என்ன பட்டுசாலை என்றால்?
செங்கிஸ்கான் காலத்திற்கு முன்பே சீனாவிலிருந்து இந்தியாவின் வடக்காக வந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் வியாபார சாலை அது.
யுவான் சுவாங், பாகியான் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள்.
கிழக்கையும் மேற்கையும் இணைத்த சாலை அது, அலெக்ஸாண்டர் அதைத் தான் குறிவைத்து அடித்தான், கைபற்றினான்.
எல்லா வல்லரசுக்களுக்கும் அன்று அதில் கண் இருந்தது, அரேபிய வியாபாரம் அதை நம்பித்தான் ஒரு காலத்தில் இருந்தது.
இன்று மாறிவிட்ட காலத்தில் அதனை மீட்டெடுக்க சைனா விரும்பி காயினை நகர்த்துகின்றது, ஏற்கனவே ரஷ்யா வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் விட்டாயிற்று.
இப்பொழுது கிர்கிஸ்தான், ஆர்மீனியா, பாகிஸ்தான் வழியாக செல்லும் சாலைகளை அமைக்க நேற்றைய ஷாங்காய் மாநாட்டில் கோரியிருக்கின்றார்கள்.
எல்லா நாடுகளும் ஒப்பு கொண்டிருக்கின்றன, ரஷ்யாவிற்கு சீனா முக்கிய எண்ணெய் பங்காளி என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை ஒப்பு கொண்டாயிற்று...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.