அவர்கள் பசப்புகிறவர்கள்...
பாசாங்கு செய்பவர்கள்..
உனக்குத் தெரிந்தேயிராத சிலர்..
அவர்களைத் தெரிந்து கொள்வது கூடச் சிரமம் என்றிருக்கக்கூடிய சிலர்..
அவ்வளவு சாதாரணமாக வாழ்கிறவர்கள் அவர்கள் தான்..
இந்த உலகத்தைப் பாதுகாக்கிறார்கள்..
அவர்கள் இந்த உலகம் எனும் வனாந்திரத்தின் ஆழத்தில் வாழ்கிறார்கள்..
அவர்களை உனக்குத் தெரியாது தான்..
இந்த உலகத்தைக் காப்பாற்றி வைத்திருப்பது வெகு சிலரே...
ஸ்படிகம் போலப் பரிசுத்தமான சிலரே..
இந்த உலகைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்..
குழந்தையின் வெகுளித்தனத்தோடு இருக்கும் சிலரே..
இந்த உலகத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்..
ஆனால் அவர்களோ தாமே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று நினைக்கிறார்கள்..
ஏனென்றால்..
அவர்களே விழித்தவர்கள்..
இந்த உலகத்தின் இருட்டுக்குத் தன்னையே முழுப் பொறுப்பாக்கிக் கொள்கிறவர் ஞானி..
கீழே, வெகு கீழே என்று போகிறவர் ஞானி..
அவர் தான் இந்த உலகைப் பாதுகாப்பவர்..
அவர்கள் தான் உண்மையான அரசர்கள்..
சரித்திரத்திற்குத் தெரியாத அரசர்கள்..
வேடம் பூண்டவர்களை அரசர்களாகச் சரித்திரம் பேசுக் கொண்டிருக்கிறது போலிகள்..
உண்மையான அரசர்களைச் சரித்திரம் இன்னும் இனம் கண்டு கொள்ளவில்லை..
இல்லையேல் சரித்திரம் புத்தரைப் பற்றிப் பேசும்..
லாவோத் சூவைப் பற்றிப் பேசும்.
கபீரைப் பற்றிப் பேசும்..
கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்..
கிருஸ்துவைப் பற்றிப் பேசும்..
முகமது பற்றிப் பேசும்..
மகாவீரர் பற்றிப் பேசும்..
நெப்போலியனைப் பற்றியோ..
ஹிட்லரைப் பற்றியோ..
மாசேதுங் பற்றியோ..
ஸ்டாலின் பற்றியோ..
பேசிக்க் கொண்டு இருக்காது...
ஆனால்..
சரித்திரம் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறது..
சரித்திரம் ஒவ்வொரு குழந்தையையும் வக்கிரப் படுத்தி வைத்திருக்கிறது..
முட்டாள்களைப் பற்றிப் பேசி..
மூடர்களைப் பற்றிப் பேசி..
பைத்தியக்காரர்களைப் பற்றிப் பேசி..
வக்கிரம் பிடித்தவர்களைப் பற்றிப் பேசி..
ஞானியரைப் பற்றிப் பேசாமல்...
ஒவ்வொரு குழந்தையையும் சரித்திரம் வக்கிரப் படுத்தி வைத்திருக்கிறது..
ஞானியரே உலகின் உண்மையான அரசர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.