30/08/2018

கார்பரேட்களின் பேஸ்ட் வியாபாரம்...


உடல் நலத்தை பாதுகாக்கும் புடலங்காயின் மருத்துவ குணங்கள்...


புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு.

புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான  தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது.

புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு  அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். விதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.

மருத்துவப் பயன்கள்  :

100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரதச்சத்து புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளி யேற்ற வல்லது.

மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது. புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ் கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. புடலங்காய் முறைக் காய்ச்சலை போக்க கூடியது.

எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால்  முறைக் காய்ச்சல் மறைந்து போகும். புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு  வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.

பேய்ப்புடலின் மருத்துவப் பயன்கள்:

இது இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது-. தோல் நோய்களை விரைவில் குணப்ப டுத்த வல்லது. கிருமிகளை அழிக்கவல்லது. பசியைத் தூண்டக்கூடியது. மலத்தை இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது, பித்தநோய்களைத் தணிக்ககூடியது. ஈரலைப் பலப்படுத்த வல்லது. இதனுடைய வயிற்றுப் புழுக்களைக் கொல்லக்கூடியது.

காய்ச்சலைத் தணிக்ககூடியது. இலைகள் மேற்பூச்சாக பூசுவதால் தலையில் திட்டுதிட்டாக முடி உதிர்ந்து ஆங்காங்கே வழுக்கை போல் தோன்றுகின்ற புழுவெட்டு  குணமாகும். டிரைகோ சாந்தஸ் குகுமெரினா என்பது பேய்ப்புடலின்  தாவரப்பெயர் ஆகும். அமிர்தபலா, வனபட் டோடா என்பவை அதன் வடமொழிப் பெயர்கள் ஆகும்.

பேய்ப்புடலின் இலைகளை மைய அரைத்து பசைபோல் ஆக்கி தோல் நோய்களின் மீது பூசி வர எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தோலில் நீர் வடியச் செய்யும் கொப்புளங்களோடு நமைச்சலும் தருகின்ற துன்பம் விரைவில் குணமாகும்.

பேய்புடல் இலைகள் நான்கு அல்லது 5 இலைகளை எடுத்து சுத்திகரித்து ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறவைத்து எடுத்து வடிகட்டி ஆறாதபுண்கள், நாற்றமெடுத்து புழுக்கள் வைத்த புண்கள், சர்க்கரை நோயால் வந்த கட்டிகள் ஆகியவற்றின் மீது ஊற்றிக் கழுவி வர விரைவில் குணமாகும்.

இலைப் பசையை நாட்பட்ட கட்டிகள், சீழ்வடியும் ஆறாப் புண்கள் ஆகியவற்றின் மேல் பூசும் மருந்தாகவும்  பயன்படுத்த விரைவில் அவை ஆறிவிடும்.

பேய்ப்புடல் இலையைக் கொழுந்தாக எடுத்து நான்கைந்து இலைகளை ஓர் டம்ளர் அளவு நீர்விட்டு கொதிக்கவைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுப்போக்கினை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யும்.

இலையை அரைத்துப் பிழிந்த  சாறு 5 முதல் 10மி.லி வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியாகி பித்தம் வெளியேறும்.

இலைச்சாற்றை தலையில் தேய்த்து வைத்திருந்து சிறிது நேரம் சென்று குளித்துவிட தலைமுடி கொட்டுவது நிற்கும்.

இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான  ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத்  தருவதாக இருக்கும். புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.

இந்நிலையில் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் புடலம் இலையைக் கசக்கித் தயாரித்த சாற்றை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வைத்திருந்து பின் தலைக்கு குளிப்பதும் என்கிற பழக்கம் விரைவில் குணம் தர ஏதுவாகும்.

உடலில் பித்தம் அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, குமட்டல், ருசியின்மை என்ற தொல்லைகள் தொடர்ந்து துன்பம் தரும் போது புடலங்கொடியின் இலைச் சாற்றை தீ நீராக்கி அத்துடன் கொத்துமல்லிச்சாறு அல்லது தனியாத் தூள் சேர்த்துக் காய்ச்சி சுவைக்க பனங்கற்கண்டு சேர்த்து பருகுவதால் பித்தம் தணிந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கடுமையான காய்ச்சல் ஏற்படும் போது 50கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் அதில் சம அளவு சேர்த்து மல்லி இலையையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில்  வெறும் வயிற்றில் அந்த ஊறலைக் குடித்து வர  கடுங்காய்ச்சலும் தணிந்து போகும். இந்த தீநீர் பித்த சம்பந்தப்பட்ட நோய்களையும் நாவறட்சி, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணமாக்கும்.

கீல்வாதம் என்னும் மூட்டுவலி என்னும் நோயால்  பாதிக்கப்படுவோர் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி உள்ளுக்கக் குடிப்பதாலும் வலிகண்ட இடங்களில் மட்டுமின்றி உடல் முழுதும் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் நாளடைவில் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு கல்லீரலிலும் ஆரோக்கியம் திகழும்.

30முதல் 50கிராம் வரை எடையுள்ள புடலங்காயைக் கொடியின் இலைகள் இளசாக தேர்ந்தெடுத்து சமபங்கு கொத்துமல்லி இலை சேர்த்து நீரிலிட்டு ஊறவைத்து காலையில் அதன் தெளிந்ந நீரைக் குடித்து வருவதால்  நாளடைவில் மஞ்சள்காமாலை மறையும்.

புடலங்காயின்  இலைச்சாறு 5 முதல் 10மி.லி  அளவுக்கு உள்ளுக்குப்  புகட்டுவதால்  பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.

நன்கு முற்றிப் பழுத்த புடலையின் விதைகளை மட்டும் நீக்கி விட்டு விதையை உலர்த்தி வைத்து கொண்டு இரவில் நீரிலிட்டு ஊற வைத்திருந்து காலையில் அதன் நீரைப் பருக பேதியாகும். இதனால் குடல் சுத்தமாகும். புடலங்காயின் விதைகளை பேதி மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

புடலம் வேரை 5முதல் 10 கிராம் வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி குடிக்க பித்தத்தைப் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றும்...

இரும்பலுக்கு ஏலக்காய் உபயோகிங்கள்...


பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய் விடுமாம்...


பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும்.

கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.

எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

1 : அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

2: உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

3: உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

4: தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

5: தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

6: சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

7 : உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

8: 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.

இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்...

ஸ்டெர்லைட் கொலை...


கேரளாவில் வெள்ளத்தால் நின்று போன திருமணம்.. இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்...


கேரளாவின் மூணாறில் உள்ள சுப்பிரணியசாமி கோயில் அருகே விஜயன் மற்றும் முனியம்மா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சரண்யாவிற்கு செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அவர்களது வீடு மற்றும் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதில் சரண்யாவின் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகளும் அடக்கம்.

இதனால் சரண்யாவின் திருமணம் நின்று போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட மூணாறில் டீக்கடை வைத்திருக்கும் மரியான் என்பவர் திருமணத்திற்காக ரூ 10 ஆயிரம் நிதி அளித்தார். இதனை தொடர்ந்து மேலும் பலர் உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.

இதனால் மகளின் திருமணத்தை குறிப்பிட்ட தேதியில் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர் சரண்யாவின் பெற்றோர்...

இங்கு இயற்கையை சார்ந்து அறிவு இல்லை என்பதே நிதர்சனம்...


என்றைக்கு நீங்கள் இயற்கையை தவிர்த்து, செயற்கையை அறிவாக அடைந்தீர்களோ, அன்றே இயற்கை நம்மிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது...

அதிமுக தர்ம யுத்த உத்தமர் ஓபிஎஸ் சும் குடும்ப அரசியலும்...


பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள்...


பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ?

அது மட்டுமின்றி, பர்மாவின் புகழ் உலகமெங்கும் கோடிகட்டி பறந்த காலமும் இருந்தது.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், உலக சமாதானமும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஒங்கவேண்டும் என்பதற்காக ஐம்பெரும் தலைவர்கள் செயலாற்றினார்.

இந்திய உபகண்டத்தின் பண்டித நேரு, சீனத்து சூயேன்லாய் இவர்களுக்கு இணையாகப் பணியாற்றிய பர்மிய நாட்டு தலைவரும் ஒருவர்.

ஆசிய ஆபிரிக்க மாநாடு பாண்டாங் மாநாடு என 20 ஆம் நுற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த வியக்கத்தக்க உலக சாமாதான செயல்பாடுகளாகும்.

1975 இல் இயற்கை அடைந்த ஏந்தல் ஊத்தான் எனும் பெருமகன் உலக நடுகல் மன்றத்தின் பொதுச் செயலாளாராக இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு போரிலிருந்து உலகை மீட்டவர்களை குறிப்பிடத்தக்கவர் இவர் என்பதை உலகம் அறியும்.

இரண்டாம் உலக போரின் கொடூரம் ஆசியாவை உலுக்கி எடுத்ததை யாரும் இன்று வரை மறந்திருக்க முடியாது.

நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லிக் கொள்வதில் பயனில்லை என்பது எங்களுக்கு படுகிறது.

அதன் வழியில் 50 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட இடத்தில் தள்ளாடித் தள்ளாடி எங்கள் வலுவுடன் எழுந்து நிற்கின்றோம் முன்னேற்றம் காண வேண்டும் என்ற  உணர்வோடு கால்நூற்றண்டுகளுக்கு மேலாக பர்மிய நாட்டு தமிழர்கள் புத்துணர்வுபெற வேண்டும் என்பதற்காக கடும் நெருக்கடிக்கிடையிலும் கட்சி பேதங்கள் காட்டாது சமய வெறி கொள்ளாது.

தன்மான உணர்வுடன் சுயமரியாதை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக முற்போக்காளர்கள் அணிதிரண்டு செயலற்றியதன் விளைவால் இன்று பல பிரிவில் தமிழுணர்வும் தன்மான எழுச்சியும் பெற்று வருவது குறிப்பிடதக்கதாக இருந்தாலும் முழு மன நிறைவு கொள்ள இயலாது தவிப்புடன் இருப்பதை காண முடிகிறது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது முற்போக்கு அணியினரின் நம்பிக்கை சுடராகும். 1962 ஆம் ஆண்டிற்குப்பின் பர்மா தமிழர் வெளி உலகில் இருந்து ஒதுங்கி விட்டனர் எனபத? ஒதுக்கி வைக்கபட்டு விட்டனர் என்பதா? எதுவும் விளங்க வில்லை இருப்பினும் உலகெங்கும் பறந்து வாழும் தமிழர்களுக்கு இணையாக இருக்க முடியாது போனாலும் பர்மாவில் தமிழர்கள் தமிழர்களாகவே கலை கலாச்சாரம் பண்பாடு குன்றாது வாழ்ந்து வருகின்றனர் பர்ம தமிழர்கள் கலை கலாச்சாரம் பண்பாடுகள் மாறாமல் வாழ்த்து வருகிறார்கள் என்று உலகமும் தமிழ் சமூகமும் அறிய வேண்டும். உலக மயமாக்கல் மத்தியிலும் இந்த சமுதாய சீரழிவுகள் மத்தியிலும் பர்மா தமிழர்கள் தமிழர்களாகவே வாழ்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
       
இந்திய விடுதலைக்கு நேதாஜியின் தலைமையில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தில் உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈந்து விடுதலைப் போராட்டத்தில் குழுப் பங்கு கொண்ட தியாகத்தின் சிகரங்களாக தமிழர்கள் இருந்தபடியால்தான் எனக்கு மறுபிறவி இருக்குமானால் அப் பிறவியில் நான் ஒரு தமிழனாக பிறக்கவேண்டுமென நேதாஜி கூறினார் என்றால் தமிழரின் விடுதலை வேட்கையும் நாட்டு பற்றும இனப்பாசம் இவைகளையும் குறைத்து மதிப்பீடு செய்து விட முடியாது. இப்படி நேரு உரையில் குறி இருப்பதுடன் ஈழத்து இனப்படுகொலை நடைபெற்றதையும்.
     
தமிழ் உள்ளத்தோடு தொலை நோக்கிறோம் பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ? மொரீசியஸ்,பிஜிதீவுகள், ஆபிரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா (தமிழ் நாடு) என தமிழர்கள் தத்தம் சிறப்புகளை அடையாளப்படுத்தும் பொழுது எங்களுக்கு (பர்மா தமிழர்கள்) சின்ன இடம் கூட கிடைக்க வில்லையே என்பது எங்கள் மனதை வாட்டி எடுக்கிறது.

தமிழைப் பேசி தமிழை வளர்ப்போம் என்று பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம் என முழங்கி வருவதுடன் கோவில்களிலும் தமிழ் போதிகப் பட முயற்சிகள் மேற்கொள்கிறோம்.

இத்தனை காரியங்கள் தொடர்ந்து செய்தாலும் எங்களை அடையாளம் காணப்படாது போய் கொண்டு இருப்பது ஊமைகள் பேசுவதாக பார்கிறார்கள் என்றோ தோன்றுகிறது ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பதே உறுதி..

நாம் பயன்படுத்தியதை காட்டு மிராண்டி செயல் என்று நிறுத்தி விட்டு... தற்போது நாகரிகம் என்ற பேரில் அதே வரட்டி...


அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்...


தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன.

‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து’ -திருக்குறள் 277.

இதன் பொருள்: புறத்தில் குன்றிமணி போல செம்மையான வராய் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருத்திருப்பவர் உலகில் உண்டு என்பதாகும்.

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் பரவ லாகக் காணப்பட்ட குன்றிமணி மரங்கள் வேகமாக அழிந்து வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி தரணி முருகேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

குன்றிமணி மரங்கள் இரண்டு வகைப்படும். இதில் ஆனைக் குன்றி மணி அடிநாந்திரா பவோனினா (Adenanthera pavonnina) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மகரந்தத் தண்டில் உள்ள சுரப்பி யைக் குறிக்கும் சொல்லே அடிநாந் திரா என்பது. பவோனினா என்றால் இலத்தீன் மொழியில் மயிலிறகைப் போன்றது என்று பொருள். பவள நிறமுடைய இதன் விதைகளால், ஆங்கிலத்தில் கோரல் வுட் (coral wood) என்ற பெயர் உண்டானது.

ஆனைக் குன்றிமணி மரங்கள் 18 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வளரக்கூடியது. கிளைகள் விரிந்து 10 மீட்டர் அளவில் பரந்திருக்கும். இதனடியில், உதிர்ந்திருக்கும் சிவப்பு நிற ஆனைக் குன்றிமணி களைக் கொண்டே, இம்மரத்தை எளிதாக அடையாளம் கண்டு கொள் ளலாம். இதன் இலைகள் வாகை இலைகளைப் போன்று இரட்டைக் கூட்டிலை அமைப்புடையது. ஜன வரியில் இருந்து மார்ச் மாதங் களில் பூக்கள் பூக்கும். பூங்கொத் துகள் அதிகபட்சம் 20 செ.மீ. அள வில் இருக்கும். சோயா மொச் சையைப் போன்று இதன் விதை கள் இருபக்கமும் குவிந்த அமைப் புடையது. கறுப்புத் திட்டு இதில் இருக்காது.

இதன் இலையைக் கஷாயம் செய்து நாட்பட்ட வலி நோய்களுக் கும், கீல் பிடிப்புகளுக்கும், விதை களை அரைத்து கட்டிகளுக்கு பற்றிடவும் ஆயுர்வேத மருத்து வர்கள் பயன்படுத்துகின்றனர்.

குறளில் காணப்படும் ஒரே விதை..

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி மட்டுமே ஆகும். மேலும் ‘குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கருக்காது’ என்ற பழமொழியும் இதற்கு உண்டு.

ஆனைக் குன்றிமணியின் விதை முழுவதுமாக சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், குன்றிமணியின் விதையில் சிவப்பாகவும் சிறிது திட்டாகக் கருப்பு நிறமும் இருக்கும்.

பண்டைய காலத்தில் தங்கம் மற்றும் வைரங்களின் அளவு அறிய குன்றிமணியின் விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. மேலும் ஆபரணங்கள் செய்வதற் கும், சிறுவர்கள் பல்லாங்குழி விளை யாடுவதற்கும் பயன்படுவதுண்டு.

இதன் இலைகள் மற்றும் வேர் கள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலியைப் போக்க வும், வேர்களைக் கொண்டு வெண் குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்கவும் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட குன்றிமணி மரங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளரும் தன்மைக் கொண்டது.

தமிழகத்தில் அரிதாகிக் கொண்டுவரும் குன்றி மணி மரங்களை பாதுகாக்க அரசு புதிதாக மரங்களை நட்டும், இருக் கிற மரங்களை பாதுகாக்கவும் வேண்டும்...

மாற்றம் விரைவில் தமிழகத்தில்...


ஐந்து வில்லன்கள்...


நாம் முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக் கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்...

யார் ஐந்து வில்லன்கள்..?

அந்த 5 வில்லன்கள்...

ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..

இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம்.

அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1) ஊக்கமின்மை: நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஆழ்ந்து யோசித்து அதன் உண்மை யான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்..

2) மாற்றம்: நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள். மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள்.

3) பிரச்னைகள்: பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கும், தேடிப் பிடித்து பயன் படுத்துங்கள்.

4) பயம்: பயம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழை அல்ல.. பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால் தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும்.. உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.

5) தோல்வி: சறுக்கல்கள் வரும் போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.

சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும், மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

ஆம்.,நண்பர்களே.,

மேலே கண்ட 5 வில்லன்களான , ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.. இவற்றை சாதுரியமாக கையாண்டால் வாழ்க்கை பயணம் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் வெற்றி அடையலாம்...

தமிழினத் துரோகி விசிக திருமா...


சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?


பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது.

இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும் ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது. ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன.

நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்...

ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு  ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது.

சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது...

ஊழல் அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


கோவையில் அடகு வைத்த நகைக்குப் பதிலாக போலி நகைகளை கொடுத்த வங்கி நிர்வாகம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...


ஆவாரம்பாளையத்தில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகத்தினர் போலி நகையைக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவாரம்பாளையத்தில் சைக்கிள் கடை நடத்தி வரும் கணேசன் என்பவர் 190 கிராம் எடைகொண்ட தங்க நகைகளை அங்குள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். இந்த நிலையில், நீண்ட நாட்களாக வட்டி செலுத்தாத நிலையில், நகை ஏலம் விடும் நிலை வந்துள்ளது. இதையொட்டி, நகையை மீட்டு மீண்டும் அடமானம் வைக்க கணேசன் வங்கிக்கு சென்றுள்ளார்.

அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து ரூ. 3 லட்சத்து 60 ஆயிரத்தை செலுத்தி நகையை அவர் மீட்டுள்ளார். அப்போது, வங்கி அதிகாரிகள் தன்னிடம் கொடுத்த நகை போலியானது என்பதை உணர்ந்த கணேசன் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது தொடர்பாக, வங்கி நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்த சக வாடிக்கையாளர்களுக்கும் தங்களது நகைகள் மீது சந்தேகத்துடன் கூடிய அச்சம் ஏற்பட்டது. இதனால், வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, வங்கி தரப்பிலிருந்து நகைக்கு எதுவும் ஆகாது என உறுதி அளித்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்தப் போலி நகை விவகாரத்தில் வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த கார்த்திக் என்பவரை பீளமேடு போலிசார் தேடி வருகின்றனர்...

காலம் தந்த பதில்...


பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்...


1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா...

இந்த தண்ணீரில் மறைந்திருக்கும் அரசியலை என்று உணர போகிறோம் நாம்...


திருமுருகன் காந்தி ஏன் இந்தியா உளவாளி? - 1...


உங்களுக்கு கண்டிநாயக்கர் ஆவணப்படம் என்றால் பாரிசாலனும் இன்னும் ஒரு சிலரும் தான் நியாபகம் வருவார்கள்... ஆனால் அதன் பின்னால் ஒரு முகம் இருந்தது... அவர் பெயர் ஜவகர் ... அந்த ஐவகர் தான் கண்டிநாயக்கர் ஆவணப்படத்திற்கு முக்கியமான காரணம்...

அந்த ஐவகர் இந்த ஆவணப்படத்தை எடுத்துபிறகு மர்மமான முறையில் இறந்து போனார் என்பது கூட பலருக்கு தெரிந்து இருக்கும் ஆனால் அந்த ஐவகர் மே 17 இயக்கத்திடம் நெருக்கமாக இருந்தார் ... இந்த விடயத்தை மே17 இயக்கத்தினரிடம் அவர் சொன்னார் ஆனால் அவர்கள் அதை வெளியிடவில்லை... மேலும் ஐவகரை அழைத்து இதை நீ வெளியிட வேண்டாம் வெளியிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சொன்னார்கள்... அதன் பின் தான்  வேலைக்கு நேர்காணலக்கு சென்ற ஐவகர் கடலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்....
இதுவரை அவர் ஏன் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது... கீழே உள்ள படம் மே17 இயக்கத்தின் மற்றொரு கட்சிவடிவமாக தமிழர்விடியல்கட்சி இதன் நிறுவனர் திமுகவின் லாட்டரி விற்ற தொழில்அதிபரின் மகன்...

அந்த கட்சி கண்டிநாயக்கர் ஆவணப்படத்தை எதிர்க்கிறது..... கண்டிநாயக்கர் வரலாற்றை தவறு என ஆதாரத்தோடு இதுவரை எந்த இயக்கத்தினரும் நிறுபிக்கவில்லை... வெறும் வசைபாடி கொண்டு தான் இருக்கின்றனர்... இதில் ஐவகர் இறந்ததில் சம்பந்தப்பட்ட ஒரே இயக்கம் மே17 தான்.... அதன் ஒருங்கிணைபாளர் திருமுருகன்காந்தி தான்... இதற்கு மேல் அவர் அவர் சிந்தனைக்கு...

அடுத்த தொடரில் இன்னும் மர்மமான விடயங்கள் மூலம் திருமுருகன் காந்தியின் உண்மையான முகத்தை பார்க்கலாம்...

பாஜக மோடி - அமித்ஷா - தேர்தல் ஆணையம் இனைந்து மோசடி...


வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டு...


நியூயார்க் நகரத்தில் பறக்கும் தட்டு ஒன்று வட்டமிட்டதை ஹாலிவுட் நடிகை ரோவன் பிளன்சார்ட்  படம் பிடித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை  ரோவன் பிளன்சார்ட்   தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தினை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரத்தில் வட்டமடிப்பது போன்று உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்வையிட்ட பறக்கும் தட்டு ஆர்வலர்கள் பலர் இது 90 சதவிகிதம் உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகை ரோவன் பிளன்சார்ட் -ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்திற்கு 1,11,000 பேர் விருப்பமும், 1,665 பேர் கருத்துகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படமானது நியூயார்க் நகரின் பெரும்பாலான பகுதிகள் ஒளி வெள்ளத்தில் மிதப்பதையும், சூரியன் மறைந்து வரும் வெளிச்சத்தில் இடையே வானத்தில் பறக்கும் தட்டு தோன்றுவதையும் தெளிவாக பதிவு செய்துள்ளது.

ஆனால் சிலர் இந்த புகைப்படத்தை ஜன்னலின்  பிம்பம் எனவும் இது பறக்கும் தட்டு அல்ல எனவும் கூறி உள்ளனர்.

சில ஆர்வலர்கள் இதேப்போன்ற பறக்கும் தட்டு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளதாகவும், மீண்டும் அந்த வாய்ப்பு இந்த புகைப்படம் வாயிலாக தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சூரியன் மறைந்த பின்னர் வானத்தை கூர்ந்து கவனித்தால் இதுபோன்று வட்டமிடும் பறக்கும் தட்டுகளை நாம் காணலாம் என சிலர் தெரிவிக்கின்றனர்.

அழகான சூரிய அஸ்தமனத்தை படம் பிடித்த நடிகையின் புகைப்படத்தில் தற்செயலாக பறக்கும் தட்டும் சிக்கியுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி வேற்றுகிரகவாசிகளுக்கு நியூயார்க் நகரம் எப்போதும் வியப்பளிக்கும் ஒரு விஷயமாக இருந்து வருவது இந்த புகைப்படம் ஒரு சான்று எனவும் கூறுகின்றனர்.

இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் சிலரும் எம்பையர் கட்டிடத்தின் அருகாமையில் இதுபோன்று பறக்கும் தட்டு வட்டமிட்டுள்ளதை படம் பிடித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது...

சேலம் - சென்னை ரயில் கொள்ளை...


ஏழு உயிர்களாக மாறிய ஒரு உயிர்...


கொடைக்கானல் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர், இருபத்து நான்கு வயது இளைஞரான மணிகண்டன், திருமணமாகாதவர். அருமையாக புகைப்படம் எடுப்பவர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து தந்து அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்படித்தான் கடந்த 24ந்தேதி காலை கொடைக்கானல் செங்குத்தான மலைப்பகுதிகளில் ஒன்றான ‛டால்பின் நோஸ்' பகுதியில் சில சுற்றுலாப் பயணிகளை நிற்கவைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

பார்த்து பத்திரமா நில்லுங்க, நல்லா சிரிங்க என்று பேசிக்கொண்டும் கேமிராவில் ஆங்கிள் பார்த்துக் கொண்டும், நகர்ந்து நகர்ந்து உற்சாகமாய் படமெடுத்துக் கொண்டிருந்தவரின் கால் திடீரென இடறியதில் வினாடி நேரத்தில் சரசரவென மலைப்பள்ளத்தாக்கில் சறுக்கிக்கொண்டே போய் அதள பாதாளத்தில் விழுந்தார்.

பிறந்த இடம் கொடைக்கானல்தான் வளர்ந்த இடம் டால்பின் நோஸ்தான் அந்த இடத்தின் பயங்கரத்தை, பாதாளத்தை நன்கு அறிந்தவர்தான் பயணிகளை எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பார், அப்படிப்பட்டவருக்கே இப்படி ஒரு ஆபத்துவரும் என்று யார்தான் ஊகித்திருக்கமுடியும்?

சுற்றியிருந்த சுற்றுலா பயணிகள் அலறினர் அழுதனர் காப்பாற்ற முடியாமல் துடித்தனர், தகவல் அறிந்து தீயனைப்பு படையினர் வந்தனர். மிகவும் சிரமப்பட்டு பள்ளத்தாக்கில் இறங்கி பார்த்த போது மணிகண்டன் உயிருக்கு துடித்துக் கொண்டு இருப்பதை பார்த்தனர்.உடனடியாக டோலிகட்டி மேலே துாக்கிவந்தனர்.

சிராய்ப்புகள் சின்ன சின்னதாய் காயங்கள் இருந்தனவே தவிர உடலில் பெரிதாக எதுவும் அடிபடவில்லை ஆனால் மயக்க நிலையில்தான் மணிகண்டன் இருந்தார், பார்த்தவர்கள் நல்லவேளை பெரிதாக அடிபடவில்லை பிழைத்துக் கொள்வார் என்றே எண்ணினர்.

காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார் அங்கே போன போதுதான் தெரிந்தது எங்கே அடிபடக்கூடாதோ? அங்கே ஆம் தலையில் பலமாக அடிபட்டு இருந்தது,தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது இருந்தாலும் மணிகண்டனுக்கு உயிர் இருந்தே தவிர உணர்வு வரவில்லை.

எப்படியும் மணிகண்டனை காப்பாற்ற வேண்டும் என்ற உறவினர்கள் நண்பர்களின் அழுகை வேதனை காரணமாக உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நல்லவேளை பெரிய பள்ளத்தில் இருந்து விழுந்தாலும் சின்ன காயம்தான் பிழைத்துக் கொள்வார் என்று விபத்தை பார்த்தவர்களும் ஊரில் உள்ள உறவினர்களும் நண்பர்களும் நம்பிக்கொண்டிருக்க அந்த ‛நல்லவேளை' வரவேயில்லை.

மணிகண்டனை காப்பாற்ற தனியார் ஆஸ்பத்தரியில் நடந்த கடுமையான போராட்டம் பலன் தராமலே போனது மூளைச்சாவு என்று அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது மட்டுமே முடியும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சொல்லிவிட கதறி அழுத உறவினர்கள் மற்றவர்கள் உருவிலாவது மணிகண்டன் வாழட்டும் என்று முடிவு எடுத்து உடல் உறுப்பு தானத்திற்கு ஒத்துக் கொண்டனர்.

இருதயமும் நுரையீரலும் சென்னை மலர் மருத்துவமனையில் உள்ள இருவருக்கும், ஒரு சீறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஒருவருக்கும், ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனையி்ல் இருந்த இருவருக்கும், இரண்டு கண்களும் மதுரை அரவிந்த் ஆஸ்பத்தரியில் இருந்த இருவருக்கும் என ஏழு பேருக்கு மணிகண்டனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இப்போது மணிகண்டன் ஏழு பேராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வீர வணக்கங்கள்....

விபச்சார ஊடகங்கள்...


ஞானம் என்றால் என்ன? ஞானி என்போர் யார்?


பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.

சந்தேகமின்றி – தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவன் தான் ஞானி.

இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்வுயிரையும் தம்முயிர் என கருதுபவன். அவனே ஞானி.

எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த ஆதியும் – அந்தமில்லா, கருணை மழையான , வள்ளலான இறைவனை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் ஞானிகள் ஆவர்.

எல்லாம் வல்ல அந்த இறைவனின் அம்சமே தன் உயிர் என்றும் அந்த உயிர் ஒளியே கண்களில் ஒளியாக துலங்குகிறது என்பதை அறிந்து, உணர்த்து தெளிந்தவன் ஞானி ஆவான்.

வள்ளல் யார்? இறைவன் தான்? இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான். உணர்ந்தவன் ஞானி ஆகிறான். ஞானி ஆனவன் “தான் அதுவாகவே” மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது...

தமிழக மீனவர்களே எச்சரிக்கை...


அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்...


அரசு தொடக்க பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் ஸதி பேட்டியளித்துள்ளார்.

நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி கவுர வித்து வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர்கள் இணையதளம் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விணப்பித்தனர். அவர்களின் சேவை அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கான நேர்காணலுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.

இதில் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.ஸதி என்பவர் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுகுறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-நான் 23 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணி புரிகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் இங்கு வந்த போது 146 மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வந்தனர். எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெரு தெருவாக சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி கற்பதன் பயன் ஆகியவற்றை எடுத்துக் கூறினேன்.

இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தற்போது எங்கள் பள்ளியில் 290 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் டேப்லெட் மூலம் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளியில் பல்வேறு வசதிகளை செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறேன்.

இந்த பள்ளி கோவை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்றேன். இதே பள்ளிக்கு தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவித்தது.

மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்த வெளியில் மலம் கழிப்பிடமற்ற ஊராட்சியாக’ மாற்ற இப்பள்ளி மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக 10 மாணவர்களுக்கும், எனக்கும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் விருது வழங்கி பாராட்டினார். இது போன்ற பல்வேறு அம்சங்களை பார்த்து தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இது போன்ற விருதுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்.இந்த விருதை அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறோம். நாங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறோம். அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


சிவம்...


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான் ஒருவன்..

அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்...

தென்னை இளநீருக்குள்ளே தேக்கி வைத்த ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்.

அவன் தான் இறைவன் என்றான்.. கவியரசன்...

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்.. இல்லையேல் நாம் சவம்..

உயிர் உடலுடன் இருக்கும் போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே...

ஒருவன் எப்படி பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்? ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே..

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்த போது வந்த உடல், இறந்த போதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே? பின் எதற்கு? உயிர் கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம். உயிர் இன்றி உடல் இருந்தால் மண் தான்.

உயிர்தான் பிரதானம். உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு. உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம். பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்.

தாயின் கருவிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

உயிர் என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி.. அவனே சித்தன்...

இங்கே தான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்...

தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது. உயிர் வந்து சேர்க்கிறது.

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா? எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் உயிராக..

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை. வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்..

உயிரே கடவுள், அகம் பிரம்மாஸ்மி.
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார். நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்.

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்..

கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது. கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே. வெளியிலே தேடுவது பக்தி. உடலுள்ளே தேடுவது ஞானம்..

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”
திருமந்திரம் கூறும் சத்தியம்

இதுவே.. தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம். இறை இரகசியம்..

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்..

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக் கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே

இறைவன் ஒருவரே நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. இதை மறுப்பவர் யாருமில்லை. எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை. உலகர் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே..

எல்லாம் வல்ல இறைவன் நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்..

உயிரே கடவுள்.. அஹம் பிரம்மாஸ்மி
அருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை...

முன் செய்த வல்வினையால்.....
முந்தி வந்த விந்துத்துளி......

அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள...

வெள்ளை இரத்தம் சிவப்பாகி
நாடி, நரம்பு சதை பிடித்து...

அவனவளாய் இனம் பிரித்து
பிண்டம் என உருவெடுத்து.....

ஐயிரண்டு மாதத்தில் அன்னையவள் உந்தி தள்ள.....

நச்சுப்பையுடன் ஒட்டி பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து...

அங்கும், இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..

அகமதன் அர்த்தநிலை?
ஐய்யோ....

ஒன்றும் புரியவில்லை....

சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி......

இன்னொரு சதை பிண்டம் தேடி...

சேர்த்து வைத்த விந்தை கொட்டி ....

மீண்டும், மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......

பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது.....

அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் மூலமதை...

உயிர்கொடுத்து உருட்டியவன்
உலகமதை திரட்டியவன்....

பிறப்பு எனும் வட்டத்துக்கு செக்குமாடாய் நம்மை சுழற்றியவன்...

அவனை இனம் காண தேடி
நித்தம் தேடி ஓடி, ஓடி...

வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது....

சுழல்கின்ற பூமியின் மேல்
சுற்றி, சுற்றி பிறந்து வந்து...

சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி....

மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி....

உள்ளுக்குள் உள் நுழைந்து....
உற்றவனை கண்டுகொண்டு....

அவனே நானாகி.....

நானே அனைத்துமாகி...

ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து...

அம்மாம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்....

எல்லையற்று கலந்திருக்கும்
அது....

என ஆனதப்பா முடிவினிலே
இது.....

ஓம் நமசிவாய...

உணர்ச்சிகளே நம்முள் சலனத்தை ஏற்படுத்துகிறது.....

சலனமே மனதில் எண்ணங்களை
ஏற்படுத்துகிறது....

எண்ணங்களே கர்மவினையை உருவாக்குகின்றன...

எண்ணமில்லையேல் வினையில்லை...
வினையில்லையேல் விதியில்லை....

33 ம் என்னும் உண்மைகளும்...


காமராசரை அடித்துப்போட்ட திமுக எனும் ஜஸ்டிஸ் கட்சி, அதிஸ்டவசமாக உயிர்தப்பிய நிகழ்வு...


ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிற போது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள்,  ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.

மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.

வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.

‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.

மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்...