02/09/2023

ஊட்டிக்கு விரைந்து இருக்கும் காவல்துறை. சீமான் இன்றிரவு கைதாகிறார்...

 


ஊட்டியில் தற்போது பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் சீமான் மேடையை விட்டு இறங்குகையில் கைது செய்யப்படுவார் என்று தகவல்...

வீரலட்சுமி என்று பெயரை மாற்றி ஏமாற்றி கொண்டிருக்கும் ஆனந்தி நாயுடுவால் பாதிக்கப்பட்டு நீதி கேட்கும்... அபலை ஆண் இனத்தின் கண்ணீரை துடைக்குமா திராவிடம்...

 


இன்பநிதி பாசறையாம் மானங்கெட்ட பயலுங்க...

 


சாராய வியாபாரி ஸ்டாலின் கலாட்டா...

 


திருட்டு திமுக ஸ்டாலினும்... மக்கள் விரோத காவல்துறையும்...

 


சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


வந்தேறிகள் கலாட்டா...


விஜயலட்சுமி சொல்வது 100 சதம் உண்மை - தமிழா தமிழா பாண்டியன்...


500 நாடுகள்கு மேல சுற்று பயணம் செய்தவர் குருமா ன்னு சொன்ன பிராடு கம்னாட்டி தானே நீ...

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...

 


இனிய இரவு வணக்கம்...

 


கடந்து போறது தான வாழ்க்கை.... எத்தன தடவடா கடந்து போக😶

 


திமுக நீட் பித்தலாட்டக்காரன் உதயநிதி...

 


சித்தர்கள் பறப்பது எப்படி?

 


நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம்.

சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா.

அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல்.

உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது?

அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறு நடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப் புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணர முடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது.

சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும், புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக் கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்...

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும்.

இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே.. அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றனவா?

 


ஆந்திராவில் ஆண்டுக்கு 150  தெலுங்கு படங்கள் வெளிவருகின்றன.

கர்நாடகாவில் 90  கன்னட படங்களும், கேரளாவில் 80  மலையாள படங்களும் மும்பையில் 220  இந்தி படங்களும் தயாராகி வெளிவருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளி வருகின்றன. அதுவும் வெளியில் தெரிய மாட்டேன் என்கிறது.

உலகில் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. நேரடி மொழிப படங்கள், ரீமேக் படங்கள் , டப்பிங்  படங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத ஒரு வகை படங்களே வெளிவருகின்றன. அவற்றை நாம் மாற்றார்  படங்கள் என்று சொல்லலாம்.

மாற்றார் வகை படங்களே தமிழில் ஏராளமாக வெளி வருகின்றன. ஒரு படம் தமிழ்ப்படம் என்று சொல்ல வேண்டுமானால், குறைந்தபட்சம் அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் ஐந்து சதவீதம் பேர் தமிழர்களாக இருக்க வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் கதாநாயகன், கதாநாயகியாவது தமிழர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியா இருக்கிறது. எம்ஜிஆர், படமும், ரஜினி படமும், கமலஹாசன் படமும் தமிழ்ப்படங்கள் இல்லை. அவை  மாற்றார் நடித்த  தமிழ்ப்  படங்கள் . கதாநாயகன் எம்ஜிஆர். மலையாளி, கதாநாயகி ஜெயலலிதா கன்னடச்சி என்றால் அது எப்படி தமிழ்ப் படம் ஆகும்?

ரஜினி கன்னடன், ஐஸ்வர்யா ராய் மும்பைச்சி என்றால் அது எப்படி தமிழ்ப்படம் ? கமலஹாசன் ஆரிய பிராமணன், பூஜா குமார் பெங்காலி என்றால் அது தமிழ்ப்படமா ? இவை மாற்றார் நடித்த தமிழ்ப்படங்கள். மாற்றார் வகை தமிழ்ப்படங்கள்  .

அப்படிப்பார்த்தால், எம்ஜிஆர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை, ரஜினி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. விஷால் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்படங்களில் இவர்கள் நடிக்கவும் முடியாது. அப்படியானால் சிவாஜி கணேசன் நடித்த படங்கள்? கணேசன் தமிழன் தான். ஆனால் கூட நடிக்கும் நாயகி வாணி ஸ்ரீ , கே. ஆர். விஜய,   ஜெயலலிதா , சரோஜாதேவி இவர்கள் எல்லாம் தமிழச்சிகள் இல்லையே. இயக்குனர் தமிழராக இருக்க மாட்டாரே... அப்படியானால் அது எப்படி தமிழ்ப்படமாகும் ? சிவாஜியும் அதிக அளவில் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மாற்றார் வகை தமிழ்ப்படங்களில் நடித்துக் கொடுத்து இருக்கிறார் அவ்வளவுதான்.

அப்படியானால் உண்மையான தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றனவா என்றால் அதிகம் இல்லை. வருடத்துக்கு நான்கு வருகிறது. அவையும்  வெளியே தெரியாமல் வந்தவழி போய் விடுகிறது. இதில் தான் மாற்றம் வேண்டும்.

தமிழர் நடித்து, தமிழர் இயக்கும், தமிழ்ப்படங்கள் வெளிவர வேண்டும். அப்போது தான் தமிழ் மண்சார்ந்த கதைகள் படங்களாக வெளிவந்து தமிழர் மனத்திரையை விரிவுப்படுத்தி செம்மைப்படுத்தும். அந்த நாளுக்காக  காத்திருப்போம்...