16/07/2018

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி தனித் தமிழ்நாடு கேட்டாரா?


மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி...

1930ல் இந்திய சார்பு...

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.

இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும்,  ,ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம். (குடிஅரசு, 09.11.1930)..

1938 ல் தனித்தமிழ்நாடு...

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப்பூசை செய்கிறோம். மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?

எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம்தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போகவடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, ‘தமிழ்நாடு தமிழருக்கே!’என்று ஆரவாரம் செய்யுங்கள்!

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.

நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப்பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச்சின்னா பின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே  - (குடிஅரசு 23.10.1938)..

1947 ல் மீண்டும் இந்திய சார்பு...

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். (ஈ.வெ. ரா.,விடுதலை 11.01.1947)..

1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு...

என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும்
என் இன மக்களாகிய தமிழர்களுடையவும்,
என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும்,
சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன்,
சென்று வருகிறேன்.

வணக்கம்! வணக்கம்! வணக்கம்! (விடுதலை தலையங்கம் 15.12.1957)..

1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு..

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே.

இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே.
தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா?

அது ஜனநாயகமா? (ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965)..

1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு...

நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும்
பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.

பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பொது மக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்...

1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்...

ஐயா சகாயத்தை முடக்கும் மக்கள் விரோத பாஜக - அதிமுக அரசு... தமிழகமே எச்சரிக்கை..


பார்பன கும்பல்களால் தமிழகத்தில் இருக்கும்  நல்லவர்களின் எழும்புகள் சத்தமில்லாமல் முறிக்கப்பட்டுக்   கொண்டிருக்கின்றன...

இவ்வளவு பேரின் கைகளையும் கட்டிவிட்டு தமிழகத்தை  என்ன செய்ய காத்திருக்கிறார்கள் இந்த பார்பன கும்பல்கள்..?

தமிழகத்தில் துளிர்க்கும் நியூட்ரினோ....


தமிழரறிவு - அரைஞாண் கயிற்றின் மருத்துவ ரகசியம்...


அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க.. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.

ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறு கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

Johnson & johnson உபயோகித்தால் புற்றுநோய் வரும்...


திருச்சி மருத்துவமனை ரோட்டில் அபாயகரமான பள்ளம்...


திருச்சி மாவட்ட பொது அரசு மருத்துவமனை உள்ள சாலையில் சிக்னல் முன்பு சாலையில் பெரிய பள்ளம். இந்த பள்ளம் அறிவிப்புக்கு ஒரு டையர் வைத்துள்ளார்கள். மேலும் பேருந்து இருக்கை சீட்டை வைத்து உள்ளார்கள்.

பள்ளத்தின் சூழ்நிலையை பார்த்தால் கடந்த 2 வருடங்களாக இருக்கும் போல் தெரிகிறது. 

திருச்சி மாநகராட்சி என்ன செய்துக் கொண்டு இருக்கின்றன. இந்த பள்ளத்தை சரி செய்ய முடியாத மாநகராட்சி...

மக்கள் வரி பணம் எங்கே போகிறது ?
எப்போது சரி செய்வார்கள் ?
மாவட்ட நிர்வாகம் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்குமா ?

முருங்கை நடு... இல்லையேல்.. ஆண்மையை இழக்க நேரிடும்...


சாவி...


மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம்.

அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

மனதை அடக்க நினைத்தால் அலையும்.

அதை அறிய நினைத்தால் அடங்கும்.

தவறு செய்வதும் மனம் தான்.

இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.

குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.

அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.

அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.

இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.

தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.

திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்...

பிரிகிறது இங்கிலாந்து...


பாமக நிறுவனர்.. மருத்துவர் ச. இராமதாசு . அறிக்கை...


8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்
அடக்குமுறைகள்: அழிவு நெருங்குகிறதா?
           
 சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளுக்காக தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை  மிரட்டியும், அப்புறப்படுத்தியும் காவல்துறையினர் அத்துமீறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளை திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி,  சேலம் மாவட்டங்களில் நிறைவு செய்து விட்ட அதிகாரிகள், இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள், நீர்ப்பாசனக் கிணறுகள் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. சில இடங்களில் சாலை செல்லும் வழியும், அகலமும் துல்லியமாக தெரியாத நிலையில் அதிகாரிகள் உத்தேசமாக நிலங்களை அளவீடு செய்து கற்களை நட்டு வருகின்றன. தேவையே இல்லாத இடங்களில் கூட நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்துகின்றனர். நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று காவல்துறையினர் மிரட்டுகின்றனர். இவை மிகக்கடுமையான மனித உரிமை மீறல் ஆகும். தாயாகவும், தெய்வமாகவும் மதித்துக் காப்பாற்றி வந்த நிலங்களையும், குழந்தையாக கவனித்து வந்த பயிர்களையும் இழக்க மனம் வராமல் விவசாயிகள் தங்களின் நிலங்களில் உருண்டு புரளும் காட்சிகள் காண்போரின் இதயங்களை உலுக்குகின்றன. ஆனால், இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் ஈரமோ, இரக்கமோ ஆள்வோரின் இதயங்களில் இல்லை; அவை கற்களாக மாறிவிட்டன.

எந்த வகையில் பார்த்தாலும் சென்னை- சேலம் இடையிலான பசுமைவழிச் சாலையை நியாயப்படுத்த முடியாது. இந்த சாலை தேவையற்ற ஒன்று என்பதை ஏற்கனவே பலமுறை ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி விளக்கியிருக்கிறது. சென்னை- சேலம் இடையே இப்போதுள்ள இரு தேசிய நெடுஞ்சாலைகள் அடுத்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலை தாங்கும் தன்மை கொண்டவை என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றையும் தாண்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள்  விரும்பினால், சென்னையிலிருந்து வாணியம்பாடி வரை இப்போதுள்ள ஆறு வழிச் சாலையை பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், மஞ்சவாடி, அயோத்தியாப் பட்டினம் வழியாக சேலம் செல்லும் மாநில சாலையை 6 வழிச் சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ விரிவுபடுத்தலாம்; இதற்காக பெரிய அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்காது; அதுமட்டுமின்றி, பசுமை சாலையை விட குறைந்த நேரத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல முடியும் என்பதை விரிவான புள்ளி விவரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்; பசுமைச்சாலை திட்டத்தை தான் செயல்படுத்துவோம் என முதலமைச்சர் பிடிவாதம் பிடிப்பதன் பின்னணியில் இருப்பது மக்கள் நலன் அல்ல... சுயநலம் தான்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதுமே இரண்டாவது கருத்து இருந்ததில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே சாலைகள் மேம்பாட்டுக்கு பா.ம.க. எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், தேவையில்லாத சாலைக்காக 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களைப் பறிப்பது வளர்ச்சிக்கான செயலாக இருக்காது; அழிவுக்கான அடித்தளமாகவே அமையும் என்பது உறுதி.

பசுமைச்சாலை தேவையா? என்பது குறித்த பகுத்தறிவும், அச்சாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளில்  நிலத்தை இழக்கப்போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழும் விவசாயிகள் சிந்தும் கண்ணீரின் வலிமையை உணரும் சக்தியும் இருந்தால் அழிவுக்கான இந்த சாலைத்திட்டத்தை ஆட்சியாளர்கள்  கைவிட்டிருப்பார்கள். ஆனால், அதிகார போதை கொடுக்கும் மயக்கமும், பசுமைச்சாலைத் திட்டத்தால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் பயன்களின் காரணமாகவும் எப்படியாவது பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விட வேண்டும் என்று  முதலமைச்சர் துடித்துக் கொண்டிருக்கிறார். தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் இந்த அகங்காரத்தின் உச்சம் அவர்களின் அழிவுக்கு தொடக்கம் என்பதை சம்பந்தப்பட்டவர் உணர வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து சென்னையிலிருந்து சேலம் இடையிலான பசுமைச் சாலை திட்டத்தை மத்திய,, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக - அமித்ஷா...


அடேங்கப்பா கூட்டத்தை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது...

நீரிழிவைக் கட்டுப் படுத்தும் கரிசலாங்கண்ணி...


கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத் தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

சளி கரிசலைச் சாறு, எள் நெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்...

சார்மாலா - பாரத்மாலா உண்மைகள்...


2016ல் ஐரோப்பாவை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது...


பிரித்தானியாவில் பல உடங்களிலும் , ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் கூட ஒருவகையான சத்தம் விண்ணில் இருந்து கேட்டதாக மனிதர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதே போன்ற சத்தத்தை அன்றைய தினம் சுலோவோக்கியா நாட்டில் உள்ள பலர் உணர்ந்துள்ளார்கள்.

முதலில் இந்த சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியாமல் திகைத்த மக்கள். இறுதியாக அது விண்ணில் இருந்து வருவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்கள்.

முதலில் இதனை வேடிக்கையாகவே மக்கள் எடுத்துக்கொண்டார்கள்.

இச்செய்தி இணையத்தில் பரவியவேளை, இது டொனால் ரம் வெற்றி பெற்றதால் ஏற்பட்ட சத்தம் என்றும். வானமே இதனை பொறுக்காமல் சத்தம் போடுகிறது என்று மக்கள் நக்கல் அடித்தார்கள்.

ஆனால் விஞ்ஞானிகள் தற்போது இதற்கான காரணத்தை சற்று கண்டு பிடித்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

ஆனால் இது நல்ல சமிஞ்சை அல்ல. மிக மிக கெட்ட சமிஞ்சை என்கிறார்கள்.

உலகில் பூமி நடுக்கம் ஏற்பட்டால் ஏற்படும் ஒருவகை ஒலியை ஒத்த சத்தமே இது என்றும்.

இது விண்வெளியில் ஏற்படும் பெரும் பூகம்பத்தால் உருவாகி பல்லாயிரம் மைல்களை கடந்து பூமியை வந்தடைந்துள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒலி மட்டும் வந்தால் ஓரளவு ஓகே. ஆனால் கூடவே அதன் தாக்கமும் வந்தால் , பூமி தாங்குமா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்த பின்னரே நக்கல் அடித்த சிலர் , சுய நினைவுக்கு வந்து, அப்படி என்றால் பூமி அழிந்துவிடுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இச்சத்தம் கேட்டுள்ளது. அது மட்டும் உண்மை.

இதன் தாக்கம் எப்போது வரும் என்பது மில்லியன் டாடல் கேள்வியாகும்...

தமிழீழ கருத்தியல் பாடம்...


நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு...


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...

இலங்கையில் தமிழர் பகுதியை சீனாவிற்கு தாரைவார்ப்பு....


தமிழீழ கருத்தியல் பாடம்...


உங்கள் முன் எப்போதும் சாதி, மத, இனப்பிரச்சினை என்பதை மட்டும் முன்வைத்து..

நீங்கள் குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் உங்களுக்குள்ளேயே சண்டை போட வேண்டுமென்று அதிகார வர்க்கம் விரும்புகிறது..

ஒவ்வொரு இன அழிப்பிற்கு பின்னால்..

இசுரேல் - அமெரிக்கா - இங்கிலாந்து போன்ற வல்லாதிக்க சக்திகள் மறைந்து இருக்கின்றன...

ஊர் மக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்...


ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?


1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) ;
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)...

ஸ்டெர்லைட் இரகசியம்...


சுவர்க்கம்...


முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட இரண்டாவது படிநிலையில் உள்ளவர்கள் இங்கு வாழ்ந்த பொழுது கீழ்த்தர ஆசைகள், சிற்றின்பக் கேளிக்கைகள், மிருகத்தனமான இச்சைகள் ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்கள்.

இறந்த பின்னர் இந்த இன்பங்ளை அனுபவிக்க இயலாத நிலையில் அவைகளுக்காக ஏங்கி அல்லல்படுவர். இவர்கள் சிறிதளவேனும் ஆன்மீக ஈடுபாடு இல்லாது வாழ்ந்தவர்கள்.

மூன்றாவது நாலாவது படிநிலைகளில் உள்ளவர்கள் சிறிது முன்னேறிய ஆத்மாக்கள். இவர்களுக்கு பூவுலகுடன் தொடர்புகொள்ள நாட்டமிருந்தாலும் (Earth Stimuli) இங்குள்ளவர்கள் அவர்களை நோக்கித் தங்கள் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமான சிந்தனை அலைகளை அனுப்பி அவர்களை தொந்தரவு செய்யாதிருந்தால் அவர்க்ள அமைதியாக இந்தப் படிநிலையைக் கடந்து விடுவார்கள்.

ஐந்தாவது படிநிலை ஓரளவு பிரகாசம் பொருந்திய இன்பகரமான உணர்வுநிலை என்று கூறப்படுகிறது. தமக்கு புண்ணியம் சேர்க்கும் நோக்குடமன் அல்லது புகழ்சேர்க்கும் விருப்புடன் அல்லது தமது ஆத்ம விமோசனத்திற்காக பொதுமக்களுக்குப் பயனளிக்கக்கூடிய நற்காரியங்களைச் செய்தவாறே பூவுலக வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர்களுக்குரிய இடம் இது.

தங்களால் மேலும் ஆன்மீக உயர்ச்சி பெறமுடியும் என்ற நினைவு இவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆறாவது படிநிலையில் உள்ளவர்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைந்த ஆத்மாக்கள். ஆனால் அவர்கள் பூவுலகில் வாழ்ந்தபொழுது தமது திமை, அறிவு, செயல்வனமை ஆகியவற்றை சுயநல நோக்கோடு பயன்படுத்திய காரணத்தால் ஒருகுறுகிய காலத்துக்கு இங்கு தங்கிய பின்னரே மேலே செல்வர்.

ஏழாவது படிநிலை மிக உயர்ந்த நிலை. அறிவாளிகளுக்கும் ஆன்மீக உயர்வு பெற்றவர்களுக்கும் உரிய இடம் இது. இவர்கள் உலோகாயதிகளாக (Materialists) இருந்த காரணத்தால் இங்கு சிலகாலம் தங்கி, தங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்வார்கள்.

காமலோகத்தில் நமது கடந்த பிறப்பின் ஆசைகள் மட்டுமே அழிக்கப்படுகின்றன. கர்மவினைகளில் இருந்து நாம் விடுபடுவதில்லை. அடுத்த பிறப்புவரை நமது மூன்றுவகை கர்மாக்களும் ஒருசெயலற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. காமலோகத்தைக் கடக்கும்பொழுது மனிதனின் மனசும் அதனால் வளர்க்கப்பட்ட காமரூபமும் அழிந்து விடுகின்றன.

காலோகத்தை விட்டு சூட்சும உலகின் இறுதிப்பகுதியாகிய “தேவஸ்தான்” எனப்படும் சுவர்க்கலோகத்தை மனிதன் அடையும்பொழுது, ஆத்மா, புத்தி, மனம் ஆகிய உயர் அம்சங்களுடனேயே அவன் அங்கு செல்கின்றான். இந்த நிலையை இந்துக்கள் “தேவஸ்தான்” என்றும் “சுவர்க்கம்” என்றும், பௌத்தர்கள் “சுகாவதி” என்றும், கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் , பார்சிகள் ஆகியோ “மோட்சம்” என்றும், பிரம்மஞானிகள் “தேவச்சன்” என்றும் விவரிக்கின்றனர்.

மனிதனின் சூட்சும சரீரம் காமலோகத்திலிருந்து விடுபடும் பொழுது அழிந்துவிடுகிறது. இப்போது மனிதனின் பிரக்ஞை அவனுடைய மனோசரீரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கின்றது.

தேவஸ்தானும் காமலோகம் போலவே ஏழுபடிநிலைகளாக வகுக்கபடுகிறது. ஒவ்வொருவரும் தமது பெறுபேறுகளுக்கேற்ப தமக்குரிய தளநிலைக்குச் செல்வர்.

கீழ்நாலு படிநிலைகளில் மனிதர்கள் தங்கள் மனோசரீரத்தின் கீழ்நிலையில் சஞ்சரிக்கின்றார்கள், உயர் மூன்று தளநிலைகளில் மனோசரீரத்தின் உயர் நிலையில் ஆத்மாவின் சுயஉணர்வு நிலையான ஆனந்த பரவச நிலையில் (bliss) இருப்பர் எனப்படுகிறது.

இறந்தவுடன் எவ்வாறு சில நிமிடங்களுக்கு உணர்வற்ற நிலையேற்பட்டு பின்னர் பிரக்ஞை தெளிவடைகிறதோ அதேபோன்று காமலோகத்தில் இருந்த விடுபட்டு தேவஸ்தானுக்குள் புகுந்து கொள்ளும் பொழுதும் ஏற்படுகிறது.

தேவஸ்தானம் மனிதனுக்கு பிரக்ஞை வந்தவுடன் விவரிக்க இயலாத இன்பமும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றது. அங்கு நிலவும் பிரகாசமும் மன நிறைவும் மனிதன் முன்னெப்பொழுதும் அனுபவிக்காதவைகள். எனவே அவனால் தனது மொழியில் அங்குள்ள நிலையை விவரிக்க இயலாது.

ஒவ்வொரு ஆத்மாவும் தனது மனோசக்தியால் ஒரு துயில்கூடு (shell) அமைத்துக்கொண்டு அதனுள் இருந்தபடி இன்பக்கனவுகள் காணப்து போன்ற நிலையில் தேவஸ்தரில் தனக்கென வரையறுக்கப்பட்ட காலம்வரை தங்கியிருக்கும்.

கனவில் நாம் காண்பதெல்லாம் சடப்பொருட்கள்போல் தோன்றினாலும் அவைகள் எல்லாம் எமது எண்ண அலைகளால் தோற்றுவிக்கப்படுவன. அதேபோன்று தான் நமது சுவர்க்கமும் நமது விருப்புகளுக்கேற்ப நமது எண்ணங்களால் தோற்றுவிக்கப்படுகிறது.

சுவர்க்கம் எப்படியிருக்கும் என்று கர்ண பரம்பரைக்கதைகள் கூறுவதைக் கொண்டு நாம் கற்பனைகளை ஓடவிட்டிகிருக்கிறோம். நமது மனதுக்குக் களிப்பூட்டக்கூடிய வகையிலும் திருப்தி தரக்கூடிய வகையிலேயே அங்குள்ள சூழ்நிலை அமையும். அங்கு மனிதன் தங்கியிருக்கும் வரை நிரந்தரமான மகிழ்ச்சியையும் அமைதியையும் அடைகிறான்.

அவரவருக்கு ஏற்றவகையில் அவரவருடைய மனப்பாங்கிற்க்கு ஏற்றபடியே சுவர்க்கம் அமைகிறது...

கலைமகள் கல்லூரி தலைவர் பானுமதி யை கைது செய்யுமா காவல்துறை.?


தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை காரணமாக சிவகாசியில் சணல் பை தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது...


பத்தாண்டு வரை உழைக்கும் தன்மையுடைய இந்த பைகள் ரூ30 முதல் ரூ300 வரை கிடைக்கின்றன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜன. 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சணல் பை தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  எளிதில் மட்கும் தன்மை கொண்ட பேப்பர் கப், பேப்பர் பிளேட், துணிப்பைகள் உள்ளிட்ட சிறு தொழில்களில் தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவகாசியை சேர்ந்த சணல் பை தயாரிப்பாளர் பாலாஜி கூறுகையில், ‘‘இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத சணல் பைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

காய்கறி வாங்குவதற்கு பயன்படும் பைகள், திருமண தாம்பூல பைகள், ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பைகள், உணவுக் கூடை பைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கைப்பைகள், அலுவலக ஆவணங்கள் வைக்கும் பைல்கள் என 100 வகையான சணல் பைகளை தயாரிக்கிறோம். பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எழுத்துக்கள், பூக்கள் பதித்து பைகள் தயார் செய்யப்படுகின்றன.

சணல் பைகள் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை உழைக்கும். 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் தடை அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும் சணல், காட்டன், தேக்கு இலைகள் உள்ளிட்ட இயற்கையான பொருட்களின் பயன்பாடு குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். ராகவன் கந்தசாமி...

தமிழீழம் - கருத்தியல் - பாடம்...


திருநீறு அணிவது ஏன் ?


நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது.

பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்...

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது...

பாஜக மோடி அரசின் தீவிரம்...


புத்தர் மரணித்த பின்பு ஏற்பட்ட குழப்பம்...


யார் இந்த காசியப்பா ?

புத்தர் மற்றும் புத்த மத  சம்பந்தமான கூறப்படாதவைகளை தொகுத்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையிலான மற்றுமொரு விஷயத்தை பார்போம்.

புத்தர் மரணித்த பின்பே புத்தமதம் உருவானது என்பதற்கான ஆதாரம்.

486 ல் புத்தர் இறந்து விடுகிறார்.
இறந்து சில ஆண்டுகளுக்கு பிறகு முதலாம் புத்த சபை

(first Buddhist council) ராஜ்ஹரா நகரில் கூடியது.

கவனிக்கவும். புத்தர் உயிருடன் இருக்கும் வரை புத்தமஹாசபை என்ற பெயரில் ஒன்றையும் அவர் நடத்தவே இல்லை.

இந்த பிரமாண்ட நிகழ்வுக்கு உலகம் முழுவதிலும் உள்ள புத்தமத அறிஞர்கள் வந்து குவிந்துள்ளனர்.

அதில் மிகவு‌ம் பேச வேண்டிய நபர்
ஞானி காசியப்பா..

இவர் ஜென்புத்த பிரிவில் முக்கியமானவர்.

அங்கே பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பல சலசலப்பு கூச்சல் குழப்பம் நிலவியது.

ஆளாளுக்கு ஒரு கருத்தினை கூறினர்.

காசியப்பா எழுந்து நின்று எல்லாரையும்  அமைதிப்படுத்தி பேச ஆரம்பித்தார்.

புத்தர் கூறியவை அப்படியே தொகுக்கப்பட வேண்டும்..

மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று வாழ்க்கையை கற்றுக்கொடுத்துள்ளார்.

அதன்படி நாம் வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே சிலர் புத்தருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர் அது தவறு.

காரணம் புத்தர் எனது ஞாபகமாக எதையும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறுயுள்ளார்.

புத்தருக்கு சிலைவைக்க கூடாது புத்தர் மரணித்து விட்டார் என்றதும்..

சிலர் எழுந்து  எது புத்தமகான் மரணமடைந்து விட்டார் என்று கூறுவது பாவகாரியம்.

அப்படி கூற உங்களுக்கு உரிமையில்லை யாருக்குமே.

என்றவுடன் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது .

புத்தர் மீது அதீத அன்பினால் ஆமா நீங்க கூறுவது சரி புத்தர் சாகவில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் பௌத்த மதம் உருவாகிறது.

33 வகையான பௌத்த தத்துவத்தை புதிதாக சேர்த்து புத்தர் என்னிடம் இதை கூறினார் என்று யார் என்ன கூறினார்களோ அவ்வளவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

33 தத்துவங்களையும்  33 ஏடுகளாக பிரித்து உருவாக்கினார்கள்.

இதில் எதிலுமே உடன்பாடு இல்லாத பலர் சபையை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

ஆனால் ஞானி காசியப்பா சபை ஆரம்பித்து போக்கு சரியில்லாமல் போவதை உணர்ந்த அவர் அன்றே ஒதுங்கி போக ஆரம்பித்தார்.

கடைசி காலம் வரை எதிலுமே சம்பந்தப்படாமல் ஒதுங்கி வாழ்ந்து எங்கு போனார் என்றே
தெரியவில்லை.

சிலர் கடைசிக்காலத்தில் சீனாவில் மரணித்தார் என்று எழுதி வைத்துள்ளனர்.

இது நடந்தது மிகச்சரியாக நூறாண்டுகள் கழித்து வைசாலி நகரில் கூடியது இரண்டாவது பௌத்த மகா சபை அங்கு பெரும் பதற்றம்
ஏற்பட்டது காரணம்..

புத்தம் இரண்டுபட்ட தருணம் அது.

ஹினாஜன புத்தம் hinayana buddihism
மஹாஜன புத்தம்  mahayana buddihism

இப்படி இரண்டு பெரும் பிரிவாக உருவெடுத்தது புத்தம்.

இந்த காலத்தில் போதிதர்மர் பிறக்கிறார்.

பல்வேறு முக்கிய நிகழ்வுகள் பின்னர் நடந்தது அவைகள் எல்லாம் என்ன ?

களைவோம் தற்போது
இனைவோம் மீண்டும்.

புகைப்படம் : ஞானி காசியப்பா

குறிப்பு: சில பிரதேசத்தில் இந்த காசியப்பா புத்தரை விட புனிதமாக மதிக்கப்படுகிறார்.

புத்தருக்கு சிலை கூடாது என்றவருக்கு சிலைவைத்து கோவில் கட்டி வழிபடுகின்றனர்...

நடிகர் கமல் தமிழரா...


கமல்ஹாசன் கன்னட பிராமணர்.

இவர் மூதாதையர்களுடைய பூர்வீகம் கர்நாடகாவில் ஹாஸன் மாவட்டம் என்று சொல்லப் படுகிறது.

தமிழகத்தில் குடியேறி செட்டில் ஆகிவிட்ட குடும்பம்.

பரமக்குடியில் 'கண்ணாடி ஐயர்' என்று சொல்லப்படும் வகையைச் சார்ந்தவர்.

கன்னட ஐயர் அல்லது கன்னடிய ஐயர் என்பது தான் காலப் போக்கில் கண்ணாடி ஐயர் என்று மாறி அர்த்தம் புரியாமல் வழங்கப் பட்டு வருகிறது...

பௌத்தமும் கூறப்படாததும்...


மனைவியாம் மன்னிப்பாம்...

ஏற்கனவே கூறியபடி பௌத்த மதத்தை பற்றி சில முக்கியமான மற்றும் அரிதான விஷயங்களை மட்டும் பார்க்க இருக்கிறோம்..

அதில் முதலாவதாக.

புத்தர் தமது குடும்பத்தினரை விட்டு தனியே சென்று ஞானமடைந்தார்.

ஞானமடைந்த உடனே தமது சீடர்களை அழைத்து பேசிய முதல் வார்த்தை எப்படிப்பட்டதாக இருக்கும் ?

உலக சமாதானமா ?
அல்லது உடல் ஆரோக்யமா ?

அல்லது புத்த பிக்குகள் தற்சமயம் உள்ளது போன்று துறவறத்தை பற்றி பேசினாரா ?

இதில் எதுவுமே இல்லை.

பின்னர் எதைப்பற்றி பேசினார் தெரியுமா?

சுற்றிலும் பல சீடர்கள் அமர்ந்திருந்த நிலையில் கூறினார்

எனது மனைவியை சந்திக்க வேண்டும்.

தமது மனைவியை விட்டு பிரிந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமது மனைவியை சந்திக்க விரும்புகிறார்.

அதுபோலவே சந்திக்கிறார்.

யசோதரா தமது கணவரிடம் பேசாமல் கோபம் கொள்கிறாள்.

12 வருட தனிமை போராட்ட கோபம் அது.

அந்த நேரத்தில் புத்தர் பேசியது..

அப்பொழுது புரியாமல் செய்துவிட்டேன் எனது  தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன்.

இப்பொழுது புரிந்த நிலையில் இருக்கிறேன்.

பரஸ்பரம் பேசி கடைசிவரை புத்தர் கூடவே அங்கமாகி போனார் யசோதரா என்ற புத்தரின் மனைவி.

இந்த சம்பவத்தை பெரிதும் கூறப்படாமல் மறைக்கப்படுகிறது புத்தபிக்குகளால்.

காரணம் புத்ததிற்கு ஆணிவேராக துறவு இருக்கும் போது..

மனைவியாம் மன்னிப்பாம்..

இருப்பினும் உண்மை வெளியே வந்துதானே ஆகும்..

குறிப்பு: இந்த புத்தர் யசோதரா சந்திப்பை அழகான காதல் கவிதையாக எழுதியுள்ளார். இரவீந்திரநாத் தாகூர்...

அது இன்னும் புத்தமக்களை அசைத்து பார்க்கும் கவிதை. ஆகவே அதை கூறாமல் தவிர்க்கிறேன்..

இன்னும் பேசுவோம்...

கருவறை இரகசியம்...


ஒரு மனிதனுக்கு ஜாதகக் கட்டங்கள் எப்பொழுதிலிருந்து தொடங்குகின்றன?

எது வரைக்கும் கட்டங்கள் வேலை செய்யும்?

நாம் உயிரோடு இருக்கும் காலத்தில் தான் கட்டங்கள் நம்மை ஆள்கின்றன என்று சொல்வார்கள்.

ஒரு சிறிய திருத்தம்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகக் கட்டங்கள் அதன் ஆளுமையைத் தொடங்குவதில்லை.

மாறாக ஒரு குழந்தை தனது முதல் மூச்சை உள்ளிழுக்கும் பொழுது தான் குழந்தை கத்துகிறது.

அப்பொழுதிருந்து தான் அதற்கு ஜாதகம் தொடங்குகிறது. சாகும் பொழுது கடைசி மூச்சோடு ஜாதகமும் முடிவுக்கு வருகிறது.

முதல் மூச்சிலிருந்து இறுதி மூச்சு வரை தான் ஜாதகத்தின் ஆளுமை.

ஒரு குழந்தை பிறக்கும் முன்னால் பத்து மாதங்கள் கருவறையில் தங்குகிறது.

அதற்கு உயிருள்ளது ஆனால் மூச்சில்லை.

ஆம். கருவறையில் வளரும் கரு மூச்சே இல்லாமல் தான் உயிரோடு உள்ளது. எப்படி சாத்தியம்?

கருவறையில் வளரும் கருவானது ஒரு திரவத்தை நுரையீரலில் உள்வாங்கி உயிர்வாழ்கிறது.

கருவறையை விட்டு வெளியே வந்தவுடன் தான் முதல் மூச்சை சுவாசிக்கின்றது.

ஜாதகம் கணிப்போர் ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கேட்பர்.

பிறந்த நேரத்தில் இருந்து தான் ஜாதகம் ஆரம்பிப்பதால் தான் இதனைக் கேட்கிறார்கள்.

ஆனால் சில குழந்தைகள் பிறந்தவுடனேயே அழுவதில்லை.

மருத்துவர்கள் அக்குழந்தையை தலைகீழாகப் பிடித்து தட்டுவதைக் கண்டிருப்பீர்கள்.

பிறப்பதற்கு முன்னால் கருவறையில் திரவத்தை மட்டுமே உள்வாங்கிய நுரையீரல்கள் , குழந்தை பிறந்ததும் மூச்சுக்காற்றை சுவாசிக்கத் தொடங்குகின்றன்.

அத்திரவம் முழுவதும் வெளியேறாத பட்சத்தில் அக்குழந்தை பிறந்தும் அசையாமல் இருக்கும்.

மருத்துவரின் முயற்சிக்குப் பிறகே அத்திரவம் நுரையீரலை விட்டு வெளியேறி , மூச்சக்காற்று உள்ளே நுழைந்து அக்குழந்தை அழத் தொடங்குகிறது.

ஒரு விசயத்தை கூர்ந்து கவனியுங்கள்.

முதல் மூச்சு எடுக்கும் பொழுது தான் ஜாதகம் தொடங்குகின்றது.

பிறப்புக்கு முந்தைய கருவறையிலும் இறப்புக்குப் பிந்தைய கருப்பு நிலையிலும் ஜாதகம் வேலை செய்யாது.

கரு- கருப்பு-கருவறை...

பிறப்புக்குப் முன்னும் வெளிச்சமே இல்லாத கருவறை. இறப்புக்குப் பின்னும் வெளிச்சமே இல்லாத கருப்பு.

ஆக கருப்புக்கு ஜாதகம் வேலை செய்யாது.

இடைப்பட்ட காலத்தில் சூரிய வெளிச்சத்தில் வாழும் நமக்கு மட்டும் தான் ஜாதகத்தின் நன்மை தீமைகள் எல்லாம்.

சரி விசயத்துக்கு வருவோம்.

நம்மை ஆட்டுமந்தையாகத்தான் அரச குடும்பம் நடத்துகிறது. நமக்குத் தான் ஜாதகம், பலன், பரிகாரம் எல்லாம்.

ஆனால் சாத்தன்களும் மனிதர்கள் தானே?

 அவர்கள் மீதும் சூரிய ஒளி படுகிறதே?

அவர்களுக்கு இந்த ஜாதகம் வேலை செய்யாதா?

எப்படி அவர்கள் மட்டும் உச்சத்திலேயே இருக்கிறார்கள்?

இக்கேள்விகளுக்கான விடைகிடைக்க முதலில் கோவில்கள் என்பவை வழிபாட்டிடங்கள் என்ற கருத்தை அடியோடு அழிக்க வேண்டும்.

கோவில்களில் கடவுள் இருப்பதாகச் சொல்லப்படும் அறையின் பெயர் " கருவறை". இதற்கு மேல் தான் சக்திவாய்ந்த கும்பம் இருக்கும்.

ஏன் இவ்வறைக்கு " கருவறை" என்று பெயர் வைத்தார்கள்?

காரணம் இல்லாமலா வைத்தார்கள்?
நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.

கோவில்கள் என்பவை சாத்தன்கள் வாழும் இல்லங்கள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரூபணம் ஆகிவிட்டது.

கோவில்களுக்கு முந்தைய பௌத்த விகாரைகளிலும் கருவறை உண்டு, ஜைனக் கோவில்களிலும் கருவறை உண்டு.

அவற்றின் உள்ளே முறையே புத்தனும் ( கடல் சாத்தன் ), மகாவீரனும் ( நிலச் சாத்தன் ) அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் இருக்கும்.

ஏன் கருவறை என்ற பெயர் வந்தது?

" கருப்புக்கு ஜாதகம் வேலை செய்யாது " இந்தப் பேருண்மை சாத்தன்களுக்குத் தெரியும்.

மனிதன் தான் வாழும் காலத்தில் மூச்சு விடுவதை நிறுத்த முடியாது. கருவறையில் இருக்கும் சிசுவைப்போல திரவத்தையும் சுவாசிக்க முடியாது.

வேறு என்ன செய்யலாம்? ஒரே ஒரு வழி தான்.

கருப்புகளை கும்பாபிஷேகம் என்ற பெயரில் கும்பத்தில் கட்டி , அதற்கு நேராகக் கீழிருக்கும் அறையை வெளிச்சமே போகாத, காற்றே புகமுடியாத " கருவறை" என்று அழைக்கிறார்கள்.

கோவில் கருவறை என்பது கிட்டத்தட்ட ஒரு "வெற்றிடம் " தான். ஆலய நுழைவு என்ற நாடகத்துக்குப் பிறகு தான் கருவறைக்குள்ளே மின் விளக்குகள் , மின் விசிறிகள் எல்லாம் வைக்கப்பட்டு ஒரு வழிபாட்டிடம் போலக் காட்டப்படுகிறது.

நாயக்கர் காலம் வரை இங்கே நம் மண்ணில் பெருங்கோவில்களில் சாத்தன் வாழ்ந்தனர்.

ஆனால் இசுலாமியர்களின் அச்சுறுத்தலால் அவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐரோப்பியா போன்ற குளிர் பகுதிகளுக்குச் சென்றாலும் இங்கிருப்பதைப் போல கருவறை வெற்றிடத்தை உருவாக்கும் தொழில் நுட்டபத்தைத் தெரிந்து கொண்ட பிறகு தான் சாத்தன்கள் தமிழகத்தை விட்டு இடம்பெயர்ந்து கிழக்கிந்தியக் கம்பனியாக உருமாறி இங்கே மீண்டும் வந்தார்கள்.

தற்காலத்தில் அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்ற பெயரில் பூமிக்கு வெளியே ஒரு வெற்றிடத்தில் வாழும் தொழில் நுட்பத்தையும் தெரிந்து கொண்டார்கள்.
வெற்றிடத்தால் மட்டுமே ஜாதகத்தை வெல்ல முடியும்.

வெற்றிடமே சாத்தனின் இருப்பிடம், தமிழ் தான் சாத்தனின் மொழி, தமிழும் சாத்தனும் இணைந்தே இருப்பார்கள்...