08/11/2020
கரும்பும் அரசியலும்...
நம்மை எந்த அளவுக்கு இந்த உலக அரசியல் நம்மை சுருக்கி விட்டது பார்த்தீர்களா?
பொங்கல் என்றால் மட்டுமே நாம் கரும்பைப் பற்றி நினைக்கின்றோம்..
ஆனால் பண்டைய தமிழர்கள் கரும்பை கொண்டு வேலி அமைத்து தன் பயிர்களை காப்பாற்றியுள்ளனர்..
மட்டுமின்றி பெண்கள் உரலில் தானியங்களை இடிப்பதற்கு உலக்கைக்கு பதிலாக கரும்பை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது..
ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை..
மற்றும் சேற்றுக்குள் சிக்கிய தேரின் சக்கரம் மற்றும் மாட்டு வண்டிகளின் சக்கரத்தை நெம்பி தூக்கி விட கரும்பை பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறது அகநானூறு...
அதேபோன்று...
கரும்பின் தீஞ்சாறு
விரும்பினர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை )
கரும்பு சாற்றை விற்கும் கடைகள் அப்போதே வீதியில் இருந்திருக்கிறது என்றும் பழைய வரலாறு நமக்கு கூறுகிறது.
ஆனால் இப்போதோ கரும்பு சாற்றை சாலையோரம் அதிகமாக விக்கிறது வடநாட்டவன்...
அதன் தரமும் சரியில்லை..
ஒரு விளையும் பயிரை குறைத்து அதை சிறுமிதமக்காக்கினால் என்ன நடக்கும்?
வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் சந்தைக்கு வரும் மற்றபடி அதன் மதிப்பு குறையும் அதனால் அதை பயிரிட விவசாயி யோசிக்க வேண்டும்..
காலப்போக்கில் கரும்பு என்பது சீனிக்காக பயிரிடப்படும் சாதாரண தாவரம் மட்டுமே இதை தொழிற்சாலைகள் நினைத்த விலைக்கு வாங்க முடியும் காரணம் அதற்கு மக்களின் சந்தை மதிப்பு கிடையாது இருந்தாலும் (பொங்களுக்கு மட்டும்)...
இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நமது உணவில் இருந்து கலாச்சாரம் வரை அழிக்கப்படுகிறது...
இதேதான் இன்றைய இந்தி திணிப்பும் ஆழமான அரசியல் இது...
காலப்போக்கில் திருக்குறளை எழுதியது வந்தேறி எச். ராஜா என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
தியானம்...
தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போட்டு தான் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தீய சக்திகள் தொல்லை செயயும்.. திசை திருப்பும் என்று சொல்கின்றனர் உண்மையா எஜ்று கேள்வி கேட்டுள்ள நண்பரே...
தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போடுவது என்பது உண்மை தான் அதில் சந்தேகம் வேண்டாம்..
இந்த சூட்சும கட்டில் பல வகைகள் உண்டு...
மந்திர கட்டு, எந்திர கட்டு, பிரணவ கட்டு, பிராண கட்டு, குரு கட்டு என்று சொல்ல கூடிய தீட்சை இப்படி பல உண்டு.
இவைகளெல்லாம் அனைவராலும் செய்ய முடியாது.
ஆனால் பிராண கட்டு, பிரணவ கட்டு, இவைகள் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவராலும் கூடும்.
குரு கட்டு என்பது தியானத்தில் நல்ல தேர்ச்சி அடைந்த குருவிடம் தீட்சை வாங்கி கொண்டால் அந்த ஆற்றல் உங்களுக்கு பாதுகாத்து கட்டு போல் செயல்படும்.
அதற்காக யாரும் கட்டணம் கட்டி தீட்சை பெற கிளம்பி விடாதீர்கள்.
பிராண கட்டு என்பது சுவாச பயிற்சி செய்து விட்டு தியானம் செய்வது.
பிரணவ கட்டு என்பது பிரணவ மந்திரத்தை சத்தமாக நீளமாக அதாவது ஓ................ம் என்று பத்து முறை உச்சரித்து விட்டு தியானிப்பது.
இவைகள் அனைத்தையும் விட தீட்சை மற்றும் விளக்கு ஏற்றி வைத்து தியானிப்பது நல்ல பாதுகாப்பையும் வெற்றியையும் தரும்.
இது நான் கண்ட அனுபவமும் கூட திருச்சிற்றம்பலம்...
அழகிரி எனும் காங்கிரஸ் தெலுங்கனே அதைத் தான் நாங்களும் சொல்கிறோம்...
1987 - 1990 வரையான காலப்பகுதிக்குள் தமிழீழ நிலப்பரப்பிற்குள் வைத்து 12000 க்கு மேற்ப்பட்ட தமிழர்களை கொன்று குவித்த ராஜீவ்காந்தி தமிழின படுகொலையாளன்...
அவனை தலைவனாக பார்க்கக்கூடாது, படுகொலைக்காரனாகவே பார்க்க வேண்டும்...
2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆயுதம் வழங்கி 2,00,000 தமிழர்களை கொலை செய்ய உதவியது சோனியா காந்தி...
ஆகையால் சோனியா காந்தியை தலைவியாக பார்க்க கூடாது... கொலை குற்றவாளியாக தான் பார்க்க வேண்டும்...
புரிதா டா பஞ்சம் பொழக்க வந்த வந்தேறி தெலுங்கா...
தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...
பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...
நான் ஒரு தமிழன்.
எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை.
அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.
ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.
தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்.
இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல் கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.
அதேபோல "இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே?" என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான்...
இந்தியாவை ஆள்வது ஆரியம்... அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம்...
இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான்.
இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான்.
காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும்.
முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான்.
தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான்.
நம் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.
திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்.
தமிழராய் ஒன்று இணைவோம்...
கொரோனா : இந்தியர்களுக்கு சீனா தடை...
இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பயணிகள் வர சீன அரசு தடை விதித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. எனினும், சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பயணிக்கவும், இந்திய விமானங்களுக்கும் சீன அரசு தடை விதித்துள்ளது. சீன விசா, ரெசிடன்ஸ் பெர்மிட் போன்ற ஆவணங்களை வைத்திருப்போரும் இந்தியாவில் இருந்து சீனா வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பயணிப்போருக்கு விசா மற்றும் ரெசிடன்ஸ் பெர்மிட் வழங்க அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவிலுள்ள சீன தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை தற்காலிகமானது எனவும், கொரோனா பாதிப்பு மாற்றத்திற்கு ஏற்ப அடுத்தகட்ட அறிவிப்பை சீனா வெளியிடும் எனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு மிகுதியாக இருக்கும் வேறு சில நாடுகளுக்கும் சீனா தடை விதித்துள்ளது.
இதுபோக, பிரிட்டன், பெல்ஜியம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சீனர் அல்லாத நபர்கள் சீனாவுக்குள் நுழையவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் உடல்நிலை பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது...
பெண்கள் அதிகம் பேசுவது ஏன்..?
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?
பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம்.
அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.
ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.
பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.
பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்சு(ஸ்)பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.
மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் ஒலி (Sound) அதிகம் இருக்கிறதாம்.
இந்த பாக்சுபி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள், வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்…
எதற்காக அக்காலத்தில் தமிழர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பேணிப் பாதுகாத்து வாழ்ந்தனர்?
கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?
மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.
மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.
அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.
வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது....
அதனால் தான் தமிழர்கள் கூட்டு குடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக் காத்தனர்...
தீபாவளியை முன்னிட்டு வர்த்தக நேரத்தை நீட்டிக்க வேண்டும் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை...
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நேரத்தை இரவு 12 மணி வரை நீட்டிக்க காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மத்திய மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மத்திய மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் 2020ல் வணிகம் முடக்கப்பட்டு, பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் வணிகர்களுக்கு பெரும் வணிக இழப்பையும், வாழ்வாதாரச் சிதைவும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் வணிகர்களின் பண்டிகை கால சலுகைகளாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், குறிப்பாக பட்டாசுக் கடைகள், ஜவுளிக்கடைகள், இனிப்பகங்கள் இயங்கும் கால நேரத்தை இரவு 12 வரை நீட்டித்து, விழாக்களின் முன்தினம் மட்டும் இரவு முழுவதும் வர்த்தகம் செய்திடவும் காவல் துணை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன்,பொருளாளர் ஆனந்த பொன்ராஜ் ,மாநிலத் துணைத் தலைவர் வெற்றி ராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திராவிடம்...
திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.
இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.
அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.
நன்றி: தென்மொழி 1988 நூல், வேண்டும் விடுதலை, பக்.294, 295...
ஏழு பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு - அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...
திருமாவளவன், வேல்முருகன் நிலைப்பாடு என்ன...?
எலும்புத் துண்டுகளுக்காக கூட்டணியில் இருப்பார்களா அல்லது வெளியேறுவார்களா...?
அல்லது கூட்டணியில் இருப்பதை ஞாயப்படுத்த காரணங்களை தேடுவார்களா...?
அல்லது வெறும் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு கூட்டணியில் தொடர்வார்களா...?
அல்லது இதை திசை திருப்ப மீண்டும் இல்லாத ஒன்றை வைத்து கலவரம் செய்வார்களா...?
சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்...
சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் கூறிள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து சுபாஷ் சந்திர போஸ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ் எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த எழுத்துகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களே என்றார்.
தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துகள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பலர் உள்ளதாகக் கூறிய சுபாஷ் சந்திர போஸ், அவர்களை கொண்ட குழு அமைத்து கீழடி பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/10/3/2018/tamil-used-communicate-indus-valley-says-researchers
கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்...
கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்...
கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும்.
குழந்தைகளை அந்தப் பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது.
மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே..
தமிழர் விரோதி அதிமுக எடப்பாடி யின் சதி...
அரசு செய்ததிலேயே பெரும் துரோகம் தமிழக அரசு வேலைகளை வெளி மாநிலத்தவர்களுக்கு திறந்து விட்டதுதான்...
நம்ம உசிலம்பட்டிக்காரன் ஜபல்பூர் தாலுக்கா ஆஃபீசில் பியூன் வேலை செய்வானா? ஆனா அவன் வருவான். நம்மை இந்தியிலேயே மிரட்டி வெளியே நிற்க வைப்பான். பரிதாபம் நம் மாநில இளைஞர்கள் நிலை...