13/07/2017
இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக் கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது...
கன்னடம்------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது
ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது.
ஆனால் தமிழில்...
தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
மிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்.
தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்...
அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம்.
வியட்னாமில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-
. .. . . … ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..
இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.
திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் மூலவர்மன் என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 800க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-
(1) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.
(2) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது. அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி), ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி) ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம். பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.
(3) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் நிலந்தரு திருவில் பாண்டியன் என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது. பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
(4) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்து முறை ‘மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் முடித்திருமாறன். நற்றிணை 105, 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன்.
(5) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன. முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.
(6) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன், பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6 –61)
ஆசியாவில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
(7) புறநானூற்றுப் பாடல் (புறம் 182) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி. இவன் வெளிநாடு செல்லும்போதோ, வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.
(8) டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.
(9) தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.
(10) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.
(11) ‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.
ரோம் (இத்தாலி) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே...
தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?
அசுரர் என்பது காரணப் பெயரே...
சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.
ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.
இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர்.
அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.
அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.
இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும்மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.
கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள்.
இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது போல் அன்று ஆரியர்கள் தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.
முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமானபற்களும் முளைத்து விட்டன.
ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்...
சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ்மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.
இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலை வீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.
ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையே கொண்டாட வைத்து விட்டார்கள்.
இதை உணர்ந்து தமிழினம் இனி தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்...
தமிழ்த் தேசியமும் சாதிய குழப்பமும்...
தற்போது நம்மை அதிகமாக குழப்பமடையச் செய்யும் கருத்தியல் இதுவேயாகும்.
தமிழ் தேசிய கருத்துக்கள் நாளடைவில் செம்மைபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திராவிடர்கள் நம்மை பாசிசுடுகள் (Fasists), சாதி வெரியர்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்வதோடு நம்மை பார்ப்பன அடிவருடிகள் என்றும் கூறி தமிழ் தேசியத்தை உருப்பெற செய்யாமல் குழப்பி வருகின்றனர்.
நம்மில் (தமிழ் தேசிய சிந்தனையாளர்கள்) பலர் கூட தமிழர்களை அடையாளம் காண்பதில் சாதியத்தை பார்ப்பது தவறு என்று நம்பி வருகின்றனர். இது ஓரளவுக்கு பொதுவாக தமிழ் தேசிய சிந்தனையாளர்களை சென்றடைந்த கருத்தாகும்.
தமிழர்களை அறிவுசார் தளத்தில் வீழ்த்தியது பார்ப்பனர்கள் (ஆரிய மனுவாதிகள்) என்று இதுவரையில் திராவிடர்கள் நம்மை நம்ப வைதுக்கொண்டிருந்தனர்.
ஆனால் ஆரிய மனுவாதிகள் நம்மை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணிகளே அன்றி நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வர்க்கம் இல்லை.
இந்த ஒட்டுன்னிகளுடன் உள்ளே வந்த திராவிட (விசயநகர தெலுங்கர்கள்) எதிரிகளே நம்முடைய கோவில்களிலும் வாழ்வியலிலும் ஆரிய தாக்கத்தை உட்புகுத்திய ஆண்டைகளாவர்.
திராவிட வந்தேறிகள் தான் இனக்குழுக்களாக இருந்த நம்மை சாதிகளாக கட்டமைத்தனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தொழிற்சார் குலங்களை வாக்குவங்கிகளாக மாற்ற பெரிய சாதிய கட்டுமானங்களாக உருப்பெற செய்தனர். இதை எடுத்துக் காட்டுடன் சொள்ளவிடின் புரியவைக்க இயலாது.
தற்ப்போது ஆதிக்க சாதிகளாக அடையாளம் செய்யப்படும் வன்னியர்கள் பல வகையான இனக்குழுக்களை கொண்டவர்கள்.
தமிழகம் முழுவதும் பரவலாக வாழ்ந்த்துக் கொண்டிருக்கும் வன்னியர்கள் பல்லி, படையாட்சி, போன்ற உட்பிரிவுகளை கொண்டவர்கள்.
இதுப்போன்றே முக்குலதோர்கள் என்ற பெரிய சாதியப் பிரிவிற்குள் கள்ளர், மறவர், அகமுடையர், போன்ற உட்பிரிவுகள் உள்ளது.
இது போன்றே தமிழகத்தில் உள்ள தமிழ் சாதிகளுள் உட்பிரிவுகள் உண்டு. ஒரு சாதிக்குள் இருக்கும் சாதிய உட்பிரவுகள் யாவும் ஒன்றோடு ஒன்று வரலாற்று தொடர்புடையது அன்று.
ஆனால் இவர்களுக்குள் வரலாற்று தொடர்புடையது போன்ற பிம்பத்தை திராவிடர்கள் தெளிவாக உருவாகினர்.
இந்தியா முழுவதும் சாதிகளுண்டு. ஏன் காந்தி கூட ஒரு சாதிய பெயர் தான்.
நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவிலும் சாதிகள் உண்டு. மேனன், நாயர், என்று தங்கள் பெயருக்கு பின்பு அவர்கள் இன்றளவிலும் பெயரிட்டுக் கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் இந்தியாவில் எங்கேயும் இரு சாதிகளுக்குள் சண்டைகள் பெருமளவில் நடந்ததில்லை. அவர்கள் அனைவரும் இனமாக ஒற்றுமையுடன் இருக்கின்றனர். அங்கேயும் ஆரிய மனுவாதிகள் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றனர்.
இப்படி இருக்க தமிழகத்தில் மட்டும் சாதிய பெயர்களும் போடுவதில்லை, இனமாகவும் இருக்கவில்லை. ஆனால் சாதிய சண்டைகள் மட்டும் குறைந்தபாடில்லை.
தமிழகத்தில் ஆரிய மனுவாதிகள் உண்டு கூட ஆதிக்க தெலுங்கு சாதி வெறியர்களும் (திராவிடர்கள்) உண்டு. இவர்கள் தங்களை தமிழகளுக்குள் மறைத்துக்கொள்ள நமது ஓட்டுப் பெயர்களான குலப் பெயர்களை போட வேண்டாம் என புரட்சி செய்துவிட்டு, சாதிய கட்டமைப்புகளிடம் ஓட்டு பொறுக்கி அரசியலை மட்டுமே செய்தனர், செய்கின்றனர்.
இதுவரையில் ஆரிய மனுவாதிகளை மட்டுமே வந்தேறிகளாக பார்த்துக் கொண்டிருந்த நாம் படையெடுத்து வந்த வந்தேறி தெலுங்கர்களை கண்டு கொள்ளவில்லை.
ஆரியர்களுக்கு எதிராக புரட்சி செய்த திராவிட கழகங்கள் (100) ஆண்டுகள் ஆகியும் தமிழக அளவில் ஆரியத்தை வீழ்த்த முடியவில்லை, ஏனெனில் அவர்கள் ஆரியத்தை எதிர்க்கவே இல்லை.
படையெடுத்து வந்த வெள்ளையனை அந்நியன் என சொல்லிய நாம் ஏன் அதற்குமுன் படையெடுத்து வந்த தெலுங்கர்களை அந்நியர்களாக பார்ப்பதில்லை?
ஆகவே தெரிந்தோ தெரியாமளோ தூய தமிழர்களை அடையாளப் படுத்துவதற்கு சாதிய ஒட்டுகள் தேவைப்படுகிறது.
சாதிக்கு எதிராக புரட்சி செய்த திராவிடர்கள் FC, MBC, BC, SC, ST என்ற மாடர்ன் வர்நாசுரமத்தை ஏன் எதிற்க்கவில்லை?
விழித்தெழுங்கள் தமிழர்களே..
சாதி தமிழ் தேசியத்திற்கு ஒரு தடையில்லை..
ஆகையால் சாதிகளை தாக்கவும் தேவையில்லை...
எது அதிசயம் ?
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது...
இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது.
இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது.
இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.
ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372).
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.
இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை.
சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ?
அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?
சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்...
பழையனூர் நீலீ - கண்ணகி...
மணிமேகலை போன்ற பல வணிகர்களின் குல பெண்களை பொதுமக்களை வணங்க வைக்க சமணக்கதைகள் உருவாக்கப்பட்டு அந்த சமணர்களின் கதைகள் வில்லுபாட்டு பாடும் ஏழைக்கூட்டத்தின் மூலம் மக்கள் மனதில் மக்களின் வழிபாட்டுக்கு ஏற்றாற்போல பதியவைக்கப்பட்டது தான் முதன் முதலில் மக்களிடம் Media influence மூலம் திணிக்கப்பட்ட வரலாறு.
இந்த இயங்கியல் நன்றாக வேலை செய்யவே இப்போதுவரை அது தொடர்கிறது Bigboss வரை...
வாசுதேவ நல்லூர்ப் போரின் வரலாறு. தமிழ் மக்கள் உண்மையில் பெருமைப்படக்கூடிய ஒரு வீர காவியமாகும்...
அப்போரில் ஈடுபட்ட தமிழர்களின் வீரத்தை கண்டு வெள்ளைத் தளபதியாகிய காம்பெல்லே வியப்பில் ஆழ்ந்தான்.
28. 5. 1767 ல் அவன் சென்னையிலுள்ள கும்பினி கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம்.
இன்றளவும் அந்த கடிதம் எழும்பூர் ரிகார்டு ஆபீசில் உள்ளது.
வாசுதேவ நல்லூர் என்ற புலித்தேவன் கோட்டையை தாக்குமாறு இன்று நம் படைக்கு உத்திரவிட்டேன். பீரங்கிக் குண்டுகளாகலேயே கோட்டையைத் தகர்க்க முடியவில்லை..
குண்டுப்பட்ட இடங்களில் ஓட்டைகள் மட்டுமே விழுந்தன. ஓட்டைகளைப் புலித்தேவன் வீரர்கள் பச்சை மண்ணும் பனைநாரும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்து விட்டார்கள். விடாது சுட்டுத்தள்ளச் சொன்னேன்..
ஓட்டைகளை தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே அடைத்து நின்றார்கள். சுட்ட இடங்களிலெல்லாம் மண்ணும் நாரும் எப்படிச் சிதறுமோ, அப்படியே புலித்தேவன் வீரர்கள் அஞ்சாமல் தங்கள் பணியைச் செய்வதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை..
நாகரிகம் குறைந்தவர்கள் என்று நம்மால் கருதபடுகிற தமிழர்களின் வீரம் நம் ஐரோப்பியர்களின் வீரத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல...
Subscribe to:
Posts (Atom)