பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.
சந்தேகமின்றி – தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவன் தான் ஞானி.
இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்வுயிரையும் தம்முயிர் என கருதுபவன். அவனே ஞானி.
எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த ஆதியும் – அந்தமில்லா, கருணை மழையான , வள்ளலான இறைவனை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் ஞானிகள் ஆவர்.
எல்லாம் வல்ல அந்த இறைவனின் அம்சமே தன் உயிர் என்றும் அந்த உயிர் ஒளியே கண்களில் ஒளியாக துலங்குகிறது என்பதை அறிந்து, உணர்த்து தெளிந்தவன் ஞானி ஆவான்.
வள்ளல் யார்? இறைவன் தான்? இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான். உணர்ந்தவன் ஞானி ஆகிறான். ஞானி ஆனவன் “தான் அதுவாகவே” மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.