12/06/2018

வீரப்பனார் வளர்த்த குரங்கு...


ஒரு விறுவிறுப்பான நிகழ்வைச் சொல்லவா?

வீரப்பனார் ஒரு ஆண்குரங்கு வளர்ந்தார்.

(என்ன? கேணல்.கிட்டு ஒரு குரங்கு வளர்த்தது நினைவு வருகிறதா).

அந்த ஆண்குரங்கு வீரப்பனாரது உற்ற தோழனாக இருந்தது; வீரப்பனார் அமர்ந்திருக்கும் போது அவரது தோளில் அது மிடுக்காக அமர்ந்திருக்கும்; அவரது மனைவி தலையில் பேண் பார்க்கும்.

வீரப்பனார் நடந்துசெல்கையில் அவரது தலைக்குமேலே உயரத்தில் மரங்களில் அது கண்கானித்தபடி செல்லும்,
ஏதும் பிசகு என்றால் எச்சரிக்கும்.

இதை அறிந்த காவல் மற்றும் வனத்துறையினர் ஒரு பெண் குரங்குக்குப் பயிற்சிகொடுத்து உளவுபார்க்க அனுப்பி வைத்தார்கள்.

வீரப்பனாரின் குரங்கு அந்த பெண் குரங்கிடம் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டு துரத்திவிட்டது...

ஜி7 கூட்டறிக்கையை நிராகரித்தார் டிரம்ப்...


One belt one road என சொல்லி அந்த மாபெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார்கள், பழைய பட்டுசாலையின் நீட்சி அது...


என்ன பட்டுசாலை என்றால்?

செங்கிஸ்கான் காலத்திற்கு முன்பே சீனாவிலிருந்து இந்தியாவின் வடக்காக வந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் வியாபார சாலை அது.

யுவான் சுவாங், பாகியான் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள்.

கிழக்கையும் மேற்கையும் இணைத்த சாலை அது, அலெக்ஸாண்டர் அதைத் தான் குறிவைத்து அடித்தான், கைபற்றினான்.

எல்லா வல்லரசுக்களுக்கும் அன்று அதில் கண் இருந்தது, அரேபிய வியாபாரம் அதை நம்பித்தான் ஒரு காலத்தில் இருந்தது.

இன்று மாறிவிட்ட காலத்தில் அதனை மீட்டெடுக்க சைனா விரும்பி காயினை நகர்த்துகின்றது, ஏற்கனவே ரஷ்யா வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் விட்டாயிற்று.

இப்பொழுது கிர்கிஸ்தான், ஆர்மீனியா, பாகிஸ்தான் வழியாக செல்லும் சாலைகளை அமைக்க நேற்றைய ஷாங்காய் மாநாட்டில் கோரியிருக்கின்றார்கள்.

எல்லா நாடுகளும் ஒப்பு கொண்டிருக்கின்றன, ரஷ்யாவிற்கு சீனா முக்கிய எண்ணெய் பங்காளி என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை ஒப்பு கொண்டாயிற்று...

எல்லா ஆபத்தையும் பறவைகள்தான் நமக்கு முதலில் உணர்த்தும்...


வைக்கிங் கப்பல் சவ அடக்கங்கள். (Viking Ship Burials)...


எட்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஸ்கேண்டினேவியாவின் கடல் கொள்ளையர்களை “வைக்கிங்” என்று அழைக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் கடலிலேயே இறந்துவிடுவது வழக்கமாம். 

அப்படி இறப்பவர்களின் (செல்வந்தர்கள்) உடல்களை ஒரு பெரிய கப்பலில் வைத்து, அக்கப்பலில் உணவு, ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் நிரப்பி, சமயங்களில் சேவகர்கள், மற்றும் விலங்குகளையும் உடன் சேர்த்து, இறந்தவர்களின் இறப்புக்குப் பின்னான வாழ்வில் உதவும்படி இருக்கட்டும் என்று, இறுதியில் அந்த கப்பலை கடலுக்கு அனுப்பி வைப்பார்களாம்..

ஆஹா….. இது நல்லா இருக்கே.  குடுத்துவச்சவங்க...

http://www.youtube.com/watch?v=RjxXQif6VMI

சென்னை - சேலம் 8 வழிச்சாலை யாருக்கானது.. மக்களுக்கானதா? கார்பொரேட் முதலாலிக்கானதா.?


தொடர் மழையால் நிரம்புகிறது சிறுவாணி. நொய்யலில் வெள்ள அபாயம்...


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கன மழை பெய்து வருகிறது; முக்கிய நீராதாரமான முத்திக்குளம் அருவியில் நீர்வரத்து காணப்படுகிறது. கடந்த, 2016ல் கோவையில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றது. அணைகள் வறண்டன. 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர் பிரச்னை அதிகரித்ததால், கோடை காலத்தில், பொதுமக்கள், காலிக்குடங்களுடன் அலைந்தனர். பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், கடந்தாண்டு, இரு பருவமழைகளும் கைகொடுத்தன.

அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது. குளம், குட்டைகளில் நீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்தது. அதனால், நடப்பாண்டு கோடையில், குடிநீர் பிரச்னை எழவில்லை. கடந்தாண்டை போல், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு, கோடையில் கனமழை பெய்தது. கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி குளங்கள் நிரம்பின.

மே, 28ல், தென்மேற்கு பருவமழை துவங்கியது. மெல்ல மெல்ல பெய்ய ஆரம்பித்து, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கனமழையாக உருவெடுத்து உள்ளது. பாம்பாறு, பட்டியாறு, முத்திக்குளம் அருவிகள், பெரியாறு மற்றும் சின்னாறுகளில் நீர்வரத்து காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில், 156 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

இடைவெளி விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இரண்டு நாளில், 20 செ.மீ., உயர்ந்துள்ளது. 50 அடி உயரமுள்ள சிறுவாணி அணையில், நேற்றைய தினம், 14.5 அடிக்கு நீர் இருக்கிறது. மழை நாளை வரை தொடரும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பருவ மழை செப்., வரை பெய்யும் என்பதால், நடப்பாண்டு சிறுவாணி அணை கண்டிப்பாக, நிரம்பி வழிய வாய்ப்புள்ளது.

நேற்று மாலை மழை வலுத்ததால், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நொய்யலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சித்திரைச்சாவடியை கடந்து, மாதம்பட்டிக்கு தண்ணீர் வந்தது. சீறிப்பாயும் வெள்ளத்தால், கோவைக்குற்றாலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு...

கோவை குற்றாலம் அருவியில், நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சீங்கப்பதி அருகே உள்ள சாடியாறு நீர்வீழ்ச்சியிலும், வெள்ளம் ஆர்ப்பரித்து பாய்ந்தது. குற்றாலம் அருவியை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில், காணும் இடமெல்லாம் புதிய அருவிகள் உருவாகின. இதனால், மலைப்பகுதி முழுவதும், வெள்ளி உருகி வழிவது போல் காட்சியளிக்கிறது. சாடிவயல் சின்னாற்றில், புது வெள்ளம் கரைகளை தொட்டுச் செல்கிறது. சின்னாறு, சாடியாறு, கல்லாறு மற்றும் நீலிவாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. நொய்யலின் முதல் தடுப்பணையான, சித்திரைச்சாவடி அணையின் ஷட்டர்களை தாண்டி காட்டாற்று வெள்ளம் செல்கிறது.

இதில், ராஜவாய்க்கால் வழியாக வேடபட்டி புதுக்குளம், கோளரம்பதி, நரசாம்பதி குளங்களுக்கு நீர் செல்கிறது. இதனால், நொய்யல் ஆற்றின், 2வது அணையான குனியமுத்துார் தடுப்பணையும் நேற்று நிரம்பியது. குனியமுத்துார் தடுப்பணை வழியாக, பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குளம், கங்கநாராயண சமுத்திர குளம், செங்குளம் ஆகிய குளங்களுக்கு, தண்ணீர் சென்றது.

நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்த மழைநீர் நேற்று மதியம், பேரூர் நொய்யல் படித்துறையை அடைந்தது. தென்மேற்கு பருவமழை தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், கோவையில் உள்ள குளங்கள் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; அனைத்து குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின்சாரம் கட்...

கனமழையால் சாடிவயல் பகுதியில், மின்கம்பங்கள் மீது மரம் விழுந்தது; இரண்டு மின்கம்பங்கள் உடைந்தன. இதனால், 6 மலைகிராமங்களில், மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காருண்யா நகர் சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது; குற்றாலம் அருவிக்கு செல்லும் வனத்தில், மரங்கள் விழுந்துள்ளன; சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மழை தொடர்வதால், அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. தடையை அறியாமல் சென்ற பயணிகள், மலைப்பகுதிகளில் உருவாகியிருந்த புதிய நீர்வீழ்ச்சிகளில், ஆபத்தை உணராமல் குளித்தனர். 'வெள்ளப்பெருக்கு குறையாவிடில், அருவிக்கு செல்ல தடை தொடரும்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்...

ஜிண்டால் - அதானி - ஸ்டெர்லைட் கூட்டு சதி திட்டம்...


மக்கள் விரோத துறை எனும் காவல் துறை.. தூத்துக்குடி மக்கள் மீது பொய் வழக்கு போடுகிறது...


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைமூட வேண்டும் என்று 100 நாட்கள்  போராட்டம் நடத்திய அ.குமரெட்டியா புரம் மக்கள் மீது  பொய் வழக்கு பதிவு செய்து   காவல்  துறையினர் கைது செய்து துன்புறுத்தி வருகிறார்கள் என்றும் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று
 மாவட்ட ஆட்சியர் வசம் குமரெட்டியா கிராம மக்கள் மனு அளித்தார்கள்...

உளவியல் - மக்களை எப்படி திசை திருப்பலாம்...


கர்ப்பிணி பெண்ணை 6 கி.மீ சுமந்து சென்ற கிராம மக்கள்...




ஆந்திர பிரதேச மாநிலத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை 6 கிலோமீட்டர் தூரம் வரை கிராம மக்கள் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள அங்கூ கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு வலி ஏற்பட்டதை அடுத்து அங்கூ கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு பெண்ணின் உறவினர்கள் போன் செய்தனர். ஆனால், அந்தக் கிராமத்தில் இருந்து முக்கிய சாலைக்கு வருவதற்கு சுமார் 6 கிலோமீட்டர் வரை சாலை வசதி இல்லை என்பதால் வர முடியாது என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துவிட்டனர்.

ஆம்புலன்ஸ் வரமுடியாது என்று கூறியதை அடுத்து, 6 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களே அந்தக் கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்றனர். குழந்தைக்கு தொட்டில் கட்டுவது போல், போர்வையால் மூங்கிலில் கட்டி தோளில் சுமந்து சென்றனர்...

பாஜக - அதிமுக இனைந்து சேலத்தில் அழிக்கப் போவது...


வாழை இலையின் பயன்கள்....


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிசு(ஸ்), தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.

இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பொலீத்தின் (polythene) கடதாசிதான் இங்கு இருக்கும் உணவுவிடுதிகளில் உணவு கிடைக்கிறது.

இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்...

பாஜக - அதிமுகவால் அழிக்கப்படும் நம் தமிழகம்...


தமிழ் இனத்தின் முதன்மை அடையாளமே நம் பெயர் தான்...


அதை ஆரிய, அரேபிய,  வடமொழியில் சூடி கொள்வது எப்படி என்றால் பெற்ற உன் பிள்ளைகளுக்கு வேறு ஒருவனின் பெயரை முதல் எழுத்தாக வைப்பதற்க்கு ஒப்பாகும்.

நல்ல தமிழ் பெயரை இடுங்கள்
போனது போகட்டும்..

இனிவரும் நம் தலைமுறைக்காகவது நல்ல தூய தமிழ் பெயர்களை இடுவோம்.

சோசியம், நியுமராலசி, ராசி போன்ற என்ன தேவையென்றாலும் பாருங்கள்...

முடிவில் தமிழ் பெயராக இருக்கட்டும் இதை மனதில் நிலை நிறுத்தி கொள்ளுங்கள்...

உன் வாழ்வியல் முறை இயற்கைக்கு எதிராக மாறினாலே போதும்.. உன்னை விட பெரிய விலங்கும் ஆயுதம் இல்லாமல் மடியும்...


இதற்கு பொருப்பேற்போர் யாரோ...

தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் NEET வேண்டாம் என்கிறோம்?


இந்த வருட Results கொண்டே எளிதில் விளக்குகிறேன்.

Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835

இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649

அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.

இந்த Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...

Aakash – One year Regular Course for NEET
INR 1,36,526

Aakash – Two Years Integrated Course for NEET
INR 3,33,350

Aakash – Crash Course for NEET
INR 32,804

நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய Crash Course Fees மட்டுமே INR 32,804.

குறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்க குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்கு போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாஸாகி டாக்டர் ஆக முடியும்.

இதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான Syllabus-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்னா விளங்கிக்கோங்க

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB. பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு  நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவள் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBBயில், CBSE Syllabus-ல் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கு, பேட்டியின் போது அவரை சுற்றி கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் tag களே அதற்கு சான்று.

இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

நம்ம தமிழ்நாட்டில்,
1. Madras Medical College
2. Stanley Medical College
3. Madurai Medical College Madurai
4. Thanjavur Medical College
5. Government Kilpauk Medical College
6. Chengalpattu Medical College
7. Kanyakumari Government Medical College
8. Coimbatore Medical College
9. Tirunelveli Medical College
10. Salem Mohan Kumaramangalam Medical College
11. IRT Perundurai Medical College
12. Trichy K.A.P.Viswanatham Government Medical College
13. Thoothukudi Government Medical College
14. Theni Government Theni Medical College
15. Vellore Government Vellore Medical College
16. Thiruvarur Government Thiruvarur Medical College
17. Dharmapuri Government Dharmapuri Medical College
18. Villupuram Government Villupuram Medical College
19. Sivagangai Government Sivagangai Medical College
20. Tiruvannamalai Government Tiruvannamalai Medical College
21. Chenai Oamndurar Government Medical College
22. Pudukkottai Government Medical College
23. Annamalai University Rajah Muthaiah Medical College

என்று 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக்கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் கூட MBBS படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32000 கிடையாது.

ஆனால் Aakash Crash Course for NEET மட்டுமே ரூ.32000/-. வித்தியாசத்தை உணர்த்துக்கொள்ளுங்கள்.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு தான் போட்டியிட்டார்கள்.

அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,
அனிதா 1175/1200,
பிரதீபா 1125/1200
ஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களை பரலோகம் அனுப்பியாச்சு.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் Sri Ramachandra Medical University போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதை தெளிவாக சொல்லியிருக்கிறது.

இதை தான் தரம் என்று நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பல தமிழக மாணவர்கள் கனவு பலியாக்கப்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.

ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.

முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும்.. பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆதார் அட்டை
ஜிஎஸ்டி
நீட்

இது மூன்றுமே குஜராத் முதல்வராக அய்யா எதிர்த்து தான்.

எங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கை தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்கு பெரிதாக தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியை தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.

பரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.

Capitalism+Casteism=NEET..

நீட் ஒரு நவீன தீண்டாமை...

கொடுப்பவனே... எடுத்துக் கொள்கிறான்... சிந்தியுங்கள்...


இந்த மோடி அடிமைகளின் அட்டகாசம் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது...


தமிழகத்தில் போராடும் மக்களை சுட்டுக்கொன்றும்,  ஜனநாயக சக்திகளை  மிரட்டியும் வரும் பழனிசாமி அரசின் போலீஸ், பிரியாணி அண்டா திருடர்களின் தூண்டுதலின் பேரில் இப்போது புதியதலைமுறை தொலைக்காட்சி மீதும் அதன் செய்தியாளர் சுரேஷ் மீதும், இயக்குனர் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கருத்து சுதந்திரத்தின் மீதான `மோடிஎம்கே’ அரசின் இந்த  தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

- கார்ட்டூனிஸ்ட் பாலா...

இனிமேல் இந்நாட்டில் இட ஒதுக்கீடு என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும்...


நாட்டில் முதல்முறையாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கூடுதல் செயலாளர்கள் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...

மேலும் இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஆட்களே நியமிக்கப்படும்...

டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி...


சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 9 கிலோமீட்டர் நீளமுடைய எரிகல் ஆனது மெக்ஸிக்கோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் மோதியது. பூமி கிரகத்திற்கு நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இருந்து தான் டைனோசர்கள் இன அழிவானது தொடர்ச்சியான முறையில் அரங்கேறியது.

பூமி கிரகத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த எரிகல் மோதலில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அந்த மோதலில் மிஞ்சிய எரிகல் பாகங்கள் பற்றிய ஆய்வுகள் சாத்தியமில்லாமல் போனது ஏனெனில் மோதல் நிகழ்ந்த இடத்தின் பெரும்பாலான பிராந்தியம் மிகவும் இறுக்கமாக எண்ணெய் தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருப்பினும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்கள் மோதல் எரிகல் மோதல் நிகழ்ந்த இடத்தை தோண்டி ஆராய அனுமதி கிடைத்தது அங்கு இருந்து தான் டைனோசர் மீட்டெடுப்பு கதை மீண்டும் பலமாக ஆரம்பமாகிறது.

பூமி கிரகத்தில் விழுந்த அந்த எரிகல் ஆனது சுமார் 180 கிலோமீட்டர் விட்டம் மற்றும் 20 கிலோமீட்டர் ஆழமுள்ள பெரும் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது, அது சிக்சுலப் பள்ளம் (Chicxulub crater) எனப்டுகிறது.

அந்த பள்ளமானது முதல் முறையாக டைனோசர்கள் சார்ந்த ஆய்வுகளுக்காக தோண்டப்பட இருக்கிறது, இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய படிம கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏவியன் : கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தொன்மம் ஆனது ஏவியன் வகை டைனோசர்கள் அதாவது பறவை வகை டைனோசர்களின் பற்றிய பெரிய அளவிலான புரிதல்களை வழங்கியுள்ளது.

எரிகல் மோதலில் பெரும்பாலான டைனோசர்களின் இனம் அழிந்துவிட, தப்பிப்பிழைத்த சில இனங்களின் மூலம் உருவாகிய உயிரினங்கள்தான் தற்போது நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதை நன்கு ஆராய்ந்த சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள், கோழிகளை பயன்படுத்தி ஏவியன் வகை டைனோசர்களை மீட்டுக்க முடிவு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வழக்கமான கோழிகள் மரபணுக்களில் சில எவியன் வகை டைனோசர்கள் போன்ற மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன அதாவது கோழிகளின் கால்களில், டைனோசர்களின் கால் எலும்பு போன்ற ஒன்றை உருவாகியுள்ளனர்.

அதேபோன்று மற்றொரு ஏவியன் வகை டைனோசர் ஆன ப்கயோஸ்டைலியன்ஸ் (Pygostylians) என்ற இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவைகளை ஆராய்ந்து தற்கால பறவையின் கருக்கள் டைனோசர்களை போன்றே இன்னும் நீளமாக வளரும் அறிகுறிகள் கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஐஎச்எச் வகை மரபணு : நீளமான கால்கள் கொண்ட பறக்கும் வகை டைனோசர்கள் இனத்தில் இருந்து உருவான தற்கால பறவைகள் இனத்திற்கு ஏன் கால்கள் குறுகியது என்பது சார்ந்த ஆய்வில் ஐஎச்எச் (IHH) வகை மரபணு மீண்டும் நீளமாக வளர்க்கொடிய தன்மை கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பகரமான ஆய்வு தகவலில் இருந்து கோழிகளின் கால்களை பயன்படுத்தி முதன்முறையாக டைனோசரின் கால்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

இப்படியாக கோழிகளை கொண்டு டைனோசர்கள் மீட்டெடுக்கப்படும் முயற்சியானது ஒன்றும் முதல்முறை நடக்கவில்லை என்பதும், கடந்த ஆண்டு, இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவானது கோழி கருவில் இருந்து டைனோசர் அலகு போன்ற வடிவமைப்பை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது...

நம்ப முடியாத உண்மைகள்...


சாகர்மாலா துணை திட்டம்மான 8 வழி சாலை - சேலத்தை அழித்து தொடங்குகிறது பாஜக - அதிமுக...


கதிராமங்கலம் நெடுவாசல் விவசாய நிலங்களின் அழிவை விட பல மடங்கு நிலங்களை  8 வழி பசுமை சாலை அமைக்க இயற்கையை அழிக்க உள்ளனர்...

சேலத்தையும் - இயற்கையை காப்போம்...

பிரபஞ்சமும் உணர்வுகளும்...


 தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்  மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURA) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன.

தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன.

 தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். மானசிக ஒலிபரப்பினால்  வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும்.

நண்பர் நம்மை நோக்கி வந்து கொண்டுருக்கிறார் அவருக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்வோம்
அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன். அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுவோம்.

மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்.
தெரிவிக்கவில்லையென்றாலும் நமது நல்லெண்ண உணர்வுகள் ஆக்க சக்தியை பெருக்கும்.

நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம்  வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து  ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும்...

மனிதன் எத்தனை வகை...


மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்...

1.Introverts  : மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..

2.Extroverts : எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts : மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்...

தைல புத்தி : ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத  புத்தி : நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி : விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பது போல வரும் போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும் போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது...

இயற்கையை ஆதரிப்போம்...


மெட்டி அணிவது ஏன்....?


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்...

பாஜக - அதிமுக பினாமி சேலம் கலெக்டர் ரோகினி நடிப்பு...


வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்....


காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது...இரத்த அழுத்தம், நீரிளிவுநோய், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விசயம்தானே..

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு குவளையில்  நான்கு குவளைகள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத் தான் பார்க்கலாமே...

கண் கலங்க வைத்த புகைப்படம்...


பாஜக மோடியின் மாட்டு மூளையும் மாவோயிஸ்டுகளும்...


மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்வார்களாம், அந்த சதியை அப்படியே விவரித்து ஒரு முழு நீள கடிதம் எழுதுவார்களாம், அதில் ஏன் மோடியை கொல்ல வேண்டும் என்று காரணங்களைக் கூறுவார்களாம், எந்த இடங்களில் எல்லாம் இந்த தாக்குதலை நடத்தலாம் என்று ஒரு பட்டியலை அந்தக் கடிதத்திலேயே தருவார்களாம், அதே கடிதத்தில் பாஜகவின் தேர்தல் பொறுப்பு என புகழ்வார்களாம், இந்தத் தாக்குதலை நடத்த ஏராளமான செலவு ஆகும், அப்ப தான் நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடியும் என்பார்களாம், இந்த தாக்குதல் திட்டத்திற்கு தங்கள் மேலிட ஒப்புதலுக்கு காத்திருப்பதை குறிப்பிடுவார்களாம், இந்தத் தாக்குதலை எந்த எந்த தோழர்கள் நிகழ்த்துவார்கள் என்று அவர்களின் பெயர்களை குறிப்பிடுவார்களாம், அந்த கடிதம் எழுதிய தேதி 18/4/17 என்றும் அதில் குறிப்பிடுவார்களாம்.

அந்தக் கடிதத்தை அஜாக்கிரதையாக ஒரு வீட்டில் காவல்துறை ஒரு ஆண்டுக்கு பின் வரும் போது எடுக்கும் படியாக வைப்பார்களாம். காவல்துறையும் கடிதத்தை  சம்மந்தப்பட்ட புலனாய்வு நிறுவனங்களுக்கு/ நீதிமன்றங்களில் கொடுத்து ரகசியமான முறையில் இந்த சதியை முறியடிக்காமல், மாறாக உடன்  ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டுவார்களாம்.

இந்த கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நடக்குதுனு பாருங்கள், இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில், இன்று செய்தியை ஒருவர் மற்றொருவருக்கு ENCRYPTED MESSAGING-ன் பல்வேறு சாத்தியங்களுடன் ஒவ்வொரு பிரஜையும் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் காலகட்டத்தில்..

மாவோயிஸ்டுகள் அத்தனை முட்டாள்களா அல்லது இந்தக் கதையை உடனடியாக நம்புவார்கள் என  மோடி அரசு இந்தியாவின் சாமானிய மக்களை எல்லாம் அவரது மாட்டு மூளை அடிமுட்டாள்கள் போல் நினைக்கிறதா???

இந்தக் கடிதங்களை வைத்துக் கொண்டு அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், ஃபட்னாவிஸ் தொடங்கி பலரது புனைவுகளை இன்றைய நாளிதழ்களில் வாசிக்கையில்  இந்த கடித விவரனைகள் அரசாங்கம்  பாராளுமன்ற தாக்குதல்களில் 2.0 வெர்சனை (அப்சல் குரு வழக்கில்) திட்டமிட தொடங்கி விட்டது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.

மோடி தன் நான்கு ஆண்டு தோல்வியை மறைக்க மீண்டும் மாவோயிஸ்டுகள் / தீவிரவாதிகள் / தேசத்துரோகிகள் ஆயுதத்தை பட்டை தீட்ட தொடங்கிவிட்டார் என்பதை இந்த தேசத்திற்கு உணர்த்துகிறது.

பீம் கோரேகாவ்ன் நினைவு நிகழ்ச்சியில் தலித்துகளின் பெரும் அணிதிரட்டலை பார்த்து மிரண்டு போன பாஜகவினர் தலித்துகளையும் வன்முறையாளர்களின் பட்டியலில் இணைக்க முடிவு செய்து விட்டனர்.

அதாவது இஸ்லாமியர்கள், மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், மனித உரிமை ஆர்வலர்கள் என அருண் ஜெட்லி யாரெல்லாம் தேசதுரோகிகள் என்று ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இந்த பட்டியல் ஒரு புறம் இருக்கட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளின் மோடியும் யோகியும் செய்த சட்டபூர்வ கொலைகளின் பட்டியலை உலக அரங்கில் வெளியிட நாம் முனைய வேண்டும். மாட்டை வைத்து இவர்கள் செய்த நூற்றுக்கணக்கான கொலைகளில் மொத்த வட இந்திய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மோடி இன்னும் ஒரு கோத்ராவை நிகழ்த்த தயங்கமாட்டார்....

அரசியல்வாதிகளை நம்பாதே...


தூத்துக்குடியில் தொடரும் பாஜக - அதிமுக வின் அரசப்பயங்கரவாத கைது நடவடிக்கைகள்...


நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகளை கைது செய்வதுபோல மக்கள் போராட்டக்களத்தில் முன்நின்ற காரணத்தினால் நாம் தமிழர் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை அவர்களை வீடு புகுந்து அச்சுறுத்தி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்துள்ளது தமிழக அரசின் காவல்துறை.

இப்பொழுது வரை இசக்கித்துரை அவர்களை எங்கு வைத்துள்ளனரென வழங்குறைஞர்களுக்கோ குடும்பத்திற்கோ சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக அராசகத்தில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை காவல்துறையை முற்போக்கு சக்திகள் இடதுசாரிகள் சூழலியலாளர்கள் திராவிட இயக்கத்தினர் தமிழ்த் தேசியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள்  ஜனநாயக ஆற்றல்கள் வண்மையாக கண்டிக்க வேண்டும்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.. அதிர்ச்சி தரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...


தொடர் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

திற்பரப்பு அருவியின் ஓரப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர் தொடர் மழை காரணமாக மற்ற பகுதிகளில் தண்ணீர் வேகமாக பாய்கிறது. ஆபத்தான பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் பட்சத்தில் மிகுந்த ஆபத்து நேரிடும்.

இச்சூழலில் எந்த வித முன் எச்சரிக்கை அறிவிப்புகளோ, பாதுகாப்பு பணியாளர்களை அமர்த்தவோ செய்யாமல் சம்பந்தபட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது. அதிக தண்ணீர் பாயும் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க கயிறு கட்டி தங்கள் கடமையை முடித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான சூழலே தொடர்கிறது . மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது...

ஜி7 எப்போது வேண்டுமானாலும் ஜி6 ஆகலாம்...


திமுக கருணாநிதி ஆட்சியில்...


1972ல் மவுண்ட் சாலையில் kattur கோபால் தலைமயிலான தி.மு க தொழிற்சங்கம் நடத்திய கொலைகள் எத்தனை?

சொந்த கட்சிலே நடத்திய கொலைகள்?

இறந்த  தன்  சொந்த மகனையே இல்லை என்று சொல்ல வைத்து டாக்டர் பட்டம் வாங்கியது யார்?

மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் கூலி படை வைத்து கொள்வதை காட்டிலும் மோசமான கொலைகள் நடத்திய ஆட்சி தி மு க  ஆட்சி...