14/01/2019

தேவரடியாரும் தேவதாசிகளும் சில கல்வெட்டுச் சான்றுகள் - ம.செந்தமிழன்...


இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர்(வடுகர்) என வகைப்பிரிப்பது தவறு.

எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல.

தேவரடியாரும் தேவதாசிகளும்...

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர்(வடுகர்) ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’.

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

 
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’.

(கர். கல் VAK 105).

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்..

’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22).

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.

பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே.

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்...

பொங்கல் என்பது மதம் சார்ந்த பண்டிகை அல்ல...


தமிழ்த்தேசிய இனம் சார்ந்த பண்டிகை..

உழவர் பெருவிழா..

தமிழர் திருவிழா..

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்...

சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மாவை நீக்கியதற்கு ஆதரவாக கமிட்டியில் வாக்களித்த உச்ச நீதிமன்ற நீதிபதி Sikri க்கு அவர் பதவி காலம் முடிந்ததும் Commonwealth Secretariat Arbitral Tribunal ல் மத்திய அரசு உயர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...


அவர் ஓய்வு பெற்று முடிந்ததம் வரும் மார்ச் 6 ஆம் தேதி அவர் Commonwealth Secretariat Arbitral Tribunal ல் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

உணர்வு அலைவரிசை...


1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...

பூமி தட்டை என செய்தி பரப்பும் நண்பர்களுக்கு இதோ எம் தமிழன் அன்றே உருண்டை என்று சொன்ன ஆதாரம்...


திமுக ஸ்டாலினும் ஏமாற்று வேலைகளும்...


10% இட ஒதுக்கீடு தொடர்பாக  அதனை ஆதரித்து வாக்களித்த  இடதுசாரிகளை கேள்வி கேட்கும்  திமுக  அதிமேதாவிகள் அதனை ஆதரித்து வாக்களித்த  கூட்டணி  கட்சி தலைமையான காங்கிரஸ் மீது  எந்த கேள்வியும் கேட்பதில்லை...

விவசாயம் காப்போம்...


ரசாயன உரம், தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சாக மாறிய நிலத்தை சரி செய்ய, அந்த நிலத்தில் வெட்டிவேர் பயிரிட்டால் போதும். நிலத்தில் படிந்துள்ள காட்மியம், பாதரசம் போன்ற கடின உலோக பாதிப்புகளை கூட வெட்டி வேர் உறிஞ்சி எடுத்து மண்ணை வளமாக்கி விடும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தமிழர் திருநாள் தைப்பொங்கல் - ஓர் சிறப்பு வரலாறு...


ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும்.

ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.

பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.

தமிழர் தேசிய விழா...

பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.

உழவர் திருநாள்...

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்க வைக்கும் முறை...

தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.

நான்கு நாள் திருவிழா...

போகி பண்டிகை : போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள் இந்திர விழாவை முடித்து சூரிய வழிபாடை தொடர்ந்தனர்.

அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல் : தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்: உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காணும் பொங்கல் : இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.

பொங்கலை ஒத்த பிற விழாக்கள் : வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்...

2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது. சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது. அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.

2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆகத்து 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது..

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்...

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை...

காப்பு கட்டுதல் பிண்ணனி நீங்கள் அறியாத தகவல்கள்...


நோயை எதிர்த்து வாழ...


1 பசித்த பின் சாப்பிட வேண்டும்.
2 ஜீரணமாகாத வேளையில் அதிகம் சாப்பிட கூடாது.
3 பகலில் அதிகம் தூங்கக் கூடாது.
4 அதிகாலையில் துயில் எழ வேண்டும்.
5 அழுக்கு ஆடைகளை அணியக் கூடாது.
6 காற்றோட்டம் இல்லாத இடத்தில் வசிக்கக் கூடாது.
7 அதிக நேரம் கண் விழித்து இருக்க கூடாது.
8 எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி அளவு கடந்த சிந்திக்கக் கூடாது. இவற்றின் காரணமாக பல நோய்கள் தோன்றக் கூடும்.
9 படுக்கையை விட்டு எழுந்ததும் சிறிது இஞ்சியை சாப்பிட வேண்டும்.
10 மதிய உணவு முடிந்ததும் சிறிது சுக்கு சாப்பிட வேண்டும்.
11 இரவில் படுக்கச் செல்லும் முன்பு கடுக்காய் சாப்பிட வேண்டும்.
12 அதிகாலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஓடுதல், நீந்துதல் ஆகியவையும் நல்ல உடற்பயிற்சியே.

இவற்றை ஒழுங்காக கடைபிடித்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்...

மக்கள் விரோத ஊடகங்கள்...


வளரி தமிழகத்தில் மட்டும் தான்...


வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன் படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

"வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்)

இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.

ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது.

ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம்.

இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்...

தமிழர்களின் முதல் எதிரி திமுக தான்...


மரவள்ளிக் கிழங்கு.....


மரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது.

இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.

மரவள்ளிக் கிழங்கு என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் சவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது.

இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும்.

"கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, கையிட்டி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைசீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்சு மற்றும் இந்தோனேசியா ஆகும்.

உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் கே(ஹெ)க்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு கெக்டேருக்கு சராசரி 10 தொன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் தொன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் கெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் கெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது...

பாச பந்தங்கள் வெறும் இராசயனங்களே...


மனிதனிடம், பாசபந்தம், சக மனிதனை நம்புவது, தாய்ப்பாசம், இணைபிரியாமல் நீண்டநாள் தம்பதியர்களாய் வாழ்வது போன்ற சிறப்பான குணங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் ஆக்சிடோசின் என்ற நரம்பு செல்களைத் தூண்டி செயல்படுத்தும் சிறிய பெப்டைடு பொருளால் நிகழ்கிறது. சாதாரணமாக இது உடலில் மிகக் குறைவாகவே இருந்தாலும், பாலூட்டும் தாயிடம் அதிகம் காணப்படும்.

ஆக்சிடோசினை உடலில் உற்பத்தியாகாமல் தடுக்க முடியும். அப்படித் தடுத்தால் மனிதரிடம் ஒட்டுறவு குறைந்துவிடும்.

பறவைகளிடம் ஆக்சிடோசினைப் போலவே மீசோடோசின் என்று ஒரு பொருள் மூளையில் காணப்படுகிறது.

கூட்டமாக சகோதரப் பாசத்துடன் வாழ்வதற்கு மீசோடோசின் தேவை. மீசோடோசினை உற்பத்தியாகமல் தடுத்துவிட்டால் குறிப்பிட்ட பறவையானது சொந்தங்களிடமிருந்து பிரிந்து வேறு கூட்டத்தில் சேர்ந்துவிடுகிறது.

இதை சீ(ஸீ)ப்ரா ஃபிஞ்ச் என்ற பறவைகளை வைத்து நிரூபித்திருக்கிறார்கள்.

ஆக்சிடோசினுக்கு முந்தித் தோன்றியது மீசோடோசினாக இருக்கலாம் என்றும்; இது மீன் போன்ற வாயில் தாடை வத்திருக்கும் ௦.

உயிரினங்கள் தோன்றியபோதே கிட்டத்தட்ட 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, உயிரினங்களில் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதை இன்டியானா பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார்...

வைகுண்டராஜன் நண்பனின் ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் பெற்றதா நாதக.?


திராவிடம் என்பது...


தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் சொல்...

தமிழனை இளித்த வாயாக மாற்ற தேவை திராவிடம் என்ற சொல்..

திராவிட இயக்கத்தின் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...

கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை,
மேலவளவு,
கொடியன்குளம்,
தாமிரபரணி,
பரமக்குடி,

என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும்...

திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள்..

தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

திமுக ஸ்டாலினும் ஏமாற்று வேலைகளும்...


மனிதன் வேறு இயற்கை வேறு அல்ல...


ஓர் குடும்பத்தில் நீங்கள் ஒரு நபர்...

மனிதர்கள் இயற்கையை பார்வையாளர்கள் போலவே பார்க்கிறார்கள்..

அதுதான் மனிதர்கள் இயற்கையை பிரிந்து செல்கிறார்கள்...

இயற்கைக்கு ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மனிதனுக்கும் ஏற்படும்
அது #எதுவாக இருந்தாலும் சரி..

அனைத்திலும்  வாழ்வு மட்டுமே இங்கு நிலை( மையம் ) கொள்கிறது...

போஸ்னியன் பிரமிடு...


போஸ்னியாவில் உள்ள இந்த மலை. பொஸ்னியாவின் உள்ளே சரோஜெவோவின் வடமேற்கில் 15 மைல் தொலைவில் உள்ள விசோசோ என்ற சிறு கிராமத்தில் உள்ளது.இது உலகின் மிகப்பெரிய பழமையான பிரமிடாக உள்ளது.

போஸ்வானிய பிரமிட், இது இயற்கை மலைகள் போன்ற பிரமிடு வடிவத்தில் மின்காந்தவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. வடிவங்கள் மற்றும் மலைகளில், வழக்கமாக ஒரு கிடைமட்ட நோக்குநிலை உள்ளது. டாக்டர். ஓல்ட்ஃபீல்ட், போஸ்வானிய பிரமிடுக்கு மேலே வலுவான மின்காந்த புலங்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமான செயல்பாட்டை பதிவு செய்தார். இது அசாதாரணமான உண்மை என்று நம்பப்படுகிறது.

டாக்டர். ஸ்லோபோடான் மிஸ்ராக் என்பவர், 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளின் வல்லுனர்களின் குழுவொன்றை வழிநடத்திச் சென்றார், இது போஸ்வானிய பிரமிடுகளின் சிக்கலான கதிரியக்க அளவை 28kHz இன் அசாதாரண மீயொலி அதிர்வெண்ணாக அளவிடப்பட்டது, இது போஸ்ரியின் பிரமிட் மேல் இருந்து வெளிவந்தது. இது டாக்டர் ஓல்ட்ஃபீலின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்துகிறது.

சோதனையின் படி, போஸ்வானிய பிரமிடுக்கு வெளியேயுள்ள "ஆற்றல் பீம்" தோற்றம் 2440 மீட்டர் ஆழத்தில் பிரமிடுக்கு கீழே இருந்தது. ஒரு ஆழமான மற்றும் எதிர்மறை அயனிகளில் செறிவூட்டப்பட்ட ஒரு உலோக தகடு 10 கிலோவாட் மின்சக்தியை மின்சாரம் உற்பத்தி செய்வதாக இந்த ஆய்வறிக்கை நிரூபித்துள்ளது. குரோஷியன் விஞ்ஞானிகள் 2010 ஆம் ஆண்டில் 4.5 மீட்டர் ஆரம் கொண்ட சூரிய ஒளியை கண்டுபிடித்தனர், இது போஸ்வானிய பிரமிடு மேல் இருந்து உருவானது.

உலகெங்கிலும் இருந்து வந்த வல்லுனர்கள் பொஸ்னியாவுக்கு வந்து ஆய்வு செய்தனர் மற்றும் பிரமிடுகளின் மேல் உள்ள அல்ட்ராசவுண்ட், இன்ஃப்ராசவுண்ட், அகச்சிவப்பு மற்றும் மின்காந்த புலங்கள் தெரியாத தோற்றத்தின் அளவைக் கணக்கிட்டனர். கண்டறிந்த அதிர்வெண்களில் ஒன்று பின்வருமாறு:

28.4 kHz அதிர்வெண் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் 7.83 ஹெர்ட்ஸ் என்ற Schumann அதிர்வு கண்டறிந்தனர், இது மனிதர்களின் உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்க்கு உகந்ததாகும்.

ஸ்குமன் அதிர்வு என்பது எவ்வாறு தொலைதொடர்பு வேலை என்பதை விளக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இது பூமியின் காந்தப்புலத்திற்கும் மனித காந்த புலத்திற்கும் இடையிலான இணக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள், போஸ்வானிய பிரமிடின் சுரங்கங்கள் மற்றும் நிலத்தடி தளங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட பல்வேறு அளவீடுகள், எதிர்மறை அயனிகள் (அணுக்கள் அல்லது அணுவின் மூலக்கூறுகளில் புரோட்டான்களை விட அதிக எலக்ட்ரான்கள் கொண்டிருக்கும் மூலக்கூறுகள் கொண்டிருக்கும்) மிகப்பெரிய செறிவுகளைக் காட்டியுள்ளன.

மிக முக்கியமாக, சமீபத்திய சோதனைகள் எதிர்மறை அயனிகள் தூசி, ஸ்போர்ட்ஸ், பூஞ்சை மற்றும் மகரந்தம் ஆகியவற்றைக் காற்றோட்டமாக மாற்றியமைக்கின்றன, இது மனிதர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கிறது. போஸ்வானிய பிரமிடின் நிலத்தடி சுரங்கங்களில் விஜயம் செய்த ஆயிரக்கணக்கானோர் எதிர்மறை அயனிகளின் தாக்கத்தால் மகத்தான  மாற்றத்தை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர்.

2012 இல், இத்தாலிய தொல்லியல் டாக்டர் ரிக்கார்டோ பிரட் மற்றும் நிகோலோ பிஸ்கொண்டி ஆகியோர், போஸ்னியன் பிரமிடு உள்ளடக்கிய தொகுதிகள் உள்ள கரிம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உக்ரேனில் கியேவில் உள்ள ஆய்வகத்தில், கார்பன்- டேட்டா ஆய்வில்,  போஸ்னிய பிரமிட் வயது 24,000 ஆண்டுகள் பழமையானது என்றனர்.

பண்டைய நினைவுச்சின்னங்களைப் புரிந்து கொள்வதற்காக நாம் அவற்றை மூன்று பகுதிகள் மூலம் பார்க்க வேண்டும்: உடல், ஆற்றல் மற்றும் ஆன்மீகம். நமது அறிவியல் கருவிகள் மிக பழமையான பிரமிடுகளின் நோக்கத்தை விளக்குவதற்கு போதுமானதாக இல்லை. முக்கிய விஞ்ஞானிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் தங்களது கடுமையான அணுகுமுறையுடன், அறிவியல் முன்னேற்றத்திற்கு பெரும்பாலும் முக்கிய தடையாக உள்ளனர்.

நாம் கடந்த காலத்தை முழுமையாக புரிந்து கொள்ள விரும்பினால், உடல் மற்றும் ஆன்மீக அறிவியல் இடையே இடைவெளி பாலமாக இருக்க வேண்டும். எகிப்திய இலக்கியங்களில் இந்த பழமையான பிரமிடு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. போஸ்னியாவில் இயற்கையியல், ஆற்றல் மற்றும் ஆவிக்குரிய பரிமாணங்கள் பற்றிய ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கும் நமது வரலாறு மாறி வருவதையே காண்பிக்கிறது.

நம்முடைய ஆரம்பங்களை மாற்றுவதன் மூலம் அல்லது ஆரம்பத்தில் எதைப் புரிந்து கொள்வது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், நம் தற்போதைய மற்றும் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக மாற்றிக்கொள்ளலாம்...

பதில் சொல்லுங்கள் மேடை பேச்சாளர் சீமான் அண்ணே...


நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்...


நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..

அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....

நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....

உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காத வரை.

அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...

அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..

நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..

எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..

முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...

உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....