பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரச வழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள்.
சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்.
சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம்.
மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர்.
சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன.
குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
எல்லைகள்...
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும்.
ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது.
ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன.
சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர்.
ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்..
நகரங்கள்...
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது.
முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.
இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன.
சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.
தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர். (தற்போது கேரளாவில் உள்ளது)..
அரசர்கள்...
மூன்றாம் கழகக்காலச் சேரர்கள்
கழக நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.
குறிப்பாக, மூன்றாம் கழக நூல்களுள் ஒன்றானபதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும்.
இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.