29/09/2021
தமிழ் தேசியம் பேசுகிற எவரும் அம்பானி, அதானி , டாடா, பிர்லாக்கள் அல்ல... எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள் தான்...
தமிழாட்டின் நிலப்பிரபுக்களும் தொழில் முதலைகளும் பிற மொழியினரே...
தமிழ் நிலப்பிரபுக்களும், தமிழ் முதலாளிகளும் இருந்தால் இந்நேரம் தமிழ்தேசியம் எழுச்சிப் பெற்றிருக்கும்...
தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதலாளிகளும் அவர்களே.. நிலப்பிரபுக்களும் அவர்களே.. தொழிற்சங்க விவசாயச் சங்க முதலாளிகளும் அவர்களே...
தமிழர்களிடம் இழப்பதற்கு தற்போது எதுவும் இல்லை..
பிறமொழியாளர்களின் பிடியில் இருந்து விடுதலை ஒன்றே எமது தமிழ் தேசியத்தின் இலக்கு...
ஒ... இதற்கு பெயர் தான் காதலா...
பூக்களே ஆடைகளாய்..
புன்னகையே அணிகலனாய்..
கூந்தல் அருவியை நீந்தவிட்டு..
குதிக்கும் மீன்களை கண்களாக்கி..
புருவம் இரண்டை வில்லாக்கி..
என் இதயத்தை இரண்டாக்கி..
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?
கன்னட தெலுங்கன் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...
தமிழர்களின் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய படைகளால் கொல்லப்பட்டாலும், இறுதியாக வென்றார்கள்..
தமிழின எழுச்சியை சகிக்காத திராவிடர் தந்தை கன்னட ராமசாமி வெறிபிடித்து சாவி இதழுக்கு அளித்த பேட்டி. (ஏப்ரல் 11,1965)..
சாவி : அந்த காலத்தில் இந்தியை எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினீர்கள். இப்போது சும்மா இருக்கிறீர்களே?
ஈ.வெ.ரா: அப்படியா. மன்னிக்க வேண்டும். இந்தி இப்போ எங்கே இருக்கிறது?
சாவி: இந்தி தான் ஆட்சிமொழியாக வந்துவிட்டதே?
ஈ.வெ.ரா: உனக்குத்தான் ஆங்கிலம் இருக்கிறதே. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு ஆட்சிமொழி இருக்க வேண்டும் தானே? இந்திக்காரன் ஆங்கிலத்தை இழிவா நினைக்கிறானே, தமிழ்நாட்டுக்காரன் சொன்னால் நடக்குமா? அதுதான் மக்களாட்சியா?
சாவி : ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் இந்தி வரத்தானே போகிறது?
ஈ.வெ.ரா: அப்படியா? ஒருநாளைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் சாகத்தானே போகிறோம். அதற்காக இப்போதே கிணற்றில் விழுவானா? அப்படியே இந்தி வந்தால் உயிரோடு இருந்தால் எதிர்க்க போகிறவன் நான் தானே?
சாவி: இந்தி வந்தால் நாம் இரண்டாந்தர குடிமகனாகி விடுவோமே?
ஈ.வெ.ரா: இந்தி வந்தால் நீ இரண்டாந்தர குடிமகன் ஆகிவிடுவேன் என்றால், ஆங்கிலம் வந்தால் இந்திக்காரன் மூன்றாந்தர குடிமகனாகி விடுவேன் என்பானே?
சாவி : மும்மொழி திட்டப்படி நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமே?
ஈ.வெ.ரா: சரியா போச்சு. ஏதாவது ஒரு அயல்மொழி கற்கவேண்டும் என்றால் அது இந்தியாக இருந்துவிட்டு போகட்டுமே?
சாவி: இந்தி கற்க கட்டாயப்படுத்தினால்?
ஈ.வெ.ரா: அப்ப பார்த்துக்கலாமே?
சாவி: நடுவண் அரசில் இந்தி கற்க கட்டாயப்படுத்துகிறார்களே?
ஈ.வெ.ரா: படித்துவிட்டு போயேன். அவன் காசிலே இன்னொரு மொழியை தெரிந்து கொள்வது நல்லது தானே...
கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...
காந்தி இந்தியா முழுவதும் பொது மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டி.. நாடு முழுவதும் இந்தியை பயற்றுவிக்க இந்தி பிரச்சார சபாவினை தொடங்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியினருக்கு ஆணையிட..
அதையேற்று ஈரோட்டில் இந்தி பிரச்சார சாபிவினை தொடங்கி நடத்தியவர் தான் கன்னட ஈ.வெ.ராமாசாமி..
அங்கு பயின்றவர்கள் தான் பின்னாளில் தமிழகமெங்கும் இந்தியை பயிற்றுவிக்கும் பண்டிதர்களாக உருவெடுத்தனர்...
பிராணயாமம் - நாடி சுத்தி...
பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.
நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.
இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய் வாய்ப்படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.
மூச்சுப் பயிற்சி...
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.
நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...
இனி என் குடும்பத்தில் இருந்து என்னை தவிர வேறு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் - உதயநிதி...
முதலில் தாத்தா சொன்னார்...
பிறகு அப்பா சொன்னார்...
இப்போது நீ சொல்கிறாய்...
நாளை உன் பிள்ளை சொல்வான்...
ஏன்னா திமுக என்பதே பிராடுகளின் குடும்ப கட்சி...
நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.
பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.
ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..
1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்
இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.
பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.
இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.
இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்து விடும்...
சுடு காட்டு அட்டனென்ஸ்...
ஜகன் மோகினி - எஸ் சார்
குட்டி சாத்தான் - எஸ் சார்
பிசாசு - எஸ் சார்
ரத்தக் காட்டெரி - ?
சார் அது என் பதிவு
படிச்சிட்டு இருக்கு சார்...
கீகீகீகீகீ...
😁😁😁