15/01/2019

தமிழ் புத்தாண்டு & பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்...



Subscribe the youtube channel...

சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் அலர்ஜிகள் என்னென்ன?


இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகிதப் பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை: 65 சதவிகிதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள்.

நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும். அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது. சிலர் பாலிமர் ஜெல்லுக்கு பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

மாதவிடாய் நாள்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகமுள்ள நாள்களில் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நலம்.

துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை, சோப்புப் போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்கவும். பிறகு, மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்?

பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.

நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.

ஓர் அந்நியப் பொருளை உள்ளாடையில் வைத்திருக்கும்போது, அது தொடைகளை உரசுவதால் ஒரு சிலருக்குத் தொடைகளில் புண்கள் ஏற்படுதல், பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான ஆயின்மென்ட் தடவுவதன் மூலம் பாதிப்பிலிருந்து மீளலாம்...

பாஜக கைகூலி பீகாரி ரங்கராஜ் பாண்டே கலாட்டா...


உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...


உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.

நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மன உளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்.

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.

உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....

மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...

நன்றி ஆரோக்கியமே..
நன்றி உடலே..
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி..
என்னை குணமாக்கியதற்கு நன்றி..
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.

இதன் மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு.. உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.

1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் "ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது" என்பதை மனதிற்குள் சொல்லி கொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...

2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்.

4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்... எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...

5. காலை வேலையில் நியூஸ் பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....

6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்.

7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன் மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்.

தினமும் இதை செய்து பாருங்கள்.. தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

கோல்கட் எனும் கார்ப்பரேட் நிறுவனமும் ஏமாற்று வியாபாரமும்...


இப்போது கூறுங்கள் அமெரிக்கா வல்லரசு நாடா..? இல்லை மற்ற நாட்டின் வளங்களை கொல்ல துடிக்கும் வன்மம் நிறைந்த நாடா..?


சென்னை விமான நிலையத்தில் ₹10 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கம் பறிமுதல்...


சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திக்கொண்டு வந்தவருக்கு சுங்கத்துறை வலை

திருவனந்தபுரத்தில் உள்நாட்டுப்பயணியாக வந்த சுரேஷ் குமாரிடம் தங்கக்கட்டிகளை கொடுத்து வெளியே வாங்கிக்கொள்வதாகக் கூறி, பணத்தையும் அளித்துள்ளார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கக்கட்டிகளை வாங்கி வந்த சுரேஷ்குமாரை சுங்கத்துறை கைது செய்தது...

தமிழர்களின் பொங்கல் வரலாறு...


மின்னல் எப்படி உருவாகிறது...


விண்வெளியில் நாம் ஆச்சரியபட கூடிய விடயங்கள் இன்னும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

அவற்றில் ஒன்று தான் மின்னல்...

மழை காலங்களில் மின்சக்தியின் தீப்பொறி வடிவத்தை தான் மின்னல்
என்போம்.

ஒரு நெருப்பு பொறி உருவாக.. மின்சக்தி குறிப்பிட்ட ஒரு மின்னழுத்த எல்லையை மீற வேண்டும்.

மின்னல் காற்றின் மூலமாக இரு மேகங்களுக்கிடையிலோ பூமிக்கோ கடத்தப்படுகின்றது. ஆனால், காற்று ஓர் அரிதிற்கடத்தி. சூரியனில் இருந்து வரும்
கொஸ்மிக் கதிர்கள் காற்றுடன் மோதும் போது. காற்றினை அயனாக்கம் செய்து மின்னேற்றங்களை தூண்டும்.

சக்தி பகுப்பினால் ஏற்படுத்தபடுகின்ற
மின்விளைவு மிக அதிகம், அதாவது அதிகளவு சக்தி காலப்படும். சில நேரங்களில் 100,000 வோல்டினை விட
கூடியளவு அழுத்தத்தினை உருவாக்க கூடிய சக்தி காலப்படும்.

கடல் மற்றும் ஏனைய நீர்தேக்கங்களிலிருந்து நீரானது சூரியனின் வெப்பத்தினால் நீராவி நிலைக்கு மாற்றபட்டு மேலெழுந்து மேகங்களை அடைகின்றது. இந்த நீராவி மேலே செல்லும் போது வளிமண்டல அமுக்கம் குறைவதனால் நீராவி விரிவடையும், இதனால் நீராவி குளிரடையும்.

மழை மேகத்தில் காணப்படும் அணுக்கள் உராய்வு, சூரியனிலிருந்து வரும் கொஸ்மிக்கதிர் போன்ற காரணிகளால் ஏற்றம் பெரும். முகில் கூட்டங்களில் மேல் பகுதி ஒரு வகை ஏற்றமும் கீழ் பகுதிக்கு எதிரான ஏற்றமும் பெரும். இவ்வாறு, பெரும் மின்னேற்றம் அதிகமாகும் போது எதரி எதிர் ஏற்றங்கள் கொண்ட முகில் கூட்டம் அருகருகே வரும் போது மின்னேற்றம் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் பாயும். இவ்வாறு பாயும் போது தீப்பொறி உருவாகும்.

மின்னலானது பூமியை நோக்கி
பயணித்து மனிதர்கள், விலங்குகளையும் தாக்கும். மின்னல் பூமியினை நோக்கி எறியும் காரணமாக கவர்ந்திழுக்கப்படும். மின்னலினால் ஏற்படும் பாதிப்பு மழைகாலங்களில் அதிகம்.

மின்னல் உருவாகும் போது, மரங்கள்
மற்றும் குடிசைகளுக்கு கீழேயோ,
அருகிலோ அல்லது சிந்த வண்ணமோ இருக்க கூடாது. இவை ஈரளிப்பாக இருக்கும் போது மரத்தின் உச்சியிலிருந்து அடியை நோக்கி மின்னோட்டம் பாயும், இந்த வேலையில் நாம் அருகிலோ மரத்தை தொட்ட வண்ணமோ இருந்தால் எம்மூடாக மின்னோட்டம் பாய்ந்து புவியை அடையும்.

மின்னலின் போது நிலத்தில் கிடையாக படுக்கவோ, மின்சாதன பொருட்கள், தொலைபேசி என்பனவற்றை பயன்படுத்தவோ கூடாது. நாம் காணும் அநேகமான மின்னல்கள் புவியை தொடுவதில்லை ஆனால் அவை மேகம் காற்று என தொடர்ந்து தடத்தினை அமைத்து பயணிக்கும்.

நடக்கும் போது அல்லது படுத்திருக்கும்
போது அல்லது கால்களை அகற்றி
வைத்திருக்கும் போது கிட்டத்தட்ட 1
மீட்டர் இடைவெளி காணப்படும் போது அழுத்த வித்தியாசம் காரணமாக மின் எம்மூடாக பாயக்கூடும்.

இதனால் தான் கால்நடைகள் அதிகளவு மின்னல் தாக்கத்தால் பலியாகின்றன.

இடிமின்னலிருந்து பாதுகாப்பு பெற
இடி தாங்கி பயன்படும்.

மாடி கட்டடங்களில் அதிகமாக இடி தாங்கி பொருத்தபட்டிருக்கும், இடி முழக்கத்திலிருந்து மின்சாதன பொருட்களை பாதுகாப்பதற்காக
பொருத்தப்படுகின்றது.

இங்கு மின்சாதனத்தை நோக்கி வரும்
மின்னை பூமியிற்கு திசை திருப்புவதே இதன் தொழில்.

இதற்காக பூமியை நோக்கி செப்பு கம்பினை பயன்படுத்தி கொண்டு செல்லப்படும். இறுதில் தடிப்பு கூடிய செப்பு கீற்று பயன்படுத்தப்படும்.

இங்கு தடையை குறைக்க தடிப்பமான செப்பு பிரயோகப்படுத்துவார்கள். உச்சியில் கூர்மையான உலோக அமைப்பு பயன்படும். ஏனெனில்
கூர்மையான அமைப்பு ஏற்றங்களை அதிகளவு கொண்டிருக்கும். இலகுவாக எதிர் ஏற்றத்தை கவரும்...

பணமும் இந்திய தேர்வுகளும்...


திருட்டு திராவிடர்ஸ்...


கன்னட யுகாதி பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் கர்நாடக மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம்தான் திராவிடன் கன்னடர்கள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

மலையாள ஓணம் பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் கேரள மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம் தான் திராவிடன் மலையாளிகள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

தெலுங்கு யுகாதி பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம் தான் திராவிடன் தெலுங்கள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

ஆனால் தமிழன் திராவிட மாயை அடிமை என்பதால் தமிழ்நாட்டில் வந்ததிராவிடன் போனதிராவிடன் எல்லாம் முதலமைச்சர் ஆகலாம், கோடிக்கணக்கான தமிழர் நீர்நிலவளங்களை கொள்ளை அடிக்கலாம், லட்சக்கணக்கான் தமிழர்களை இனப்படுகொலை செய்யலாம் எவனும் தடுக்க முடியாது..

அதனால் தான் இது கன்னட ராமசாமி நாயக்கர் ஆக்கிரமித்த மண், இங்கு திராவிடம் மட்டும் தான் என்று தமிழர் அல்லாத வந்தேறிகள் ஏமாற்றி பிழைக்கின்றனர்...

பாஜக மோடி கலாட்டா...


உடல் பருமனாவதும் இளைப்பதும் உணவால் அல்ல – நாம் சுவாசிக்கும் குணத்தால் தான்...


நம் வாழ்க்கையில் எல்லோரும் நல்லதையே தான் எண்ணுகின்றோம். நல்லதாக நடக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.

ஆனால் பிறருடைய தவறான செய்கைகளைப் பார்க்கும் போது வேதனையான உணர்வுகள் வந்து நம் நல்ல உணர்வுகள் எல்லாம் விளையாமல் போகின்றது. இது தீய வினையாக நமக்குள் சேர்த்து நோயாக விளைகின்றது.

இப்படி வினைக்கு நாயகனாக எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடம்பை நலியச் செய்கின்றது.

சந்தோஷமாக இருந்தால் உடலை மகிழ்ச்சியுறச் செய்யும்.

சில பேரைப் பாருங்கள்...

1.அவர்கள் சாப்பாடு கொஞ்சம் தான் சாப்பிடுவார்கள்.

2.ஓரளவுக்கு கொஞ்சம் செல்வாக்கோடு இருந்தார்கள் என்றால் அந்த உடல் நன்றாக வரும்.

ஆனால் சிலரைப் பார்த்தால் இயல்புக்கு மாறாக நிறையவே சாப்பிடுவார்கள்.. அவர்கள் உடலைப் பார்த்தோம் என்றால் மெலிந்து கொண்டே போகும்..

1.சாப்பிடும் சாப்பாட்டால் உடல் வருவது அல்ல.

2.மகிழ்ச்சியினால் தான் உடல் பூரிப்பாகவும்.

3.கவலையும் வேதனையும் இருந்தால் உடலை மெலியச் செய்கின்றது.

ஒருவர் கோபமாகவே இருப்பார். அவர்களுக்கு மகிழ்ச்சி அதிலே தான் இருக்கும். அவன் அப்படி இவன் இப்படி என்று சொல்லிவிட்டு அவர்களும் நன்றாகத் தான் இருப்பார்கள்.

ஆனால் கோப உணர்ச்சியால் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை எதிர்ப்பதற்கு யாராவது வந்தார்கள் என்றால் அடுத்து வேதனை என்ற நிலைகள் கண்டிப்பாக வரும்.

அப்புறம் இவர் உடலில் சிறுகச் சிறுக..

1.இப்படிச் செய்கிறானே... என்னையே எதிர்க்கிறானே... என்று குரோத மனம் தான் வரும்.

2.அவனை விடக்கூடாது அழித்தே ஆகவேண்டும் அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான்.

3.இந்த உணர்வு இவன் உடலுக்குள் இருக்கின்ற நல்ல உணர்வையெல்லாம் அழிக்கும்.

இந்த உணர்வுகள் இப்படிச் சேர்த்துச் சேர்த்து கோப உணர்வுகள் தன்மை எல்லை கடந்தாலும் அதே சமயத்தில் அது எதிர் நிலையான நிலை வரும் போது இந்த வேதனை கூடியவுடனே உடலும் குறையத் தான் செய்யும்.

இப்படித்தான் நமக்குள் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப சிறுகச் சிறுக அந்தந்த குணத்தின் வினைகளாகச் சேர்ந்து அதற்குத்தக்க உடல் செழிப்பாவதும் உடல் நலிவதும் மாற்றங்கள் ஆகிக் கொண்டே வரும்.

அதனால் தான் முச்சந்தியிலே வைத்து வினைக்கு நாயகன் “விநாயகன்” என்று காட்டுகிறார்கள்.. நீ சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப உன் உடலை நாயகனாகப் பெற்றிருக்கிறாய் என்று எல்லோரையும் அறியும்படி ஞானிகள் வைத்துள்ளார்கள்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகா ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து விண் செல்லப் போகிறாயா...?

அல்லது மீண்டும் உடல் பெறும் உணர்வுகளை உனக்குள் வினையாகச் சேர்த்து மீண்டும் மண்ணுலகில் வாழப் போகிறாயா..?

நீயே சிந்தித்துப் பார்... என்று கேள்விக் குறி போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள். ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் தப்பல்ல. அதை அறிந்து கொண்டால் நாம் போக வேண்டிய பாதை தெளிவாகும்...

அதிமுக ஆட்சியும் கொலைகளும்...


எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைக்குற்றம் சுமத்திய இருவரையும் தமிழக காவல்துறை பலம் பிரயோகித்து கூட்டிச் சென்றுள்ளது...


இதில் சயன் கொடநாடு கொள்ளைக்கு பின், குடும்பத்துடன் மர்மமான ஒரு விபத்தில் சிக்கி மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர்...

தேங்காய் நண்டு....


மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது. கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள்.  இவற்றில் பல வகை இருந்தாலும் நாம் அறிந்திராத பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு.

10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக் கொண்ட இவை இந்திய பெருங்கடல் மற்றும் பசும்பிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது புதிராக உள்ளது.

காரணம், இவற்றின் தோற்றம் பூச்சியை போன்று உள்ளதால் இதை நண்டு என்று பலரும் ஏற்பதில்லை. இவ்வகை நண்டுகள் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும்.

தென்னை மரங்களில் பதுங்கி வாழும் இவற்றின் பழக்கமே பிற நண்டு வகைகளிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது. இதனால் தான், ‘தேங்காய் நண்டு’ என இவ்வகை நண்டுகளுக்கு பெயர் ஏற்பட்டது. மரம் ஏறுபவர்கள் சில நேரங்களில் இந்த நண்டுகளை பார்த்து பயந்து கீழே விழுவதும் உண்டு. தேங்காய் நண்டுகளை பொறுத்த வரை பல வண்ணங்களில் காட்சியளிக்கும்.

சில இடங்களில் அவற்றின் வண்ணத்தை வைத்து வகை பிரிக்கின்றனர். ஆனால் இவை நிற பாகுபாடின்றி ஒன்றோடு ஒன்று கூடி இன விருத்தி செய்கின்றன. இவற்றை நண்டு என அறிந்தவர்கள் மட்டுமே பிரத்தியேகமாக தேடி பிடித்து உண்கின்றனர்
இந்து சமுத்திரம் மற்றும் தென் பசிபிக் மகா சமுத்திரத்திர தீவுகளிலும் காணப்படும் நண்டு வகையில் ஒன்று தான் Coconut Crab.  இதனை தமிழில் கொள்ளைக்கார நண்டு என அழைக்கின்றனர்.

எட்டுக் கால்களை உடைய இந்த நண்டு தென்னை மரங்களில் ஏறி தேங்காயை தனது பலம் பொருந்திய இடுக்கியால் (முன் இருக்கும் ஒரு சோடி கால்கள் – pincers) உடைத்துத் தின்று விடும்.

தனது இடுக்கியால் 29 கிலோகிராம் வரையான பாரத்தை தூக்கும் திறன் படைத்தது. இதன் உடலின் நீளம் 40 சென்டி மீட்டர் ஆகும். பொதுவாக பெண் நண்டை விட ஆண் நண்டு பெரிதாக இருக்கும்.  இதன் நிறை அன்னளவாக 4 கிலோகிரமுடையது.

இந்த கொள்ளைக்கார நண்டால் நீந்த முடியாது, நீரில் மூழ்கி விடும். ஆறு மீட்டர் உயரமுள்ள (தென்னை) மரங்களிலும் ஏறும் இந்த கொள்ளைக்கார நண்டு 30 தொடக்கம் 60 வரையான வருடகாலம் வாழக்கூடியவை...

திராவிடர் என்று சொன்னால் செருப்பால் அடி...


அண்ணாச்சி பழத்தின் அற்புத குணங்கள்...


உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாச்சி பழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

முதலில் நன்கு பழுத்த அன்னாச்சி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காய வைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாச்சி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.

தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும். இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும்.

பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும் பொதுவாகவே அன்னாச்சிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும்.

குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாச்சி பழத்திற்கு உள்ளது...

முதல்வர் பழனிசாமி தான் கொலையாளி...


முத்துலெட்சுமி எழுதிய சுயசரிதையில் சொல்லப்படாத இருவர்...


1.சத்திய மூர்த்தி...
2.ஈ.வெ.ரா. பெரியார்...

தேவதாசி முறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் சத்திய மூர்த்தி ஐயர். இவர் இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது என்று சொன்ன போது, உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன் என்று கூறி, சத்தியமூர்த்தியின் வாயடைத்தவர் முத்துலெட்சுமி அம்மையார் என்று தான் பலரும் சொல்லி வருகிறோம். குறிப்பாக, ஈ.வெ.ரா. பெரியார் தான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்  சுயசரிதை நூல் எழுதியுள்ளார். அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. அந்நூலை தற்போது தான் படிக்க நேர்ந்தது. அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை, (ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்கிறார் ) அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் குரல் கொடுத்த ஈ.வெ.ரா. பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.

அந்நூலில், லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும், பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் வேலை செய்யத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

மேலும், அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும், அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று  புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார். 'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.

1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரை குறிப்பிட்டு பேசுகிறார்.

பிறகு நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைவு கூறும் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான்  தேவதாசி முறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் கூறி வருகின்றனர். ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசி முறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார். 1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசி முறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி மட்டுமே. 1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.

பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

அதுசரி, தமக்கு வழி காட்டியான காந்தியாரைத் தெரிகிறது, ஶ்ரீனிவாச ஐயங்காரைத் தெரிகிறது, லேடி சதாசிவ ஐயரைத் தெரிகிறது, தேவதாசி முறையை எதிர்த்த பனகல் அரசரைத் தெரிகிறது, அதே கால கட்டத்தில் எதிர்த்த  ஈ.வெ.ரா. பெரியாரைத் தெரியவில்லையா?

தேவதாசி முறையை ஆதரித்த இராசாசியைத் தெரிகிறது, அதை ஆதரித்த மற்றொருவரான சத்திய மூர்த்தி ஐயரைத் தெரிய வில்லையா?

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.

சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேட்டதாக சொல்லப்படும் செய்தியை பலரும் கூறிவருவதை நானும் இதுகாறும் நம்பி வருகிறேன். முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது..

(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)...

மெளனம் உன்னுள் இருக்கும் உணர்வு பேசுவதை கேட்பது...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


அநேக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சதி ஆலோசனை தத்துவங்களின்படி, தசிலியின் சஹாரா பாலைவன மர்மமான குகை ஓவியங்கள். வேற்றுக்கிரக உயிர்கள் கடந்த காலங்களில் பூமியில் இருந்ததற்கான சிறந்த ஆதாரமாக விளங்குவதாக கூறுகின்றனர். இந்த நம்பமுடியாத குகை ஓவியங்கள், சஹாராவின் வறண்ட பாலைவனத்தில் தெற்கு அல்ஜீரியாவில் உள்ள தசிலி பீடபூமியில் காணப்படுகின்றன.

ஏறத்தாழ கி.மு 8000 ஆண்டுகளுக்கு முன், ஆபிரிக்காவின் பழங்குடி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை குகை ஓவியங்கள் மூலமாக சித்தரித்துள்ளனர்.
ஆனால் அவற்றில் ஆறுகள், காடுகள் விலங்குகள், மற்றும் கையுறைகள், காலணிகள், தலைக்கவசங்கள், ஆண்டெனாக்கள் மற்றும் வாகனங்களுடன் சில மர்மமான பொருட்களுடனும் வித்தியாசமான மனித உருவங்கள், என அவர்கள் பார்க்காததை ஏன் சித்தரிக்க வேண்டும்?

ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற 5000 க்கும் மேற்பட்ட குகை ஓவியங்களை பட்டியலிட்டுள்ளனர், அவர்களுக்கு கடந்த காலங்களில் அதிகம் நம்பிக்கை இருப்பதாக நம்பினர். இந்த ஓவியங்கள் மூலம், சஹாரா பிராந்தியம் 4000-6000 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றிலும் மாறுபட்ட செழிப்பான பூமியாக இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.

இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் எச்சங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், மிகவும் நம்பமுடியாத விண்வெளி வீரர்கள் மற்றும் அவர்களது விசித்திரமான சாதனங்கள் உள்ள சித்தரிப்புகள் மட்டுமே குகையில் தெளிவாக உள்ளது. இந்த மர்மமான சித்தரிப்புகள் ஆராய்ச்சியாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

1976 ஆம் ஆண்டில், ஒரு ஸ்பானிய ஆய்வாளர்கள் பயணமானது, தசிலியின் மர்மமான குகை ஓவியங்களை விசாரிக்கப் பயணித்தது. ஏராளமான குகை ஓவியங்களை ஆய்வு செய்த பின்னர், ஸ்பானிய ஆய்வாளர்கள்,  மர்மமான மனிதர்கள் கடந்த காலங்களில் பூமிக்கு அடிக்கடி வருகை தந்து பார்வையிட்டனர் என்றும் மற்றும் அந்தப் பிரதேசத்தில் பல பெண்களை மர்மமான தோற்றத்துடன் கூடிய மனிதர்கள் கைப்பற்றியதாகவும் சில குகை ஓவியங்களை எடுத்துக்காட்டினர்.

அடுத்ததாக, ஆய்வாளர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் ஏதோவொரு எழுத்து முறையை கொண்டிருந்தனர் என ஒரு குறியீட்டு தொகுப்புகளை அடையாளம் காட்டினர்.அவைகள் நாகரிகத் தொட்டில் எனப்படும் மெசொப்பொத்தேமியா எழுத்துக்களுடனும் ஒத்துப்போகவில்லை என்றனர்.

மேலும் இந்த பழங்குடிகள் வசிக்கும் நிலம், பாழகப்போவதை முன்கூட்டியே அறிந்து அவர்களை இடம் மாற்றியிருக்கலாம் அல்லது தங்கள் உலகத்திற்கே அழைத்து சென்றிருக்கலாம். அறிவில் மேம்பட்ட பல பண்டைய நாகரீகங்கள் தடயங்கள் இல்லாமல் மறைந்ததை இதற்க்கு உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த காலங்களில் பூர்வீக பழங்குடிகளை பார்வையிட்ட பண்டைய விண்வெளி வீரரை, தசிலி குகைகளின் பூர்வீகர்கள் சித்தரித்துக் காட்டியதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமிக்கு வந்த விண்வெளி உயிரினங்கள் உலகெங்கிலும் உள்ள பண்டைய நாகரிகங்களின் கதைகள் மற்றும் முடிவுகளின் மூலம் வரலாற்றில் தங்கள் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளனர் ஏன்பதே நிதர்சனம்...

பிரமிட் தெரியாத உண்மைகள்...


அன்பு சக்தியும் நீங்களும்...


1. அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ , அந்த உணர்வு தான் இருக்கும் இதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.

2. வாழ்க்கை உங்களுக்குத் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அடையாளங்கள் , எண்ணங்கள் , நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சூழலும் , ஒவ்வொரு நிகழ்வும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.

3. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும்பொது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.

4. வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலாக நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.

5. நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆடை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளாச் சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் உங்கள் அடையாளாச் சின்னத்தைப் பார்க்கும் போது அல்லது கேட்கும் போதோ, அன்பின் ஆற்றல் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

6. ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் , அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.

7. ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது , ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

8. உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பின் ஆற்றலை உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் , பணத்தை நிர்வாகிக்கும் மேலாளராகவும் , தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்பவராகவும் , உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளாராகவும் இருக்கும்.

9. உங்கள் மனம் ஏகப்பட்ட விபரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விபரங்கள் உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது.

10. அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே.
உற்சாகம் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்...