16/06/2018

வெண்டைக்காய்...


இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்...

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.

நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்...

பிஸ்கட்டுக்களும் உண்மைகளும்...



மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது....


இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா சுமித் வாழ்ந்த அலாசுக்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன.

உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது.

அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன.

இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள்.

ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது.

கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது,

இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.

வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது.

அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது.

இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை.

"பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது.

தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது.

பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது.

எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன.

ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும்.

இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

மரியா சுமித் யோனசின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை...

முன்பு ஜெர்மன், ஜப்பானுடனான பொருளாதார போர் தான் உலகப் போராக வெடித்தது என்பது வரலாறு...


இனி மேல் குடிநீரும் தென் ஆப்பிரிக்கா போல ரேசன் கடையில் தான் கிடைக்குமோ? அதிர்ச்சி தரும் நிதி ஆயோக் அறிக்கை...


இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். எதிர்வரும் 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும். ஆனால், தற்போதைய நிலையிலேயே தேசம் இருந்தால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும். அந்த காலகட்டத்தில் 40 சதவீதம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள்.

2020-ஆம் ஆண்டில் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர். 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமானதாக மாறி வருகிறது. தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் உள்ளது. நாட்டில் 52 சதவீத நிலப்பரப்பு வேளாண் பகுதிகளாக இருப்பதால் மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர். நீர்ப்பாசன திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இதில் யாரையும் குறை கூறுவதற்காக பதிவிடவில்லை...


தற்போதைய சூழ்நிலையில் மக்களின் அரசியல் வாழ்வியல் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்..

மக்களின் நலனுக்காக தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம் என கூறிய இவர்கள்,

தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக பயணித்து,

மக்களுக்கான அரசியலில் முன்னெடுக்கலாமே..!!

இதில் சிலரின் புகைப்படங்கள் இல்லாமல் இருக்கலாம், அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இந்த பதிவின் நோக்கமே மக்கள் நலனுக்காக அரசியல் என கூறும் அனைவரும், ஏன்..? ஒன்றிணைய மறுக்கிறார்கள் என்பது மட்டும் தான்...

சென்னை கொரட்டூரில் ரவுடி அரவிந்தனை நேற்றிரவு நடுரோட்டில் வைத்து 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது...


இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் மற்றும் உலோக பரிசோதனை நிபுணர் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்...


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 117 கிலோ எடையுடைய  சோமாஸ் கந்தர் சிலை இருந்தது. இந்த சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து புதிதாக சிலை செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஐஐடியின் உலோகப் பரிசோதனை நிபுணர் குழுவுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை எந்த வகையிலான உலோகத்தில் சிலைகள் செய்யப்பட்டன. சிலையில் எந்த அளவிற்கு தங்கம் உள்ளது என்பது குறித்து ஆவுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்...

கார்ப்பரேட்டின் அடிமைகள் தான் ஆளுங்கட்சியும்.. எதிர்க்கட்சியும்...


கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...


பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்து போராடிய பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் இடையன்வயலில் வெள்ளத்துரை என்பவருக்கு சொந்தமான 40அடி விவசாய கிணறு உள்ளது. கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த வெள்ளத்துரையின் மாடு தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதனைக்கண்ட  பாஸ்கர் என்பவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மாட்டை உயிருடன் மீட்டனர்.விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்....

ரஷ்யா செல்கிறார் வடகொரியா அதிபர்...


முதல் மனிதன் யார்? அவன் எப்படி இருந்தான்?


குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர, அந்த மனிதன் எப்படி இருந்தான் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

அதாவது முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids),  என்று சொல்கிறார்கள்.

ஆனால், இந்த ஹோமினிட் பற்றிய ஆய்வுகளில் ஒவ்வொரு முறை கிடைக்கும் ஆதாரங்கள் ஒவ்வொரு விதமாக இருப்ப்தால் ஆதிமனிதன் எப்படி இருந்தான் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை தெரியவில்லை...

தமிழகத்தில் நடப்பது உளவியல் போர்...


2000 கோடி சாலை டெண்டர் ஊழல் புகார்; ஸ்டெர்லைட்டை மூடியாச்சு என்ற அரசாணை மீதும் புகார்; இத்தனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதே...


இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே 18 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்புக்கு ஏற்பாடு..

தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைமையகம் இன்று 14.06.2018 விடுத்துள்ள அறிக்கையில்....

பதவி-அதிகாரத்திற்காக பஞ்சமாபாதகத்தையே செய்யும் குற்றவாளிகள் மற்றவரைக் குற்றம் தீர்க்கிறதென்ன?

குற்றம் இழைப்பவர்கள் நிச்சயம் குற்றம் தீர்க்கப்படுவார்கள் என்பதையே ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாமல் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக ஆட்சியில் இருத்தப்பட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

இதை நீடிக்கச் செய்வதற்காகவே தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர்.

இந்தத் தகுதிநீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லிவிடாதபடி செய்யப்பட்டுத்தான் பதவி-அதிகாரத்தில் ஒட்டவைக்கப்பட்டிருக்கிறார் பழனிசாமி.

அப்படிப்பட்ட முதல்வர் பழனிசாமி மீது மெகா ஊழல் புகார் இப்போது.

2000 கோடி சாலை டெண்டர் ஊழல் புகார்! ஸ்டெர்லைட்டை மூடியாச்சு என்ற அரசாணை மீதும் புகார்.

இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டுமே எப்படி?

அதனால்தான் 18 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்புக்கு ஏற்பாடு.

வேறு என்ன? அவர்களை நீக்கியது செல்லும் என்ற தீர்ப்புதான் பழனிசாமி அமைச்சரவையின் எதிர்பார்ப்பு.

மலைக்க வேண்டாம் தமிழக மக்களே.

அரசமைப்புச் சட்டம், அதன் உறுப்பு அமைப்புகள் அனைத்தையுமே கபளீகரம் செய்தவர்கள்.

உங்களிடம் இருக்கும் மிச்ச மீதியையும் கூட கபளீகரம் செய்து கொண்டிருப்பவர்கள்.

நீதியையா விட்டுவைப்பார்கள்?

மக்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை தனியொரு சபாநாயகர் நீக்க முடியும் என்றால், மக்களுக்கும் மேலானவரா அவர்?

மக்களாட்சி, ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டவரா அவர்?

2000 கோடி சாலை டெண்டர் ஊழல் புகார்; ஸ்டெர்லைட்டை மூடியாச்சு என்ற அரசாணை மீதும் புகார்; இத்தனையும் முதல்வர் மீதே.

இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே 18 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்புக்கு ஏற்பாடு.

பதவி-அதிகாரத்திற்காக பஞ்சமாபாதகத்தையே செய்யும் குற்றவாளிகள் மற்றவரைக் குற்றம் தீர்க்கிறதென்ன?

குற்றம் இழைப்பவர்கள் நிச்சயம் குற்றம் தீர்க்கப்படுவார்கள் என்பதையே ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

தேசிய - திராவிட கட்சிகளால் தமிழகத்தில் நடத்தப்படும் கார்பரேட் வியாபாரம்...


தேயிலை விவசாயத்தை காக்க படுக தேச பார்ட்டியின் முயற்சி பலனளிக்குமா?


நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது விவசாயமாகும். அதிலும் குறிப்பிடும்படியாக இருப்பது தேயிலை விவசாயமாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக தேயிலை விவசாயம் செய்து வந்து நிலையில்,கடந்த சில வருடங்களாக பசும் தேயிலைக்கு சரியான விலை கிடைக்காமல் தங்களுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை விற்று சமவெளி பிரதேசங்களுக்கு செல்லும் நிலைக்கு இங்கு உள்ள தேயிலை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் நீலகிரியின் பிரதான தொழிலான தேயிலை விவசாயம் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டு வருகிறது.இதனை கருத்திற்கொண்டு இங்கு உள்ள பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தேயிலைக்கு சரியான விலை கிடைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் புதியதாக உருவெடுத்திருக்கும் ‘படுக தேச பார்ட்டி’ எனும் அமைப்பு தேயிலை விலைக்கு தற்போது போராட்டங்களை கையில் எடுத்துள்ளது.இதன் முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும் நிலுவை தொகையை வழங்க கோரியும் குன்னுார் தேயிலை வாரியம் அலுவலகம் முன்பு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலதலைவர் ‘அய்யாக்கண்ணு’ தலைமையில் படுக தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை ‌தென்னிந்திய தேயிலை வாரியஅலுவலகம முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் படுக தேச கட்சியினரும் தேயிலை விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்களை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசுவிடம் பேச்சு வார்த்தை நடத்த அழைத்துச்சென்றனர். அங்கு 2 மணிநேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது,வரும் 15ந்தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்கப்படும் என செயல்இயக்குனர் பால்ராசு தெரிவித்ததை அடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.மேலும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவதாக போராட்டாக்குழுவினர் தெரிவித்தனர்.

இது குறித்து தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலதலைவர் ‘அய்யாக்கண்ணு’ கூறுகையில்,

தேர்தல் வரும் போது விவசாயிகள் நாட்டின்முதுகெலும்பு தேர்தல் முடிந்தவிட்டால் இந்தநாட்டின் அ‌‌‌டிமைகள். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கின்றனர்.பசுந்தேயிலைக்கு விலையாக ருபாய் 50 கொடுக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்தது. ஊட்டி தேயிலை என்று விற்பனை செய்தார்கள். நான்கு கிலோவிற்கு 120 ருபாய் ஆகிறது இத்துடன் ருபாய் 50 ‌ஐ சேர்த்து 200 ருபாய்க்கு விற்பனைசெய்யலாம் , இதனால் பொதுமக்களும் தேயிலைவிவசாயிகளும் பயன்பெறலாம் , தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் , படுக இன மக்கள் செய்யும்தேயிலை தொழில் அழியும் விளிம்பில் உள்ளது. படுக மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

நீலகிரியில் பல ஆண்டுகளாக இருந்து வரும் தேயிலை விலை பிரச்சனை தற்போது இவர்கள் எடுத்திருக்கும் முயற்சியால் முடிவுக்கு வருமா என்பதே இங்கு உள்ள மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது...

காளையன் என்ற பெயருடன் மீண்டும் வந்து விட்டது பழைய கோலிசோடா... ஓட ஓட விரட்டுவோம் கோக் பெப்சியை...


காலிஃப்ளவரின் மருத்துவ நன்மைகள்...


காய்கறிகளில் காலிஃப்ளவர் பார்பதற்கு பூ வடிவத்தில் அழகாக இருக்கும். இது பார்பதற்கு அழகாக மட்டுமல்லாமல் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ள காய்கறியும் ஆகும் .இதில் வைட்டமின் சி, மெக்னீசியம் போன்ற சத்துக்கள்  உள்ளன. இன்று நாம் காலிஃப்ளவரில் உள்ள நன்மைகள் பற்றி காண்போம்...

காலிஃப்ளவர் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும் ஆற்றல் உடையது. இதில் உள்ள குளுக்கோசினோலேட் என்றழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் , உடலின் நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது .

காலிஃப்ளவர் தினமும் உணவில் சேர்த்து கொண்டால் பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் நம்மை நெருங்காது. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி (புண்) நீக்கும் காரணிகள் உள்ளதால் , இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றது.

இரத்த அழுத்தம் பிரச்சனை உடையவர்கள்  காலிஃப்ளவர் சாப்பிடுவது நல்லது. மேலும் இந்த காய்கறியில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளதால் , உடல் செயல்பாடுகளை சீராக வைத்துக் கொள்ள துணைபுரிகின்றது .

காலிஃப்ளவரில் குறைந்த அளவு கலோரிகள் தான் உள்ளது. அதனால் இதனை உணவுடன் சேர்த்து கொள்வதால் உடலில் கொழுப்பு தன்மை சேர்வதில்லை.

இந்த காய்கறியை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவுகின்றது...

கார்ப்ரேட் எதிரி...



துறைமுக கார்ப்பரேட் சூழ்ச்சி வலையில் காரைக்கால் மக்கள், ரமலான் அன்பளிப்பு என்ற பெயரில் ஏமாற்றும் காரைக்கால் போர்ட் நிறுவனம்....


எதோ ஒரு பொருளை இலவசமாக கொடுத்து விட்டு கேன்சரையும் வழங்குகிறது....

எப்படி கதிராமங்களத்தில் ONCG செய்கிறதோ இலவசங்களுக்கு அடிமையான மக்களை தன்வசப்படுத்த அதே முறையை காரைக்கால் போர்ட் நிர்வாகமும் கையாளுகிறது....

புறக்கணியுங்கள் நாகூர் வாழ் மக்களே இந்த அன்பளிப்பு என்ற அரக்கனை...

விளம்பரம் ஒரு போதை..?


ஒரு பெண்ணை ஆண் வேடமிட்டு மணந்த பெண்... தீக்குளித்த பரிதாபம்...


காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆண்வேடமிட்ட திருச்சேந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், உண்மை அம்பலமானதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்தையா..! புதுச்சேரியில் தங்கி மகாமாத்மா காந்தி மருத்துவமனையில் ஸ்டோர் கீப்பராக பணி புரிந்து வந்தார்.

சம்பவத்தன்று மருத்துவமனைக்கு எதிரே அழகு நிலையம் நடத்திவந்த இளவரசி என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யஸ்வந்தையா தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய யஸ்வந்தையா சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தீயில் அவர் அணிந்திருந்த ஆடைகள் கருகியதால், யஸ்வந்தையா ஆண் வேடமிட்ட பெண் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து தீக்குளித்தது பெண் என மருத்துவமனையில் இருந்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த அழகு நிலைய பெண் இளவரசியோ தீக்குளித்தவர் தனது கணவர் யஸ்வந்தையா என்று குறிப்பிட்டு இருந்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்தனர்.

இளவரசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , ஒரு பெண் மீது கொண்ட காதலால் மற்றொரு பெண் ஆணாக வேடமிட்டு ஏமாற்றி மோசடி திருமணம் செய்தது தெரியவந்தது.

அழகு நிலையம் நடத்தி வந்த வடலூரை சேர்ந்த இளவரசி மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த யஸ்வந்தி என்ற பெண் தன்னை ஆணாக மாற்றி கொண்டுள்ளார். தன்னுடைய நீளமான முடியை, ஆண்களை போல கத்தரித்துக்கொண்டு... ஆண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு... யஸ்வந்தையாவாக இளவரசியிடம் காதலை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்துள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு 3 மாதங்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தி உள்ளனர். அந்த 3 மாதங்களும் யஸ்வந்தையா, மனைவி இளவரசியுடன் தாம்பத்தியத்தை தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் அவர் எப்போதும் ஆண்கள் அணியும் உடையுடனேயே வலம் வந்துள்ளார். இதுவும் இளவரசிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஒரு நாள் இளவரசி வெளியே செல்வது போல நடித்து வீட்டிற்குள் வந்து யஸ்வந்தையாவின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். அப்போது தான் திருமணம் செய்து கொண்டிருக்கும் யஸ்வந்தையா ஆண் வேடமிட்ட பெண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை வெளியில் சொன்னால் அவமானமாக இருக்கும் என்ற எண்ணத்தில் புகார் ஏதும் கொடுக்காமல் இளவரசி மறைத்துள்ளார் யஸ்வந்தையாவையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் .கடந்த 10 ந்தேதி தங்களது திருமண நாள் அன்று மீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம் என்று யஸ்வந்தையா அழைத்ததாகவும், இளவரசி செல்ல மறுத்ததால் யஸ்வந்தையா தீக்குளித்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருக்கலாம் ஆனால் இயற்கைக்கு முரணான காதல் என்ன மாதிரியான விபரீதத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு யஸ்வந்தி என்ற பெண்ணாக இருந்து இளவரசி என்ற பெண்ணை திருமணம் செய்த யஸ்வந்தையாவின் சோக முடிவே சான்று...

அவர்களுக்கு நன்றாக தெரியும், நாம் எந்த பிரச்சனைகளுக்கும் அதன் அடித்தளத்தை உணர மாட்டோம் என்று..


அதுதான் நம் பலவீனம்.. அது அவர்களின் பலம்...

விமானமும் வேக்வம் கிளீனரும்...


விமானம் ஸ்ட்ரா.. மற்றும் வெகுவம் கிளீனர் இவைகள் Bernoulli தத்துவத்தில் வேலை செய்வதாக சொன்னேன்..

அது எப்படி என்று புரியாதவர்களுக்காக சற்று விளக்கமாக சொல்கிறேன்..

விமானமும் வேக்குவம் க்ளீனரும்...

Aerodynamics  principle... அதாவது விமானம் பறக்கும் தத்துவத்தை இன்று பார்க்கலாம்.

அன்று நான் விமானத்தை பார்த்த அதே ஆச்சரியத்தோடு தான் இன்று என் மகன் மாட்டு வண்டியை பார்க்கிறான்.

என்று எங்கோ படித்த நியாபகம்.... கால மாற்றத்தால் மாறுதல் அடைந்த வாழ்க்கை முறையை விளக்குவதற்காக அதை யாரோ சொல்லி இருக்க கூடும்...

ஆனால் உண்மையிலேயே இப்போது விமானம் பறப்பதை கண்டு நீங்கள் ஆச்சார்ய படவில்லையா? அப்படி என்றால் ஒன்று உங்களுக்கு அதன் தத்துவம் தெரிந்து விட்டிருக்க வேண்டும்
அல்லது உங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் curiosity குறைந்து போயி விட்டிருக்க வேண்டும்.

விமானம் எப்படி பறக்கிறது என்பதை தான் நான் இப்போது விளக்க போகிறேன்.

அதுக்கு முன் ஒரு சின்ன காட்சியை கொஞ்சம் கவனியுங்கள்...

நீங்கள் விமானம் ஏறி ஊருக்கு போக இருக்கிறீர்கள் அதற்க்கு முன் கொஞ்சம் வளர்ந்து விட்ட தாடியை shave செய்ய விரும்புகிறீர்கள் பார்பர் ஷாப் போய்...

ஷேவ் செய்து கொள்கிறீர்கள். (விமான பணிப்பெண்ணை நினைத்து கொண்டீர்களா தெரியாது) அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வருகிறீர்கள் வழியில் கார்ப்பரேஷன் காரர் கையில் மருந்தடிக்கும் கருவி கொண்டு மருந்து அடித்து கொண்டிருக்கிறான்...

வரும் வழியில் குழந்தைகள் சோப்பு தண்ணீரை பைப்பை வைத்து உறிஞ்சி எடுத்து முட்டை விட்டு கொண்டு விளையாடுகிறார்கள்.....

அப்புறம் நீங்களும் உங்கள் காதலியும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து ஒரு கூல்ட்ரிங்ஸ் இல் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கிறீர்கள்...

அப்புறம் வீட்டிற்கு அம்மாவிடம் விடை பெறுகிறீர்கள் அப்போது அம்மா வேக்குவம் கிளீனரை வைத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்...

அவரிடம் விடை பெற்று கொண்டு வந்து உங்கள் flight ஐ பிடிக்கிறீர்கள்....

இதென்ன... flight எப்படி பறக்கிறதுனு விளக்குகிறேன்னு என்னென்னமோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல்  பேசரேன்னு நினைக்காதீங்க. மேல நான் சொன்ன காட்சிக்கும் விமானம் வானில் பறப்பதில் உள்ள அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு... தொடர்ந்து படியுங்கள்.

விமானம் போவதை யாரவது அண்ணாந்து ஆச்சர்யமாய் பார்த்தால் நாம் அவனை பட்டிக்காட்டான் என்போம்....

ஆனால் அவ்ளோ எடை உள்ள ஒரு பொருள் வானில் அவ்வளவு உயரம் பறப்பது எப்படி என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஆச்சர்யம் தான்...

வில்பர்.. ஆர்வில்... இவர்களை உங்களுக்கு தெரியுமா என கேட்டால் தெரியாது என்பீர்கள் ஆனால் ரைட் சகோதரரகள்  என்றால் ரைட்டாக கண்டு பிடித்து விடுவீர்கள்.....

என்னடா தம்பி எப்ப பாத்தாலும் மர பலகையை போட்டு அப்படி என்னதான் பண்றீங்க..

என கேட்டவர்களிடம் நாங்கள் பறவை போல வானத்தில் பறக்கும் வண்டியை செய்கிறோம் என்றார்கள்...

ஓ அப்படியா பா நல்லது நல்லா பண்ணுங்க பா என சொன்னவர்கள் கொஞ்சம் தள்ளி போய்..

பாத்தியா டா காமடிய..... வானதுல பறக்க போறாங்களாம்.. என சிரித்து விட்டு நகர்ந்தார்கள்.

அந்த ரைட் சகோதரர்கள்.. தனது லட்சிய கண்டு பிடிப்பில் கண்டிப்பாக வெற்றியை அடைந்தே தீருவோம் என மஹா உறுதியாகவும் வெறியாகவும் இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால் விமானத்தை கண்டு பிடிப்பதற்காக  இருவரும் திருமணமே செய்து கொள்ள வில்லை...

இதில் ஆர்வில் அருவா மீசை கொடுவா
பார்வை. வில்பர் வழுக்கை தலை மென்மை பார்வை அகன்ற காதுகள்.
விமானம் கண்டு பிடிக்கும் முன் இருவருமே அச்சக வேலையும் அதை தொடர்ந்து மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை... (அது ஆள் இன் ஆள் அழகுராஜா கடை என்பது அப்போது உலகத்துக்கு தெரியாது)..

ஆனால் வானில் முதலில் பறந்த மனிதர்கள் என்ற பெருமை அவர்களுக்கு தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...

அவர்களுக்கு விமானம் கண்டு பிடிக்க இன்ஸ்பரஷனே... ஒருவர் க்ளைடர் என்ற இயந்திரம் இல்லாத கருவியில் பறந்து காட்டிதை பத்திரிக்கைகளில் படித்தது தான்.

1903 இல் தனது மகத்தான சாதனை யை செய்தபோது அவர் வானில்பறந்த மொத்த நேரம் வெறும் 12 வினாடிகள்...
தூரம் 120 அடி... வேகம் கிட்டத்தட்ட ஒரு சைக்கிள் அளவு.. 30 கி.மி வேகம்...

ஒரு விஷயம் சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள்...

விமானம் பறக்கும் தத்துவம் நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் தெரிந்து வைத்து கொண்டு தான் இருக்கிறோம்....

அதாவது அழுத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில இருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி தான் எது ஒன்றும் நகரும்.. ஆனால் இந்த தத்துவத்தை  பயன்படுத்தி விமானத்தையே பறக்க வைக்கலாம் என்பது தான் அந்த இரண்டு ரைட்களும் கண்டு கொண்ட டபுள் ரைட் சங்கதி..

பார்பர் கடையில் பார்பர் நம் முகத்தில் தண்னீர் அடிக்கிறாரே அந்த தண்ணீர் எப்படி வெளியே வருகிறது என்றால் இந்த அழுத்த மாறுபாடுத் தான்.. கார்ப்பரேஷன் மருந்து அடிக்கும் கருவி... அல்லது நாம் கூல் ட்ரிங்க்ஸ் பயன்படுத்தும் போது.... இப்படி பல இடங்களைக் இந்த தத்துவத்தை பயன் படுத்துகிறோம்.

அந்த தத்துவத்தின் பெயர்.. bernouli's princepell.. (நான் சொன்ன காட்சிகளின் தொடர்பு புரிந்ததா...).

ஸ்ட்ரா போட்டு உரிஞ்சிறது ஓகே
அது எப்படி விமானத்தில் வேலை செய்கிறது?

அதற்கு நீங்கள் உற்று பார்க்க வேண்டியது விமானத்தின் இறக்கைகளை தான் அப்படி பார்த்தால்.. அதன் கீழ் பகுதி தட்டையாகவும் (கண்ணாடி ஸ்கேல் இன் அடிப்பகுதியை போல...) அதன் மேல் பகுதி சற்று குவிந்து கூம்பு போலவும் .. (அதே கண்ணாடி ஸ்கேல் இன் மேல் பகுதி போல..) இருக்கும் இப்படி பட்ட ஒரு அமைப்பில் காற்று வேகமாக கடந்து சென்றால் அதன் ரெக்கை யின் அடி பாகத்தில் அதிக காற்று அழுத்தமும் மேல் பாகத்தில் குறைந்த காற்று அழுத்தமும் உண்டாகும் அதன் விளைவாக விமானம் மேல் நோக்கி தூக்க படும்....

தலைமை காரணம் இது தான் என்றாலும் விமானம் பறக்க 4 வகை விசைகள் தேவை அது...

மேல் நோக்கிய உந்து விசை (மேலே சொன்னது).

கீழ் நோக்கிய இழுவிசை (இதை க்ராவிட்டி பார்த்து கொள்கிறது.

முன் நோக்கிய தள்ளு விசை (இதை உண்டாக்க தான் இன்ஜின்.).

மற்றும் பின் நோக்கிய இழுவிசை (அதற்கு தான் பின்னால் குட்டி வால்..).

தரையில் இருக்கும் போது மேல் நோக்கிய உந்து விசையை ஏற்படுத்த இருக்கைகளில் காற்று பலமாக மோதுவது அவசியம்... இதற்காக தான் விமானம் ஓடு பாதையில்.. அவ்வளவு வேகமாக ஓடுகிறது.... சரி விமானத்தை நிறுத்தி வைத்து செயற்கையாக அதன் ரக்கைகளில் காற்றை பலமாக பீய்ச்சினால் என்னாகும்...?

சந்தேகம் இல்லாமல் விமானம் ஜிவ்வென மேலே எழும்பும்...

ஆனால் அவ்வளவு பலமாக காற்று புயலில் வீசுவது இல்லை மேலும் இறக்கைகள் அப்படி இப்படி சற்று சுழற்றி கொள்ளும் வசதி கூடியவை என்பதால் அப்படி நடப்பது இல்லை.

ஒரு கொசுறு செய்தி - விமானம் பறக்கும் போது ஏன் சக்கரத்தை இழுத்து கொள்ள வேண்டும் அப்படியே இருக்கலாம் தானே....?

காற்றில் பறக்கும் போது உராய்வினால் வேகம் குறையாமல் இருக்க தான் (பறவைகளை கவனியுங்கள் பறக்கும் போது கால்களை பின் நோக்கி வளைத்து கொள்ளும் காரணமும் இது தான்)...

நம்ம வீட்டில் உள்ள வேக்குவம் கிளீனரும் வானில் பறக்கும் விமானமும் ஒரே தத்துவத்தில் தான் வேலை செய்கிறது என்பது  ஆச்சர்யம் தானே?

கொள்ளையிடும் அரசும் அதன் அடியாட்களும்...





அரசு தன் அடியாட்களை குதூகலப்படுத்த விரும்பினால்.................

கோடிட்ட இடத்தை நிரப்பிவிட்டு செல்லவும்...