09/03/2019

பவளப் படிப்பாறை...


பவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை ஒளிபுகக் கூடிய, வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன.

இப் பகுதிகள், படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும், போதிய அளவு உணவும், ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.

இவற்றின் வளர்ச்சிக்கு, ஊட்டம் குறைந்த, தெளிந்த, மிதவெப்பம் கொண்ட, ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள் (coral polyps) இருக்கும்...

தேமுதிக பிரேமலதா ஒரே ஒரு பேட்டி... திமுக விற்கு இருந்த கொஞ்ச மரியாதையும் காலி...


https://youtu.be/ipJYTwXRDNw

Subscribe The Channel For More News...

லார்ட் லபக் தாஸ் யார்?


உண்மையில் லார்ட் லபக் தாஸ் ஒரு ஆங்கிலேயர் கிடையாது...

இந்த சொல் 1900 களில் சென்னையில் பெரிய நிலம் வாங்கி வசதியாக வாழ்ந்த குஜராத்திகளைக் குறிக்கும்.

(அந்த நிலம் இன்றும் பார்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. குஜராத்திகள் இப்போதும் இருக்கிறார்கள்).

அவர்கள் பெயர் லாட் என்று தொடங்கி தாஸ் என்று முடியும்.

இன்றும் L.G.N road, V.N.Doss road, Mohan doss road, Gopal doss road ஆகியன இவர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன...

எங்களின் ஆற்றல்மிக்க அதிகாரத்தை பார்க்க விரும்புகிறீர்களா.?


நினைவுகொள் அரசாங்கமே, நாங்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணித்து உங்களின் அதிகாரத்தை அழிப்பதற்கு வந்து கொண்டிருக்கிறோம்..

உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை...


இரசாயன ஆயுதங்கள் பிரயோகம் என்பது கி.மு. 400 ஆம் ஆண்டு முதல் பழமையானது.

கிமு 400ம் ஆண்டில் ஸ்பார்ட்டன் கிரேக்கப்படை எதிரிகள் மீது கந்தகப் புகையை பிரயோகம் செய்தது. சாவு விவரம் தெரியவில்லை.

கிபி 256: தற்போதைய சிரியாவில் குறிப்பிட்ட இந்த பண்டைய ஆண்டில் சசானிய பெர்சிய முடியாட்சி சுரங்கத்தில் பதுங்கியிருந்த ரோமானிய வீரர்கள் மீது விஷ புகையை பிரயோகித்துள்ளனர்.

1346: கிரிமியாவில் இத்தாலி வணிக குடியேற்றவாதிகள் மீது பிளேக் நோய் தொற்றிய பிணங்களை கொண்டு போடப்பட்டுள்ளது.

1500களில், ஸ்பானிய அராஜக காலனிய காலக்கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குடிமக்கள் மீது உயிரியல் போர் தொடுத்து லட்சக்கணக்கானோரை அழித்தது.

1763 ஆம் ஆண்டு போன்டியாக் போராளிகள் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ராணுவ தலைமை ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் அம்மை நோய் ஏற்படுத்தும் ஒரு வித ரசாயனம் தோய்க்கப்பட்ட போர்வைகளை அந்த நாட்டு உண்மையான குடிமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தார். ஃபோர்ட் பிட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது இந்த கொடூரமான போர்வை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1789ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவின் பூர்வ குடிகளை விரட்டியடிக்க அம்மை நோயை பிரிட்டிஷார் பரப்பியதாக கூறப்படுவதுண்டு.

1845ஆம் ஆண்டு நியூசீலாந்தில் மயோரி போராளிகளை அடக்க நச்சு வாயுவை பிரிட்டன் படைகள் பிரயோகம் செய்துள்ளனர்.

1907 ஆம் ஆண்டு ரசாயன ஆயுதங்கள் ஹேக் மாநாட்டில் தடை செய்யப்பட்ட போது அமெரிக்கா அதில் பங்கேற்கவில்லை.

1914 - 18: முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஒய்பிரஸ் போரில் ஜெர்மானியப்படை குளோரின் வாயுவை எதிரிகள் மீது பிரயோகம் செய்தது. இதில் 85,000 பேர் மரணமடைந்தனர். சுமார் 12 லட்சம் பேர் இனம் புரியாத நோயிலும், காயத்துடனும் வாழ்ந்தனர்.

1919 - 21: ரஷ்ய சிவில் யுத்தத்தில் புரட்சிகர போல்ஷேவிக் சோஷலிஸ்ட்கள் போராளிகள் மீது நச்சு வாயுவை பிரயோகித்தனர். ராயல் விமானப்படை போல்ஷேவிக்குகள் மீது இதே போன்ற தாக்குதலை நடத்தினர்.

1920: ஸ்பானியர்களின் மொராக்கோவில் பிரென்ச் மற்றும் ஸ்பெயின் படைகள் போராளிகள் மீது மஸ்டர்ட் வாயுவை பிரயோகம் செய்துள்ளனர்.

அதேபோல் இதே ஆண்டில் இராக்கின் அராபிய மற்றும் குர்திஷ் விடுதலை போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள பிரிட்டன் அறிவுறுத்தியது. "நாகரிகமற்ற இனக்குழுகள்" மீது நச்சு வாயுவை செலுத்த பிரிட்டன் "அரசியல் மேதை" வின்ஸ்டன் சர்ச்சில் "பலமாக" பரிந்துரை செய்தார்.

1935: எத்தியோப்பியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய இத்தாலி மஸ்டர்ட் வாயுவை செலுத்தியது.

1937: சீனாவை ஆக்கிரமிக்க ஜப்பான் படைகள் உள் நுழைந்தது. சீனாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் ரசாயன ஆயுதங்களையும் பிற தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தியது.

1941: அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தலையிட்டது. அதிபர் ரூஸ்வெல்ட் "நாங்கள் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்" என்றார்.

1945ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் மீது வதை முகாமில் சைக்ளன் - பி என்ற ரசாயனப்புகையை செலுத்தினார். ஜப்பானிய ராணுவமும் இதனை பயன்படுத்தியது.

1947: அமெரிக்கா நோய் நுண்மம் அடங்கிய போர் ஆயுதங்களை வைத்திருந்தது. அதிபர் ட்ரூமன் ஜெனீவா உடன்படிக்கையிலிருந்து விலகினார்.

1949: அமெரிக்க நகரங்களில் ராணுவம் உயிரியல் ஆயுதங்களை ரகசியமாக பரிசோதனை செய்தது.

1951: அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவில் காளான் ஆயுதங்களைக் கொண்டு ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை கடுமையாக விரட்டி அடித்தனர்.

1952: ஜெர்மானிய கெமிக்கல் ஆயுத ஆய்வாளர் வால்டர் ஷ்ரெய்பர் டெக்சாசில் பணியாற்றி வந்தார். இவர்தான் நாஜி வதைமுகாமின் பிரதான காரணகர்த்தா என்பது தெரிந்தவுடன் அர்ஜென்டீனாவுக்கு தப்பி ஓடினார்.

1956: அமெரிக்க ராணுவ மேனுவல் வெளிப்படையாக உயிர்-ரசாயன போர் முறை தடை செய்யப்படவில்லை என்று அறிவித்தது. ஜெரால்ட் ஃபோர்ட் இது குறித்து கொள்கை அளவில் மாற்றம் கொண்டுவர துணையாக இருந்தார். அதாவது அமெரிக்கா ரசாயன் ஆயுதங்களை முதலில் பிரயோகிக்க அதாரிட்டி வழங்கப்பட்டது.

1959: முதலில் ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவில் தோற்கடிக்கப்பட்டது.

1961: அதிபர் கென்னடி நிர்வாகம் ரசாயன ஆயுதங்களுக்கான பட்ஜெட்டை 75 மில்லியன் டாலர்களில் இருந்து 330 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது.

1962: கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அமெரிக்க விமானங்களில் ரசாயன ஆயுதங்கள் நிரப்பப்பட்டன.

1968: அமெரிக்க ராணுவ தலைமைப்பீடமான பென்டகன் ஆர்பாட்டக்காரர்கள் மீது ரசாயன பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று கோரியது. மேஜர் ஜெனரல் மெடாரிஸ் அப்போது குடிமக்கள் ஆர்பாட்டம் செய்யும்போது ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பது இரண்டு விதத்தில் நன்மை பயக்கும் என்றார். ஒன்று அவர்களை பயமுறுத்துவது, மற்றொன்று ரசாயன ஆயுதங்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் அது உதவும் என்று விசித்திர யோசனை ஒன்றை முன்வைத்தார்.

1969: உத்தா ரசாயன ஆயுதங்கள் விபத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி.

1971: வியட்நாம் போரின்போது வியட்நாமில் சுமார் 6 லட்சம் பேருக்கு சோறு போட்ட வயல்வெளிகளை ரசாயன ஆயுதம் கொண்டு அழித்து ஒழித்தது அமெரிக்கப் படை.

தெற்கு வியட்னாமிய போராளிகள் மீது வெள்ளை பாஸ்பரஸ் கிரனேட்கள் பிரயோக்கப்பட்டன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக உருவான பாரா மிலிட்டரி படைகளிடம் அமெரிக்கா பன்றிக் காய்ச்சல் வைரஸ்களை கொடுத்து கியூபாவில் பரப்ப சதி செய்ததாக செய்தித்தாள் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

1979: ஜிம்பாவே விடுதலைப்போரின்போது கடைசி கட்டத்தில் ருடீசியாவின் வெள்ளை அரசு கறுப்பரின மக்கள் மீது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய நோய் கிருமியை பரப்பியது.

1984: இந்தியாவில் போபால் விஷ வாயு துன்பம் நிகழ்ந்தது. காரணம் அமெரிக்க ரசாயன நிறுவனம்.

1985: ஈராக்கிற்கு அமெரிக்கா ஏகப்பட்ட ரசாயன ஆயுதங்களை வழங்கியது.

இப்படியே இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது வரை கூறிகொண்டே போகலாம்.

கடைசியாக சிரியாவில் போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பிரயோக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சிரியா போன்ற நாடுகளுக்கு ரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியுமா?

உலகின் பணக்கார, ராணுவ பலம் மிக்க நாடுகள் அவ்வப்போது வியாபாரம் செய்ததன் விளைவுதான் இந்த கொடூரம்...

பாமக இது வரை வாயே திறக்கவில்லை... இது தான் தமிழகத்திற்கும் தமிழினத்தின் நலனுக்காக வைத்த கூட்டணியா.?


பாஜக தன் கூட்டணி கட்சி என்று வாய் திறக்காமல் அமைதி காக்க போகிறதா.?

அல்லது தமிழினத்தாற்காக எப்போதும் போல் எதிர்த்து உரிமையை மீட்கப் போகிறதா.?

பொறுத்திருந்து பார்ப்போம்...

கொசுக்கள் ஏன் மனிதனைக் கடிக்கின்றன ?


கொசுக்களின் ஆண், பெண் இனச் சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்களின் வயிற்றில் முட்டைகள் உருவாகின்றன. இம்முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ரத்தத்திலிருந்து கிடைப்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனைக் கடிக்கின்றன.

மனிதரின் உடலின் வெப்பம், வியர்வை, உடல் வாசனை, மனிதர்களின் சுவாசத்திலிருந்து வெளியேறும் கரியமில வாயு, மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சில ஒளிக்கதிர்கள் போன்றவற்றைக் கொண்டே கொசுக்கள் மனிதரின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன.

கொசுக்கள் சில மனிதர்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்ச அதிக விருப்பம் கொள்கின்றன.ஆனால் சில மனிதர்களைப் புறக்கணித்து விடுகின்றன.

இது ஏன் என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. மனிதர்கள் உபயோகிக்கும் எண்ணெய், வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம் போன்றவையும் கொசுக்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுக்கவோ, அல்லது நிராகரிக்கவோ காரணமாக அமையலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

இவை தவிர, கறுப்பு போன்ற அடர் நிறத்தில் உடை அணிந்தவரை விட வெள்ளை போன்ற வெளிர் நிறத்தில் உடை அணிந்தவரை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும்...

அதிமுக - தேமுதிக பற்றி நாதக சீமான் பேட்டி...


https://youtu.be/yN4KZD2iHFA

Subscribe The Channel For More News...

தமிழ்ச் சமூகம் உலகமயம் மற்றும் இந்தியம் ஆகிய ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளுக்கு ஆட்பட்டிருக்கிறது...


இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து மீள்வதற்குத்...

தமிழ்த் தேசிய விடுதலை ஒன்றே வழியாகவும்.. தீர்வாகவும் உள்ளது...

வன்முறையும் உலக அரசியலும்...


நெடுந்தூரம் பறந்து செல்லும் பறவைகள, வழி தவறாமல் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு எவ்வாறு திரும்புகின்றன?


தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் பறந்து செல்லும் பறவைகள் சூரிய ஒளி, காற்றின் திசை இவற்றைக் கொண்டே தாங்கள் பயணித்த பாதையை அடையாளம் கண்டு கொள்வதாக வெகுநாட்கள் நம்பப்பட்டு வந்த்து.

இதில் ஒரளவு உண்மை இருப்பினும், நெடுந்தொலைவில் இருக்கும் தங்கள் இருப்பிடத்திற்கான சரியான பாதையை அடையாளம் காண பறவைகளுக்கு வேறொரு ஆற்றலும் உள்ளது.

அதாவது, பூமியின் காந்தப் புலனை (Earth's magnetic field) அடியும் ஆற்றலாகும். பறவைகளின் மூளையில் காந்தப்புலனைக் கொண்டு வழியை அறிந்து கொள்ளும் பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதி ஆகாய விமானத்தில் அமைந்துள்ள வழி அறியும் கருவிபோல (Compass) செயல்படுகிறது.

இது பூமியின் காந்த விசையை பறவைகளுக்கு உணர்த்தி, தான் பயணித்து வந்த நெடுந்தூரத்தை வழி மாறாமல் சென்றடைய உதவுகிறது.

பூமியின் காந்த விசையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து விட்டால் பறவைகள் தங்கள் வழியைக் கண்டுப்பிடிக்கத் தடுமாறும் என்ற உண்மையும் ஆராய்ச்சில் கண்டறிதப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு, சூரியனின் மேற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பினால் பூமியின் காந்த விசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

அப்போது பிரான்சு(ஸ்) நாட்டிலிருந்து தெற்கு இங்கிலாந்துக்குப் பறந்து சென்ற ஆயிரக்கணக்கான பறவைகள்,தங்கள் வழியை கண்டறிய இயலாமல் திசைமாறிச் சென்றது இதற்கு உதாரணமாகும்...

தண்ணீர் இரகசியம் : விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போய் விட்டீர்களே...


உப்புத் தண்ணீரை தூய குடி நீராக்கும் சூரிய அடுப்பு...


இத்தாலிய வடிவமைப்பாளர் ஆன காப்ரியல் டைய மோனிட் மாணவராக இருக்கும் போது மேற்கொண்ட பயணங்களில் பார்த்த உலக குடி தண்ணீர் பற்றாக் குறை வெகுவாகப் பாதிப்பை ஏற்படுத்தியது.

வடிவமைப்பாளர் என்ற முறையில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படி உருவானதுதான் படத்தில் பார்க்கும் சூரிய அடுப்பு.

உப்புத் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் கடற்கரை பகுதிகளில் இது வெகுவாகப் பயன் படும் எலியோடா மெச்டிகோ என்ற இந்த அடுப்பு ஒரு தலை கீழான காபி வடிகட்டி போல செயல் படுகிறது.

இந்த செராமிக் அடுப்பு மூன்று பாகங்களால் ஆனது. இதன் கருப்பான மேல் பாகத்தில் தான் உப்புத் தண்ணீர் ஊற்றப் படுகிறது. சூரிய ஒளியால் தண்ணீர் சூடாக்கப் படும் போது நீராவி உண்டாகிறது.

அப்போது ஏற்படும் அழுத்தம் நீராவியை மத்திய பாகத்தில் உள்ள ஒரு குழாய் வழியாக கீழே தள்ளுகிறது. இது அடிபாகத்தில் தண்ணீராக மாறி தேங்குகிறது.

வட்டப் பாத்திரம் போல இருக்கிற அடிப்பாகத்தை வெளியில் இழுத்து அதில் இருக்கும் நல்ல தண்ணீரை குடிக்கப் பயன் படுத்தலாம். இந்த அடுப்பில் ஒரு நாளைக்கு 5 லிட்டர்கள் நல்ல தண்ணீர் பெறலாம்.

டைய மோனிட் பானை போன்ற பொருட்களில் இருந்து இதை தயாரித்த போதிலும் தங்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இதை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதன் வெளியே இழுக்கும் வட்டப் பாத்திரம் போன்ற அடிப் பாகம் தலையில் சுமந்து போகும்படி இலகுவாக இருக்கிறது. கிராமங்களில் தலையில் சுமந்து செல்வது நடை முறையில் இருக்கிற ஒன்று.

பல பேர் வாழும் சமூகக் குடியிருப்புகளில் இதைப் பயன் படுத்தலாம் மருத்தவ மனைகளிலும் இது பயன் படும். தனிக் குடும்பங்களும் இதை பயன் படுத்தலாம். மொத்தத்தில் கடல் நீர் காணப் படும் இடங்களில் தண்ணீர் தட்டுப் பாட்டைப் போக்க கிடைத்த ஒரு வரப் பிரசாதம் இந்த சூரிய அடுப்பு...

எகிப்து பிரமிடு தமிழர்கள் கட்டியது... அதிர்ச்சியில் ஆடிப்போன தொல்லியல் ஆய்வாளர்கள்...


https://youtu.be/resXAaZ0I30

Subscribe The Channel For More News...

உடலை விட்டு வெளியேறும் ஆத்மா...


மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்...

திருட்டு இரயில் ஏறி வந்து... மக்களை ஏமாற்றி கொள்ளை அடிச்சு.. ஆசியாவிலே முதல் பணக்காரனாக மாறியவன் சொல்றான்...


பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு...


கல்லணை...

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம்...

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில்...

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில்...

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம்...

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்k முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்...

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும்...

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு...

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக்கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது  என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.

சித்தர்கள்...

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழ்க அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள்...

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

உலகின் தொன்மையான நகரம் பூம்புகார்...

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்...

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது...

இப்ப கூட தமிழர்களின் நலன் கருதி வடமாநிலத்தவனுங்கள 100 க்கு 102 மார்க் போட்டு ரயில்வே எக்சாம்ல பாஸ் பண்ணி விட்ருக்கோம்.. எதுக்கு எல்லாம் தமிழர்களோட நலனுக்கு...


தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?


இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய சுதந்திர போர்..

அப்படியானால் தமிழகத்தை தமிழன் தானே ஆளவேண்டும்.

ஏன் இன்றுவரை தமிழகத்தை ஆள்பவர்கள், ஆண்டவர்கள் பெரும்பாலோனோர் பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.?

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?

தமிழினமே சிந்தித்து விழித்தெழு...

ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் ஓராயிரம் மருத்துவர்கள் உள்ளனர்...


இன்னும் எத்தனை பிறப்பு இருப்பினும், எனக்கு தமிழனாகவே பிறக்க ஆசை. நம் உயிரான தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள்...


உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை...

கடவுள் - எல்லாம் கடந்தும், உள்ளே இருப்பவர்.

எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.

தமிழில் "ழ" என்ற அருமையான எழுத்து இருக்கிறது.

"ழ " வரும் சொல் எல்லாமே இனிமை. பழம், யாழ், குழல், குழந்தை, மழலை, வாழை...

இப்படி பல..

அடுத்து, மாதா-பிதா-குரு-தெய்வம் என்று சொல்வார்கள். அதனை பாருங்கள்.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.

தமிழின் முதல் உயிரெழுத்து "அ". அந்த எழுத்திலேயே ஆரம்பமாகியுள்ளன முதல் தெய்வங்கள் அம்மா, அப்பா.

இவர்களுக்கு அடுத்து குரு. அதாவது "அ" விற்க்கு அடுத்த எழுத்து "ஆ". ஆசிரியர் - தமிழின் இரண்டாம் எழுத்தில் ஆரம்பம்.

இவர்களுக்குப்பின் தெய்வம். அ,ஆ விற்கு பிறகு மூன்றாவது உயிரெழுத்து "இ" - இறைவன்.

அடுத்து, நமக்கு இன்றியமையாத தேவைகள் மூன்று. உணவு, உடை, உறையுள்.

இங்கும் முதல் தேவை உணவு. தமிழின் முதல் எழுத்து - "அ" - அன்னம்.

அடுத்து மானம் காக்க உடை. தமிழின் இரண்டாம் எழுத்து - "ஆ" - ஆடை.

மூன்றாவதாக வசிக்க உறையுள். தமிழின் மூன்றாம் எழுத்து - "இ" - இருப்பிடம்.

இப்படி பலபல பெரிய செய்திகளை தனக்குள் அடக்கிய மொழி தெய்வீகத் தமிழ்.

ஆகவே "தேன்மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்".

ஒரு உபரிச்செய்தி...

தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.

உதாரணம்...

ஒன்று - கடைசி எழுத்து "று" - ற் + உ.
இரண்டு - கடைசி எழுத்து - "டு" - ட் + உ
எண்ணூற்றி தொன்னுற்று ஒன்பது - கடைசி எழுத்து - "து" - த் +உ...

DMK / திமுக கருணாநிதி, ஸ்டாலின் திருட்டு வரலாறு...


https://youtu.be/e8J-rjQBLzM

Subscribe The Channel For More News...

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள் தான்...


மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் மாங்கோ என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக் கீசியர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக் கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள்.

பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால் தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக் கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக் கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை.

உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத் தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம். கோடையின் உச்சத்தில் மாம்பழத்தின் காலம் ஆரம்பிக்கும்.

கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்து போல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன.

சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த செவ்விளநீர் நிறத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் ஒரு சாதாரண விளாம்பழத்தின் அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய அளவு வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியது தான் என்று சொல்லலாம்.

அசாம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும் தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர்.

மாம்பழம் யோகத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் யோக தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே பழங்களின் அரசன் தான்...

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை...


அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்...


ஏனெனில் நாமே இந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட அடிமையாக்கப்படுகிறோம் என்றால், அடுத்த தலைமுறை..?

தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை...


அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.

வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்...