தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்..
நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு, தேன் மருந்து..
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்..
நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து..
புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து..
வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.
நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து..
வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து..
பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்...