16/07/2018

பௌத்தமும் கூறப்படாததும்...


மனைவியாம் மன்னிப்பாம்...

ஏற்கனவே கூறியபடி பௌத்த மதத்தை பற்றி சில முக்கியமான மற்றும் அரிதான விஷயங்களை மட்டும் பார்க்க இருக்கிறோம்..

அதில் முதலாவதாக.

புத்தர் தமது குடும்பத்தினரை விட்டு தனியே சென்று ஞானமடைந்தார்.

ஞானமடைந்த உடனே தமது சீடர்களை அழைத்து பேசிய முதல் வார்த்தை எப்படிப்பட்டதாக இருக்கும் ?

உலக சமாதானமா ?
அல்லது உடல் ஆரோக்யமா ?

அல்லது புத்த பிக்குகள் தற்சமயம் உள்ளது போன்று துறவறத்தை பற்றி பேசினாரா ?

இதில் எதுவுமே இல்லை.

பின்னர் எதைப்பற்றி பேசினார் தெரியுமா?

சுற்றிலும் பல சீடர்கள் அமர்ந்திருந்த நிலையில் கூறினார்

எனது மனைவியை சந்திக்க வேண்டும்.

தமது மனைவியை விட்டு பிரிந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமது மனைவியை சந்திக்க விரும்புகிறார்.

அதுபோலவே சந்திக்கிறார்.

யசோதரா தமது கணவரிடம் பேசாமல் கோபம் கொள்கிறாள்.

12 வருட தனிமை போராட்ட கோபம் அது.

அந்த நேரத்தில் புத்தர் பேசியது..

அப்பொழுது புரியாமல் செய்துவிட்டேன் எனது  தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன்.

இப்பொழுது புரிந்த நிலையில் இருக்கிறேன்.

பரஸ்பரம் பேசி கடைசிவரை புத்தர் கூடவே அங்கமாகி போனார் யசோதரா என்ற புத்தரின் மனைவி.

இந்த சம்பவத்தை பெரிதும் கூறப்படாமல் மறைக்கப்படுகிறது புத்தபிக்குகளால்.

காரணம் புத்ததிற்கு ஆணிவேராக துறவு இருக்கும் போது..

மனைவியாம் மன்னிப்பாம்..

இருப்பினும் உண்மை வெளியே வந்துதானே ஆகும்..

குறிப்பு: இந்த புத்தர் யசோதரா சந்திப்பை அழகான காதல் கவிதையாக எழுதியுள்ளார். இரவீந்திரநாத் தாகூர்...

அது இன்னும் புத்தமக்களை அசைத்து பார்க்கும் கவிதை. ஆகவே அதை கூறாமல் தவிர்க்கிறேன்..

இன்னும் பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.