12/06/2018

திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.. அதிர்ச்சி தரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...


தொடர் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

திற்பரப்பு அருவியின் ஓரப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர் தொடர் மழை காரணமாக மற்ற பகுதிகளில் தண்ணீர் வேகமாக பாய்கிறது. ஆபத்தான பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் பட்சத்தில் மிகுந்த ஆபத்து நேரிடும்.

இச்சூழலில் எந்த வித முன் எச்சரிக்கை அறிவிப்புகளோ, பாதுகாப்பு பணியாளர்களை அமர்த்தவோ செய்யாமல் சம்பந்தபட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது. அதிக தண்ணீர் பாயும் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க கயிறு கட்டி தங்கள் கடமையை முடித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான சூழலே தொடர்கிறது . மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.