15/12/2021

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

 


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்...

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.

பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்...

காவல்துறை எனும் ஏவல் துறை...

தடுப்பூசியின் விளைவுகள்...

தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றனவா?

 


ஆந்திராவில் ஆண்டுக்கு 150  தெலுங்கு படங்கள் வெளிவருகின்றன.

கர்நாடகாவில் 90  கன்னட படங்களும், கேரளாவில் 80  மலையாள படங்களும் மும்பையில் 220  இந்தி படங்களும் தயாராகி வெளிவருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளி வருகின்றன. அதுவும் வெளியில் தெரிய மாட்டேன் என்கிறது.

உலகில் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. நேரடி மொழிப படங்கள், ரீமேக் படங்கள் , டப்பிங்  படங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத ஒரு வகை படங்களே வெளிவருகின்றன. அவற்றை நாம் மாற்றார்  படங்கள் என்று சொல்லலாம்.

மாற்றார் வகை படங்களே தமிழில் ஏராளமாக வெளி வருகின்றன. ஒரு படம் தமிழ்ப்படம் என்று சொல்ல வேண்டுமானால், குறைந்தபட்சம் அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் ஐந்து சதவீதம் பேர் தமிழர்களாக இருக்க வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் கதாநாயகன், கதாநாயகியாவது தமிழர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியா இருக்கிறது. எம்ஜிஆர், படமும், ரஜினி படமும், கமலஹாசன் படமும் தமிழ்ப்படங்கள் இல்லை. அவை  மாற்றார் நடித்த  தமிழ்ப்  படங்கள் . கதாநாயகன் எம்ஜிஆர். மலையாளி, கதாநாயகி ஜெயலலிதா கன்னடச்சி என்றால் அது எப்படி தமிழ்ப் படம் ஆகும்?

ரஜினி கன்னடன், ஐஸ்வர்யா ராய் மும்பைச்சி என்றால் அது எப்படி தமிழ்ப்படம் ? கமலஹாசன் ஆரிய பிராமணன், பூஜா குமார் பெங்காலி என்றால் அது தமிழ்ப்படமா ? இவை மாற்றார் நடித்த தமிழ்ப்படங்கள். மாற்றார் வகை தமிழ்ப்படங்கள்.

அப்படிப்பார்த்தால், எம்ஜிஆர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை, ரஜினி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. விஷால் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்படங்களில் இவர்கள் நடிக்கவும் முடியாது. அப்படியானால் சிவாஜி கணேசன் நடித்த படங்கள்? கணேசன் தமிழன் தான். ஆனால் கூட நடிக்கும் நாயகி வாணி ஸ்ரீ , கே. ஆர். விஜய,   ஜெயலலிதா , சரோஜாதேவி இவர்கள் எல்லாம் தமிழச்சிகள் இல்லையே. இயக்குனர் தமிழராக இருக்க மாட்டாரே... அப்படியானால் அது எப்படி தமிழ்ப்படமாகும் ? சிவாஜியும் அதிக அளவில் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மாற்றார் வகை தமிழ்ப்படங்களில் நடித்துக் கொடுத்து இருக்கிறார் அவ்வளவுதான்.

அப்படியானால் உண்மையான தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றனவா என்றால் அதிகம் இல்லை. வருடத்துக்கு நான்கு வருகிறது. அவையும்  வெளியே தெரியாமல் வந்தவழி போய் விடுகிறது. இதில் தான் மாற்றம் வேண்டும்.

தமிழர் நடித்து, தமிழர் இயக்கும், தமிழ்ப்படங்கள் வெளிவர வேண்டும். அப்போது தான் தமிழ் மண்சார்ந்த கதைகள் படங்களாக வெளிவந்து தமிழர் மனத்திரையை விரிவுப்படுத்தி செம்மைப்படுத்தும். அந்த நாளுக்காக  காத்திருப்போம்...

பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

இனிய காலை வணக்கம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...

 


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

அதுசரி உங்க வாயீ...உங்க உருட்டு...

இந்திய தரகர் & விற்பனையாளர் பாஜக மோடி கலாட்டா...

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

பாஜக சங்கி கலாட்டா...

திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...