16/06/2018

2000 கோடி சாலை டெண்டர் ஊழல் புகார்; ஸ்டெர்லைட்டை மூடியாச்சு என்ற அரசாணை மீதும் புகார்; இத்தனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதே...


இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே 18 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்புக்கு ஏற்பாடு..

தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைமையகம் இன்று 14.06.2018 விடுத்துள்ள அறிக்கையில்....

பதவி-அதிகாரத்திற்காக பஞ்சமாபாதகத்தையே செய்யும் குற்றவாளிகள் மற்றவரைக் குற்றம் தீர்க்கிறதென்ன?

குற்றம் இழைப்பவர்கள் நிச்சயம் குற்றம் தீர்க்கப்படுவார்கள் என்பதையே ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாமல் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக ஆட்சியில் இருத்தப்பட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

இதை நீடிக்கச் செய்வதற்காகவே தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர்.

இந்தத் தகுதிநீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லிவிடாதபடி செய்யப்பட்டுத்தான் பதவி-அதிகாரத்தில் ஒட்டவைக்கப்பட்டிருக்கிறார் பழனிசாமி.

அப்படிப்பட்ட முதல்வர் பழனிசாமி மீது மெகா ஊழல் புகார் இப்போது.

2000 கோடி சாலை டெண்டர் ஊழல் புகார்! ஸ்டெர்லைட்டை மூடியாச்சு என்ற அரசாணை மீதும் புகார்.

இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டுமே எப்படி?

அதனால்தான் 18 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்புக்கு ஏற்பாடு.

வேறு என்ன? அவர்களை நீக்கியது செல்லும் என்ற தீர்ப்புதான் பழனிசாமி அமைச்சரவையின் எதிர்பார்ப்பு.

மலைக்க வேண்டாம் தமிழக மக்களே.

அரசமைப்புச் சட்டம், அதன் உறுப்பு அமைப்புகள் அனைத்தையுமே கபளீகரம் செய்தவர்கள்.

உங்களிடம் இருக்கும் மிச்ச மீதியையும் கூட கபளீகரம் செய்து கொண்டிருப்பவர்கள்.

நீதியையா விட்டுவைப்பார்கள்?

மக்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை தனியொரு சபாநாயகர் நீக்க முடியும் என்றால், மக்களுக்கும் மேலானவரா அவர்?

மக்களாட்சி, ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டவரா அவர்?

2000 கோடி சாலை டெண்டர் ஊழல் புகார்; ஸ்டெர்லைட்டை மூடியாச்சு என்ற அரசாணை மீதும் புகார்; இத்தனையும் முதல்வர் மீதே.

இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே 18 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்புக்கு ஏற்பாடு.

பதவி-அதிகாரத்திற்காக பஞ்சமாபாதகத்தையே செய்யும் குற்றவாளிகள் மற்றவரைக் குற்றம் தீர்க்கிறதென்ன?

குற்றம் இழைப்பவர்கள் நிச்சயம் குற்றம் தீர்க்கப்படுவார்கள் என்பதையே ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.