06/08/2017

தமிழர் கெட்டது யாரால்?


தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்.

தான் யாரென்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்.

அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லிகொள்வோறேல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்.

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன்தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால்தான் வந்தேறி கூட்டதாரெல்லாம் ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும். அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்.

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர். சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது மூத்திரம் பெய்து விட்டு தான் செல்லும்.

ஈழத் தமிழர்களின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் களப் போராளிகள். ஆனால் இங்கு நிலைவேறு.

தமிழனே தமிழனை பார்த்து தீவிரவாதி, பிரிவினைவாதி, பார்பன அடிவருடி, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிகொண்டு தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் என்று தவறான அடையாளமிட்டு அழித்துவிட நினைகின்றனர்.

தமிழர் அல்லதார்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு கிடக்கிறான், அதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவது காலத்தின் கட்டாயம் அது நடக்கும்.. தமிழக தமிழர்கள் விடுதலை பெரும் நாள் எப்போது?

திராவிட ஆரிய மாயைகளில் சிக்கி சீரழிந்து போன தமிழன் எப்படி மீளபோகிறான்?
எப்போது நாட்டை ஆளபோகிறான்?

யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை.. மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..

பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமயகிபோன தமிழன் தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்.

தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும் , சொந்த மண்ணில் வேலை வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான் .

ஈழத் தமிழர்களுக்காக இப்போது குரல் உயர்த்தி பேசும் தமிழக தமிழர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பேசியதுண்டா?

அதைப்பற்றி நமக்கு என்ன கவலை. நாம் தான் சுயநல பதர்களாகிவிட்டோம். சாதியால் பிரிந்து கிடக்கின்றோம்.

கல்வி வேலைவாய்பு, பொருளாதாரம், கலை, நாகரிகம், பண்பாடு, இனஉணர்வு என எல்லாவற்றிலும் பிளவுபட்டு கிடக்கின்றோம். இந்த பிளவு நிலைத்திருக்க வேண்டும் என்பதில் திராவிடம் பேசுபவர்கள் ஒரே அணியாக செயல்படுகின்றனர்.

பல நூற்றாண்டு காலமாக இந்த மண்ணையும் மக்களின் உழைப்பையும் சுரண்டி பிழைக்கும் தெலுங்கர், மலையாளி, கன்னட மார்வாடி வடவர்களை நாம் ஏன் புறகணிக்க கூடாது ?

உண்மை கசக்கத்தான் செய்யும். முரண்பாடுகளை களைய வேண்டும் இன பற்று தான் நம்மை வாழ வைக்கும், ஆளவைக்கும்..

தமிழ் பேசுகிறவன் எல்லாம்
தமிழன் அல்ல..

யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைகபட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்.

உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்?

பிராமணியத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு திராவிடத்தை திணித்துவிட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே..

தமிழன் இல்லாத மதத்தில் கரைந்து போனதற்கு அவர்கள்தான் காரணம்.

சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது. விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது.
கலையும் பண்பாடும் சீர்குலைந்தது.

ஆரிய வைசிய மகாசன சங்கம்,
நாய்டு மகாசன சங்கம்,
தெலுங்கு மகாசன சங்கம்,
கேரளா மகாசன சபை,
சௌராஷ்டிர அமைப்புகள், போன்றவை தமிழகத்தில் முளைத்துவிட்டன.

ஆட்சி அதிகாரங்களை கைபற்றிகொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கும் திராவிடக் கட்டசியை தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்திய தேசியம் தான்.  அதை காட்டியே தமிழனை விலங்காண்டி நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.

தமிழ் நாட்டில் உள்ள சுயமரியாதை இயக்கம் ஏன் மற்ற மாநிலங்களில் கால் கொள்ள வில்லை, அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்..

நாம் தமிழர்கள் நம் நாடு தமிழர்நாடு
திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்.

இன பற்றுகொள்ளதவரை எழ முடியாது ..
எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..
சினம் கொள்ளமறுத்தால்
நீயும் ஒரு பிணம்..

சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

தமிழர் நாடு தமிழர்களுக்கே...

திராவிடம் பொய் என்பது பலருக்கு கசப்பான உண்மை...


என்ன செய்ய புரையோடிப்போன காலுக்கு இனி அறுவை சிகிச்சைதான்..

அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது,

தமிழர் நாடு தமிழருக்கே..

நாம் ஏற்கனவே சொன்னது போல் வரலாறு யாருக்கும் வளைந்து கொடுக்காது, அது ஈவு இரக்கமற்றது..

இருப்பதை காப்போம்.. இழந்ததை மீட்போம்..

திராவிட அரசியல் , நமது தமிழ் சாதிகளை மற்ற தமிழ் சாதிகளுடனே பூசல்களை உருவாக்கி மோதல் ஏற்பட வழிவகை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது...


தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும் படி செய்துவிட்டனர்..

களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல . தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் நமது போராட்டம் அமைய வேண்டும்.

நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாக கருதாமல் , வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம் . அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம்..

ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திர்க்கேதிரான கருத்துகளை உள்வாங்கி, அதனால் நாம் இழந்ததை பற்றியும், இனி என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்..

லச்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல், தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் கூட்டணி வைக்கும் அனைத்துக் கட்சிகளையும் புறக்கணிப்போம்...

நமக்குள் இருக்கும் அக முரண்களை களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம், இருப்பதை காப்போம்.. இழந்ததை மீட்போம்...

இந்த படத்தை முடிந்தால் பாருங்கள்... தற்போது தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் இது...


சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...


ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத்தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்டபோது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக்குண்டுகளுடன் பிணைத்து
மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப்போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகரமுடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே
மறக்கக்கூடாது...

பாஜக மோடி அம்பாணிக்கு மாமா வேலை செய்யவே.. சிலிண்டர் மாணியம் ரத்து...



ஓவியா தற்கொலை முயற்சி, விஜய் டிவி, கமல் மீது வக்கீல், கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...


நிறைய விவசாயிகள் தற்கொலையே செய்து கொண்டார்கள் அதற்கு யாரும் புகார் கொடுக்க வரவில்லையே எனக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்...

பாஜக மோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு செய்யும் மாமா வேலை...





Demonization நடவடிக்கை மொத்த கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதமாக...

சரியான கேள்வி? பதில் சொல்ல துப்பிருக்கா?


பாஜக மோடி மூன்று வருட ஆட்சியில் செய்தது என்ன இதோ உங்கள் பார்வைக்கு...


தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செய்ஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுத்தாட்டி என்ன நமக்கு எழுத ஆசை, கீழ்காணும் அத்தனையும் பற்றி விரிவாக எழுத ஆசை. ஆனால் திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டும்.

-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்கள்
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
-அந்நிய நேரடி முதலீடு
-தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-IT ஊழியர்கள் பணி நீக்கம்
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா (குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000
-மாட்டு அரசியல்
-நீட் தேர்வு
-ரேஷன் மானியம்
நிறுத்தம்
- எரிவாயு மானியம் ரத்து.

இன்னும் பல சாதனைகளையோடு தொடர்கிறது...

பாஜக கலாட்டா...


இந்த செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்...


டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு...



அதிமுக அம்மா அணிக்கு தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகளில் இரண்டு எம்எல்ஏக்கள் தங்களுக்கு தினகரன் அளித்த பதவி தேவையில்லை என்றும், எடப்பாடி தலைமையிலேயே இயங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை டி.டி.வி. தினகரன் அறிவித்தார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன், சி.சண்முகவேலு, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம். சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.மனோகரன் சேலஞ்சர் துரை, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.பி. ஆதித்தனு, சாருபாலா தொண்டைமான், எஸ்.காமராஜ், மாணிக்கராஜா ஆகியோர் அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

ஆனால், தினகரன் அறிவிப்புக்கு பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தினகரன் அறிவித்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்துள்ளார்.

கட்சியும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது கட்சி தொண்டர்களின் கருத்து. எனவே இந்த பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேபோல தினகரன் நியமித்த பொறுப்பை ஏற்க ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மறுப்பு தெரிவித்துள்ளார். புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய எம்எல்ஏ பழனி, டி.டி.வி.தினகரன் அறிவித்த பதவிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்...

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் உருவான கல்வெட்டுகள் கவனிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது...


வெளிஉலகத்திற்கு வெளிவராத இந்த கல்வெட்டுகளை உடனடியாக அரசு மற்றும் மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்...

இந்தியாவுடன் மோத சீனா திட்டம்: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு...


சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட சீனா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - பூடான் எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது முதல், இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

டோக்லாம் பகுதியில் குவித்துள்ள ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தியா தரப்பில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை.

இந்நிலையில் அங்கிருந்து இந்திய துருப்புகளை அகற்ற சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் சீனா ஈடுபடும் என்று அந்நாட்டின் சர்வதேச உறவுகள் ஆராய்ச்சி நிபுணரான ஜூ ஜியாங் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சருக்கு சீனா முறைப்படி தகவல் தெரிவிக்கும் என்றும் இதனால் ஏற்படப் போகும் பாதிப்பை தவிர்க்க, இந்தியா படைகளைத் திரும்ப பெற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும்... என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதிபதி தேர்விற்கு நீட் போன்று பொது தேர்வு , மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுவையில் வக்கீல்கள் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு...


ஆகஸ்ட் 10 , 11 ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் வக்கீல் கலந்து கொள்ளவுள்ளதாக வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது...

சென்னை சேப்பாக்கத்தில்; காவல்துறை தடையை மீறி தமிழக அரசுக்கு எதிராக திரண்ட பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்... அதிர்ந்தது தமிழக அரசு...


போராட்டதிற்கு தொடர்ந்து குவிந்து வருபவர்கள் ஆங்காங்கே தடுத்து காவல்துறை கைது செய்வதை முக.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

2016-ஆம் ஆண்டு ஜாக்டோ மற்றும் ஜியோ ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இது கூறப்பட்டு இருந்தது. இதேபோல கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதால் தமிழக அரசு ஸ்தம்பித்தது.  

அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய கமிட்டி அமைக்கபட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் போராட்டம் அறிவிப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடி முடிவு எடுத்தனர்.

அந்த ஆலோசனையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தும் வரை 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்துவது எனவும், ஜுலை 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களூம், ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்  ஆகஸ்ட் 5ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலை ஜூலை 13 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக போராட்டம் நடத்தபட்டது. இன்று கோட்டையை நோக்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் நேற்று இரவு முதல் சென்னையை நோக்கி வர தொடங்கினார்கள்.அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் வந்த வண்டிகளை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

காவல்துறையில் தடையை மீறி கோட்டையை முற்றுகையிட சென்னை சேப்பாக்கதில் பல்லாயிர கணக்கான அரசு ஊழியர்கள் ஒன்று கூடி கோஷமிட்டு வருகிறார்கள்.அரசு ஊழியர்கள் ஒன்று கூடியதால் சேப்பாக்கம் வழியாக செல்லும் சாலைகள் காலை முதலே ஸ்தம்பித்து இருக்கிறது.

போராட்டதிற்கு வருபவர்கள் காவல்துறை கைது செய்வதை முக.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்...

அக் 1 முதல் ஒருவர் மரணித்ததை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு...


40 ஆயிரம் பேரின் ஆதார் கார்டு விபரங்களை அரசு இணையதளத்தில் இருந்து திருடி ”ஆப்” உருவாக்கிய பெங்களுர் இன்ஜினியர் கைது...


இவர் ஐஐடியில் படித்தவர், இந்த ஆப் மூலம் இரண்டே மாதத்தில் 40 ஆயிரம் ரூபாய் இவர் சம்பாதித்துள்ளது குறிப்பிடதக்கது.

பொதுமக்களின் ஆதார் கார்டு விபரங்களை காக்க தவறிய அரசு கோட்டை விட்டுள்ளது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது...