பிரித்தானியாவில் பல உடங்களிலும் , ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் கூட ஒருவகையான சத்தம் விண்ணில் இருந்து கேட்டதாக மனிதர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதே போன்ற சத்தத்தை அன்றைய தினம் சுலோவோக்கியா நாட்டில் உள்ள பலர் உணர்ந்துள்ளார்கள்.
முதலில் இந்த சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியாமல் திகைத்த மக்கள். இறுதியாக அது விண்ணில் இருந்து வருவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்கள்.
முதலில் இதனை வேடிக்கையாகவே மக்கள் எடுத்துக்கொண்டார்கள்.
இச்செய்தி இணையத்தில் பரவியவேளை, இது டொனால் ரம் வெற்றி பெற்றதால் ஏற்பட்ட சத்தம் என்றும். வானமே இதனை பொறுக்காமல் சத்தம் போடுகிறது என்று மக்கள் நக்கல் அடித்தார்கள்.
ஆனால் விஞ்ஞானிகள் தற்போது இதற்கான காரணத்தை சற்று கண்டு பிடித்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
ஆனால் இது நல்ல சமிஞ்சை அல்ல. மிக மிக கெட்ட சமிஞ்சை என்கிறார்கள்.
உலகில் பூமி நடுக்கம் ஏற்பட்டால் ஏற்படும் ஒருவகை ஒலியை ஒத்த சத்தமே இது என்றும்.
இது விண்வெளியில் ஏற்படும் பெரும் பூகம்பத்தால் உருவாகி பல்லாயிரம் மைல்களை கடந்து பூமியை வந்தடைந்துள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒலி மட்டும் வந்தால் ஓரளவு ஓகே. ஆனால் கூடவே அதன் தாக்கமும் வந்தால் , பூமி தாங்குமா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்த பின்னரே நக்கல் அடித்த சிலர் , சுய நினைவுக்கு வந்து, அப்படி என்றால் பூமி அழிந்துவிடுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இச்சத்தம் கேட்டுள்ளது. அது மட்டும் உண்மை.
இதன் தாக்கம் எப்போது வரும் என்பது மில்லியன் டாடல் கேள்வியாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.