12/12/2018

வேப்பமரம்...


வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.

இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்.

இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும், பலவகையான நோய்களை குணப்படுத்த வல்லதுமாக இந்த வேப்பமரம் கருதப்படுகிறது. இதனால் நாமும் பாடசாலைகள்,விளையாட்டு மைதானங்களைச் சுற்றி, சாலை ஓரங்களில், குளக்கரை போன்ற அனைத்துப்பொது இடங்களிலும் நட்டு வைத்து பராமரித்தால் விஞ்ஞான ரீதியாகவும், சாத்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்.

ஒவ்வொரு கிராமமாக இதற்கான முயற்சி அனைத்துத் தரப்பு மக்களாலும் இணைந்த செயற்பாடே முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும்...

திமுக அடிமைகளுக்கு செருப்படி கொடுப்பதற்கான காரணம்...


வங்க கடலில் புயல் சின்னம்...


புயலாக மாறினால் "பேதாய்" என பெயர்...

இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த சில நாட்களில் தீவிர புயலாக மாறி சென்னை - நெல்லூர் இடையே இந்த வார இறுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

விவசாயிகள் தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்க திட்டம்...


டெல்லியில் நவம்பர் 30 ஆம் தேதி இறந்த விவசாயியின் மண்டை ஓட்டில் ரூ.700/ பிச்சை எடுத்தேன். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டமான தஞ்சையில் வல்லத்தில் ரூ.299/ பிச்சை எடுத்தேன்.

அதனைத் தொடர்ந்து 11/12/2018 காலை 10 மணி அளவில் திருமழப்பாடியில் பிச்சை எடுக்க உள்ளேன். இந்த தொகையினை பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பி விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அனுப்ப உள்ளேன்

இவண்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகிக்கும் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம்...

நீட் தேர்வு மறைக்கப்பட்ட உண்மைகள்...


வெறும் 7 மாணவர்களுக்காக ரூ.20 கோடியை செலவு செய்த பள்ளி கல்வித்துறை...

191 பேர் அல்ல 611 பேர்...

நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஏழு பேருக்கு மட்டுமே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை ஈஸ்வரன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளார். அதன் மூலம், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 20 பேருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது.

அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கும் வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 தமிழக மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு பள்ளி படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஓராண்டு பயிற்சிக்கு பின் நீட் தேர்வு எழுதியவர்களில், ஆயிரத்து 834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

மொத்தமுள்ள மூவாயிரத்து 456 இடங்களில் இது 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும். நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அரசு கூறிவந்த நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது...

சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும்....


முதலில் சாம்பிராணி இலைகளைப் பற்றி இங்கே காணலாம். சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும்.

இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜசுத்(ஸ்)தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.

இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், செரிமானக்கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது.

கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக் கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் சலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் அவ்வையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது செய்தி...

இணையத்தில் வேகமாக பகிரப்படும் லோகோ...


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று...

உயிர்களுக்கு மூலாதாரமே சூரிய ஒளி....


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.

சூரியன் பெருமளவு ஐதரசன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், பிராணவாயு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds),ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது.

சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது...

ஸ்டெர்லைட் நிறுவனம் sulfuric acidயை பாதுகாப்பாக வைத்திருக்கும் காட்சி...


மாரடைப்பின் போது எடுக்க வேண்டிய சில அடிப்படை முதலுதவிகள்...


மாரடைப்பு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? வாருங்கள் பார்ப்போம்...

நெஞ்சினைக் கசக்கிப்பிழிவது போல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல் அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல் அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல். உடனே வாந்தி வருதல். அதன் காரணமாக ஏற்படும் படபடப்பு. அத்துடன் காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகிய இவையே மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். இதனைக் கொண்டு வந்திருப்பது மாரடைப்பா என்பதை நாம் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

வந்திருப்பது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திய பின்னர் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை...

ஆபத்தில் இருப்பவரை பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும்.

பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கின்றாரா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் செவி அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும். நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டிச் செல்லவும்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள். இப்படியாக செயற்கை சுவாசம் தாருங்கள். இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதனைக் குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.

அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


திருச்செந்தூர் முருகன் தெலுங்கர் பிடியில்...


என்னது திருச்செந்தூர் கோவில் தர்மகர்த்தா ஒரு தெலுங்கரா?

அதுவும் கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு வாரிசா?

இந்த மண் தெலுங்கர்களுக்கு சொந்தமா?

மனிதர்களுக்கு கிடைத்த வரம்...


இந்த பூமியில் தன்னை மெய் மறந்து நடப்பது..

ஆனால் நடப்பது இல்லை மனிதர்கள்...

நீலகிரி மலையில் படுகர் குடியேற்றம்...


கன்னட இனத்தவரான படுகர் நீலகிரியில் குடியேறி ஆக்கிரமித்தது போக தம்மை பழங்குடி என்று அறிவிக்குமாறும் தொடர்ந்து கோரிவருகின்றனர்.

பழங்குடி என்பதற்கான எந்த அம்சமும் இல்லாத இவர்கள் முதலில் திரிந்த கன்னடம் பேசி வந்தனர். தற்போது தனிமொழி பேசுகின்றனர்.

முதலில் கன்னடத்தில் எழுதிவந்த இவர்கள் இப்போது தமிழில் எழுதத் தொடங்கிவிட்டனர்.

இவர்களைச் சுட்டிக்காட்டி நீலகிரி எங்களுக்குச் சொந்தம் என சில கன்னடவர் கூறிவருகின்றனர்.

ஆனால் படகா அல்லது படுகா என்றழைக்கப்படும் படுகர் விஜயநகர ஆட்சி வீழ்ந்த பிறகு 1565 வாக்கில் தெற்கே பரவிய மொகலாய ஆட்சிக்கு பயந்து நீலகிரிக்கு ஓடிவந்த வந்தேறிகள் ஆவர்.

குடியேறி குடியேறி நீலகிரியில் ஒரு பகுதியை தமது வசமாக்கிக் கொண்டனர்.

1812 இல் வெறும் 22,000 பேராக இருந்த படுகர் மக்கட்தொகை 1981 இல் ஒன்றரை லட்சமாகப் பெருகிவிட்டது.

அதாவது 1871இல் 28 படுகருக்கு ஒரு தொதவர் (தமிழ்ப் பழங்குடி) என்ற நிலை இருந்தது.

129 படுகருக்கு ஒரு தொதவர் எனும் அளவுக்கு இவர்கள் மள மளவெனப் பெருகியுள்ளனர்.

பழங்குடிகள் போல தொழிலோ வாழ்வியலோ கிடையாது.

பாதிக்கும் மேலானோர் கிறித்தவ மதத்தைத் தழுவி நகர்ப்புற நாகரீகத்துடனே வாழ்கின்றனர்.

நீலகிரி எனும் நீலமலை தமிழர்களுடன் தொடர்புடைய பழங்குடி மக்களின் பூர்வீக மலை ஆகும்.

சான்று: தமிழகப் பழங்குடிகள் (நூல்)
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி...

என்ன சார் உங்க சட்டம்?


இதுபோன்று இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறதோ...

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி?


பணவளக்கலை. ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி?

அலாவுதீனின் பூதத்தை போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்..

நீங்கள் விரும்பியவற்றை பெற மூன்று எளிய படிகள் உருவாக்க , படைப்பியக்கச்  செயல்முறை உங்களுக்கு உதவும், அவை கேளுங்கள், நம்புங்கள், மற்றும் பெறுங்கள்  ஆகியவை.

உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும்போது ,உங்கள் விருப்பம்  குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்து விட்டது போல நடந்து கொள்வது, பேசுவது மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிபரப்பும்பொது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை , நிகழ்வுகளை , மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மனவுனர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மன நிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்துவிடும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் , கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுப் பூர்வமாக உணருங்கள், அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.

நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்குப் போடும் நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ அதே அளவு எளிதானதுதான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதாகும்.

ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விசயங்களில் துவங்குவது , ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி , ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்கக் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விசயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.

நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ , அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்...

உங்களுக்கு வேலை வாய்ப்பு தருவதா சொல்லி உங்க நிலம் புடுங்கப்படும்...


செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் பாதிப்பை தருவதாகவே அமையும்...

ஸ்டெர்லைட் - புற்று நோய்,
கல்பாக்கம் - கழிவு கொட்ட இடமில்லையாம்..

கடைசியா சலுகைகளாம், ஆனா வேலைவாய்ப்புல கூட பெரும் பதவிகளுக்கு வடநாட்டுக்காரனாம்..

மருத்துவ வணிகம், அலோபதினு வியாபாரம் டாப் லெவல்ல போகும்...

சேரர்...


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரச வழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள்.

சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்.

சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம்.

மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர்.

சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன.

குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்...

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும்.

ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது.

ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன.

சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர்.

ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்..

நகரங்கள்...

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது.

முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன.

சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.

தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர். (தற்போது கேரளாவில் உள்ளது)..

அரசர்கள்...

மூன்றாம் கழகக்காலச் சேரர்கள்
கழக நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.

குறிப்பாக, மூன்றாம் கழக நூல்களுள் ஒன்றானபதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும்.

இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன...

மராட்டிய ரஜினி கலாட்டா...


மனம் பற்றிய புரிதல்...


மனிதனுக்கு இறைவனால் வழங்கப் பட்டுள்ள மாபெரும் சக்தியே மனம்....

ஏனெனில் மனிதனால் மட்டுமே தனது சிந்தனை ஆற்றலின் துணை கொண்டு மெய்ப் பொருள் எது என்று ஆராய்ந்தறிந்து, உணர முடியும்....

எல்லாவற்றிற்கும் மூலமான இறைநிலை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், மனதின் மூலமாக மட்டுமே அதனை உணர முடியும்....

மனமே இறைவனை அறிய உதவும் கருவி......

மனதின் மறுபக்கம் இறைவன்....

மனதை அறிந்து அதன் செயல்பாட்டைச் சீரமைத்தால் வாழும் காலத்தில் செயற்கரிய பல செயல்களை நம்மால் ஆற்ற முடியும்.....

மனதை அறிந்து நமது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து பழக்கிவிட்டால், அங்கு குழப்பமே வராது. அமைதியான தெளிவான மனதில் தான் மெய்ப்பொருள் பற்றிய சிந்தனைகள் உதிக்கும்....

எவ்வாறு தெளிந்த நீரோடையில் அதன் ஆழத்தை நம்மால் காண முடிகிறதோ அது  போன்று, மனம் தெளிவாக உள்ள போதே ஆழ் மனதில் இருக்கக் கூடிய இறைநிலையைக் காண முடிகிறது....

குழம்பிய குட்டை (எண்ணக் குவியல்கள் மற்றும் உணர்ச்சி நிலை) போன்று மனதை வைத்திருந்தால், அங்கு எப்போதும் குழப்பமே மிஞ்சும்.. அதுவே உள்ளிருக்கும் தெய்வத்தை பார்க்க  விடாமல் மறைத்துக் கொண்டிருக்கும் திரை....

தவம் செய்து வர வர எண்ணங்களின் எண்ணிக்கை குறைவதாலும், அகத்தாய்வு செய்து தேவையற்ற எண்ணங்களைக் (நாம் மனம் கொண்டு உருவாக்கியவை)  குறைத்து விடுவதாலும், ஏற்கனவே நம்முள்ளே இருக்கக் கூடிய இறைநிலையின் பண்புகளான அன்பும் கருணையும் வெளிப்படுகின்றன.....

இறைவனின் இத்தகைய பண்புகளினால் எந்த செயல் செய்தாலும் விழிப்புணர்வோடு, மன விரிவு  கொண்டு ஆற்ற முடிகிறது.....

இத்தகைய மனவிரிவைக் கொண்டு செய்யும் செயல்களினால் மேலும் நமக்குள்ளே உள்ள இறை ஆற்றல் மலர்ந்து கொண்டே இருப்பதனை உணர முடிகிறது....

இவை அனைத்திற்கும் உதவுவது மனம் தான். இறைத் தேடலில் மனமிருந்தால் அதற்கான மார்க்கம் உண்டு. நமது தேடலுக்கு ஏற்ப சூழல்களையும் இந்த இயற்கையே நமக்கு அமைத்துக் கொடுக்கும். நமது பக்குவத்திற்கேற்ற குருவும் வருவார்...

விந்தை என்னவென்றால் கிடைத்த மார்க்கத்தில் சென்று ஆழ் மனதிலுள்ள மெய்ப்பொருளை உணரும் போது, அதற்கு உதவிய மனம் இல்லாமல் போய்விடுகிறது. இறைவனின் படைப்பில் தான் எத்தனை கோடி அற்புதங்கள்...

பேரின்பத்தில், இன்ப ஊற்றில் மிதக்க விட்டாய் இறைவா... மனம் கொண்டு இத்தகைய மானிடப் பிறவி எடுத்ததற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் எங்கள் இறைவா....

தியானம், யோகம் என இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுவதற்கே முற்பிறவியில் (முன்னோர்கள்) ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்காக என்றென்றும் எனது முன்னோர்களை வணங்க கடமைப் பட்டிருக்கிறேன்....

பாஜக வாக்கு எந்திரத்தை வைத்து தான் இத்தனை தொகுதியை வென்றுள்ளது கிளம்பு...


அவன் தோற்றுவிட்டான் என தம்பட்டம் அடிக்காதே... காட்சிகள் மட்டுமே மாறுகிறது...


இப்போது வாக்கு எந்திரத்தில் எந்த கோளாறும் இல்லையென்று பல விவாதங்கள் வரும்..

அந்த விவாதங்களும் அவனுக்கு சாதகமாகவே இருக்கும், பொது தேர்தலில் அந்த விவாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வான்..

அவ்வளவே.....

ஒருவன் நம் தொப்புள் கொடியான ஈழத்தை அறுத்து எறிந்தவன்..

இன்னொருத்தன் நாம் அந்த தொப்புள் கொடியை பற்றி பேசக் கூடாது என நினைப்பவன்..

அவனை கலாய்ப்பதால் உனக்கு என்ன பலன்..?

உடனே ஒரு கேள்வி எழும், நீங்கள் இப்படி பதிவு போடுவதால் உங்களுக்கு என்ன பலன்..? என்று..

இங்கு அனைத்தும் ஒரு Trend..

அதுபோல் அரசியல் வியாதிகளை கலாய்ப்பதும் ஒரு Trend..

இது தான் Trend என நான் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை..

கலாய்க்கும் பதிவுகள் மிஞ்சிப்போன 50-நண்பர்களுக்குள்ளேயே அடங்கிவிடும்..

ஆனால் என் பதிவு 10-பேருக்கு தான் செல்லும், அதில் கண்டிப்பாக ஒரு உவன் நான் கூறியதை அவன் பார்வையில் செம்மைப்படுத்துவான்...

உதாரணம் நிறைய இருக்கிறது..

ஆனால் நீங்கள் கலாய்க்கும் பதிவின் பலன்..? பலன் அடைந்தவர் இருக்கிறார் என்றால் அதற்கு உதாரணம் தாருங்கள்..?

மிசோரம் தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துக்கள்...


காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?


1971ல் காவிரிக்காக முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் திரு. சீனுவாச ஐயங்கார்.

அவர் வழக்கு தொடுக்க போகும் போது கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக் கொண்டனர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன்.

பிறகு இந்திரா காந்தி மிரட்டியதும் வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றனர்.

அதன் பிறகு சீனுவாச ஐயங்காரின் மகன் மன்னார்குடி ரெங்கநாதன் 8.11.1983 ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டார்.

அதன் மூலம் 1991ல் (419 TMC தமிழகத்திற்கும் 270 TMC கர்நாடகத்திற்கும் என) கிடைத்த முதல் தீர்ப்பு தான் அடுத்த 11 ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வரக் காரணம்.

காவிரி பிரச்சனை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் நாலுவரி எழுதி மீம்ஸ் போட்டுவிட்டு 'ஆண்டாளுக்கு போராடின அவா இதுக்கு வரலை' என்று பார்ப்பனரைத் திட்டும் போராளிகள்,
காவிரிப் பிரச்சனையில் ஆரம்ப கட்டத்திலேயே வெறும் 40 விவசாயிகள் கொண்ட அங்கீகாரமே இல்லாத ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு தன் மாநில அரசாங்கம் காலைவாரிய பிறகும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு போட்டு நியாயம் வாங்கித் தந்தது ஒரு பார்ப்பனர் என்ற உண்மையை தயவுசெய்து அறிந்து கொள்ளவும்.

நன்றியில்லாத உலகம்...

பாஜக தாமரை குவாப்ரேட் பண்ணு...


உலகைப் பாதுகாப்பது அரசியல்வாதிகள் அல்ல...


அவர்கள் பசப்புகிறவர்கள்...

பாசாங்கு செய்பவர்கள்..

உனக்குத் தெரிந்தேயிராத சிலர்..

அவர்களைத் தெரிந்து கொள்வது கூடச் சிரமம் என்றிருக்கக்கூடிய சிலர்..

அவ்வளவு சாதாரணமாக வாழ்கிறவர்கள் அவர்கள் தான்..

இந்த உலகத்தைப் பாதுகாக்கிறார்கள்..

அவர்கள் இந்த உலகம் எனும் வனாந்திரத்தின் ஆழத்தில் வாழ்கிறார்கள்..

அவர்களை உனக்குத் தெரியாது தான்..

இந்த உலகத்தைக் காப்பாற்றி வைத்திருப்பது வெகு சிலரே...

ஸ்படிகம் போலப் பரிசுத்தமான சிலரே..

இந்த உலகைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்..

குழந்தையின் வெகுளித்தனத்தோடு இருக்கும் சிலரே..

இந்த உலகத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்..

ஆனால் அவர்களோ தாமே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று நினைக்கிறார்கள்..

ஏனென்றால்..

அவர்களே விழித்தவர்கள்..

இந்த உலகத்தின் இருட்டுக்குத் தன்னையே முழுப் பொறுப்பாக்கிக் கொள்கிறவர் ஞானி..

கீழே, வெகு கீழே என்று போகிறவர் ஞானி..

அவர் தான் இந்த உலகைப் பாதுகாப்பவர்..

அவர்கள் தான் உண்மையான அரசர்கள்..

சரித்திரத்திற்குத் தெரியாத அரசர்கள்..

வேடம் பூண்டவர்களை அரசர்களாகச் சரித்திரம் பேசுக் கொண்டிருக்கிறது போலிகள்..

உண்மையான அரசர்களைச் சரித்திரம் இன்னும் இனம் கண்டு கொள்ளவில்லை..

இல்லையேல் சரித்திரம் புத்தரைப் பற்றிப் பேசும்..

லாவோத் சூவைப் பற்றிப் பேசும்.

கபீரைப் பற்றிப் பேசும்..

கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்..

கிருஸ்துவைப் பற்றிப் பேசும்..

முகமது பற்றிப் பேசும்..

மகாவீரர் பற்றிப் பேசும்..

நெப்போலியனைப் பற்றியோ..

ஹிட்லரைப் பற்றியோ..

மாசேதுங் பற்றியோ..

ஸ்டாலின் பற்றியோ..

பேசிக்க் கொண்டு இருக்காது...

ஆனால்..

சரித்திரம் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறது..

சரித்திரம் ஒவ்வொரு குழந்தையையும் வக்கிரப் படுத்தி வைத்திருக்கிறது..

முட்டாள்களைப் பற்றிப் பேசி..

மூடர்களைப் பற்றிப் பேசி..

பைத்தியக்காரர்களைப் பற்றிப் பேசி..

வக்கிரம் பிடித்தவர்களைப் பற்றிப் பேசி..

ஞானியரைப் பற்றிப் பேசாமல்...

ஒவ்வொரு குழந்தையையும் சரித்திரம் வக்கிரப் படுத்தி வைத்திருக்கிறது..

ஞானியரே உலகின் உண்மையான அரசர்கள்...

பாஜக - காங்கிரஸ் இரண்டும் ஒன்று தான்...


பாஜக மோடியின் திட்டம்...


5 மாநில தேர்தல்களில் தோற்று... வாக்கு எந்திரத்தை மேல் நம்பிக்கை வர வைத்து...

மொத்தமாக MP தேர்தலின் போது..  பாஜக கூட்டணியில் தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு எந்திரத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று திட்டம் போட்டுள்ளது...

உஷார் ஐயா உஷாரே....

உடல் எடை அதிகமாகாமல் நிலக்கடலை சாப்பிடுங்கள்...


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை...

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும் என்கிறார்.

நீரழிவு நோயை தடுக்கும்...

நிலக்கடலையில் கண்ணாடி செய்ய உதவும் மாங்கனீசு(ஸ்)(manganese) என்னும் பொருள் சத்து நிறைய உள்ளது. மாங்கனீசு சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து சுண்ணாம்பு சத்து நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது. குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்...

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடியும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்...

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெசு(ஸ்)வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய அடைப்பிதழ்கள் (Valves) பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்...

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்சு(ஸ்) என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்...

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல பலவிருத்தி (tonic) போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் உயிர்ச்சத்து 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்...

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்...

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை...

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி...

பெண்களின் இயல்பான உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், எரியம் (phosphorus), சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம் (kalium), துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்...

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

மாவுசக்தி (Carbohydrate)- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு - 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் - 0.85 கி
ஐசோலூசின் - 0.85 மி.கி.
லூசின் - 1.625 மி.கி.
லைசின் - 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
காப்பர் - 11.44 மி.கி.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.கி.
மேங்கனீசு(ஸ்) - 1.934 மி.கி.
எரியம் (phosphorus) - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.

பாதாம், பிசு(ஸ்)தாவை விட சிறந்தது...

நாம் எல்லாம் பாதாம், பிசு(ஸ்)தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நன்றிகள்...

7 வது பள்ளி பாடத்தில் பாஜக வின் அறிவுபூர்வமான பாடம் : மாட்டு மூத்திரம் குடித்தால் அதில் குளித்தால் தொழுநோய் நீங்கும்...


பிராணயாமம் பற்றி திருமூலர் கூற்று செயல் முறை...


திருமூலர் காட்டிய பிராணயாமம் முறை மிகவும் எளிதானது..

இயம, நியமங்கள் கடை பிடிக்கும் முறை..

இயமம்-தீயவற்றை செய்யாதிருத்தல்.
நியமம்-நல்லனவற்றை செய்தல்.
ஆசனம்-உடலை உணர்வோடு இருத்துதல்.

இனி ஆசனத்தில் அமர வேண்டும். இவற்றை திருமூலர் பயன் தரக்கூடிய ஆசனங்கள் என்கிறார்.

அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்திராசனம், சோதிராசனம், சிம்மாசனம், கோமுகம், வீராசனம், சுகாசனம் ஆகிய எட்டு ஆசனங்களாகும். இவை உத்தமானது.

பதினாறு மாத்திரை கால அளவு, இடது பக்க நாசி துவாரத்தின் வழியே காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இது 'பூரகம்'எனப்படும்.

64 மாத்திரை கால அளவு காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். இது கும்பகம் எனப்படும்.

இனி உள்ளிருக்கும் காற்றை மெதுவாக 32 மாத்திரை கால அளவு வலது நாசி வழியாக விட வேண்டும். இது ரேசகம் எனப்படும்.

இது போல் வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து உள்ளே அதே கால அளவில் வைத்திருந்து, இடது நாசி துவாரத்தின் வழியாக வெளிவிட வேண்டும்.

இந்த முறையை காலையும் மாலையும் சுமார் பத்து தடவை செய்ய வேண்டும்.

திருமூலர் திருமந்திரத்தில் கூற வில்லை என்றாலும், பிராணயாமம் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி அமர வேண்டும். இது பதஞ்சலி முனிவரின் யோக முறையில் குறிப்பிட்டுள்ள வழி முறைகளாகும்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிபட வுள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும்,உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே
 - திருமந்திரம் 575.

பொருள்: பிராணயாமம் செய்தால் உடல் சிவக்கும். தலை முடி கறுக்கும். உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும். (இறப்பை தவிர்க்கலாம்).

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை யுதைக்குக் குறியதுவாமே..

காற்றை பிடிக்கும் கணக்கறிந்தவர் (பிராணயாமம் செய்பவர்) காலனை எட்டி உதைத்து நெடு நாள் வாழலாம்.

இதற்கு இது தான் உபாயம்...

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது ஒரு விஷயம் புலனாகிறது...


மாநிலக் கட்சிகளின் கை ஓங்குகிறது...

இனி இந்தியாவில் மாநிலங்களுக்கு உரிய மரியாதையும் அதிகாரமும் கொடுக்கிற கட்சி தான் டெல்லியில் ஆட்சி அமைக்கும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


1800 களின் பிற்பகுதியில், கலிஃபோர்னியா, ஓக்லாண்ட், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில். தொல்பொருள் ஆராய்ச்சிக்காக , அரிசோனாவில் உள்ள ஹவா சுபாய் கேன்யனில் பண்டைய செவ்விந்திய குடியிருப்புகளை அகற்றி தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்க்கொண்டனர்.

பண்டைய செவ்விந்திய மூதாதையர்கள் வாழ்ந்த, ஹவா சுபாய் செங்குத்துப் பள்ளத்தாக்கின் சுவர்களில், டாக்டர் ஹப்பார்டு  விசித்திரமான பறவைகள்,  #டைனோசர் மற்றும் பிற விலங்குகளின் அழகிய சித்திரங்களை கண்டார்.

சில வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் இந்த செங்குத்து பள்ளத்தாக்கு சுவர்களில் ஒரு டைனோசரின் சித்திரவியலாளராக இருந்தார் என்பது, டைனோசர் பழங்கதை பற்றிய நாம் நம்பிக்கொண்டிருக்கும் கோட்பாடுகள் அனைத்தையும் உண்மையில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் இந்த சித்திரத்தை வரைந்த முந்தைய வரலாற்று கலைஞர், அதை உயிரோடு பார்த்திருக்க வேண்டும்..

டாக்டர் ஹப்பார்ட் மற்றும் அவரது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பரிணாமவாதிகளால் 165 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக  டிராசாக்ஸாக அடையாளம் காணப்பட்ட அடுக்குகளில் பாதுகாக்கப்பட்டுள்ள டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு மிருகத்தின் (டைனோசர்) அத்தகைய பரிபூரணமான படத்தை அவர்கள் எப்படிக் கண்டிருக்கிறார்கள்? செவ்விந்தியர்கள் எப்படி அவைகளை அறிந்திருக்க முடியும்? அல்லது அதைக் கண்ட ஒருவர் (#வேற்றுகிரக) அவர்களுக்கு விவரித்திருக்க முடியுமா?.

பொதுவாக பரிணாமவாதிகளால் நடத்தப்பட்ட நம்பிக்கைப்படி, "டைனோசர் காலத்தில்" எந்த பிரமாண்ட பாலூட்டிகளும் இல்லை. ஓவியர்களின் மறுசீரமைப்பு பொதுவாக சதுப்பு நிலங்களில் வாழும் ஒரளவு பெரிய ஊர்வனவற்றை காட்டுகின்றன, இவை மற்ற வகை டைனோசர்களை விட தாமதமாக பரிணாம வளர்ச்சியுற்றன என்கிறார்கள்.  டாக்டர். ஜார்ஜ் கேய்லார்ட் சிம்ப்சன், என்பவர். அந்த நேரத்தில் (அதாவது கிரெடேசியஸ் காலத்தின் முடிவில் கூட) உருவாகிய ஒரே அளவிலான பாலூட்டிகள் "சிறியவை, பெரும்பாலும் சுட்டி அளவிலான மற்றும் அரிதானவை" எனக் கூறகிறார்.

இது மனித பரிணாம விதிகளில் முற்றிலும் சிந்திக்க முடியாதது, டைனோசர்கள் மற்றும் மேம்பட்ட பாலூட்டிகள் (யானைகள் அல்லது ஒட்டகங்களைப் போன்றவை) இணைந்திருக்கலாம். எனினும், டாக்டர் ஹப்பர்ட்டின் கண்டுபிடிப்புகள், மனித டைனோசர் பரிணாம  காலத்திற்குள் "குரங்குக் கோட்பாடு தவுடு போடியாகிறது அல்லவா. ஏனென்றால் அவர்கள் இணைந்து வாழ்ந்திருக்க வேண்டும்...

பாஜக வை 5 மாநிலங்களும் கதறவிட்டது...


ஊடகங்களே மக்களின் முதல் எதிரி...


ஊடகத்தை உதரி தள்ளிவிட்டு உங்கள் அறிவை வைத்து அன்புமணி, சகாயம்  போன்ற நல்ல தலைவர்களை தேடுங்கள் - சுய புத்தியை கொண்டு...

சொல் புத்தியை தூக்கியெரியுங்கள்...

சிந்தனை வரும் வரை நாம் அனைவரும் ஏமாளிகளே..

மக்களை ஏமாற்றி பிழைக்கும் மூன்று கூட்டு களவாணிகள்..

Corporate நிறுவனங்களின் விளம்பரங்களை போடவே பொழுது போக்கு ஊடகம்.

Corporate நிறுவனங்களுக்கு தேவையான அராங்கத்தை உருவாக்குவதும் தக்க வைப்பதுமே செய்தி ஊடகத்தின் ஆக சிறந்த வேலை..

தகுதியற்ற தலைவர்களை பெரிய ஆட்களாக்கி விடுதல் - ( கருத்து திணிப்பு முலம்) அறிவில்லாத பண ஆசை பிடித்தவர்களை தலைவர்களாக்கி அவர்களை வைத்து Corporate நிறுவனங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளும்..

இந்தியா எனும் மிக பெரிய சந்தையில் - We are consumers and voters.  அவ்வளவு தான்.

Corporate நிறுவனங்களின் விளம்பரத்துக்காகவே அனைத்து கேவலமான நிகழ்ச்சிகளும். 

மக்களை பார்க்க வைத்து Television rating point - TRP உயர்த்தி அதிக பணம் சம்பாதிக்கவே - Breaking news /கவர்ச்சி / காமெடி / கேவலமான நாடகங்கள்..

எதுவும் நன்மைக்காக அல்ல - விளம்பரத்திற்க்கு மட்டும்...

மக்களாகிய நாம
எதை படிக்கக் கூடாது,
எதை பார்க்கக் கூடாது,
எதை பேசக் கூடாது,
எதை சிந்திக் கூடாது,
எதை அறிந்து கொள்ளக் கூடாது,
எதை தெரிந்து கொள்ளக் கூடாது,

என்பதை எல்லாம் முடிவு செய்யும்  ஊடகம்...