாயம்
பன்னாட்டு முதலீடு vs தற்சார்பு
இலவசம் vs சுயசார்பு

எந்த ஒரு கட்சி இப்படி பேசுகிறதோ அதுவே கொள்கைசார் எதிர்கட்சி.

மற்றவை எல்லாம் பதவி ஆசைக்காக நாற்காலி சண்டையிடும் நாலாங்கரைகளே..

முதலில் திமுகவும் அதிமுகவும் எதிரிகள் என்ற மாயையிலிருந்து வெளிவாருங்கள்.

நம்ம கதைக்கு வருவோம்...

திராவிட துரோகங்கள் என்ற பதிவுல திராவிட ஆட்சியில. நமக்கு முதுகுல குத்தபபட்ட கத்திகளை பட்டியலிட்டோம் அதை எதுக்கும் நினைவுக்கூறுங்க..

இத்தனை துரோகங்களையும் நம்ம ஒரே நாள்ல மறக்குற அளவுக்கும், ஒரு நாள் நம்ம வாயாலயே அவரை புகழ வைப்பதிலுமே இருக்குது ஊடகங்களோட வெற்றி..

முதல்ல உங்க சிந்தனையை உங்களுக்கு அடிமையா வைங்க, பிறகு அரசியல் பேசலாம்..

உலக அரசியல் முன் ஆட்சியாளர் அனைவரும் துரோகிகளே இந்த புரிதலுக்கு முதல்ல வாங்க..

ஆனா இடையில இடையில நம்ம மனசே கலங்குற அளவுக்கு செய்தி சேனல் இறுதி ஊர்வலத்தை போட்டுவிடுறான்
சும்மாவா சொன்னாங்க இசை ஒரு சாத்தான்னு..

துரோகங்களை நீங்கள் நினைவு கூறுவீர்களானால் உங்க நாளைய தலைமுறை பிழைச்சிக்கும்.

இப்படி ஒரே நாள்ல உங்க மனம் மாறுனா நாளை உங்க அடுத்த தலைமுறையும் உணர்ச்சிக்கு அடிமையாகி கண்ணுக்கே தெரியாமல் முதுகில் வீசப்படும் கத்தி போல துரோகத்தால வீழ்த்தப்பட்டு
வணிகனின் அடிமையாகும்...

திமுக கலாட்டா...


மறைந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது ஒருவரே...


தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு மரணம் அடைந்தபோது, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சந்தனப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவர், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார் (வயது 58).

இவர் ‘ஹோமேஜ்’ என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை அவர் தனது கடமையாக கருதி செய்து வருகிறார்.

அந்த வகையில், இப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை தங்க முலாம் பூசிய குளிர்சாதன கண்ணாடிப் பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் ஓட்டிச்சென்றவர், பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார்தான்.

புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவேர்டு’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய 2 பேரின் இறுதி பயணத்திலும் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி, பெரும் பங்காற்றி இருப்பது குறித்து சாந்தகுமார் கூறியதாவது:-

1977-ம் ஆண்டு ‘ஹோமேஜ்’ நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். முக்கிய தலைவர்கள் இறக்கும்போது நானே அமரர் ஊர்தியை இயக்குவதை என் பாக்கியமாக கருதுகிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கு நான்தான் அமரர் ஊர்தி இயக்கி இருக்கிறேன். இப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இறுதிப்பயண ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி இருக்கிறேன்.

மாபெரும் தலைவர்கள் வாழும்போது அவர்களுடன் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், அவர்கள் மறைந்த பிறகு, அவர்களது உடல் அருகே இருந்து பணி செய்வதை கடவுள் எனக்கு கொடுத்த வரமாக கருதுகிறேன். தலைவர் கருணாநிதிக்கும் பக்தி கலந்த மரியாதையுடன் இதைச் செய்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்...

சொல்வதெல்லாம் பொய் தானே கமல்...


நம் விதியும் மாறக் கூடியது தான்...


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட.. வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்...

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம்.

பிறகு சொல்கிறோம்...

எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது...

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்.

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது.

காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது?

என்பதும் நியாயமான கேள்வி.

என்ன பேசினாலும் சண்டையில்தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்.

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்.

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...