06/03/2021
வெற்றிதான் சாதனையல்ல...
அந்த வெற்றிக்கு அடித்தளம்தான் சோதனை..
அந்த சோதனையை கடந்தவன்தான் உண்மையான சாதனையாளன்..
நம்மால் முடியும் என்பவனுக்குதான் எல்லாமே கைகூடும் வெற்றிகிட்டும்...
தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி...
சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.
இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.
இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...
நமசிவய எனும் மந்திரத்தை ஏன் உச்சரிக்க வேண்டும்? அதன் பயன் என்ன?
ந ம சி வ ய என்னும் இந்த ஐந்து எழுத்துக்களையும் நமது உடலின் ஐந்து பகுதிகளாக, நிலையங்களாக சித்தர்கள் கூறுகின்றனர்..
அவை இடநாடி, பிங்கலநாடி, ஆகிய பாதத்திலே நம என தொடங்கி, தோள்களில் சி யும் வாயில் வ வும் தலையில் ய வும் மண்டலம் கொள்கின்றன, இதுவே சித்தர்கள் உணர்த்தும் மிகப்பெரிய ரகசியம்..
நமசிவய எனும் பொழுது மூலக்கனலானது கீழிருந்து மேல் எழுகிறது, சிவாய நம என்னும் பொழுது மேலிருந்து கீழ் இறங்குகிறது இதனை பல சித்தர்கள் பாடல்களில் ஏற்றி இறக்குதல் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்...
அச்சம்...
வாழ்வில் நடப்பனவற்றைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டே இருந்து விடுதல், அவற்றோடு பழகிப் போய்விடுதல், சூழ்நிலையில் நிகழும் நிகழ்ச்சிகள் மீது பழி போடுதல் - இத்தகைய மனோபாவங்களுடன் தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.
உள்ளபடி, உள்ள நிலையிலிருந்து நாம் ஏன் தப்பி ஓடுகிறோம்?
எடுத்துக் காட்டாக : நாம் சாவைக் கண்டு அஞ்சுகிறோம். சாவுக்குப் பின் நமக்கு நேரிட இருக்கும் நிலையினைப் பலவிதமான கருத்துக்கள், நம்பிக்கைகள், கொள்கைகள் இவற்றினை உருவாக்கி, அவற்றின் மூலம் சாவு என்ற உண்மையை உள்ளது உள்ளபடி காண இயலாதவாறு மறைத்து விடுகிறோம்.
என்ன செய்தால் என்ன? சாவை நம்மால் தவிர்க்க முடியாது. அது நம்மை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
எதனையும் உள்ளது உள்ளபடி உணர்வதற்கு அதன் முன் நின்று கண் கொண்டு நோக்க வேண்டுமேயன்றி அதற்கு முதுகு காட்டி ஓடுவதில் பயனில்லை.
நம்மில் பெரும்பாலோனோர் வாழவும் அஞ்சுகிறோம், சாகவும் அஞ்சுகிறோம். நம் குடும்பம் என்ன ஆகுமோ என்ற அச்சம், நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம், நமது வேலை போய்விடுமோ என்ற அச்சம், இது போன்ற நூற்றுக் கணக்கான அச்சங்கள்.
அஞ்சுகின்ற மன நிலையில் தான் நாம் இருக்கிறோம். உண்மையை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடிவதில்லை...
பாமக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுவதை முன்னிட்டு ஊடகங்களுக்கு அழைப்பு...
பாமகவின் தேர்தல் அறிக்கையை அச்சு பிசகாமல் ஜெராக்ஸ் எடுத்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் நமக்கு, அழைப்பில்லாமல் போனது ஏன்?
என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன...
வாழ்க்கை தத்துவம்...
பஸ் பின்னாடி ஓடினால்
10 ரூபா சேவ் பன்னலாம்...
ஆட்டோ பின்னாடி ஓடினால்
50 ரூபா சேவ் பன்னலாம்...
பிகரு பன்னாடி ஓடினால்
தாடி கூட சேவ் பன்ன முடியாது....
இப்படிக்கு அனுபவசாலி...
மனிதன் எத்தனை வகை...
மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்...
1.Introverts: மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..
2.Extroverts: எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள். ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.
3.ambiverts: மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.
மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
தைல புத்தி: ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.
கிரத புத்தி: நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர். பிறர் கேட்டால் சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி: விழாவில் கம்பளம் விரித்து, விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும் போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும் போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.
களி மண் புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது...
சித்தர் ஆவது எப்படி - 10...
பழைய சித்தர் பாடல்களில் அதி கவனம்.. உண்மையை சொன்னால் பூகம்பம்.. அதனால் உண்மையை மறைக்கப் பட்டது..
உண்மையை வெளிபடுத்த பொய்யையே பயன் படுத்த வேண்டி, மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உண்மையை பலப்படுத்தாது பொய்யையே பலப்படுத்தியது.. முடிவில் பொய்யே நிலைத்தது..
உலக புகழ் பெற்ற குருக்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பொய்யை பயன் படுத்தி உண்மையை வெளிப்படுத்த முயற்சித்தது.. முடிவில் தோல்வியே கண்டனர்..
கவர்ச்சிகரமான பொய்களை பலவற்றை தேர்ந்தெடுத்து அதில் உண்மையை மறைமுகமாக உபதேசம் செய்ய துணிந்தனர்...
நேரடியான உண்மையை சொன்னால், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற வள்ளலார் நிலைக்கு செல்ல வேண்டி வருமே என்ற தயக்கமே.. இதற்கு நல்ல உதாரணம் ஓசோ..
பல கவர்ச்சி பேச்சுகள் நகைசுவை பல சம்பவங்கள் நடுவே உண்மையை சொல்ல முயன்றார்.. ஆனால் அவரின் நகைசுவையிலும், கதைகளில் ஈர்க்கப் பட்டார்களே தவிர அவர் சொன்ன உண்மையில், எவரும் கவனம் செலுத்தவே இல்லை..
ஓசோ சொன்னவை அற்புதம் அற்புதம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் அவர் சொன்ன கதைகளையும் நகைசுவைகளையும் மட்டுமே..
அவர் சொன்ன இருப்பு தன்மை, Beingness, existential, Emptiness சூன்யம், அன்பு போன்றவைகள், அவரின் கவர்ச்சி பேச்சில், தொலைந்து போய் விட்டது...
உண்மைகளை பற்றி குறிப்பாக பேசும் ஓஸோ அன்பர்கள் ஒருவரையேனும் இன்று காணோம்.. அன்றும் ஒஸோ காலத்திலும் இல்லை....
அதே போலத்தான் சித்தர்கள் சொன்ன கவர்ச்சியற்ற சத்திய உண்மைகள் துளி அளவும் எடு படவில்லை...
அதை போக்க சின்ன தவறு செய்தார்கள்.. சற்று கவர்ச்சி கூட்ட இரசவாதம், இரசமணி, முப்பு என்று உலகியலையும் அகயியலையும் குறிக்கும் இரண்டு பொருள் பட கொண்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தினார்கள்..
உண்மை புரியாமல் மறைப்பு பொருள் என நம்பி உலகத்தார் உலகியல் பொருள் அர்த்தமாக கொண்டு அதை தேடி தேடி பல நூற்றாண்டுகளாக தங்கள் வாழ்வினை வீணாக்கினர்..
அந்த மறைப்பு பொருளில், தான் உண்மையை கண்டு கொண்டதாக சொன்னவர்கள் தனது பிழைப்புக்காகவும், பின் தான் தப்பித்து கொள்வதற்காகவும், சித்தர் பாடல்களை திருத்தி திருத்தி மக்களை திசை திருப்பினர்..
பழைய சித்தர் பாடல்களை அடையாளம் தெரியாமல் எரித்து விட்டனர்..
பழைய சித்தர்கள் பாடல்கள் அனைத்தும் பிழைப்புக் காரர்களால் சித்தர் நடையிலே பாரப்பா, வாருமப்பா, சேரப்பா என்ற தோரணையில் திருத்தி எழுதப்பட்டவையே..
அந்த பிழைப்புக் காரர்கள் கவர்ச்சியற்ற உண்மையை சொல்ல முயன்ற திருமுலர், சிவ வாக்கியர் போன்றோர் நூல்களில் கைவைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டனர்..
காரணம் இலக்கணம் என்ற முத்திரை பலமாக பதிக்கப் பட்டதால் அவைகளில் கைவைக்க முடியவில்லை..
காட்டில் வாழ்ந்த சித்தர்கள் இலக்கணம் இலக்கியம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் யதார்த்த நடையிலே சொன்னதால் பிழைப்புக் காரர்கள் அவர்களின் பாடல்களை நன்றாகவே தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, எங்கும் கிடைக்காத சித்தர் பாடல்களை தனக்கு மட்டுமே கிடைத்தது என அப்பாவி மக்களுக்கு ஏமாற்றி, திருத்திய பாடல்களை விற்றார்கள்..
இதற்கு சாட்சி பல நூற்றாண்டுகள் முன்பு எழுதிய பாடல்களில் குறுகிய காலத்தில் பயன் பட்ட வார்த்தைகளை சேர்ந்து இருப்பதே.. இதனை பல தமிழ் அறிஞர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.. நம்பகதன்மை அற்ற நிலையை நிரூபித்து இருக்கிறார்கள்..
அப்படி திருத்திய பாடல்களில் சிக்கிய மனித குலம் அன்று முதல் இன்று வரை மீளவே முடியாமல் இருக்கிறது..
இரசவாதம் ரசமணி முப்பு போன்றவற்றிலும், சில யோக நூல்களும், உண்மைக்கு புறம்பாக திருத்தி எழுதப் பட்ட நிலையில் சிலர் அதனை வேத வாக்காக கொண்டு பித்தர்கள் போல் அலைந்து தன் வாழ்நாளை வீணாக்கி பரிதாப நிலைக்கு செல்லுகிறார்கள்..
இதுவரை ஒருவரும் முப்பை கண்டதும் இல்லை; இரசவாதத்தில் தங்கம் பண்ணவும் இல்லை..
மனம் என்ற பூதம் மட்டுமே நெருப்பு தன்மையால் இராசயன மாற்றம் ஏற்படுத்தக் கூடியது.. மற்ற பூதங்கள் பௌதிக மாற்றம் மட்டுமே செய்யும்..
இராசயன மாற்றம் செய்யும் நெருப்பு என்ற பூதம் தன் இருப்பு தன்மையில் இரசம் என்ற சத்துப் பொருளான பிரபஞ்ச ஆற்றலை கனலாக தக்க வைக்கவும், வெளிச்சமாக மாற்றி, பொறி புலன்களில் வெளியேற்றவும் செய்யவல்லது..
பல பல ஜென்மங்களின் பதிவுகளின் அம்சமான சித்தத்தின் வளிச்சத்தை, அளவற்ற கனலாக மாற்றி மிக பெரிய சக்தியை, தன் இரசாயன மாற்றத்தால் கனலாக மாற்றி வாதம் என்ற காற்று பூதமான புத்தியில் கலக்க செய்யும் யுக்தியே இரசவாதம்..
பிழைப்புக் காரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியதால் பல பேர் தங்கம் மாற்றும் வித்தையில் சித்தம் கலங்கி போய் இருக்கிறார்கள்..
நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவெண்றால் இப்படி திருத்தி அமைக்கப் பட்ட சித்தர் பாடல்களிலே சிக்குண்டவர்கள் பேச்சுக்கள் நடைமுறைகள் அனைத்தும் சித்தம் கலங்கியது போலவே இருக்கும்..
தாங்கள் கற்றதை, விடமுடியாமல் ஏற்கெனவே சொன்ன பொய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, வகை அறியாமல் சொன்னதையே சொல்லி சொல்லி தன்னை காத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்..
உண்மையை அறிந்தாலும் தன்னை காத்துக் கொள்ள பொய்யை விடமாட்டார்கள்..
இத்தகையவர்களிடமிருந்து உண்மையை துளியும் பெற முடியாது என்பது இயற்கையே... அவர்களை பாவம் என்று விட்டு விட வேண்டியது தான்..
கவர்ச்சி இல்லாத சித்தர் பாடல்களில் கவனம் செலுத்த, வெளிச்சமான மனம் ஒரு போதும் உதவாது.. புத்தி ஒன்றே உதவும்..
ஆகவே தான் கனல் மயமான புத்தியை அதாவது சத்திய வழி காட்டலான அக குருவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..
இனி வரும் பகுதிகளில் சத்தியத்தை, உண்மையை, நோக்கி சிறுக சிறுக ஆனால் உறுதியான பிடிப்போடு முன்னேறுவோம்...
ஹிப்னாடிசம் எனும் மனோவசியம் கலை...
நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடு தான் பிறப்பெடுத்துள்ளோம்.
எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.
கடவுளின் மறுவடிவம் தான் நாம். அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.
நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.
ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.
உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன் மூலம் சரி செய்யலாம்...
சித்தர் ஆவது எப்படி - 9...
இருப்பு நிலையின் பொறுப்பு...
இருப்பு நிலை, இருத்தல் நிலை, பற்றி பேசாத குருக்களே இல்லை.. ஓசோ அதிகமாகவே கூறி இருக்கிறார்.. மற்றும் இன்றைய குருமார்கள் மிக அதிகமாகவே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...
இருந்த போதிலும் பஞ்சபூத கூட்டமைப்பில் சில விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...
மனத்தின் இயல் நிலையே இருப்பு தன்மை தான்... இதுதான் பஞ்சபூத கூட்டமைப்பில் மிக முக்கியமான இரகசியம்..
இந்த இருப்பு தன்மையை மனம் அடைந்த பின்னே தான் எந்த ஆன்மீகம் மார்க்கமும் தொடங்குகிறது.. அதுவரை எதுவும் துளியும் பயன் தராது..
இருப்பு தன்மை அடையாத பட்சத்தில் மனதில் எந்த கடவுள் உருவமும் எந்த யோகப் பலனும் எந்த நிலையான ஞானமும் எந்த திட சிந்தனைகளும் நிலைத்துநிற்க முடியாது..
காரணம் இயல்பாகவே இருப்பு தன்மை வாய்ந்த வெற்றிடத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும்..
எங்கே எல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே எல்லாம் எப்படி காற்று புகுந்து கொள்கிறதோ, அப்படியே இருப்பு தன்மை வாய்ந்த சுத்த மனத்தின் வெற்றிடத்தை, எல்லாம் இந்த சித்தத்தின் எண்ண ஆதிக்கம் ஆக்கிரமித்து விடும்..
அப்படியான மனம் சித்த மயமாகி விட்ட நிலையில் சித்தத்தின் பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கத்தின் பிரகாரமே இயங்க தொடங்கும்..
எல்லா விலங்குகளும் அப்படியே அப்படி பட்ட மனதின் பிரகாரம் பூரணமாக இயங்குகின்றன...
ஆகவே தான் அவைகள் தங்கள் இயல்பிலிருந்து மாறி மனிதனை போல் வேறு விசேசமான முன்னேற்றம் மனதளவில் எதையும் அடைய முடிவதில்லை..
விலங்குகள் மனதில் சித்தத்தின் உச்ச கட்ட ஆதிக்கம் இருப்பதே இதற்கு காரணம்...
பின் மனிதன் எவ்வாறு வேறு படுகிறான் என்பதை பார்க்க வேண்டும்..
மனிதன் ஏதோ ஒரு வகையில் தன் மனதில் புத்தியின் அம்சமான கனலை, சித்தத்தின் ஆதிக்கத்தையும் மீறி மனதில் கனலை தக்க வைத்துக் கொள்ளும் பண்பை உடையவனாக இருக்கிறான்..
இந்த கனல் தான் சித்தத்தின் ஆதிக்கம் வழி செல்லாமல் தடுத்து நிகழ் காலத்திற்கும், நிகழ் கால நிகழ்வுகளை எதிர் கொள்ள பயன் படுகிறது...
இந்த நிகழ் காலத்தை தொலைத்தவனுக்கு விலங்குகள் போல் எந்த முன்னேற்றமும் காண முடியாது...
நிகழ் காலத்தை சந்திக்க முடயாதவனிடம் கனல் என்ற சக்தியின் குறை பாட்டு தன்மையே அதிகம் இருக்கும்.. சித்தத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள்...
கனல் பெருக்கம் பெற்றவர்கள் மட்டுமே நிகழ்கால தொடர்பு பெற முடியும்..
இல்லையேல் சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமான இறந்த கால நடப்புகளிலேயே தன் காலத்தை முற்றிலும் தொலைத்து விட்டு வள்ளலாரின் மொழியில் சொன்னால் செத்தாரை போல அதாவது செத்துப் போனவர்களை போல் இருக்க வேண்டியது தான்...
சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாள் காலத்தை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் நிகழ்காலத்தில் கழிக்கிறான்.. மீதி நேரம் எல்லாம் இறந்த கால எண்ண ஆதிக்கத்தில் விரையம் ஆகிறது..
நிகழ்கால தொடர்பு என்பது சிவநிலை என்றும், சித்தத்தின் இறந்த கால தொடர்பு என்பது சவநிலை என்றும் சொல்லப் படுகிறது..
நாம் ஒரு நாள் வாழ்க்கையில் எவ்வளவு நேரம் சவநிலை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கணக்கிடும் போது நமக்கும் விலங்கிற்கும் அதிக வித்தியாசம் இல்லை..
ஒரு சதவீத வித்தியாசத்தில் மட்டுமே உள்ள நாம் அந்த ஒரு சதவீதத்தால் நாம் எவ்வளவு தூரம் விலங்குவிட மேம்பட்டு இருக்கிறோம் எனபதை கணக்கிட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகிறது..
அந்த ஒரு சதவீதத்திற்கே இப்படி என்றால் 100 சதவீதம் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை யூகிக்க வேண்டிய அவசியம் ஆகிறது..
இந்த கனலை எவ்வாறு பெறுவது அல்லது பெருக்குவது என்பது தான் யோகம்..
அப்படி பெருக்கும் எந்த யோகமும் பொதுவாக சிவயோகம் என்றே அழைக்கலாம்.. மற்றவை அனைத்தும் சவயோகம்...
கனலை பெறுவதற்கு முன்னால் நாம் மனதளவில் அடைய வேண்டிய ஒன்று தான் மனதில் இருப்பு தன்னம அல்லது இருத்தல் தன்மை.. அந்த இருத்தல், இருப்பில் மட்டுமே கனல் நிற்கும்..
இருப்பு தன்மை பெற்றால் மட்டும் போதாது, அதில் நீடித்து இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது..
பெற்ற கன்லை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கவர்ந்து போகாதவண்ணம் பாது காப்பதும் அதை விட அவசியம் ஆகிறது..
சும்மா வந்து விடாது சுதந்திரம் என்பார்களே அது போல் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்திலிருந்து, சவநிலையிலிருந்து, மீண்டு சிவ நிலைக்கு சுதந்திரமாய் வருவதற்கு ஆரம்பத்தில் மனம் என்ற நெருப்பில் பயின்றால் மட்டுமே முடியும்..
அந்த இருப்பு தன்மையை தக்க வைக்கும் பொழுது பேரண்ட பேராற்றல் கனலாக புத்தியில் நிலைகொண்டு, இருப்பு தன்மையால் மனதை கனலாக மாற்றி, சிவகலப்பாக மாற்றும் பொழுது, மனதில் மோதும் சித்தமும் சிவமாகி போகிறது..
அப்படி சித்தம் எல்லாம் சிவமாகி நின்ற நிலையில் தான் குறைந்த சதவீத கனல் நிலை அதிக சதவீதம் பெருக்கம் அடைந்து மனிதன் மேன்மை நிலை நோக்கி விரைவு கொள்கிறான்..
அந்த நிலையான இருப்பு நிலை பெறுவதற்கான பயிற்சிதான் சித்தர்கள் கண்ட வாசியோகமும் கனல் தீட்சையும்...
இருப்பு தன்மை பெறாத வாசியோகம் நாசம் விளைவிக்கும்...
பொண்ணு Vs பையன்...
பொண்ணு : என்னடா பண்ணிட்டு இருக்க?
பையன் : கொசுவை கொண்ணுட்டு இருக்கேன்.
பொண்ணு : எத்தனை கொசுவை கொண்ணு இருக்க.
பையன் : நாலு ஆண் கொசு, மூணு பெண் கொசு.
பொண்ணு : ஆண் கொசு, பெண் கொசு அப்படின்னு எப்படிடா கண்டுபிடிப்ப.
பையன் : அதுவா அது ரொம்ப சிம்பிள்.
நாலு கொசு கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருந்துச்சு.
3 பீர் பாட்டில் பக்கத்துல உட்காந்து இருந்துச்சு.
பொண்ணு : ?
பையன் : கொசு இனத்துல கூட ஆண்களை நிம்மதியா வாழவிட மாட்டீங்களாடீ...
😁😜😁😜😁
பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?
பிரச்சனை என்றால் என்ன?
அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா?
நிச்சயமாக கிடையாது...
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.
எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்.நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு.
அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்று கொண்டால் அங்கு பிரச்னை என்ற பேச்சுக்கு இடமே இல்லை.
அமைதியாக ஏற்று கொள்ளும்போது உணர்சிகளுக்கு இடமில்லை.
உணர்ச்சிகள்தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடுகிறது.
இதில் கோபத்திற்கு முக்கிய பங்குண்டு.
சாதாரண நிகழ்வையே இந்த கோபம் பெரிய பிரச்சனையாக்கி விடும்.
ஆனால் அன்பு என்பது எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீரை போன்று.. நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே மாற்ற செய்யும் சக்தி உண்டு.
ஆம்.,நண்பர்களே. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும்,சவால்களைப் பற்றியும் சிந்திப்பது மிக மிக முக்கியம்தான், ஆனால், அதைவிட முக்கியம் அவைகள் நம்மை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாக அணுகும் போது அங்கு ''பிரச்னை'' என்பதற்கு இடம் இல்லை...
மக்கள் விரோத பாஜக ஆட்சியில்..
விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவருக்கு Y+ security...
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு IT Raid...
என்ன வாழ்க்கை டா இது...
ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டுட்டு இருந்தேன்...
ஒரு பொண்ணு நெருக்கமாக வந்து
"சார் நீங்க சிங்கிளா" ன்னு கேட்டுச்சு...
நானும் ஏதோ நமக்கும் கடவுள் கண்ணு தொரந்துட்டார்னு நினச்சு...
ஆர்வமா ஆமான்னு சொன்னேன்...
உடனே...
தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு...
.
.
.
.
.
.
.
.
.
பக்கத்துல இருந்த
சேரை எடுத்துட்டு போய்டுச்சு...
சித்தர் ஆவது எப்படி - 8...
சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்..
வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக, பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்... இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...
அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..
இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்... சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்.... சித்தர்கள் தோற்று வித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...
சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..
சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது... எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....
சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே.. மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...
புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..
இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்.. அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே..
அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது.. இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்.. உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..
நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்.. நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..
அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது... அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...
சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..
அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது.. அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..
அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்.. நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...
நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...
இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...
அப்படி Vs இப்படி ?
ஒரு ஊர்ல அப்படி இப்படின்னு இரண்டு பேர்...
ஒருநாள் அப்படிட்ட எப்படி இருக்கீங்கன்னு இப்படி கேட்டாரு...
எப்படியோ இருக்கேன்னாரு அப்படி...
அப்படி இருக்கேன் இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்கன்னாரு..
ஏன் எப்படியோ இருக்கேன்னு சொல்றீங்கன்னு சொன்னாரு இப்படி...
உடனே அப்படிக்கு அப்படி ஒரு கோபம், நான் எப்படி இருந்தா உனக்கென்னனு கேட்டார்..
அதுக்கு அப்படி எல்லாம் ஒண்ணுமில்லீங்க சும்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்னு சமாதானப்படுத்தினார்...
அப்படியும் இப்படியும் எப்படியோ நண்பர்கள் ஆனாங்க
அத விடுங்க நீங்க எப்படி இருக்கீங்க?
அப்படி இப்படி 😁😁😁
நம்முடைய மனம் தான் காரணம்....
எந்த சின்ன விவகாரம் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது.
வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப் போல எண்ணத் தொடங்குகிறோம்.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விவகாரங்கள் அற்ப விவகாரங்கள் என்பது புலனாகும்.
எதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது.
கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்து விடும்.
சின்ன விவகாரங்களைச் சின்ன விவகாரங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விவகாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால்,
அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன.
யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விவகாரங்கள்தான்.
ஒரு விவகாரத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும்.
எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம்.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோ பாவங்களே காரணமாகின்றன...
கணவன் Vs மனைவி...
மனைவி : என்னங்க.. Window Lock Open ஆகமாட்டேங்குது.
கணவன் : கொஞ்சம் எண்ணெய் சூடு பண்ணி ஊத்துமா! Open ஆகிடும்.
மனைவி :அப்படியாங்க?
கணவன் : ஆமாம்மா! Try பண்ணிப் பாரும்மா!
After 10 mins...
கணவன் : Open ஆச்சாம்மா?
மனைவி : இல்லிங்க! இப்ப Lap top off ஆயிடுச்சுங்க! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி பாக்கவாங்க?
கணவன் : அடிப்பாவி! எந்த Windowனு ஒழுங்கா சொல்ல மாட்டியா.? ஆபீஸ் Lap Top க்கு பால் ஊத்திட்டியேடீ?
😔😔😔