சத்திய யுகம் வருங்கால தீர்க்கதரிசனம் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி 4-ம் பகுதியாகும். இந்த 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் உடனே நடந்து முடிய உள்ளன. இந்த பூமி எங்கும் இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இறங்கும் காலமாக இக்காலம் இருக்கும் என இந்த 4-ம் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
இந்திய துணைக் கண்டங்கள் முழுவதும் இயற்கை சீற்றங்களான புயல், மழை, சூறாவளிக்காற்று என பல கோர தாண்டவங்களால் அப்பகுதிகள் பலத்த சேதங்களை சந்திக்க இருப்பதாகவும், மக்களின் இறப்பு சதவீதம் 8 % முதல் 12 % வீதம் வரை இருக்கும் என தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குமரிக் கண்டமான லெமூரியாவை ஆண்ட மன்னன் ஒருவனின் சமாதி கடலுக்குள் அடியிலிருந்து பூமியின் மேல் பரப்பிற்கு வர உள்ளது என்றும், இதுவரும் சமயம் இந்திய தேசத்திற்கு போதாத காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதன் தாக்கம் குமரி முதல் இமயம் வரை தென்படும் என்று இறை தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றன.
கிருஸ்துவ மக்களுக்கு இது போதாத காலமாக இருக்கும் என்றும், இதனால் இந்திய மண்ணில் சில உயிர் பலிகள் நடக்க இருப்பதாகவும், தேவாலயம் ஒன்று வெடி வைத்து தகர்க்கும் சம்பவம் ஒன்று உடனே நடக்க இருப்பதாகவும், அச்சமயத்தில் “புனிதர்“ ஒருவரின் வருகை உறுதிபடும் வகையில் ஒரு அதிசயம் நடைபெறும் என்று 4-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஒன்று தமிழகத்தில் உருவாகி வருகின்றது என்றும், அந்த காவியத்தின் சொந்தங்களே இந்த நாட்டை ஆளும் ராஜாவையும், இந்த நாட்டின் பிரதேசப் பகுதிகளை ஆளும் இந்திய பிரதிநிதிகளையும் முடிவு செய்வார்கள் என்றும், இந்தியா மட்டுமின்றி, இந்த காவியத்தின் குடைக்கு கீழேதான் உலக நாடுகளும், அதனை ஆளும் பிரதிநிதிகளும் வருகிறார்கள் என்றும், அந்த காவியத்தின் தலைவன் இறைவனே இருப்பார் என்றும், அக்காலம் தற்போது துவங்கி விட்டது என்றும், அதனை மக்கள் உணரும் காலமாக நடப்பு ஆண்டு அமையும் என்று இறை தீர்க்கதரிசனங்கள் கூறும் உண்மைச் செய்தியாகும்.
இனி வானிலை மாற்றங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் காணப்படும் என்றும், மக்கள் மனதில் இது மிகுந்த பயத்தை உருவாக்குபவையாக இருக்கும் என தீர்க்கதரிசனங்கள் இங்கே குறிப்பிடுகின்றன.
இயற்கை வழியில் தமிழகத்திற்கு நிறைய ஆபத்துகள் வர உள்ளது என்றும், இதன் அறிகுறியே கோவிலில் நடந்த தீவிபத்துகளின் அறிகுறிகள் என்றும், இதற்கு அச்சாரமாக பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் ஒன்று இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி அழிவுறும் என்றும், இது நடந்தால் தமிழக அரசியல்வாதிகளின் சாம்ராஜ்யமே ஆட உள்ளதாக தீர்க்கதரிசனச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அழிவில்லாதவர், நித்தியமானவர், வலிமையானவர் என்ற அடைமொழிக்கு உரிய “ஸ்ரீ ஆஞ்சநேயரை“ வடமாநில பக்தர்கள் சிலர் நேரில் கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுவார்கள் என்றும், இது இணையதளத்தில் வேகமாக செய்தியாக உலகம் முழுவதும் பரவும் என்றும், அப்பொழுது கடல் உள்மட்டத்தில் உள்ள துவாரகையின் ஒரு சிறு நிலப்பரப்பு வெளியே வரும் என்றும், இதன் அறிகுறி என்னவெனில் “கலியுக கடவுளான“ ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் செயல்பாடுகள் பூமியெங்கும் துவங்கி விட்டதற்கான அறிகுறி என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என இந்த 4-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இங்கே வழங்குகின்றது.
கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமியின் சந்நதியில் உள்ள ஒரு அறையின் கதவு திறக்கப்படும் நிகழ்வு உடனே நடக்கும் என்றும், அப்பொழுது 108 திவ்ய தேசங்களில் உள்ள ஸ்ரீநாராயணின் முக்கிய ஆலயம் ஒன்று பெரிய அழிவுக்கு உள்ளாகும் நிகழ்வு தற்போது நடக்க உள்ளதாகவும், இது நடந்து விட்டால் “இந்த உலகம்“ அடுத்த யுகத்திற்கு தயாராகி விட்டது என உலக மக்கள் எண்ண வேண்டுமென்று இறை தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
வேற்றுகிரக வாசிகளின் “ஓடம்“ ஒன்று கடலின் உள்ளே இருந்து வெளிவரும் நிகழ்வு தற்போது நடக்க உள்ளதாகவும் “ஜெனிவா“ கவனத்தில் கொள்ள வேண்டிய நிலப்பரப்பு என்று மற்றொரு செய்திக்குறிப்பு இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
புகழ் என்ற ஒன்றையே விரும்பி உலகத்தை சுற்றிவரும் ஒருவனின் கால்கள் இந்திய தேசத்தில் ஊன்றும் பொழுது இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் முக்கிய நிகழ்வு ஒன்று துவங்கி விடும் என்றும், அதன் ஆரம்ப அறிகுறி அவனின் தேசம் தீப்பற்றி எரிந்திருக்கும் என்பதே அதன் குறிப்பாகும்.
இந்த தேசத்தின் மீது இறைவனின் நீயாயத் தீர்ப்பு தற்போது இறங்க உள்ளது என்றும், இது இந்திய தேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது என்பதே இதன் முக்கிய குறிப்பாகும்.
பன்னாட்டு கிருஸ்துவக்குழு ஒன்று இந்திய தேசத்திற்குள் நுழைந்து ஒரு இறைச்சபையை தேடும் நிகழ்வு ஒன்று தற்போது துவங்கிட உள்ளது என்றும், அவர்கள் வெளியிடும் செய்திக் குறிப்புகள் இந்திய மக்களிடையே பல ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் 4-ம் இறை தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு ஒரு குறிப்பை தருகின்றது.
பக்ரையன் கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், முஸ்லீம்களின் ஆதிக்க பலத்தால் பலத்த உயிர் சேதங்கள் அங்கு ஏற்பட உள்ளதாக இறை தீர்க்கதரிசனங்கள் இங்கே தெரிவிக்கின்றன.
சுமேரியா நாகரிகத்தின் தொண்மைகள் வாயிலாக இனி தமிழனின் பண்பாடுகள், கலாச்சாராங்கள் தெரிய வரும் என்றும், சுமேரியா நாகரீகம் அது முற்றும் இந்திய வம்சாவழி மக்களின் நாகரீகம் என்பதே உலக புதைபொருள் ஆய்வு மன்றக்குழு உலக மக்களுக்கு அறிவிக்கும் என்ற செய்திக் குறிப்பை 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியான சத்திய யுக செய்திக் குறிப்பு இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
பாதாள நாயகி அன்னை மாகாளி இந்த பூமியின் மீது தொடுக்கும் போரை மக்கள் அழிவுகளாக இனி காணப் போகிறார்கள் என்றும், அதன் எதிரொலியாக “காஷ்மீர்“ பகுதியில் உருவாகும் அழிவுச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகளாக இருக்கும் என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இறைவனின் அவதாரம் இந்திய மண்ணில் மட்டுமே என்பதை இனி உலக மக்கள் அறிய உள்ளார்கள் என்றும், இதன் அறிவிப்புகளை இறைவனே முன்நின்று அறிவிக்கும் நிகழ்வுகள் இனி உலக முழுவதும் நடைபெறும் என்றும், “ஒலிவ“ மலையிலிருந்து இக்காட்சி துவக்கம் பெற உள்ளது என்றும் 4-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே ஒரு முக்கிய இறைவன் சார்ந்த குறிப்பை நமக்கு நினைவூட்டுகின்றது.
மறைபொருள் பொதிந்த தென்னிந்திய நடிகர் ஒருவனின் அரசியல் பிரவேசம் “ஆட்டம்“ காண உள்ளது என்றும், இது மக்களிடையே பல சந்தேகங்களை உருவாக்கி அந்த நடிகரை வெறுப்புக்கு ஆளாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும் என தீர்க்கதரிசனப் பகுதி இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
மறைந்த முன்னாள் முதல்வரின் “அந்தரங்க“ செய்தி ஒன்று உண்மையாகும் நிகழ்ச்சி ஒன்று தற்போது நடக்க இருப்பதாகவும், இதனால் அவரின் புகழுக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படாது என்று சத்திய யுக தீர்க்க தரிசனத்தின் 4-ம் பகுதி நமக்கு இங்கே ஒரு குறிப்பை தருகின்றது.
குஜராத்தில் இனக்கலவரம் ஒன்று தற்போது துவங்கிட இருப்பதாகும், இது ஒரு வேதனை அளிக்கக்கூடிய செயலாக மக்களுக்கு அமையும் என்று வருங்கால தீர்க்கதரிசனச் செய்திக் குறிப்பு நமக்கு தெரிவிக்கின்றது.
புத்த அமைப்பு ஒன்று இந்திய தேசத்தில் நடக்க உள்ள “இறை“ சார்ந்த ஒரு புனித நிகழ்வை பற்றி பகிரங்கமான ஒரு செய்தியினை வெளியிடுவார்கள் என்றும், புத்தர் வாழ்ந்த பகுதியில் ஒரு அதிசயம் அப்பொழுது நடந்தேறிடும் என்றும் 4-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தருகின்றது.
அகத்திய மாமுனியின் மறுபிரவேசம் இப்பூமியில் இன்னும் 3 தினங்களில் நடக்க உள்ளதாகவும், அதனை சார்ந்த நிகழ்வுகளை மக்கள் காணும் அரிய நிகழ்ச்சிகள் உடனே நடக்க இருப்பதாக தீர்க்க தரிசனச் செய்திக் குறிப்புகள் ஒரு உண்மை நிகழ்வை இங்கே சுட்டிக் காட்டுகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பூமியை வலம் வந்த ஒரு ஆன்மாவில் மட்டுமே இறைவனின் பிரவேசம் இருக்கும் என்றும், அந்த ஆன்மா காலத்தை கடந்து பல பிரவேசங்களை கண்ட ஒரு ஆன்மாவாக அது இருக்கும் என்றும், அது திரித்துவ தத்துவத்தின்படி “மும்மூர்த்திகளின்“ ஸ்வரூபமாக அமைந்திருக்கும் என்றும், அந்த ஆன்மாவின் முகத்தை இனி உலக மக்கள் தங்களின் பிரார்த்தனை நேரத்திலும், தியான நேரத்திலும், தனது கனவுகளின் வழியாகவும் காண்பார்கள் என்றும், அந்த முகத்தின் அடையாளமாக அனைவருமே அந்த ஆன்மாவின் “இரு“ கண்களைப் பற்றியே ஒரே மாதிரியாக வர்ணித்து செய்திகளை வெளியிடுவார்கள் என்று, சத்திய யுக தீர்க்கதரிசனத்தின் 4-ம் பகுதி ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
எழுத்தும் செயலும் ஒன்றாக இருப்பின் அதுவே உண்மையின் தத்துவம், அதுவே இறைவனின் வடிவம்.
வடிவத்தை காண்பவன் உண்மையானவன். உள்ளத்தில் உணருபவன் பக்திமான். பரவசத்தில் அடையாளம் காண்பவன் மனிதன். மனிதனுக்குள் உள்ள அந்த இறைவனை அடையாளம் காணும் காலமாக இக்காலம் இருக்கும் என தீர்க்கதரிசனங்கள் மெய்பட கூறுகின்றன.
அந்த இறைவனை அடையாளம் காண நாம் அனைவரும் உண்மையாக காத்திருப்போம். அப்பொழுது உண்மைகள் உறங்காது அது ஆகாயத்தில் ஒளி வீசும் சூரியனை போன்று ஒருநாள் நமக்கு வெளிச்சமிட்டு அடையாளப் படுத்தும் அதுவரை நாம் காத்திருப்போம். சத்தியம் வென்று “சத்திய யுகத்தை“ படைக்கும் பொழுது நாம் அனைவரும் புதியவர்களாக மாறி இருப்போம். இதுவே உண்மை.
குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.
மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...