அதிமுக அம்மா அணிக்கு தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகளில் இரண்டு எம்எல்ஏக்கள் தங்களுக்கு தினகரன் அளித்த பதவி தேவையில்லை என்றும், எடப்பாடி தலைமையிலேயே இயங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை டி.டி.வி. தினகரன் அறிவித்தார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன், சி.சண்முகவேலு, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம். சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.மனோகரன் சேலஞ்சர் துரை, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.பி. ஆதித்தனு, சாருபாலா தொண்டைமான், எஸ்.காமராஜ், மாணிக்கராஜா ஆகியோர் அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஆனால், தினகரன் அறிவிப்புக்கு பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தினகரன் அறிவித்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்துள்ளார்.
கட்சியும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது கட்சி தொண்டர்களின் கருத்து. எனவே இந்த பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல தினகரன் நியமித்த பொறுப்பை ஏற்க ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மறுப்பு தெரிவித்துள்ளார். புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய எம்எல்ஏ பழனி, டி.டி.வி.தினகரன் அறிவித்த பதவிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.