19/07/2017

சுதந்திர தேவியும் நகரத்தார் கண்ணகியும்...


கண்ணகி :

சிலப்பதிகாரம்...

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்
                                     

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் பாடலில் கண்ணகியினைக் குறிப்பிடும் புலவர் இவ்வாறு கூறுகிறார்:

பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாள் திருமா பத்தினி...

இதன் மூலம் நாம் அறிவது மதுரையை எரித்தபின்பு கண்ணகிக்கு இடதுமுலை இல்லை இது ஒரு உருவக கதை என்றாலும் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்..

கண்ணகி ஒரு வணிகனின் மகள் கோவளன் ஒரு வணிகனின் மகன்
மகள் மணிமேகலை என்ற பெயர் ஒரு கடல்வணிக கடவுளின் பெயர்..

சுதந்திர தேவி சிலை :

Auguste Bartholdi என்ற Freemasonல் உருவாக்கப்பட்டு france நாட்டால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட சிலை தான் இந்த சுதந்திர தேவி சிலை. அது அமெரிக்காவுக்கு கடல்வழியாக வருபவர்களை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால்...

இந்த சுதந்திர தேவி சிலைக்கும் கடந்த 30 ஆண்டுகள் முன்புவரை இடதுமுலை இல்லை..

30 வருடங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக அந்த சிலையில் ஒரு ரெடிமேட் முலையை சரிசெய்து ஒட்ட வைத்தார்கள்.

கையில் தீயுடன் காட்சி தரும் அந்த சுதந்திர தேவி வேறுயாரும் இல்லை கண்ணகி தான்...

கண்ணகி என்ற கதை  என்பது உண்மையா இல்லையா என்பதை கடந்து அது ஒரு தத்துவமாக இருந்திருக்கிறது என்பது அனைவரும் ஏற்றுகொண்டதே...

இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்..

சிலருக்கு.புரியவில்லை எனில் அடுத்து சூயஸ்கால்வாயும் நகரத்தார் தொடர்பும் என்ற அடுத்த பதிவில் விளக்குகிறேன்....

இந்தியம் - திராவிடம் - கம்யூனிசம்... தமிழினத்திற்கு எதிரானது...


கேள்வி - இந்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?

பதில்= 1996 இல்

கேள்வி - அப்ப யார் ஆலங்குடி எம்எல்ஏவா இருந்தா

பதில் - ராஜசேகர்

கேள்வி - அவர் எந்தகட்சி?

பதில் - கம்யூனிஸ்ட் கட்சி.

கேள்வி -ஆலங்குடி எந்த பாரளுமன்ற தொகுதிக்குட்பட்டது.

பதில் - சிவகங்கை  தொகுதி.

கேள்வி - சிவகங்கை தொகுதி எம்பியா அப்ப இருந்தது யாரு?

பதில்   = சிதம்பரம்
கேள்வி= அவர் எந்த கட்சி?
பதில்    = காங்கிரஸ்

கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?

பதில்  - ஆ.ராசா

கேள்வி - அவர் எந்த கட்சி?
பதில் - தி.மு.க

கேள்வி =1996ல் மத்திய அரசு யார்?
பதில்.    = காங்கிரஸ் ஆட்சி

கேள்வி = தமிழ்நாட்டில் அப்போது யார் ஆட்சி ?
பதில்  = திமுக ஆட்சி

கேள்வி = இப்ப போராட்டம் செய்யும் கட்சிகள் யார் யார்?

பதில் = திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்

கேள்வி - இவர்கள் கொண்டு வந்த திட்டத்தை நடைமுறை படுத்துவது யார்?

பதில் - பாஜக + அதிமுக...

ஆக தேசிய கட்சியும் திராவிடக் கட்சியும் தமிழினத்தை அழிப்பதற்காகவே உள்ளது என்பதை இப்போதாவது புரிகிறதா...

இம்பூட்டு தாங்க திருட்டு திராவிடம்...


திருச்சியில் பரபரப்பு: பழைய இரும்பு கடையில் ராணுவ ஆயுதங்கள்.. வீரர்களே விற்றது அம்பலம்...


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில், கடந்த மாதம் 28ம் தேதி திடீரென குண்டு வெடித்து ஊழியர் மாரிமுத்து பலியானார். உரிமையாளர் அருளானந்தம், கனகராஜ், பாலசுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 23 முதல் 26 வரை வீரப்பூர் வீரமலை வனப்பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரைபிள்ஸ் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய, வெடிக்காத குண்டைகளை, இந்த பழைய இரும்புக் கடையில் விற்றுள்ளனர்.

இது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும், தடயவியல் துறையினரும் போலீசாருடன் இணைந்து கடையில் வேறு எதாவது குண்டுகள் உள்ளனவா என தேடுதல் வேட்டை நடத்தினர்.

சாக்குமூட்டை ஒன்றில் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் போலீஸ் தேடுதலில் சிக்கின. மணப்பாறை போலீசார் ரைபிள்ஸ் படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குண்டுகள் பற்றி விசாரித்தனர்.

வெடிகுண்டு பாகங்களை ஆய்வு செய்த போலீசார் அது ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் அதிவேக குண்டு என கண்டறிந்துள்ளனர். இது திருச்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கடை உரிமையாளர் அருளானந்தத்துக்கு நேற்று முன்தினம் நினைவு திரும்பியது. அப்போது அவரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கினர்.

அருளானந்த் அளித்த வாக்குமூலத்தில், ' கடந்த 27ம் தேதி பச்சை நிற ராணுவ ஜிப்சியில் வந்த இரு ராணுவ வீரர்கள் 45 கிலோ எடையுள்ள குண்டுகளை எடுத்து வந்தனர். வெடிகுண்டு என்பதால் நான் வாங்க மறுத்தபோது வீரர்களில் ஒருவர் தமிழில் பேசினார்.

மற்றொரு வீரர் இந்தியில் பேசினார். வெடிக்காது என உத்தரவாதம் கொடுத்தனர். ஒரு கிலோ ரூ.80 என 45 கிலோவுக்கு ரூ.3,600 பெற்றனர் ராணுவ வீரர்கள் என்று தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் தான் குண்டுகளை விற்றனர் என உறுதியாகியுள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னையில் உள்ள தென் பிராந்திய ராணுவ தலைமையகத்திற்கு போலீசார் அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளனர்...

சுங்கச்சாவடியில் கட்டணம் தேவையில்லை...


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்...

தலீத் பிரச்னை குறித்து விவாதிக்க மறுத்ததால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்...


தமிழக டெட்பாடி அரசிற்கு துணிவு இல்லை...


கதிராமங்கலத்திற்கு ஆதரவாக நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


கதிராமங்கலத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...


லீக்கான மற்றுமொரு சசிகலா வீடியோ 2...


வெளியில் சென்று விட்டு ஷாப்பிங் பையுடன் சிறையினுல் நுழையும் சசிகலா - மற்றுமொரு வீடியோவை வெளியிட்ட கர்நாடக ஊடகம்...

https://goo.gl/Dn9Sjk

புற்றுநோய் - CANCER.. கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்...


உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

கேன்சர் இல்லா உலகம் - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது.

முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்...

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம்,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் (வெள்ளை & கருப்பு) , ஆளி விதை.

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்..

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது.

நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை.

மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம்.

என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAi

இலுமினாட்டி - பங்குனி உத்திரம் & கிருஸ்தவர்களின் ஈஸ்டர் இவை இரண்டும் ஒரே நாளில் வர காரணம்...


இரண்டுமே சூரியன் உச்சமடைவதை குறிப்பதாகும்..

இயேசுவும்  12 சீடர்கள் என்பது ...
சூரியனும் 12 இராசிகளின் குறியீடு...

கோவில்கள் சூரிய வழிபாட்டுக்காக கட்டப்பட்ட கட்டிடம்...

வழிபாடு என்பது சூடம் பத்தி காட்டுவது இல்லை நாட்களை கணித்து அதன் அடிப்படையில் செயல் செய்து வாழ்தல்...

இலுமினாட்டி - யூதர்களின் ஏமாற்று வித்தைகள்...


பாலஸ்தீன போராளிகள் எங்களை எவ்வளவு கொடூரமாக தாக்கி உள்ளார்கள் பாருங்கள் என படம் காண்பித்து சர்வதேச அனுதாபத்தை பெற்றிட யூதர்கள் செய்யும் மோசடியை பாருங்கள்..


இந்திய பிராமணிய சித்தாந்தமும்
இஸ்ரேலிய சியோனிச சித்தாந்தமும் ஒன்று தான்..


செய்வதை எல்லாம் செய்து விட்டு அப்பாவிகள் மீது பழியை போடுவது தானே பிராமணியமும், யூதனும் செய்து வரும் வேலைகள்..


இதுவும் கடந்து போகும், முகத்திரை விரைவில் கிழியும்...

இராமனும் தமிழனே...


2300 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு.295 வாக்கில்.. சந்திரகுப்த மௌரியரின் மகன் பிம்பிசாரன் ஆட்சி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிவிட்டது.

தமிழ்மண் மட்டும்  எதிர்த்து நின்றது.

கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழ் மூவேந்தரும் சேர்ந்து கூட்டணி அமைத்து அந்த பெரிய படையெடுப்பை முறியடிக்கிறார்கள்.

இந்த செருப்பாழி போரின் வெற்றியைப் பாடினார் ஊன்பொதி பசுங்குடையார்.

இளஞ்சேட்சென்னி அவருக்கு அளவுக்கதிமாக விலையுயர்ந்த புதிய ஆபரணங்களை அளிக்கிறான்.

புலவரின் குடும்பத்தினர் அந்த நகைகளை எப்படி அணிவது என்று தெரியாததால் கண்டபடி அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர்.

இதை இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற போது வழிநெடுக அவள் கழற்றி எறிந்த நகைகளை குரங்குகள் கண்டபடி அணிந்து கொண்டதுடன் ஒப்பிடுகிறார் புலவர்.

கடுந்தெறல் *இராமன்* உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

(புறநானூறு 378)

இராமன் இராவணனை வென்றபிறகு பாண்டிய நாட்டுக்கு வருகிறான்.

கோடி என்ற இடத்தில் (தனுஷ்கோடி) ஒரு ஆலமரத்தடியில் ஆமர்ந்து வேதங்களை ஓதுகிறான்.

(இராவணனைப் போல இராமனும் தமிழ்ப் பார்ப்பானோ?)

அப்போது அம்மரம் (அதில் இருந்த உயிர்கள்) ஒலி எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்ததாம்.

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் *இராமன்* அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே

( அகநானூறு 70)

மணிமேகலை கூறுவதைக் கேளுங்கள்..

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

பூமியில் பிறந்த நெடியோனின் (திருமாலின்) அவதாரம் (இராமன்),
கடலை வழிமறிக்க குரங்குகள் கொண்டு வந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்தது போல
என் அடங்காப் பசியினால் நான் உண்ணும் உணவு மறைந்து விடுகிறது என்று வருகிறது.

இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்..

மீட்சி என்பது *இராமன்* வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
என்று வருகிறது.

அதாவது இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் என்றுதானே பொருள் என்று வினவுவது போல் உள்ளது.

சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்..

அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

என்று கோவலன் இல்லாத காவிரிப் பூம்பட்டிணத்தை
காட்டிற்கு சென்ற ராமன் இல்லாத அயோத்தியுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளங்கியது தமிழே.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறதே..

இராவணனைப் போலவே கரிய நிற இராமனும் ஒரு தமிழனே.

இருவருக்கும் நடந்த போர்க்கதை (இராமாயணம்) அன்றே தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தானே எடுத்துக்காட்டாகக் காட்ட முடியும்.

எனவே வடமொழி புளுகுப் புராணமான இராமயணம் தமிழர் வரலாற்றை திரித்து எழுதிய கதையே ஆகும்.

https://ta.m.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 10 பேரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி - தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம்...


மக்களாட்சி உள்ள நாட்டில் எந்த திட்டமும் அந்த மக்களின் அனுமதியோடு தான் செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் கடமை..

தங்கள் வாழ்வாதாரத்தை வாழும் நிலத்தை காக்க அமைதி வழியில் போராட மக்களுக்கு உரிமையை தந்திருக்கிறது இந்திய சட்டம்..

மக்களாட்சி தர்மத்தையும் இந்திய நாட்டின் சட்டத்தையும் மதிக்காத மத்திய மாநில அரசுகளை கண்டிக்காமல் இந்த வழக்கு மன்றம், போராடும் மக்களை தண்டிக்கிறது

ஒரு நாட்டின் மத்திய அரசும்.. மாநில அரசும்.. நீதிமன்றமுமே அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்காத போது சட்டத்தை மீறும் போது.. நாம் மட்டும் ஏன் அதை மதிக்க வேண்டும்?

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து...


இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி..

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்..

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை..

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்..

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்..

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை..

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்..

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்..

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்..

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்..

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி..

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்..

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவருக்கு நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் ரத்தத்தால் கடிதம்...


17.07.2017 சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நீட் தேர்வால்  மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  அப்பொழுது தங்களது அடிப்படை உரிமை பாதிக்கபடுவதாக  தெரிவித்தார்கள்.

இதில் சென்னையை சேர்ந்த   அனுசியா அரியலூரை சேர்ந்த அனிதா மதுரையை சேர்ந்த பார்வை தாசன் உள்ளீட்ட பல மாணவர்கள் கூட்டாக இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  அவர்கள் தங்களது  பனிரெண்டாம் வகுப்பு மதிபெண்ணையும் அவர்கள் நீட்டில் வாங்கிய  மதிப்பெண்ணையும் பட்டியலாக  வெளியிட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த அனுசியா  பேசும் போது தன் நண்பர்கள் இருபதுக்கும்  மேற்பட்டோர்   மெடிக்கல் கட்டாப் 196  மேல் எடுத்தும் நீட் தேர்வால்  வாய்ப்பை இழந்துள்ளாக தெரிவித்தாகள்  அவர்களது  மதிப்பெண் மற்றும் நீட் மதிபெண்ணையும் அவர்கள்  வெளியிட்டுள்ளனர்.

அரியலூரை சேர்ந்த அனிதா பேசும் போது  தன் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து 1176 மதிப்பெண் எடுத்த  தான் தான் முதல் மருத்துவராக வரும் வாய்ப்பு இருந்தது ஆனால் நீட்  தேர்வினால் எங்கள் கிராமத்தில் இருந்து இனி மருத்துவர்களே  வர முடியாத சூழல் உள்ளாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

மாணவர்களின் பெற்றோர் பேசும் போது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14 அனைவருக்கும் சமமான வய்ப்பு என்று சொல்கிறது அது எங்களுக்கு மறுக்கபட்டிருகிறது என்றும். தமிழகத்தில் இருந்து சென்ற  பாராளுமன்ற உறுப்பினர்கள் மோடி அரசை அரசியல் அமைப்பு சட்டத்தின் படி  அரசை நடத்த கோர வேண்டும் இதற்கு தீர்வு   என்பது   சிறப்[பு சட்டம் இயற்றி அதனை  குடியரசு தலைவர் ஒப்புதல் வாங்கி அதனை நிறைவேற்ற வேண்டும் அப்படி  செய்யாமல் வேறு  என்ன செய்தாலும்  அது கண் துடைப்பு என்று தெரிவித்தார்கள்.

அதே போல  ஒரே பாடத்திட்டம் இல்லாத நாட்டில் ஒரே பாடத்திட்டதில் தேர்வு என்பது அநீதி  என்று ரத்தத்தில் எழுதி கொண்டு வந்திருந்தனர்...

பாஜக வும் தமிழின அழிப்பும்...


அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்...


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார்...


திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச மருத்துவ நேர்காணல் முகாம் ஒன்றை நடத்தினார்.

இந்த மருத்துவ முகாம் நடந்து முடிந்த சில நாள்களில், திவ்யா சத்யராஜை சில வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த வெளிநாட்டு நிறுவனங்கள், திவ்யா சத்யராஜிடம் தவறான சில மருந்துகளை முகாம்களில் பயன்படுத்துமாறு அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.

இதை மறுத்த திவ்யாவுக்கு, அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

ஆக எங்கிருந்து நம்மை தாக்குகிறார்கள் என்பதை புரி்ந்து கொள்ளுங்கள்... உலக அரசியல் ஆபத்தானது..

இதைத் தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள் குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்...

உலக அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...

அதிமுக வும் தமிழின அழிப்பும்...


போதிதர்மர் வரலாறு...


போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.

போதி தர்மா குகை - போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

9 வருடங்கள் தியானம் இருந்த போதி தர்மாவின் நிழல் குகையின் பாறையில்
இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்!

போதி தர்மர் தியானம் இருந்த
குகையின் முகப்பு
இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார்.

போதி தர்மா  குகை
ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி!

குகையில் தியான
நிலையில் போதி தர்மர்
புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும். உதாரணமாக, இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.”(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)

போதி தர்மா கோவிலுக்கு
வரும் பக்தர்கள்
புத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார். அரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.

போதி தர்மாவின் சிலை
தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.

போதி தர்மா கோவிலுக்கு
வரும் பக்தர்கள்
ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது.

போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும்! சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தைக் கூறும் நபிமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது: “செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.”(அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப் பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)

போதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

போதிதர்மா தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்! (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)

போதி தர்மருக்கு நீரில் மிதக்கும்
திறன் இருந்ததை உணர்த்தும் ஓவியம்

இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர்வழியாக நமக்குத் தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது. சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!

போதி தர்மாவின் அடக்க ஸ்தலம்
போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள்.

சீடர்களால் விஷம் வைத்து கொள்ளப்பட்ட
போதி தர்மர் தான் உயிருடன் இருப்பதை
எல்லை காவலாளி மூலம் உணர்த்தும் காட்சி
இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.

 ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்” என்பதுதான் போதிதர்மாவின் போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.