போராட்டதிற்கு தொடர்ந்து குவிந்து வருபவர்கள் ஆங்காங்கே தடுத்து காவல்துறை கைது செய்வதை முக.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2016-ஆம் ஆண்டு ஜாக்டோ மற்றும் ஜியோ ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இது கூறப்பட்டு இருந்தது. இதேபோல கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதால் தமிழக அரசு ஸ்தம்பித்தது.
அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய கமிட்டி அமைக்கபட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் போராட்டம் அறிவிப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடி முடிவு எடுத்தனர்.
அந்த ஆலோசனையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தும் வரை 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்துவது எனவும், ஜுலை 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களூம், ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலை ஜூலை 13 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக போராட்டம் நடத்தபட்டது. இன்று கோட்டையை நோக்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் நேற்று இரவு முதல் சென்னையை நோக்கி வர தொடங்கினார்கள்.அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் வந்த வண்டிகளை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
காவல்துறையில் தடையை மீறி கோட்டையை முற்றுகையிட சென்னை சேப்பாக்கதில் பல்லாயிர கணக்கான அரசு ஊழியர்கள் ஒன்று கூடி கோஷமிட்டு வருகிறார்கள்.அரசு ஊழியர்கள் ஒன்று கூடியதால் சேப்பாக்கம் வழியாக செல்லும் சாலைகள் காலை முதலே ஸ்தம்பித்து இருக்கிறது.
போராட்டதிற்கு வருபவர்கள் காவல்துறை கைது செய்வதை முக.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.