18/04/2019

குலதெய்வங்கள் என்றால் என்ன.. அவர்களின் பெருமை என்ன...?


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்து போகின்றது...?

என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள்..

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் கோத்திரம் என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.

எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.

இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை.

ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்
படுகிறோம்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது..

இந்த வழி வழி போக்கில் ஒருவர்
மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..

நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?

குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம்
கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.

மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின்
குலதெய்வத்தின் விபரங்களை எளிதில்
பெற்று விடுகிறார்கள்.

மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.. புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்..

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள்.. திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்..

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்க கூடிய ஒரு ஆற்றலை தரும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால்.. குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.

குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கை போகும் போக்கை…

அடிப்படையில் இந்து மதம் பற்றற்ற
தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்
மூலம் இறை நிலையை அடைவது.

ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....

விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின்
x சேர்ந்தால் ஆண் குழந்தையும்..

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.

ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,
ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம்
சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது.

பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.

பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.

ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

என்ன நடக்கிறது அதிமுக வில் நான் இல்லை என்றாலும் அடுத்த முதல்வர் இவர் தான் என்று சூசகமாக பேசிய இபிஎஸ்...


https://youtu.be/IBxo7E1ktD8

Subscribe The Channel For More News...

பில்லி கிரஹாமின் வெற்றி மொழி...


அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணா்வினை வீட்டிற்குள் கொண்டு வர முடியாது.

உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணா்வீா்கள்.

ஒவவொரு நாளும் கடவுள் நமக்கு அளித்த பாிசே,நமது வயது ஒரு விஷயமே அல்ல.

செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை. சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே. குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.

மரணத்தை விட்டு யாரும் ஒடிவிட முடியாது. இறுதியில் அனைவரையும் அது கைபற்றியே தீரும்.

மன்னிப்பு மற்றும் நோ்மை ஆகியவையே மனிதனின் இரண்டு உயாிய ஆன்மீக தேவைகளாகும்.

கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது ஒன்று பெற்றுக் கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்தகுமே.

உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

பெற்றோ்களிடம் மாியாதை குறைவாக நடந்துகொள்ள அனுமதிக்கப்படும் ஒரு குழந்தை,வேறு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.

தைாியம் ஒரு தொற்று. தைாியமானவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது மற்றவா்களின் முதுகுத்தண்டும் விறைக்கின்றது.

நோ்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது...

SRM கல்லூரி பச்சைமுத்து ஜட்டியுடன் பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ...


https://m.youtube.com/watch?v=2UOxLNiAscM

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் SRM பச்சைமுத்து ஜட்டியுடன் பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஆஸ்துமாவிற்கு மருத்துவக் குறிப்பு...


ஆஸ்துமா இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.

இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.

ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்: மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்: தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி - கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்...

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்து வந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும்.

இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்...

சாராய ஆலை நடத்தி கொண்டே மது விலக்கை கொண்டு வருவதாக கூறும் திமுகவினர்...


வாசனை வைத்தியம் - மலர் மருத்துவம்...


மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள்.

வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு.

ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு.

இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம்.

இந்த புகையை சுவாசிப்பதன் மூலம்  புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது.

இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.

எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான  நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும்.

இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர்.

அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.

இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம்.

இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது.

இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.

லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும்.

சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம்.

எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது.

ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.

எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.

மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

மசாஜ்...

வாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ் செய்யலாம்.

சனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.

புருவத்தின் மேலும் கீழும் நெற்றியிலும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ் செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ் செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ் செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ் செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.

கழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை  மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம்.

கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம்.

பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.

உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை  உதறவேண்டும்.

உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.

வாசனை செய்திகள்...

வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன்?

நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது.

நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன.

நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும்.

இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது..

திருட்டு திமுகவினருக்கு இது போன்ற செருப்படி வாங்கியே பழகி விட்டதோ...


மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்...


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நக்கமங்கலத்தில் வசிப்பவர் காளிமுத்து. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவராவார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.

இவரது குடும்பத்தினர் மதுரை அருகே உள்ள மடப்புரம் காளிகோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை காளிமுத்துவின் மருமகன் காளிராஜ்(வயது39) ஓட்டி வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெசவாளர் காலனி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகே உள்ள புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காளிமுத்துவின் மனைவி பாமா (55) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த காளிராஜ் (39,) அவரது மனைவி வீரலட்சுமி (33), இவர்களது மகன்கள் அரவிந்த கண்ணன் (17), கார்த்திக் பாலு (10, காளிமுத்துவின் மற்றொரு மகள் அமுதா (31), அமுதாவின் மகள் கனிமொழி (15,) மகன் காளிராஜ் (12) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் அ.ம.மு.க.வினர் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்...

திமுக வேட்பாளர் பொன்முடி மகன் கெளதம சிகாமணியின் வெளிவராத அதிர்ச்சி தகவல்...


https://youtu.be/Vs_HGm7qzvE

Subscribe The Channel For More News...

வேட்பாளரை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? வேலூர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி...


வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மர்றும் அவரது உறவினர்கள் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.

துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. உறவினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை காலை 10:30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தலை ரத்து செய்ய வேண்டாமெனில் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதி நீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்....

திமுக - காங்கிரஸ்சின் ஏமாற்று வேலைகள்...


விஷமாய் மாறிவரும் கேன் தண்ணீர். அபாய எச்சரிக்கை...


இன்று ஒரு டீ, காபியின் விலையை விட, ஒரு கேன் தண்ணீரின் விலை என்பது அதிகம். இதில் இருந்தே வரும்காலங்களில் நாம் எவ்வளவு பெரிய பிரச்னையை சந்திக்கப் போகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இதைவிடவும், இவ்வாறு விலை கொடுத்து வாங்கும் குடிநீர் தற்போது மனித உயிர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகி வருகிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? நாள்கணக்கில் அடைத்துவைத்து விற்கப்படும் பாக்கெட், பாட்டில், கேன் தண்ணீர் விஷமாகும் அபாயம், மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்தபதிவு.

உங்கள் கடைக்காரர் விற்கும் கேன் தண்ணீர் தரமானதா ? எப்படி கண்டுபிடிப்பது ?

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது. ஆனால் கேன்களில் அடைத்து விற்கப்படும் 60 சதவிகிதம் தண்ணீர் தரமற்று இருப்பதாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். மார்க்கர் பேனாவை வாங்கியவுடன் அது எழுதுகிறதா என்று பார்க்கும் நாம் அதில் எக்ஸ்பைரி டேட் குறிப்பிடவில்லையே என்று ஒரு நாளும் கவலைபட்டதில்லை.

குறிப்பாக நமக்கு கிடைக்கும் கேன் தண்ணீரானது பெயரளவில் மட்டுமே மினரல் வாட்டர், உண்மையில் கடல் நீரையோ, ஆழ்குழாய் நீரையோ சுத்திகரிப்பு செய்தே கேன்களிள் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக இது போன்ற கேன் வாட்டர்கள் இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், Bureau of Indian Standards அமைப்பால் ISI mark பெற்றிருக்க வேண்டும்.

மிகமுக்கியமாக, சான்றிதழ் பெற சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு குடிநீர் நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை கூடம் அவசியம். அதில் பரிசோதனை செய்த தண்ணீர் மாதிரிகளை இந்திய தர நிர்ணய அமைப்புக்கு அனுப்பி குடிக்கத் தகுந்த தண்ணீர் என்று அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Bureau of Indian Standards அமைப்பு தண்ணீர் நிறுவனங்களில் கச்சா நீரை மாதம் இரு முறை சோதனை செய்யும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாட்டிலில் அல்லது கேன்களில் தொழில் நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றை எல்லாம் செய்வதில்லை, அப்படியே சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் கூட கேன் தண்ணீரை தயாரிக்கும் போது பல நேரங்களில் முறையான வழிகளை பின்பற்றுவதில்லை.

கேன் தண்ணீர் இப்படியா சுத்திகரிப்படுகிறது ?

தண்ணீர் நிறுவனங்கள் குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் சில விதிமுறைகளை பின்பற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கடினத்தன்மையற்றதாக மாற்ற டோஸிங் மெஷின் பயன்படுத்தபடுகிறது. அடுத்து மண் மற்றும் கார்பன் மூலம் வடி கட்ட வேண்டும். பிறகு நீரில் உள்ள தூசி மற்றும் அசுத்தங்களை அகற்ற மைக்கான் காண்டிரேஜ் முறை பின்பற்றப்படும். இதன்பின் ஆர்.ஓ மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புக்கள் நீக்கப்படும். இறுதியாக அல்ட்ரா கதிர்களை பயன்படுத்தி தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். கொடுமை என்னவென்றால் இந்த முறைகளை பல தண்ணீர் நிறுவனங்கள் முறையாக கடைபிடிப்பதில்லை.

உங்கள் தண்ணீர் கேன் எப்படி இருக்கும்?

கடைக்காரர் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கேன்களை மாற்ற வேண்டும். ஆனால் நமக்கு நன்றாகவே தெரியும் ஒவ்வொரு கடையிலும் தண்ணீர் கேன் பல வருடங்களாக அப்படியே இருக்குமென்று. இதனால் பாக்டீரியாக்கள் உருவாகும், இப்படிப்பட்ட கேன்களில் தண்ணீர் இருந்தால் இரண்டு நாட்களில் பாசி பிடித்து விடும். அடுத்த சில தினங்களில் புழு பூச்சிகள் உருவாகும். சோகம் என்னவென்றால் இப்படிப்பட்ட தண்ணீரையே பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இப்படிப்பட்ட தண்ணீர் கேன்களால் ஏற்படும் ஆபத்துகள்...

ஒரு லிட்டர் தண்ணீரில் மனித உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் தாதுக்கள் கிடைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 500 மில்லி கிராம் வரை அந்த தண்ணீரில் உப்பு இருக்க வேண்டும். ஆனால் சுத்திகரிக்கப்படுவதால் முதல் 10 மில்லி கிராம் உப்புதான் கிடைக்கிறது. இதனால் உடம்புக்கு எந்தவித நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடுகிறது. மாறாக நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதைவிடவும் ஆபத்தானது வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள் உருவாகிறது.

கேன் தண்ணீர் நிறுவனங்களின் மோசடிகள்...

முறையான அனுமதி இல்லாமல் சுமார் 450க்கும் மேற்பட்ட போலி தண்ணீர் நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னையின் 10 கேன் தண்ணீர் நிறுவனங்களின், 20லிட்டர் குடிநீர் கேன்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவை அனைத்துமே குடிக்க தகுதியில்லாத நீர் என்ற உண்மை தெரிய வந்தது மட்டுமல்லாமல், அந்த நீரில் கொடிய நச்சுத்தன்மையும், மனித மலத்தில் உற்பத்தியாகும் ஈகோலி, மற்றும் கோலி பார்ம் போன்ற பாக்டீரியாக்களும் இருந்ததாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாது மூலிகை நீர் என்று மக்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீதும் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தெரிந்த மோசடிகள் இவை, நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ நடக்கிறது. உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான தண்ணீரில் இப்படியான மோசடிகளை தடுக்க அரசால் மட்டுமே முடியும்.

கேன் தண்ணீர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை...

ISI மற்றும் தேதி அச்சிடாமல் வெளிவரும் தண்ணீர் கேன்களை வாங்கக் கூடாது.
அடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் கேனின் ஆயுட்காலம் 30 நாட்கள் மட்டுமே.

இனி என்ன செய்ய போகிறோம் ?

நமது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவு ஆறு, குளம், ஏரி எங்கும் நீர்வரப்பு இல்லை. இருக்கும் நீர்நிலைகளும் அழிந்து வருகிறது. இதுபோதாமல், மக்களின் தவறான நடவடிக்கைகளால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. போதிய நீர் இல்லாததால் தரமான குடிநீருக்காக கேன் தண்ணீரையே நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வீடுகளில் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் பெறப்படும் நீரும் தற்போது வறட்சி காரணமாக அதன் தன்மையை இழந்து விஷமாக மாறி வருகிறது. நிலத்தடி நீரில் க்ளோரைடு, நைட்ரேட், அயர்ன், ப்ளோரைடு பேன்றவை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதனால்தான் சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் செம்மண்ணாகவும், குடிப்பதற்கு தகுதியற்ற நீராகவும் இருக்கிறது.

இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு மழை நீர் சேகரிப்புத்தான். மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். அப்போது தான் நீரின் தன்மை மாற்றம் பெறும். அதிலும் ஆறு, குளம், குட்டைகளில் இருந்து கிடைக்கும் நீரில் ப்ளோரைடு இருக்காது என்பதால் அதனை அருந்துவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள். 1000 500 அடி ஆழ்குழாயில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரைக்காட்டிலும், நில நீர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரே சிறந்தது என்பதே உண்மை. மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் கேனாக வாங்கும் நமக்கு, இயற்கையான நீர்நிலைகளில் இருக்கும் நீரில்தான் மினரல்ஸ் இருக்கிறது என்ற உண்மை எப்போது புரியும்?

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் லட்சணத்தை பாருங்க...


https://youtu.be/h58wfwlWN9U

Subscribe The Channel For More News...

உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா.. கொள்ளு ரசம்...


கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்...

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும். மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்...

நடிகர் கமல் கோபத்தில் கொந்தளித்த வைரல் காணொளி...


https://youtu.be/57BEqEORQ84

Subscribe The Channel For More News...

வாசியும் – நெற்றிக்கண்ணும்...


நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றானது , எல்லோர்க்கும், மூக்குத் துவாரதிற்குள் ஏறி , கீழிறங்கி நுரையீரலுக்கு வந்து விடும். அப்படி கீழிறங்காமல் . அதனை தடுத்து , மேலேற்ற வேண்டும் – இது ஒரு பயிற்சி..

இதனை உணர்த்தத் தான் நடராஜர் தன் இடக்காலை மேலே தூக்கி நடமாடுகின்றார்..

1. வாசி என்பது – இட கலை – சந்திர கலை ஆகும் – இதனை மேல் ஏற்றுவதற்குத் தான் உலகில் எல்லா யோகியரும் – ஞானியரும் அரும் பாடு படுகின்றனர்..

இந்த வாசிக் குதிரையைத் தான்  அகோரம் என்றும் , இந்த பயிற்சி செய்வோரை அகோரிகள் என்று அழைக்கின்றோம்...

நெற்றிக்கண்ணைத் திறந்து , ஆன்மாவைத் தரிசனம் செய்வதற்கு இந்த வாசி என்னும் காற்று வேண்டும்.

இந்த சந்திரனின் கலைகள் மொத்தம் பதினாறு...

இதனைக் கருத்தில் கொண்டே தான், நம் முன்னோர் , ஒவ்வொரு கோவில் முன்பும் , பதினாறு கால் மண்டபம் அமைத்து உள்ளனர் – அது வழியாக உள்ளே புகுந்து இறைவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லாமலே சொல்லியுள்ளனர்..

– அதாவது பதினாறு கலையுடைய சந்திரனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்து, உள்ளே புகுந்து ஆன்மாவை தரிசிக்க வேண்டும்..

நெற்றிக்கண்ணை திறப்பதற்கன திருமந்திரப் பாடல்...

மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி
காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி
ஆக்கு மனதை அசையாமல் தான்
தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே

ஆனால் , சன்மார்கிகள் , அருட்பா உரை நடையில் வள்ளலார் ” தக்க ஆசான் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார் என்று புறத்திலே இருக்கும் குருவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம்..

2. கர்ப்பக்கிரகமானது , எல்லாக் கோவில்களிலும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே அமைத்து இருப்பார்கள் = அதாவது , ஆன்மாவானது ஆயிரத்தெட்டு இதழ் கமலம் ( மூளையின் நடுவில் ஆழத்தில் ) நடுவே ஒளியாக இருக்கின்றது என்று காட்டியிருக்கின்றார்கள்..

நம் ஊர் திருவிழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நன்கு ஆய்ந்து – ( முதல் நாள் கொடியேற்றம் முதல் – கடைசி நாள் திருக்கலியாணம் வரை – ரத உற்சவம் வரை ) , அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொண்டால் , திருசிற்றம்பலத்திற்குள் நுழைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியும்..

ரகசியங்களை சாதனையில் புகுத்தி, வெற்றி கண்டால், திருசிற்றம்பலத்திற்குள் நுழையவும் முடியும்..

நம் வேத காலத்து ரிஷிகள் , எல்லா ரகசியங்களையும், யோக சாதனைகளையும் இதிகாசங்களாகவும், புராணங்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் சித்தரித்து வைத்து, நம் வாழ்க்கையின் அங்கமாக்கி விட்டார்கள்..

திருசிற்றம்பலத்திற்குள் நுழையும் ரகசியங்களை திருமந்திரம் – திருவாசகம் தெரிவிக்கின்றன. அதனை நன்கு ஆய்ந்து படித்தால் தெரிந்து கொள்ளலாம்...

மதிமுக. வைகோ வை அசிங்கப்படுத்திய திமுக வினர்.. பாதியிலேயே ஓட்டம் பிடித்த வைகோ...


https://youtu.be/XxPLqcBzGY4

Subscribe The Channel For More News...

திராவிடம் என்றால் என்ன?


திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்? திராவிடத்துக்கும், தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே? , ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

திமுக ஆட்சியா வேண்டவே வேண்டாம்.. ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கும் தமிழகம்.. காரணம் என்ன தெரியுமா.?


https://youtu.be/uwPoetUBAEc

Subscribe The Channel For More News...

தமிழா நமது பலம் நமக்கு இன்னும் புரியவில்லை...


ஆனால் எதிரிகள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்..

அதனால் தான் தமிழருக்கு என்று ஒரு நாடு வந்து விடக்கூடாது என்றும் சொந்த மாநிலம் என்றாலும் அதை தமிழன் ஆட்சி செய்ய கூடாது என்பதிலும் எந்த ஊடகம் என்றாலும் தமிழை முன்னுக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் நமக்குள் இருக்கும் சாதி மதம் என்ற நோயை அணைய விடாமல் இருப்பதிலும் மிக கண்ணும் கருத்துமா செயல்படுகிறார்கள்..

நாமோ இன்னும் புரிந்தும் புரியாமலும் பிரிந்தே நிக்கறோம்...

ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.. வெளியில் தெரிந்தால் மொத்த திமுக வும் காலி...


https://youtu.be/zAZJM7YayMk

Subscribe The Channel For More News...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு...


திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு வேலன்கண்டிகை கொள்ளமதுராபுரத்தை சேர்ந்தவர் சித்தையா (வயது 55). விவசாயி. அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 28.7.2013 அன்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியை சித்தையா, தனது வீட்டிற்கு கூட்டிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தையாவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தனலட்சுமி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சித்தையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை வழங்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சித்தையாவை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்...

மக்களின் முதல் எதிரி ஊடகங்களே...


முதலீடு செய்து வருமானம் எடுக்கும் துறையாக அரசியல் மாறிவிட்டதன் விளைவு...

அரசியலையும் விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர்.  இங்கு முதலீடும் உங்கள் மீது தான், வருமானமும், உங்கள் மீதிருந்து தான்.

நீங்கள் இடும் பிச்சை தான் அவர்களின் வருமானம், ஆனால் ஓட்டு-ன் அதிகாரம் தெரியாமல் நீங்கள் அவர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் ஓட்டுக்கு காசு...

திருட்டு திமுக கனிமொழி கலாட்டா...


மர செக்கு எண்ணையின் மகத்துவம்...


மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்...

நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய்..

ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும். நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.

இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை Queen of Oil  என்று அழைக்கிறர்கள்.

தேங்காய் எண்ணெய்..

இன்று நாம் அணைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறோம், அனால் இன்றளவும் கேரளா மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலுக்கு பயன்படுதிகின்றனர்.

அதனால் தான் அவர்களுடைய தலை முடி கரு கருவென்று நீளமாக உள்ளது, ஆனால் அவர்களை விட வும் நமது முடி கருமையாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் மக்கள் தலைசாயத்தை உபயோகிகிறார்கள் இன்றைய தமிழ் நாட்டு மக்கள்.

ஆனால் நாமோ சமையலுக்கு  நல்ல மனத்தையும் , சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய் எண்ணையை விடுத்து கண்ட கண்ட எண்ணைகளை நாடி செல்கிறோம். ஆனால் நமது மக்கள் அதிலும் ஒரு இரசாயன கலப்படத்தைச் செய்கின்றனனர்.அது தான்  சல்பர்.  (அதன் படம் இதில் இணைக்கப்பட்டுள்ளது).

அது ஏன் கலக்குகிறார்கள்- எண்ணெய் விரைவில் கெடாமல் இருக்கவும். வெண்மை நிறமாக இருக்கவும், சரி அது நல்லது தானே என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் அதனால்  வரும் தீமையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் போது தலை முடி அதிகம் உதிர்கிறது. மேலும்  கெட்டு போன தேங்காயும்  சேர்க்கபப்டுவதால்  வயிற்று உபாதைகளும் உண்டாகிறது.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி  தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கி விடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக.பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன...?

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால் மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்...

பாஜக என்பது டூபாக்கூர் கட்சி தான்...


இந்தியாவில் மருத்துவ வியாபாரம்...


இந்தியாவில் 64 சதவீத ஆன்டி பயோடிக் மாத்திரைகள் அங்கீகாரம் பெறாதவை என ஆய்வில் தகவல்...

பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து அனுமதி பெறாமல் இந்தியாவில் ஆன்டிபயோடிக் மாத்திரைகள் விற்கப்படுவதாக ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டன் க்யூன்மேரி பல்கலைக்கழகமும், நியூகாஸ்டல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய சந்தையில் விற்கப்படும் லட்சக்கணக்கான ஆன்டிபயோடிக் மாத்திரைகள் முறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு முதல் 2012 வரை இந்தியாவில் விற்கப்பட்ட ஆன்டிபயோடிக்குகளில் 64 சதவீதம், மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் அனுமதியைப் பெறவில்லை. இந்தியாவில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகப் பல புதிய மருந்துகள் விற்பனையும், விநியோகமும் செய்யப்படுகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வெறும் 4 சதவீத மருந்துகள் மட்டுமே இவ்வாறு அனமதியின்றி விற்கப்படுகின்றன.

ஆன்டிபயோடிக்குகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஏற்கனவே இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போது சட்ட விரோதமாக ஆன்டிபயோடிக்குகள் விற்பனையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த அனுமதி பெறாத ஆன்டிபயோடிக்குகள் 500 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 3,300 பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. இவற்றில், 12 பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்...