1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்பட வேண்டும்..
2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்பட வேண்டும்...
3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்பட வேண்டும்..
4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்பட வேண்டும்..
5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.
6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்கக் கூடாது..
7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.
8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்பட்டு பின்பு அனைத்தும் இலவசமாக வேண்டும்..
9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்...